ஸ்வரம் 15

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

ஸ்வரம் : 15

அவனுக்கு மிக அவமானமாக இருந்தது இப்படி எல்லோர் முன்னிலையிலும் அடித்து விட்டானே என்று தருண் வருந்த அவனை யாரும் தேற்ற அங்கு இல்லை இதெல்லாம் இங்கே பழகி கொள்ள வேண்டும் போல அதனால் அவளை ஒரு பார்வை பார்க்க ஹிமானிக்கு என்னவோ போல இருக்க இதை செய்த கணவன் மீது கோபம் வந்தது ஆனால் அவளால் என்ன செய்ய இயலும் அவன் தனியாக கிடைக்கட்டும் அவனிடம் பேசியே ஆக வேண்டும் அவனுக்கு என்ன திமிர் யாரையும் மதிக்காத பழக்கம் அப்படி என்ன கர்வம் என அவள் எண்ணி கொண்டாள் அவளது கணவனும் அதையே தான் நினைத்து கொண்டிருப்பான் போலும்..

அந்த காயமும் அவர்களுக்கு உறுதுணையாக தான் இருந்தது போல் அவன் உடற்பயிற்சி செய்வது போல அவனது புஜத்தை காட்டிக்கொண்டு உடற்பயிற்சி செய்ய அதில் அந்த கீறலும் அவனது தோற்றத்திற்கு அழகாக தான் இருந்தது..

அதிலும் வியர்வை வழியும் தோற்றத்தில் அந்த விளம்பத்தில் அவனுடன் நடிக்கும் நாயகியும் உடற்பயிற்சி ஆடையுடன் வந்து அவனை பின்னாலிருந்து அணைக்க வேண்டும் அத்தனை வியர்வையிலும் அந்த பெர்ஃப்யூம் உபயோகத்தால் நல்ல நறுமணம் வருவது போல காட்சி எடுக்கப்பட்டது..

அதிலும் அந்த நாயகி அவன் மீது அவனது அழகில் மையல் கொண்டு பின்னால் இருந்து வந்து அவளது ஒரு காலை முன்னால் அவனது தொடையில் கோர்த்து அவனை பின்னால் இருந்து அணைப்பது போன்ற காட்சி அவள் கூடுதலாக அவனை சேர்த்து அணைத்தாலோ என்ற சந்தேகம் இவன் என்ன மனிதன் என்று தன் கணவனை பார்த்து கொண்டு இருந்த ஹிமானிக்கு தோன்றாமல் இல்லை..

மேலும் அவன் அந்த நடிகை அவனை அணைத்ததும் அவளை நொடிப்பொழுதில் அவன் புறம் திருப்பி அவளை பிடித்து தூக்க வேண்டும் இதுதான் காட்சி அதை ஒரு நொடிப்பொழுதில் லாவகமாக அவளை தூக்கி அவன் நடிக்க , "என்ன இவ இப்படி கட்டி பிடிக்கிறா?? இவ என்ன ஆம்பிளைங்களை பார்த்ததே இல்லையா நீங்க எல்லாம் இப்படி அவன் மேல விழுந்து தான் டி அவன் எல்லாம் ஓவரா பன்றான் " என யோசித்துக்கொண்டே ஹிமானி தன் கணவனை பார்க்க அவள் கண்களுக்கு அந்த காட்சி வேறு அவள் கண்களுக்கு தொலைத்தது அது அவளுக்கு எரிச்சலை கொடுத்தது..

ஏனெனில் இத்தனை நாட்கள் அவனது ரொமான்ஸ் காட்சிகளை பல்வேறு நடிகைகளுடன் நடித்த படங்களை எல்லாம் வாயைப் பிளந்து அவள் பார்த்திருக்கிறாள் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை அப்பொழுதெல்லாம் , "எப்படி கிஸ் பண்றான் பாரு ??" என்று இவளே யோசித்து இருக்கிறாள்..ஆனால் இப்போது அது போல யோசிக்க முடியவில்லை..

இப்பொழுது இந்த மூன்று நான்கு நாட்களாக அவன் விரல்கள் அவளை மட்டும் தான் தீண்டி இருக்க என்னவோ அந்த விரல்கள் வேறொரு பெண்ணை தொடுவது கூட அவளுக்கு பிடிக்கவில்லை போலும் அதனால் அவள் எரிச்சலாக இருக்க, " என்னை டார்ச்சர் பண்ணவே இங்கே கூட்டிட்டு வந்து இருப்பான் போல இடியட் இந்த கருமத்தை வேற பார்க்கணுமா?? " என்று புலம்பி முகத்தை திருப்பி கொண்டாள்..

மறுபக்கம் டைரக்டரின் அருகே நின்று கொண்டு அவன் அடித்த வேதனையில் முகம் முழுவதும் வருத்தத்தால் நின்று கொண்டிருந்தான் தருண் ..அதை பார்க்கும் பொழுது அவளுக்கு மேலும் வருத்தமாகி போய்விட சுற்றுப்புறம் கருதி அவனிடம் அவளால் பேசக்கூட முடியாது மிகுந்த எரிச்சலில் தான் இருந்தான் அது அவனது முகத்தை பார்த்தே அவள் கணித்து விட்டாள்.. இருதலை எறும்பாக மாட்டி முழி பிதுங்கி நின்று கொண்டிருந்தாள்

காட்சி அருமையாக வந்திருக்க அந்த செட்டில் உள்ள அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்ய அவர்களுக்கு எல்லாம் தனது ட்ரேட் மார்க் ஸ்டைலான புன்னகையை பரிசளித்தவன் தன் மனைவி தனது நடிப்பை கவனித்தாளா என அவனது கண்கள் தேட அங்கு அவளோ வேறு இவனை கண்டு கொள்ளாமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்க அது அவனுக்கு கோபத்தை கொடுக்க அதையும் அவனது மனக் கணக்கில் சேர்த்துக் கொண்டான் ஆர்யா..

அவனைப் பொறுத்தவரை அவளது பார்வையும் ,உணர்வும் அவனைச் சுற்றியே இருக்க வேண்டும் வேறு எங்கு போனாலும் அவன் விடமாட்டான் அவளிடம் அந்த உணர்வு கிடைக்கும் வரை போராடுவான் ..

அனைவரும் பாராட்டும் பொழுது தன் மனைவியை பார்க்கவில்லையே என்ற கோபம் கிளப்பிக்கொண்டு வர , "ஷாட் முடிந்தததா நான் போலாமா??" என டைரக்டரிடம் கேட்டு அங்கிருந்து வெளியேறி வேறு உடை மாற்றிக் கொண்டு அவள் முன்னே வந்து நிற்க அப்பொழுதும் அவள் எங்கு பார்த்துக் கொண்டிருந்தாளோ அங்கேயே தான் இப்போது வரை பார்த்துக் கொண்டிருந்தாள் ..

அதைக்கண்ட அவனுக்கு சத்தியமாக எரிச்சலை கட்டுப்படுத்தி கொள்ள முடியவில்லை அவள் அமர்ந்து இருப்பதோ ஒரு இருக்கையில் இவனோ நின்று அவள் புறம் நோக்கி மெல்ல குனிந்து அவளது செவிக்கு அருகே , "அங்க என்ன உன் காதலன் நின்னுட்டு இருக்கானா இப்படி பாத்துட்டு இருக்க??" என்று மிஹ்ரானை மனதில் வைத்து கொண்டு கேட்க,

அந்த கேள்வியில் அவள் அதிர்ந்தாள் ஏனெனில் அவள் பார்வை தருணை சுற்றி தான் இருக்க அவள் பார்வை சென்ற இடத்தில் தருண் தான் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்..

டக்கென அவன் வருகையை அவள் உணராது அவனது கேள்வியில் அவள் பதறி அடித்துக் கொண்டு எழுந்து நின்றாள் அதைக் கண்டவனுக்கு அவளது பதற்றம் உண்மையிலும் எப்படித் தெரிந்ததோ என்னவோ நூல் இழைக்கும் மெலிதான ஒரு சிறிய புன்னகை அவனது முகத்தில் வந்து போனது என்ற உணர்வு அவளுக்குத் தோன்ற அவளோ அவனை பார்த்து , "என்ன சொல்றிங்க??" என்று பயத்தில் வினவினாள் அவளுக்கு தருணை பற்றிய விஷயம் அவனுக்கு தெரிந்து இருக்குமோ அதனால் தான் அவனை அடித்தானோ இனி அவனையும் ஏதாவது செய்து விடுவானோ என அவள் பயப்பட்டு வினவ,

அவளது பயத்தை பார்த்து அவளை ஆழ்ந்து பார்த்தவன் அவனது தாடையில் கை வைத்து, " இல்ல அங்கேயே பாத்துட்டு இருந்தியே அதான் கேட்டேன் என்ன ரொம்ப நேர்வஸ் ஆஹ் இருக்க என்ன விஷயம்??" என்று அவளது முகத்தை பார்த்து அவன் கேட்க,

அவளோ அவளது பதட்டத்தை அவன் முன்னே காட்ட முடியாமல் தவித்து வேகமாக கோபம் முகம் பூசி, " என்ன செய்ய சொல்றீங்க ?? நான் வரலன்னு முன்னே சொல்லிட்டேன் நீங்க தான் கேட்கலை இதுவும் குத்தமா?? "என்று வினவ,

அவனுக்கு அந்த பதில் அவ்வளவாக திருப்தியாக இல்லை சுற்றுப்புறம் திரும்பி பார்த்து தன்னை விட்டு ஒரு அடி விலகி நிற்கும் அவளை கைபிடித்து இழுக்க அவன் மீதே மோதினாள் அவள் பின் அவளது இடையை வளைத்து அவளது செவி நோக்கி குனிந்து, " நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கேன் நீ என்னோட மனைவி எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு அதுக்கு தகுந்த மாதிரி தான் நீ நடந்துக்கணும் சோ அது மாதிரி நடந்துக்கோ இனி வெளியே எங்கேயாவது சத்தம் போட்டு நடக்கிறதே வேற " என கடுமையாக அவள் செவியில் கூறியவன் அடுத்த நொடி அவளை கட்டியணைத்தது என்னவோ சில மணி நேரங்கள் கூட அவளை பிரியாத ஆசை கணவன் போல அவளை அணைத்து அனைவரும் முன்னே முத்தமிட அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது..

அவன் பேசியதும் அவனது செய்கையும் தருண் அங்கே இருப்பானே என்ற பயமும் எல்லாம் கலந்து, " ப்ளீஸ் போலாம்" என்று அவள் அவனிடமிருந்து விலக பார்க்க அவனோ விடவில்லை..

" எல்லாரும் இருக்காங்க ப்ளீஸ் ஆர்யா" என்று அவள் கெஞ்ச , "இத நீ முன்னாடியே செஞ்சிருக்கலாம் நீ என்ன பாத்து முறைச்சா நான் கிஸ் பண்ணேன் அவ்வளவு தான் இனி முறைக்கும் யோசிச்சு முறை "என்று கூலாக கூற

அதைக்கேட்ட அவளோ சமைந்து நின்று என்ன செய்வது என்று புரியாமல் நிற்க அவனோ அவளை பார்த்து, " போலாமா ?? "என்று அவளது பார்வையை புரிந்து கொண்டு அவளது நெற்றியோடு நெற்றி முட்டி அவளை அணைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான் இந்த காட்சியை தருண் பார்க்க அதை அவள் பார்த்து விட்டாள் அவளுக்கு மிகுந்த அசிங்கமாக இருந்தது ..ஆனால் பாவம் இதை ஆர்யா அறியவில்லை அறியும் நாள் வருமோ என்னவோ?? பிறகு இருவரும் அந்த ஹோட்டலின் கீழே உள்ள ரெஸ்டாரண்டில் உணவருந்திவிட்டு அவர்களது அறைக்கு இருவரும் சென்றனர்.. ஆனால் அவள் எதுவுமே பேசவில்லை அவள் மனம் முழுவதும் அவனே அவன் வருந்தி இருப்பானோ என்று தான் எண்ணி கொண்டிருந்தாள்..எல்லாத்துக்கும் காரணம் இவன் மட்டும் தான் என்று கணவன் மீது வெறுப்பை வளர்த்து கொள்ள அவளுடைய வெறுப்பு அவனை ஒன்னும் செய்து விடாது என்பதை அவள் அறியவில்லை..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top