ஸ்வரம் 14
ஸ்வரம் : 14
இதுவே மிஹ்ரானை கல்யாணம் செய்வது போல கல்யாணம் செய்து பிறகு இந்த கல்யாணம் பிடிக்கவில்லை டிவோஸ் செய்தால் பிறகு யாரும் என்னை கேள்வி கேட்க மாட்டார்களே அதுவும் எப்படி இருந்தாளின் சொந்ததுக்குள் தான் திருமணம் செய்து வைப்பர் மிஹூவை ஒதுக்கி விட்டால் என் ரூட் கிளியர் ஆகி விடுமே என எண்ண,
அதாவது மிஹ்ரானின் தந்தை செய்தது போல வேறு யாராவது கல்யாணம் செய்து கொள்ள முடியும் அப்பொழுது எனக்கு முழு சுதந்திரம் கிடைக்கும் என்று முட்டாள்தனமான ஒரு ஐடியாவை அவள் யோசித்தாள் அதன்படி தன் மாமன் மகனிடம் இதைப்பற்றி கேட்க அவனும், " என்னவோ எனக்கு சரியா தோணல ஆனால் உனக்காக செய்கிறேன்" என்று ஒத்துக் கொண்டான்..
அதாவது தன் தோழியின் காதலுக்காக உதவி செய்கிறேன் என்று கூறி இருவரும் ஒரு பொய் கல்யாணம் செய்ய முடிவெடுத்தனர் இதை தருணிடம் சொல்ல அவனும் இவர்களை ஒரு மாதிரியாக நம்பிக்கையில்லாமல் பார்த்தான்..
அவளோ , "இதைத் தவிர எனக்கு வேற வழி தெரியல எப்படி இருந்தாலும் வீட்ல ஒத்துக்க மாட்டாங்க இதுவே நாங்க கல்யாணம் பண்ணி பிரிஞ்சு மாதிரி காட்டினா அப்போ அவங்க ஒத்துப்பாங்க என் விடயத்தில் தலையிடமாட்டாங்க " என்க
அவளை லூசு போல பார்த்த தருண், " அப்போ இவனோட வாழ்க்கை??" என்று கூற , "அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் உங்க வாழ்க்கையை நீங்க பாருங்க" என்று கூறிவிட்டான் மிஹ்ரான்..
அதன்படிதான் யாரிடமும் கூறாமல் இரகசியமாக இவர்களின் காதல் வளர்ந்து மிஹ்ரானுடன் நாடகம் கல்யாணம் வரை செல்ல அப்பொழுதுதான் இடையில் புகுந்து ஆர்யா இவர்களை ஐடியாக்களை துவம்சம் செய்து ஹிமானியை திருமணம் செய்து கொண்டான்..
திருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கூட தருணிடம் பேசி வந்தவள் கடந்த ஒருவாரமாக எந்த போனும் எடுக்க வில்லை பேசவுமில்லை அவளால் பேச முடியவில்லை என்பதுதான் சத்தியம் ஆனால் இவள் ஏமாற்றுக்காரி என்று எண்ணத்தில் பச்சை குத்தியவன் விஷயத்தை கேள்விப்பட்டு இனி இவளை நம்புவானா சுத்தமாக நம்பவில்லை..
திருமணம் முடிந்து அவள் வீட்டிற்கு சென்று போனை எடுத்துப் பார்த்தபோது ஆயிரக்கணக்கான மெசேஜ்கள் தருணிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தன ..
அதையெல்லாம் பார்த்து வேதனை கொண்டு தான் மிஹ்ரானை பற்றி யோசிக்க அவனும் தன் மீது கோபமாக இருப்பானே இப்படி அனைவரின் கோபத்தையும் பெற்றுக்கொண்டேனே இதற்கு எல்லாம் காரணம் இவன் தானே என்று வருந்தி அவனை காண செல்ல அவள் எதிர்பார்த்தது போலவே அவளுடைய தோழனும் கோபமும் வேதனையும் அடைந்து நிற்க,
யாராவது ஒருவருக்காவது நல்ல வாழ்க்கை அமையட்டும் என எண்ணி ஹிமானி ஆர்யாவுடன் வாழலாம் என முடிவெடுத்தாள் அப்படி முடிவெடுக்கவில்லை எனில் மிஹ்ரான் மற்றும் அவளது தந்தைக்கு பிரச்சனை ஆகி விடும்..அதனால் அவளது காதலை புதைத்தாள் ஆனால் இப்போதும் தருண் மீது அவளுக்கு அளவுகடந்த காதல் இருக்கிறது ஆனால் அதை அவளால் வெளிப்படுத்த முடியவில்லை..
தருணிடம் என்ன பிடித்தது என்று கூறு கேட்டால் அவளுக்கு அவன் யாரும் இல்லாதவன் என்ற ஒரே ஒரு சிம்ப்பதி மட்டும் தான் அவளுக்கு வெகுவாக வாட்டி வதைத்தது அவள் பணக்கார வீட்டு பெண் தான் ஆனால் சிறு சிறு சந்தோஷங்களும் சங்கடங்களும் அவளுக்கும் வரும்.. ஆனால் அதில் தருணின் காதலும் வர அவனை வாழ்நாள் முழுவதும் விட கூடாது என்று எண்ணி கொண்டு இருந்தாள்..
ஆனால் அதையும் அவள் கணவன் துவம்சம் செய்து விட இதோ அவன் அவளுக்கு அசிஸ்டெண்ட்டாக அவளுக்கு அமர குடையோடு கூடிய இருக்கையை கொண்டு வந்து கொடுத்தான் தருண் .. தருண் அவள் அருகே வந்த போது அவன் முகம் கோபத்தால் சிவந்து இருக்க அவளுக்கு அவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என தோன்றியது..
ஆனால் அவனோ அவளை கண்ணால் கூட பார்க்க மாட்டேன் என்பது போல சுற்றுப்புறம் கருதி அவள் உள்ளே வருத்தம் இருந்தாலும் அவள் அமைதியாக இருக்க அதற்குள் ஆர்யா தயாராகி வந்தான்..
இது ஒரு பெர்ஃப்யூம் ஆட் என்பதால் அவன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது போல ஷாட்கள் தான் முதலில் எடுக்கப்பட இருந்தது அதனால் அவன் ஒரு சிறு ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து தன் முழு உடலை காட்டி எக்சசைஸ் செய்வதுபோல ஷார்ட் மட்டும் அணிந்து வர அவனும் அந்த உடையில் வெளியே வந்தவன் தன் மனைவி பாதுகாப்பாக இருக்கிறாளா என ஒரு நோட்டம் பார்த்துவிட்டு, " ஷாட் ரெடியா " என்று கூற ,
வேகமாக ஆர்யா அவ்விடத்திற்கு வரவும் அதற்குள் டைரக்டர் ஆவேசம் கொண்டு எஸ் ரெடி சார் என்று கூற அதற்குள் பேசுவதற்கான மைக் வேலை செய்யவில்லை ..
" டேய் தருண் அங்கே என்ன பண்ணிட்டு இருக்க இங்க வா சொன்னா சொன்ன வேலை செய்வதில்லை வேற மைக் கொண்டு வா " என்று கூற ,
அவனும் அவளை முறை முறைத்து விட்டு வேறு மைக் எடுத்து விட்டு ஓடி வரும்போது ஆர்யாவின் மீது தெரியாமல் மோதினான் அதில் ஆர்யா நிலை தடுமாறி விழவில்லை என்றாலும் தன் மீது ஆர்யா மயூது தருண் இடித்து விட்டான்..
மேலும் அவனது கையில் உள்ள அந்த ராட் மிக ஷார்ப்பாக இருக்க அது ஆர்யாவின் கையை பதம் பார்த்தது..அவனது புஜத்தில் அந்த ராட் இடித்தத்தில் புஜத்தில் இலேசாக கீறியும் விட ரத்தம் வெளியே வந்தது அதில் கோபமுற்ற ஆர்யா தருணை அனைவர் முன்னும் ஓங்கி அடித்து விட்டான்..
இந்த நிகழ்வை யாரும் அங்கு எதிர்பார்க்கவில்லை ஆனால் ஆர்யா தருணை அடித்துவிட்டு அவனை முறைத்து பார்த்து, " பார்த்து வர மாட்டியா??இடியட் " என்று கூற, அதற்குள் டைரக்டர் மற்றும் எல்லோரும் ஆர்யாவை சூழ்ந்து அவனது காயத்தை பார்க்க யாரும் தருணை கவனிக்கவில்லை..
ஆர்யா அடித்து இருக்க மாட்டான் அவன் கையில் இருந்த ராட் அவனது புஜத்தில் அல்லாமல் வேறு எதிலாவது பட்டு இருந்தால் என்ன ஆவது என்பது தான் அவனது கேள்வியாக மாறி ஆர்யா தருணை அடிக்க, ஆனால் அவளுக்கு தருணை பார்க்க பாவமாக இருந்தது ஆனால் எல்லோரும் ஆர்யாவுக்கு என்ன ஆகி விட்டதோ என்று பதற அவள் மட்டும் சிலை போல ஒரு இடத்தில் நின்று கொண்டிருப்பதை ஆர்யா கவனிக்க தவறவில்லை..
அந்த கோபத்தில் ஆர்யா, "ஷாட் ரெடி" என்று கூறிவிட்டு ஷாட் நடக்கும் இடத்திற்கு சென்றான் அதை கண்டவள் மிக அதிர்ச்சி அடைந்தாள் தன் கண் முன்னே தன் காதலன் தன் கணவனிடம் அடி வாங்குவது அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ..
ஆனால் ஆர்யாவுக்கு இன்றுவரை மிஹ்ரான் தான் காதலன் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறான் அவனுக்கு இவன் தான் காதலன் என தெரிந்தால் என்ன நடக்குமோ என்ன இருந்தாலும் அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டவன் எப்படி இருந்தாலும் அவளை அவன் மனைவியாக தான் வாழ வைப்பான் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை ஆனால் தன் மனைவி அவனிடம் வாலாட்ட துவங்கினால் அவன் என்ன செய்வானோ தன் காதலனுக்காக அவள் ஏதாவது கிறுக்குத்தனம் செய்தாலோ அவனின் ருத்ர தாண்டவத்தை காண நேரிடுமோ???
ஸ்வரம் இசைக்கும்..
