ஸ்வரம் 13
ஸ்வரம் : 13
ஆம் தருணை இங்கு பார்ப்போம் என அவள் சத்தியமாக கனவிலும் கூட அவள் நினைக்கவில்லை அதுவும் ஆட் சூட்டிற்கு இவன் எப்படி இங்கே வந்தான் என்று பார்க்கும் போது தான்
அவளுக்கு புரிந்தது அது அவன் வேலை செய்யும் ஒரு டைரக்டர் தான் இயக்க போகும் ஆட் சூட்டில் ஆர்யா நடிக்கிறான் என்பது அவளுக்கு புரிந்து போக ஆர்யாவின் மனைவி என்பதால் மிகப் பெரிய வரவேற்பு அவளுக்கு கொடுக்கப்பட்டது ..
எல்லாம் தயாராக இருக்க ஆர்யா மட்டும் உடை மாற்றிவிட்டு வந்தால் ஷூட் எடுத்துவிடலாம் என்ற நிலையில் அவன் அவளிடம் , "இங்க வெயிட் பண்ணு நான் இப்ப வந்துடறேன் " என்று கூறிவிட்டு அனைவர் முன்னே அவளை அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு டிரஸ் மாற்ற சென்றான் ஆர்யா..அவளுக்கு அந்த செயல் அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு ஒன்றும் அவன் முத்தமிட்டது பெரிதாக தெரியவில்லை அவன் மனைவி அவன் முத்திடுவான் என்ன வேண்டுமானாலும் செய்வான் அவன் எப்போதும் அவளிடம் நடந்து கொள்வது தானே ஆனால் அவளுக்கு அவன் முன்னே செய்ததும் தருணனின் கண்கள் அவளை ஆக்ரோஷத்தோடு பார்க்க அதை பார்த்த அடி வயிற்றில் புளியை கரைத்தது..அந்த காட்சியை பார்த்து அனைவரும் மெல்லிய நகை புரிய தருண் மட்டும் அவன் கையில் சூட்டிங்கிற்காக வைத்திருக்கும் ஒரு இரும்பு ராட்டை முறுக்கினான் விட்டால் அவளை அடித்து விடுவான் போல அது போல நின்று கொண்டு இருந்தான்.
அவளை அமரவைக்க டைரக்டர் தனது அசிஸ்டன்ட் தருணை அழைத்தார், " தருண் இங்கே வா மேடம்மை அங்கு உட்கார வை" என்று கூற,
தருண் அவளை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டே நடந்து வந்தான், " சீக்கிரம் வா மேடம் வெயில நிக்கிறாங்க பாரு" என்று அவர் கரிசனத்தோடு கூற
அவளுக்கு அடிவயிற்றிலிருந்து பயம் வந்தது காதலன் தருண்..தருணை எவ்வளவு பிடிக்கும் என்று அவளிடம் கூறினால் மலையைக் காட்டி இதைவிட பிடிக்கும் என்று கூறுவாள் அவனுடன் இருக்கும் நேரம் அவளுக்கு பொன்னானது.. தருண் அவளுடைய கல்லூரித்தோழன் தோழனாக அறிமுகமாகி காதலனாக மாறியவன் காதலன் என்று கூறினால் கல்லூரியில் படிக்கும் பொழுது ஒன்றும் அவர்களின் காதல் மலரவில்லை..
இதோ இந்த ஒருவருடமாக தான் காதல் அருவியாக கொட்டத் துவங்கியது அதுவும் அவளது வீட்டில் இந்த நொடி வரை யாருக்கும் தெரியாது அவளது மன சாட்சியான மிஹ்ரான் அவனுக்கு மட்டும் தான் அவளது காதல் கதை தெரியும்..
அவனை காணவென்று மிஹ்ரானுடன் டேட் செய்வது போல செல்ல அதை தான் மீடியாக்கள் மிஹ்ரான் மட்டும் ஹிமானியின் பெயரை போட்டு காசு பார்த்து கொண்டிருக்க ஆனால் அங்கு நடப்பதே வேறாக இருந்தது..
மிஹ்ரான் தான் அவளுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்கள் இருவரை சந்திக்க வைப்பான் ..
மிஹ்ரானுக்கு அவள் மீது காதல் எல்லாம் வரவே வராது அவள் அவனுடைய ஃபட்டி அவனுடைய ஸ்வீட்டி பேபி அப்படி இருக்க ஒரு நாள் அவள் மிஹ்ரானை காண வந்தாள்..
வந்தவள் தன் கையில் இருக்கும் நகத்தை எல்லாம் கடித்து , " பேபி எனக்கு ஒருத்தனை ரொம்ப புடிச்சிருக்கு..சத்தியமா அவன் இல்லாமல் என்னால இருக்க முடியும்ன்னு தோணல "..என்று கூற அவள் கூறும் விதத்தை கேட்டு சிரித்த மிஹ்ரான் , " யார் அந்த முட்டாள் "என்று வினவ அவளோ, " போடா என்று அவனது தலையில் அடித்து, " தருண் என் கூட படிச்ச சீனியர் அப்போ நல்ல பிரண்ட்சா தான் இருந்தோம் இப்போ அவன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்று கூற, அவனை பற்றி விசாரித்தான் மிஹ்ரான்..
ஏனெனில் இவள் இப்படி தான் எந்த நேரத்தில் அவளுக்கு என்ன பிடிக்கும் என்று கூற முடியாது அவள் அப்படிப்பட்ட ஒரு பெண் ..சில சமயம் ஒரு விஷயத்தை என்று பிடிக்கும் என்று கூறுவாள் மறுநாளே அது பிடிக்கவில்லை என்று கூறுவாள் அது போல தான் என எண்ணி மிஹ்ரான் வினவ ஆனால் அவள் உண்மையாக தான் அவனை காதலிக்கிறாள் அவனுக்காக எந்த அளவுக்கும் அவள் செல்வாள் என்பது போல இருந்தது..
" அவனோட ஃபேமிலி பற்றி சொல்லனுமா அவனுக்கு யாரும் இல்ல ஹாஸ்டல்ல தான் இருந்தான் அப்படித்தான் வளர்ந்தான் "என்று கூற , "அப்போ அவன் கிட்ட பணம் இல்லையா?? "என்று ஓபன் ஆகவே கேட்டுவிட்டான் மிஹ்ரான்..
அதை கேட்டு அவளோ, " பணம் என்ன பணம் இன்னிக்கு அவன் கிட்ட இல்லை ஆனால் நாளைக்கு அவன் சம்பதிப்பான்.. இல்ல ஆனா அவன் சம்பாதிப்பான் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு அவனுக்கும் சினி பீல்டு தான் ரொம்ப பிடிச்ச இடம் அதுல எப்படியாவது அவன் விடுவான்னு என்கிற நம்பிக்கை இருக்கு" என்று அவள் கூற மிஹ்ரான் அவளை அதிசயமாக பார்த்தான்..
அவளுக்கு புரியும் விதமாக, " நீ பார்ன் வித் சில்வர் ஸ்பூன் நான் கேட்கிறேன் நீ தப்பா நினைக்காத உன்னால எப்படி அவன் கூட வாழ முடியும் ??"என்று கேட்க ,
அவளோ , "ஏன் முடியாது அவனும் முன்னேறி வாழ்க்கையில் ஜெயிப்பான்" என்று அவள் உறுதியாக கூற மீஹ்ரான் அதற்கு மேல் அவளிடம் எதுவும் கேட்கவில்லை அதற்கு பதிலாக அவளுக்கு அவனை காண வேண்டுமென்றால் சந்திக்க ஏற்பாடு மட்டும் செய்து கொடுப்பான்..
தருணை பொறுத்தவரை யாரும் இல்லாத ஒரு அனாதை அந்த வேதனை அவனுள் எப்பொழுதும் மண்டிக்கிடக்கும் படிக்கும் பொழுதும் கஷ்டத்தில் வாழ்ந்தவன் வளரும் பொழுதும் கஷ்டத்தில் இருப்பதால் அவனுக்கு ஒரு காம்ப்ளக்ஸ் எப்பொழுதும் இருக்கும் அவனுக்கு ஹிமானியை ரொம்ப பிடித்தாலும் அவள் ஒரு பணக்காரி பெரிய இடம் என்ற அவனுள் ஒரு தாழ்வு மனப்பான்மை எப்பொழுதும் இருக்கும் அவள் ஏதாவது அவனிடம் பேசினால் கூட பணத்தை குறிவைத்து பேசுகிறாளோ என்ற எண்ணம் எப்பொழுதும் அவனுள் சென்று கொண்டே இருக்கும்...
குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் இவள் ஒரு செலிபிரிட்டி கிட் அதனால் இவள் மீது எப்பொழுதும் கேமராக்கள் சூழ்ந்து இருக்கும் அவள் எங்கே செல்கிறாளோ அதை வைத்து கண்காணித்து அதை போட்டோ எடுத்து போடும் ஆட்கள் தான் இந்த மீடியாவில் உள்ளனர் ..
அப்படி இருக்க அதிலிருந்து எல்லாம் தப்பிக்க வேண்டுமெனில் அவள் ஏதாவது பெரிய பெரிய ஹோட்டலுக்கு தான் செல்ல வேண்டும் அங்கு தான் தருணை சந்திக்க வேண்டுமென்றால் சந்திக்க முடியும் அல்லாமல் பார்க் பீச் இது போன்ற இடங்களில் ஒன்றும் அவளால் சந்திக்க இயலாது ..
மேலும் நிதிஷை பொறுத்தவரை அவருக்கு அந்தஸ்து மிக மிக முக்கியம் அவர் நிகரான ஒருவருக்கு தான் தன் மகளை கொடுப்பதாக முடிவு செய்து வைத்திருந்தார் அதனால் எப்படி இருந்தாலும் ஒன்றுமில்லாத ஒருவனுக்கு அவர் மகளைக் கொடுக்க மாட்டார் என்பது எனக்கு நன்றாக தெரியும் இருந்தும் அவள் தன் மீது வைத்த காதலுக்காக தந்தையிடம் பேசப் போக தைரியமில்லாமல் மிஹ்ரானை நாடினாள்
அவனோ , "உன் டாடி சம்மதிப்பார் என்று எனக்கு தோனல நம்ம வீட்ல அப்படி கல்யாணம் பண்ணி கொடுப்பாங்க எனக்கு தெரியலை" என்று கூற இப்போது நான் என்ன செய்வேன் என்று முழித்தாள் ஹிமானி..
"எனக்கும் நோ ஐடியா ஹீமோ நானே இந்த படம் சரியா ரிலீஸ் போகல அப்படினா டாடி இனி சினிமா வேண்டாம் ப்ரோடுக்ஷன் பண்ணனும் சொல்லிட்டாரு அந்த டென்ஷன்ல தான் நான் இருக்கேன்" என்று கூற அதைக்கேட்ட அவளோ என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தாள் ..
தருண் வேறு எப்பொழுதும் அவளிடம் கோபமாக," நீ எல்லாம் என்னை ஏமாத்திட்டு தான் போயிடுவ இப்போ காதல் கத்தரிக்கான்னு சொல்ற ஆனா நீ எப்படி இருந்தாலும் வேற எவனையாவது கல்யாணம் பண்ணிட்டு இப்ப ஏன் இந்த மிஹ்ரான் கூட உனக்கு மாப்பிளையா வரலாம்" என்று கூற ,
அதை கேட்ட அவளோ," ஒஹோ என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா??" என்று வினவ அவனோ கோபத்தோடு," எப்படி நம்ப சொல்ற??"
"நம்பு " என்று கூற அவனோ , "எனக்கு உன் மேல நம்பிக்கை இல்லை எவ்ளோ பணக்கார பொண்ணுங்களை பார்த்து இருக்கேன் ஏதோ நீ அந்த வகையில இல்லாதவன்னு நான் நம்புறேன்" என்று கூற அவளும் அவள் காதலை அவனுக்கு நிரூபிக்க முடிவு செய்து ,"நான் அப்படி இல்லேன்னு உனக்கு ப்ரூவ் பண்றேன் பார் " என்று சவால் விட்டு கொண்டாள் அவள்.
அவளுக்கு எப்படியாவது அவனுக்கு தான் அப்படிப்பட்டவள் என்று நிரூபிக்க வேண்டும்..
ஆததால் அவள் முயல எப்படியும் தூரம் யோசித்துப் பார்த்தும் அவளுக்கு கிடைத்த விடயம் எப்படி இருந்தாலும் அவள் குடும்பம் ஒத்துக்கொள்ளாது என்று தான் தோன்ற அப்போது தான் வேறொரு ஐடியா கிடைத்தது..
