ஸ்வரம் 12
ஸ்வரம் : 12
மாலத்தீவு
சுற்றுலா பயணிகளுக்கும் புதிதாக மணம் ஆனவர்களுக்கும் அவர்களுடைய பயணத்தில் மாலத்தீவு எப்படியும் ஒரு சாய்ஸ் ஆக இருக்கும் அந்த அளவுக்கு அருமையான இடமது.. கண்ணைக் கவரும் இடமும் அந்த அழகும் யாராக இருந்தாலும் ஒரு முறையாக சென்று பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் இடத்தில்தான் ஆர்யா தன் மனைவியை அழைத்து சென்றிருக்கிறான்..அவனுக்கு மிக பிடித்தமான இடமது இரு மாதத்திற்கு ஒரு முறையாவது யாரிடமும் கூறாமல் அமைதியாக வந்து அமர்ந்து விடுவான்..அங்கு தான் தன் மனைவியையும் அழைத்து வந்து இருக்கிறான்..
ஆம் அவர்களின் ஹனிமூன் என்று கூறிவிட முடியாது அவனுக்கு ஒரு ஆட் சூட் இருந்தது அதற்காகத்தான் அங்கு சென்று இருக்கின்றனர் அது ஒரு வாசனை திரவியதிற்கான விளம்பரம் அதற்கான செட்டுகள் எல்லாம் போடப்பட்டு இருக்க நாளை தான் அதற்கான ஷூட் நடக்க இருக்கிறது அதற்கு எதிர்புறம் உள்ள ரிசார்ட்டில் தான் இவர்கள் தங்கி இருக்கின்றனர்..
மரத்திலான ஒரு வீடு சகல வசதியுடன் அடங்கிய வீடு அந்த அறையின் பால்கனியை திறந்தால் நேராக கடலுக்குள் இறங்கும் வகையிலான வடிவமைப்பை பெற்று இருக்க அந்த பால்கனியில் போடப்பட்டு இருக்கும் இருக்கையில் தான் அவன் அமர்ந்து இருக்க அவளும் அவன் அருகே அமர்ந்து கொண்டு கடலை வெறித்து கொண்டிருந்தாள் இவன் அவளை வேண்டுமென்றே தொல்லை படுத்துவான் போல இந்த அறை தான் அவளுடைய வாழ்வை தலைகீழாக மாற்றிய அறை அது அங்கு தான் ஒரு நாள் இரவு அவனுடன் அவள் கழித்தாள் அந்த சமயத்தை தான் அவன் பயன்படுத்தி அவளை மனைவியாக்கி கொண்டான்..
குறிப்பாக கூற வேண்டும் என்றால் இந்த அறையும் அந்த இரவும் தான் அவர்கள் இருவரையும் இணைப்பதற்கான அச்சாரம் என்று தான் கூற வேண்டும் அதை அவளுக்கு நினைவுப்படுத்த தான் அவன் அழைத்து வந்து இருக்கிறானோ என அவள் எண்ணி கொண்டிருந்தாள்..
நடந்த முடிந்த அந்த பிரச்சினைக்கு பிறகு கிட்டத்தட்ட அடுத்த இரண்டு நாட்களிலேயே அவளை இங்கு அழைத்து வந்து விட்டான் அவளுக்கும் ஏதோ இந்த இடங்கள் எல்லாம் பார்க்கும் பொழுது மனதில் உள்ள அழுத்தம் குறைவது போலத் தான் இருந்தது..
அன்றைய பிரச்சனைக்கு பிறகு அவன் அவளிடம் சண்டை எதுவும் போடவில்லை அன்றே அவளை ஹோட்டல் தாஜூக்கு அழைத்துச் சென்றான்.. பல மீடியாக்கள் அவர்களை மொய்த்துக்கொள்ள அழகாக கச்சிதமான தம்பதிகள் போல இருவரும் போஸ் செய்தனர்..
கழுத்தில் தாலியோடு தகதகவென ஜொலிக்கும் அலங்காரத்தோடு தான் அவளை அவன் அழைத்து சென்று இருந்ததால் ஏதோ ஒரு கோவிலுக்கு சென்று நேராக தாஜ்க்கு வருவது போல இருந்தது அவர்களது செய்கை மேலும் தாஜ் ஹோட்டலின் பின்புற பகுதியில் ஒரு ஜிம் இருக்க அதற்கு தான் அவள் அந்த நேரத்தில் அப்படி ஒரு உடையில் வந்தால் என்பது போல பூசி மொழுகப்பட்டது அதனால் பெரிதாக சந்தேகங்கள் யாருக்கும் எழவில்லை ஒரே நாளில் இரு வேறு செய்திகளை வெளியிடப்பட்டாலும் அதில் அவன் கூறிய செய்தி மட்டும்தான் பிரபலப்படுத்தப்பட்டது
இதோ இங்கே வந்தும் அவள் எதுவும் அவனிடம் பேசவில்லை அவனும் பெரிதாக அவளிடம் பேசிக் கொள்ளவில்லை அது அவனது இயல்புதான் புதிதாக அவனால் மாற்ற முடியவில்லை இருந்தும் அவளை நன்றாகத்தான் அவன் பார்த்துக் கொண்டான் ஆனால் அவளுக்குத் தான் ஏதோ ஒரு மான்ஸ்டரிடம் மாட்டிக்கொண்ட சிறு மான் போல தோன்றியது ..
ஆம் ஏதாவது செய்தால் அவன் வேறு எதுவாக அவள் குடும்பத்தை தாக்குவான் என்பது நன்றாக உணர்ந்து கொண்டாள் தன் தந்தை அந்த கேசில் இருந்து வெளியே வர அரும்பாடுபட்டு தான் வெளியே வந்தார் என்ற செய்தியும் ஷிவானி வாயிலாக அவள் அறிந்தாள்..
மேலும் அவளுக்கு மிஹ்ரானுக்கு அந்த பட வாய்ப்பு மீண்டும் கிடைக்கப் பெற வேண்டும் அதற்காக மாலதீவு செல்ல தயார் தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது அவள் அவனருகே வந்தாள்..
அவனோ ஏதோ ஒரு அழைப்பில் பிசியாக இருக்க தன் கைகளை பிசைந்து கொண்டு அவன் அருகே நின்று கொண்டிருந்தாள் அவனது பார்வை மேலிருந்து கீழாக அவளை அளந்தவனுக்கு அவள் ஏதோ கூறத்தான் வருகிறாள் என்பதை புரிந்து கொண்டவன் போனை கட் செய்து அந்த ஒற்றை சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தவன் அவளை பார்க்க அவளோ அவன் அருகே வந்து நின்று கடந்த இரண்டு நாட்களில் அவள் அவளாக அவன் அருகே வந்தது கிடையாது அவன் தான் எப்பொழுதும் போல அவளை ஆட்டி படைப்பான் அவளும் அமைதியாக இருக்க இப்பொழுது அவள் அவனருகே வரவும் அவன் புருவம் அதிசயமாக ஒரு நொடி உயர்ந்தது
"எனக்கு உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்று அவள் கூற,
" சொல்லு "என்றான் , "நான் உன் கூடவே இருப்பேன்" என்று கூற, அதைக்கேட்டு அவனோ நக்கலாக, " இருந்துதான் ஆகணும்" என்று பதில் அவனிடமிருந்து வர,
இவவளோ உள்ளுக்குள் கடுப்பாகி, " அதாவது நான் உன்னை விட்டு போக மாட்டேன் ஆனா மிஹூக்கு அந்த படவாய்ப்பு கண்டிப்பா அவனுக்கு போகணும் நீ அவனை டிஸ்டர்ப் பண்ண கூடாது அவனுக்கு இந்த சினிமா அவனோட கேரியர்ல ரொம்ப முக்கியம் "என்று கூற ,
அதைக் கேட்ட அவனோ , "இந்த நொடி வரை நீ அவனுக்காக என்கிட்ட பேச வரும்போதெல்லாம் அவனை வெட்டி போடணும் தான் எனக்கு தோணுது அவனுக்காக எதுவும் செய்யக்கூடாதுன்னு தோணுது.. ஆனா நீ என்கிட்ட முதல் முறையா ஒன்னு கேட்டு இருக்க அதை நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன் அதனால அந்த படம் அவன்தான் நடிப்பான் அது நல்லா ஓடினா மட்டும் தான் அவன் மேல வருவான் இல்ல அப்படினா அதுக்கு காரணம் நான் கிடையாது என்னால அவனுக்கு எந்த தொல்லையும் வராது அதே மாதிரி என் வழியில் அவன் வந்தா அப்படின்னா மேற்கொண்டு எதுவும் நான் சொல்ல தேவையில்லை தானே அவன் இனி சினிமான்னு ஒரு விஷயத்தை கூட கண்ணால பார்க்க மாட்டான் அதுக்கு நீ இனிமேல் அவன் பக்கம் கூட போகக் கூடாது" என்று ஒரு எச்சரிக்கையும் கூற ,
அவளோ , "உண்மையான தான் சொல்றியா??" என்று அவன் கண்களை நம்ப முடியாமல் பார்த்தாள், " நான் வாக்கு எல்லாம் கொடுக்க மாட்டேன் கொடுத்தாலும் அதை கொஞ்சம் காப்பாத்துவேன்" என்று கூற
அதைக்கேட்ட அவள் மென்னகை புரிய இவனுக்கு அவளைப்பார்த்து அந்த நொடி முத்தமிட வேண்டும் என தோன்றியது மெல்ல எழுந்தவன் அவளது முகம் நோக்கி குனிய வேகமாக தன் கண்களை மூடிக்கொண்டாள் ஹிமானி..
அவளுக்கு திருமணம் முடிந்த இந்த 48 மணி நேரத்தில் அவன் அவளுக்கு பல நூறு முத்தங்களை வாரி வழங்கி இருப்பான் எப்போதும் அவன் முதன் முறையாக முத்தமிடுதல் போல தான் அவள் முகம் சிவக்கும் அதனால் இதுவும் அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான் இந்த மூன்று நான்கு நாட்களாக அவன் என்ன செய்வான் அருகே வந்தால் எந்த விதமான உணர்வு அவளுள் தோன்றும் என்பதையெல்லாம் மிக அழகாக படித்த வைத்திருக்கிறாள்..
அவனது விரல்களின் ஜாலங்களில் அவளுக்கு பல சமயங்கள் உணர்ச்சிகளின் பிரவாகத்தில் கிளர்த்து எழும் அவளது உணர்வுகள் அதை நினைக்கும் பொழுது அவளுக்கு எரிச்சலாக இருக்கும்
தன் மனம் மட்டும் தான் இவனுக்கு எதிராக இருக்கிறது தன்னுடல் இவனுடைய கண்காணிப்பில் தான் இருக்கிறது இவனது தொடுகைக்கு எவ்வளவு அழகாக வளைந்து கொடுக்கிறது என் தேகம் என்று நினைக்கும் போதே அவளுக்கு எரிச்சலாக இருக்கும் ஆனால் அவள் அவனிடம் எதையும் மறுப்பதில்லை அவனது விருப்பத்திற்கு இணங்கி தான் இருக்கிறாள் ஆனால் புலி பதுங்குவது பாய்வதற்கு தான் என்பதை நன்றாக அறிவான் ஆர்யா
காதலனுக்கும் தந்தைக்கும் எந்த விதமான பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அமைதியாக இருக்கிறாள் இல்லையேல் இவள் நடப்பதே வேறு என்பதை உணர்ந்துகொண்ட அவனும் அப்படி என்னதான் நடந்து விடப்போகிறது என்ற இறுமாப்பில் இருந்தான்
இதோ அவளோ கடலை வெறித்து கொண்டு இருக்க அவனோ அவளை பார்த்து அணு அணுவாக ரசித்து கொண்டிருந்தான் ஆனால் அவன் பார்த்து ரசிக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது அவன் முகம் காட்டி கொடுக்காமல் இருக்க அவளோ எங்கோ அவனருகே அமர்ந்து வேடிக்கை பார்க்க எப்போது அவன் அவளது சோபாவில் வந்து அமர்ந்தான் என தெரியவில்லை அவள் அருகே நெருங்கி அமர்ந்து அவளை நொடி பொழுதில் அவனது காலுக்கு இடையில் அமர வைத்தவன் அவளது இடையை சுற்றி வளைக்க அவளோ அவனை நோக்கி திரும்பி இதை நான் எதிர்பார்க்கவில்லை என்பது போல பார்க்க அவனோ ,
அவளின் செவ்விதழை நோக்கி குனிந்தவன் அவளின் அதரங்களை தன்வசம் ஆக்கிக் கொள்ள அவளும் கண்களை மூடிக் கொண்டு அவனது தொடுகைக்கு இயைந்து போக
அந்த நேரம் பார்த்து காலிங் பெல் அடித்தது கொஞ்சம் அழுத்தமாக அடித்ததோ என்ற சந்தேகம் அறைக்குள் இருக்கும் இருவருக்கும் தோன்றியது நோ டிஸ்டர்பன்ஸ் என்ற போர்டு வைத்தும் யார் இப்படி அழைப்பது என்ற கோபத்தில் இருந்தான் ஆர்யா..
அதாவது உணர்ச்சிப் பிரவாகத்தில் செல்ல முனைய அதை தடுக்கும் விதமாக யாருடைய அழைப்பு என்பதை அவனது கேள்வியாக இருக்க அடித்தால் அடித்து விட்டு போகட்டும் என்று மீண்டும் அவளது இடையை வளைத்து பிடிக்க மீண்டும் காலிங் பெல் அடித்தது..
அவளோ அவன் முத்தமிட போகிறானே என கண்களை இறுக மூடிக்கொண்டு இருந்தவளுக்கு காலிங்பெல் சத்தம் அவளது கவனத்தை திசை திருப்ப அவனோ போகவில்லை என்ற கடுப்பில் , "நான் இப்ப வந்துடறேன்" என்று கூறி விட்டு கதவை திறக்க சென்றான்..
அங்கே ஆட் ஷூட் எடுக்க ஆட்கள் வந்திருந்தார்கள் அதில் ஒருவன்தான் காலிங்பெல்லை விடாமல் அடித்துக் கொண்டிருந்தான் அவனைப் பார்த்து முறைத்த ஆர்யா , "என்ன விஷயம்??" என்று கேட்க, " சார் ஆட் ஷூட்டுக்கு டிஸ்கஷன் வெச்சுக்கலாம்னு டைரக்டர் சார் சொன்னாங்க" என்று கூற , "இதை சொல்லத்தான் என்ன கூப்பிட்டீங்களா உங்களுக்கு அறிவு இல்லை எனக்கு ஒரு மேனேஜர் இருக்கான் அவங்க கிட்ட தானே இதை பத்தி டிஸ்கஷன் பண்ணிக்கணும் எதுக்காக என்னை டிஸ்டர்ப் பண்றீங்க?? நான் நோ டிஸ்டர்பன்ஸ் போர்டு வச்சிருக்கறது பாக்கலையா நீங்க??" என்று கூற ,
"சரி சார்" என்று பதிலளித்தான் அவன், " என்ன சாரி ஏதாவதுனா கால் பண்ணி கேக்கணும் ஒரு சின்ன பேசிக் மேனர்ஸ் கூட இல்லையா உங்க டைரக்டரை கூப்பிடுங்க நான் இதுல நடிக்கணுமா இல்ல டிஸ்கஷன் வரணுமா நான் முடிவு பண்ணிக்கிறேன் இனி லுக் காலிங்பெல் சத்தம் என் காதுக்கு கேட்கக்கூடாது " என்று எச்சரிக்கை செய்துவிட்டு பட்டன கதவை அடைத்தான் ஆர்யா..
பிறகு அவன் அவளிடத்தில் வந்ததும் அவனது முகம் மென்மையாக மாற அவளும் வந்தவர்கள் யார் என்று புரியாமல் யார் வந்தால் நமக்கு என்ன வேலை என எண்ணி அமைதியாக இருந்து கொள்ள அதன் பிறகு அங்கே ஒரு அழகிய சங்கமம் நிகழ்ந்தது ..
இதோ இரவு முழுவதும் நடந்த களியாட்டத்தில் காலையில் உறங்கி கொண்டிருக்க அவனது மேனேஜர் தான் அழைத்து இருந்தான்..
அவனுக்கு ஆர்யா போன் எடுக்காமல் இருப்பதே கொஞ்சம் அந்த மேனேஜருக்கு பயமாக இருக்க இன்று ஷூட் நடக்குமா என்று பயத்தில் தான் அவன் இருக்க மீண்டும் விடாமல் போன் அடித்து கொண்டு இருக்க அவளை இருக்க அணைத்து படுத்து கொண்டிருக்கும் அவனுக்கு அந்த அணைப்பு எரிச்சலை கொடுத்தாலும் போனை எடுத்தான் அவன் அவளோ அவன் மார்பில் உறங்கி கொண்டு இருக்க கலைந்த கோலமாக இருக்கும் அவளை ரசித்தவன் அவளது நெற்றியில் இதழ் பதித்து போனை எடுக்க சார் இன்னிக்கு பத்து மணிக்கு ஷூட் சார் என்று 9.45 ஆகி விட்டது என்பதை கூறாமல் அவனது மேனேஜர் நிகில் கூற
"அதுக்கு நான் என்ன பண்ண முடியும் ??"
" சார்"
"நான் நடிக்கணுமா வேண்டாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன் " என்று ஒரு குண்டை தூக்கி போட
" சார் அப்படி எல்லாம் சொல்லாதீங்க சார் கடைசி நேரத்தில் இப்படி சொன்னா அவங்களுக்கு கஷ்டம் ஆகிடும் சார் " என்க
" அப்படி கஷ்டம் வரும்னா நீ நடிச்சு கொடு அவன் எப்படி நேத்து என் ரூமுக்கு வரலாம் நீ எப்படி அவங்களை அலோ பண்ணலாம்" என்று கூற
" சார் நான் சொன்னேன் சார் அவங்க கேட்கலை" என்க
" அப்போ நானும் கேட்க மாட்டேன் " என்று கூறி போனை வைத்து விட அடுத்த நொடியோ அந்த ஆட் சூட்டின் இயக்குநர் அழைத்து ஆயிரம் சாரி சொல்ல பிறகு ஒரு அரைமணி நேரத்தில் வருவதாக கூறி போனை வைத்தான்..
பின் உறங்கும் தன் மனைவிக்கு அருகே சென்று அவள் அருகே மீண்டும் படுத்து அவளது நாசியில் தன் இதழை பதிக்க அவளோ உறக்கம் கலைந்தாள்..
அவனை அருகே பார்த்தவள் பதறி எழ போக அவனோ எனக்கு ஷூட் இருக்கு நீயும் ரெடி ஆகு" என்க,
அதை கேட்டவளோ , " நான் வரல நான் இங்கேயே இருக்கேன்" என்று கூறி மறுக்க அவனோ, " இங்கே இருந்து என்ன பண்ண போற கிளம்பு " என்று மீண்டும் அவளை முத்தமிட்டு அவன் குளிக்க செல்ல அவளும் என்னை விட மாட்டான் என கருதி அவளும் கிளம்ப தயாராகி அவனுடன் செல்ல அங்கு அழகாக வாசனை திரவியதற்கான செட் அழகாக போடப்பட்டு இருக்க அவனுடன் நடிக்க இருக்கும் நாயகி எல்லோரும் வந்து இவனுக்காக காத்திருக்க அவன் தன் மனைவியோடு உள்ளே நுழைந்தான்..
அவளும் அந்த செட்டை எல்லாம் பார்த்து கொண்டே செல்ல ஹிமானியின் கண்களுக்கு அவன் தென்பட்டான் அவனை அவள் இங்கு வைத்து பார்ப்பாள் என நினைக்கவில்லை அவன் தான் ஹிமானியின் ரகசிய காதலன் என்று கூறினால் நம்ப முடிகிறதா அது தான் உண்மை மிஹ்ரான் அவளுடைய உயிருக்கு உயிரான நண்பன் தன் தோழிக்காக அவளை திருமணம் செய்து கொள்ள தயாரானவன் வெளிப்பார்வைக்கு மிஹ்ரான் காதலன் வேடம் பூண்டு அசிட்டெண்ட் டைரக்டர் ஆக வேலை செய்யும் தருணை ஹிமானி யாருக்கும் தெரியாமல் காதலித்து கொண்டு இருக்கிறாள் என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் ஆனால் அது தான் உண்மை மிஹ்ரான் மற்றும் ஹிமானிக்கு நடக்க இருந்த திருமணமே அவர்கள் இருவரும் சேர்ந்து அவர்களது குடும்பத்தை ஏமாற்ற செய்த நாடகம் எனில் அவள் குடும்பத்தை ஏமாற்ற நாடகம் செய்ய அவளது கணவனோ அவளையும் சேர்த்து அனைவரையும் ஏமாற்றி விட்டான்..இந்த விஷயம் அவள் கணவனுக்கு தெரியுமா?? தெரிந்தால் என்ன நேருமோ???..
ஸ்வரம் இசைக்கும்..
