ஸ்வரம் 11
ஸ்வரம் : 11
அவனது அறையே மெல்லிய இரவு விளக்குகளால் சூழ்ந்திருந்தது அவனும் படுத்துக்கொண்டு இருக்க அவன் உறங்க வில்லை என்பதற்கு சாட்சியாக அவனது கையும் காலும் அந்த மெல்லிசை கேட்பா அசைத்துக்கொண்டு இருக்க அவள் அணிவித்த தாலியோ அவன் கைகளில் பாட்டு ஏற்ப சுழன்று கொண்டிருந்தது..அவளோ அந்த அறையில் அவனுக்கு அருகே எரிச்சலோடு நின்று கொண்டிருக்க அவனிடம் எந்த அசைவும் இல்லை..
இவ்வாறு பத்து நிமிடங்கள் ஆகி இருந்தும் அவன் கண்களை திறக்கவில்லை அதை கண்டவள் நடிக்கிறான்னு நல்லாவே தெரியுது நான் வந்தது உனக்கு தெரியுமா தெரியாதா என்று எண்ணியவள் , "நீ தூங்கலன்னு எனக்கு நல்லா தெரியும் சோ என்கிட்ட உன் நடிப்பை காட்டாத" என்று முதலில் கச்சேரியை ஆரம்பிக்க மெதுவாக தன் கண்களை திறந்தான் ஆர்யா..
" ஓ அப்போ உன்னோட நடிப்பை நீ காட்ட போறியா??" என கூறி கொண்டே அவன் கண்களை திறக்க
அவன் படுத்திருக்கும் கட்டிலின் பக்கவாட்டில் அவள் வந்து நின்று கொண்டிருக்க அவன் கண்களை திறக்கவும் அவன் கண்களில் உள்ள சிவப்பு அவளுக்கு அச்சத்தை கொடுத்தது ..
மது அருந்தியதால் வந்த சிவப்பா அல்லது கோபத்தால் வந்த சிவப்பா என அவளுக்கு புரியவில்லை என்ன இருந்தாலும் கூற வேண்டியதை கூறியே ஆக வேண்டும் என எண்ணி, " எதுக்காக இப்படி எல்லாம் செஞ்சிட்டு இருக்க உனக்கு என்ன தான் வேணும் எனக்கு உன்னை பிடிக்கலைன்னு நான் உனக்கு நல்லா தெரியும் அப்புறம் எதற்காக இந்த கல்யாணம் யாரைப் பழிவாங்குவதற்காக?? ஏன் வீட்ல யாரும் உன்னை எனக்கு தெரிஞ்சு வேற எதுவும் சொன்னதில்லை அதேபோல தான் மாமா வீட்டிலேயும் ஆனால் நீ மட்டும் ஏன் இப்படி பிஹேவ் பண்ணுற?? நீயும் நம்ம குடும்பத்தில் தானே பொறந்த?? அவங்க யாருமே உன்னோட வழிக்கு வரது இல்லையே நீ ஏன் எங்களையெல்லாம் குறிவைத்து தாக்கிட்டு இருக்க" என்று அவள் சீரியசாக கூற அவனோ அவளது பேசும் அதரங்களை பார்த்துக்கொண்டிருந்தான்..
முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல் தனது பால் போன்ற முகத்தில் செர்ரி பழ நிறத்தில் இருக்கும் அவளது அதரங்கள் அங்கும் இங்கும் ஒட்டிக்கொண்டு பேச அவளது இதழாக மாறிவிட்டாள் என்ன என அவளை மேலிருந்து கீழாக அங்குலம் அங்குலமாக ரசித்தான் கையில்லாத பனியன் இடுப்பில் சிறு முடிச்சுட்டு அதில் தென்படும் அவளது வெண்ணிற இடையும் அவளது குட்டை பாவாடையும் அவனை அவள் பால் ரசிக்க வைக்க , அவளை கதி கலங்க வைக்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு அவளது அழகு
அவனை கொல்ல அவனும் ருசி கண்ட பூனை நேற்றிரவு அவள் தந்த போதை அவன் இப்பொழுது குடித்த போதையை காட்டிலும் அதிகமாகத்தான் இருந்தது அதனால் தானோ என்னவோ அவன் அவளை ரசித்துக் கொண்டிருக்க அவளோ படபடவென பொரிந்து கொண்டிருந்த அவளின் பார்வை அவன் மீது விழ அவன் பார்வை அவளை ஏதோ செய்ய வேகமாக தன் வாயை மூடிக்கொண்டாள் மேற்கொண்டு அவளுக்கு என்ன பேசுவது என்று அவளுக்கு தெரியவில்லை ..
இந்த உடையை அணிந்து கொண்டு அவள் உலகம் முழுவதும் சுற்றி வந்து விட்டாள் அப்பொழுதெல்லாம் வராத கூச்சம் அவனது பார்வையில் வருகின்றதோ வேகமாக தான் இட்ட முடிச்சை அவிழ்த்தவள் கையிலுள்ள போனை வைத்துக்கொண்டு திருகி கொண்டிருந்தாள் அதில் வேறு ஏதோ ஒரு மெசேஜ் வரும் சத்தம் வேறு கேட்க,
அந்த போனை பார்த்ததும் அவனுக்கு அவள் மீதான போதை போய் மீண்டும் கோபம் வர மெல்ல எழுந்து நின்றவன் அவளருகே நெருங்கி நின்றான்.. கிட்டத்தட்ட ஒரு இன்ச் இடைவெளி கூட அவர்களுக்கு இடையே இல்லை அப்படி நின்றவன் அவளது முகத்துக்கு நேராக அவன் கட்டிய தாலியை காட்ட அவனது முகத்தில் வெளிப்படும் கோபம் அவளுக்கு பயத்தை கொடுக்க,
அவளோ அவன் முன்னே பதறாமல் நிற்க அரும்பாடுபட்டார் உள்ளுக்குள் அவளுக்கு அவன் என்ன செய்யப் போகிறானோ என அடித்துக் கொண்டு இருந்தாலும் வெளியே விரைப்பாக தான் நிற்பது போல நின்றாள்.. அவனும் அவளைப் பார்த்து அவன் கையில் பிடித்திருக்கும் தாலி கையோடு அவளது கழுத்தை அழுத்தமாக பிடித்தான்..
அவள் இதை எதிர் பார்க்கவில்லை என அவள் முகம் கூற தன்னை தற்காத்து கொள்ள அவளோ அவளது கையிலுள்ள போனை வைத்து அவனை அடிக்கப் போக அவனது மற்றொரு கையால் அவளது கையை தட்டி விட்டான் ஆர்யா.. அந்த போன் சுவற்றில் தெரித்து மொபைல் போன் துண்டு துண்டாக உடைந்து போனது..
அந்த சத்தம் அந்த அறையை நிறைக்க அவளுள் மேலும் பயத்தை கொடுத்தது, "என்ன தைரியம் இருந்தா தாலியை கழட்டி வச்சிட்டு போவ ஏன் டி உன்னை பிளான் பண்ணி தூக்கி கல்யாணம் பண்ணி இருக்கேன் எதுக்கு உன் இஷ்டத்துக்கு நீ ஆடவா என் இஷ்டப்படி நீ நடக்கத்தான் நான் உன்னை கல்யாணம் பண்ணி இருக்கேன் புரியுதா என்ன திமிரா?? ஊர் மேஞ்சிட்டு இருக்க நீ இப்ப நிதிஷ் கபூர் பொண்ணு இல்லை ஆர்யாவோட மனைவி புரியுதா இடியட் நீ தாலி இல்லாமல் சுத்தினது இப்போ எப்படி வைரல் ஆகி இருக்கு தெரியுமா??" என்று கூறிக்கொண்டே அவளது கழுத்தை அழுத்தமாக பிடித்து சுவற்றோடு சுவராக அழுத்தினான் ..அவனுக்கு ஆத்திரம் தன்னை அசிங்கப்படுத்தி விட்டாள் என்றே அவன் எண்ணினான்..
அவளோ வலியால் துடிக்க , "என்னை விடு என்னை விடு ஆர்யா " என்று கூறினாள் அவன் தான் கேட்கும் நிலைமையில் இல்லையே,
"ஏன் என்னோட கால் அட்டென்ட் பண்ணல நான் கூப்பிட்டிட்டே இருக்கேன் கட் பண்ணிட்டே இருக்க உனக்கு வலிக்குதா டி வலிக்கட்டும் எனக்கு புடிக்காதது எனக்கு ரெஸ்பான்ஸ் பண்ணாம இருக்கிறது புரியுதா நீ என்னை என்ன வேணாலும் நெனச்சுக்கோ ஆனால் நான் உன் புருஷன் அதுதான் உண்மை அதை மனசுல ஏத்தி வச்சுக்கோ இந்த தாலியை கழட்டி எறிஞ்சிட்டு போறது கண்டவன் கூட ஹோட்டல் போறது இதெல்லாம் என்கிட்ட வேண்டாம் " என்று மேலும் அழுத்த அவளுக்கு வலி தாங்காமல் அவளது கண்களில் இருந்து கண்ணீர் ஒரு துளி வெளியே வந்தது..
அதை பார்த்து உடனே அவளை விட்டவன் , " என்னை கேள்வி கேட்டியே இந்த தாலியோட மகிமை எல்லாம் உங்க வீட்ல சொல்லி கொடுக்கலையா ஆனா ஊனா பூஜை பண்றீங்க இதுதான் நீ வளர்ந்த லட்சணமா??".. என்று அவன் கேட்க,
அவளோ , "பிடிச்சவங்க கூட வாழனும்ன்னு சொல்லி கொடுத்திருக்காங்க மனசு ஒன்னு இருக்கு அதை பத்தி உனக்கு தெரியுமா??" என்று வலி நிறைந்த கண்களில் வினவ , "எனக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியாது எனக்கு மனசே இல்ல நீ அதை பத்தி ஏன் கேள்வி கேட்கிற ஆனா உனக்கு இந்த தாலி என்னன்னு தெரியும் அதோட மீனிங் என்னன்னு தெரியும் இருந்தும் நீ தாலியை கழட்டி எறிஞ்சிட்டு போற அப்படினா உனக்கு என்ன ஒரு திமிர் இருக்கும்??" என்று கூறியவன் அதுக்கான தண்டனையை இப்போ யார் அனுபவிச்சிட்டு இருக்காங்க தெரியுமா, " தெரியும் என்னோட அப்பாவுக்கு நஷ்டம் ஏற்படுத்தினா நான் மாறிடுவேன்னு நீ நினைச்சிட்டு இருக்க" என்று அவள் கூற , " ஓ அதையும் பார்க்கலாம் "என கூறியவன் நிதீஷின் தற்போதைய ஒரு வீடியோவை காட்டினான் அதில் அவளது தந்தையின் பட செட் கத்தி எரிந்துகொண்டிருந்தது..
அவரோ அங்கு அதை அணைக்க முடியாமல் போலீசாரிடம் கெஞ்சி கூத்தாடி கொண்டிருந்தார் போலீசாரோ , "பர்மிஷன் இல்லாம நீங்க செஞ்சி இருக்கீங்க சார் நீங்க பெரிய ஆளு ஆனா நீங்க இப்படி செய்யலாமா மக்கள் வசிக்கிற இடத்தில நீங்க இதுபோல செட்டு போட்டு படம் எடுக்கலாமா அப்புறம் நீங்க புரோபர் ரூல்ஸ் நீங்க போல பண்ணியிருக்கணும் ஆனா நீங்க அது பண்ணல அதுக்காக உங்க மேல கேஸ் பைல் பண்ணலாம்னு இருக்கோம் ஆக்ஸிடெண்ட்ல சேரியில் இருக்குற ஒரு ஆளுக்கு அடிபட்டு இருக்கு இதற்கு காரணம் உங்களுடைய இந்த கவனமின்மை தான் "என்று அவர் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தார் நிதிஷ் கபூர்
அவள் அதைப் பார்த்து அதிர , "என்ன பாக்குற அடிபட்டவன் கேஸ் பைல் பண்ணா உன் அப்பன் ஜெயிலுக்குப் போவான் அதுவே அவன் செத்தா உன் அப்பன் எங்கே போவான்னு யோசிச்சுக்கோ" என்று கூற அதைக் கேட்டு அதிர்ந்து அவள் விழித்தாள்..
" என்ன பார்த்தா உனக்கு எப்படிடி இருக்கு நைட்டு ரொமான்ஸ் பண்ணினேன்னா அதே மாதிரி தான் இருப்பேன்னு நினைச்சுட்டு இருக்கியா டி அது வேற இது வேற " என்று நக்கலாக கூற அவளோ அதிர்ந்தாள்..
"ஏன் டி எவ்வளவு கட்டம் கட்டி உன்னை நான் தூக்கியிருக்கேன் சும்மா ஊர் மேயவா தூக்கி இருக்கேன் அப்படியெல்லாம் உன்னை விட மாட்டேன் நீ எனக்கு எதிரா மூவ் பண்ற ஒவ்வொரு அடியும் உன் குடும்பத்தை தான் பாதிக்கும் இதோ இப்போ பார்த்தது உன்னோட அப்பனோட ப்ரோக்ராம் அடுத்தது உன்னோட காதலன் என்ன பண்ணிட்டு இருக்கான் உனக்கு பார்க்க வேண்டாம்மா??" என்று கூற,
அவளோ, " நீ இப்படிப் பட்டவன்னு நான் நினைச்சு கூட பார்க்கல தேன் ஒழுக பேசினவன் நீ தானான்னு இருக்கு என் அப்பாவுக்கு எதுவும் ஆகிடக்கூடாது அப்படி ஏதாவது ஆச்சுன்னா நான் சும்மா விடமாட்டேன்" என்று கூறினாள் அவள்..
" ஓ என்னை என்ன மிரட்டுறியா நீ கெஞ்சி கேட்டாளே நான் விட மாட்டேன் இதில அதிகாரம் வேற கபூர் குடும்பம்ல அப்படி தான் இருப்ப நீ.. அப்படி நீ என்ன பண்ணிட முடியும் உன்னால ஒண்ணும் பண்ண முடியாது எனக்கு மனைவியா என்கூட மட்டும் என்கூட மட்டும் என்பதை அழுத்தி நீ இருந்த அப்படின்னா எதுவுமே நடக்காது எல்லாம் அமைதியா இருக்கும் ஆனா என்கிட்ட வால் ஆட்டின அப்படின்னா என்ன நடக்கும்னு பார்க்கவேண்டாம்மா ??" என்று கூறியவன்,
வேறொரு வீடியோவை காட்ட அதில் முன்புறம் மிஹ்ரான் வாகனம் சென்று கொண்டிருக்க பின்னால் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது அந்த வாகனமோ முன்பே செல்லும் வாகனத்தை இடிப்பது போல செல்ல அவளால் மேற்கொண்டு பார்க்க முடியவில்லை, " தயவு செய்து அவர்களை எதுவும் பண்ணிடாத அவங்களை நிறுத்த சொல்லு நான் நீ சொல்றத கேட்கிறேன் ஸ்டாப் பண்ண சொல்லு" என்று கூறினாள்
அதைக்கேட்ட அவனோ, " தட்ஸ் குட் இத எப்போதோ சொல்லி இருக்கலாம்" என்று கூற அவளோ மடித்து அமர்ந்து அப்படியே கண்களை மூடி அமர்ந்து கொண்டாள்..உள்ளுக்குள் அழுதாலும் வெளியே ஒரு துளி கண்ணீர் வெளியே சிந்தவில்லை..
அதை கண்ட அவனின் முகம் ஒரு நொடி அவளைப் பார்த்து குரூரப் புன்னகையுடன் சிரித்தவன் , "எழுந்திரு " என்று அதிகாரமாக கூற அவளோ கண்களை அழுந்தத் துடைத்து அவன் முன்னே அழக்கூடாது என எண்ணி எழுந்து நின்றாள்..
அந்த ஒரு நிமிடம் அவள் அவனிடம் இருந்து இனி தப்பிக்க முடியாது என்ற எண்ணம் அவளுள் தோன்ற அவளோ நிமிர்ந்து நிற்க அவனும் அவளைப் பார்த்து அவளது முகம் நோக்கி குனிய அவளோ கண்களை மூடிக்கொண்டாள் அவள் முகம் வெறுப்பின் உச்சகட்டத்தில் சுருங்கியது அவன் அருகே வருவது அவளுக்கு பிடிக்கவில்லை அவனின் செய்கை அவளுக்கு ஒருவன் கத்தியை காட்டி கற்பழிப்பு செய்வதற்கு சமமான செய்கையை தான் அவன் செய்து கொண்டிருந்தான் என அவளுக்கு தோன்ற அவளுக்கு அவனை சுத்தமாக பிடிக்கவில்லை ஆனால் அவள் வேண்டும் என இவன் ஏன் மல்லு கட்டுகிறான் என அவளுக்கு புரியவில்லை..
மூடிய கண்களை ஒரு நொடி பார்த்த ஆர்யா அவளது கழுத்தில் மீண்டும் அவன் அவளது மங்கல்சூத்ராவை அணிவித்தான், " இனி நான் இறந்ததுக்கு அப்புறம் தான் இதுவும் கழுத்தில் இருந்து இறங்கணும்" என்று மெல்லிய குரலில் கூறினான்..
இதுவரை ருத்ர மூர்த்தியாக இருந்த அவனது குரல் இப்பொழுது சாந்தமாக மாறி இருக்க அவள் எதுவுமே பேசவில்லை, " இப்போ நாம எங்க போறோம்ன்னு தெரியுமா ஹோட்டல் தாஜ் " என்று கூறினான் அவளோ முழிக்க , "என்ன பார்க்கற..விட்ட மானத்தை பிடிக்க வேண்டாமா நீ எங்க இருந்து எங்க போன எங்க வந்த எல்லாமே எனக்கு தெரியும் "என்று கூற ,
அவளோ ஒரு கசந்த புன்னகையை வழங்க அதைப் பார்த்த வண்ணம் அவளது முகத்தை பார்த்து அதில் வழிந்தோடும் வேதனைகளைக் கண்டு அவளது முகத்தை அவனது ஒரு விரலால் நிமிண்டினான்
"நான் உனக்கு கட்டியிருக்கிறது தாலி இல்லை உனக்கான தூக்குக்கயிறுன்னு நீயே நினைச்சுக்கோ" என்று கூற அதைக்கேட்ட அவளுக்கு எதுவுமே தோன்றவில்லை ஆனால் மென்மையாக , "ஆரூ நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன்??" என்று மெதுவாக் கேட்க ,
" என்னை அப்படி கூப்பிடாத என் கண்ணு முன்னாடி நீ வளர்ந்து இருக்க என் கண்ணு முன்னாடி என்னை விட்டுட்டு அவன் கூட சுத்திட்டு இருந்த உன் கண்ணு என்னை மட்டும் தான் பார்க்கணும் என் கூட மட்டும் தான் பேசணும் என்கூட மட்டும் தான் நீ இருக்கணும் டி அதற்காகத்தான் நான் இதெல்லாம் செய்யறேன் போதுமா விளக்கம் " என்று கூறியவன், அவளோ அப்போது பார்த்து , "அப்போ என்னோட மனசு ??" என்று மீண்டும் கேட்க ,
"எத்தனை முறை தான் நீ கேட்ப நான் தான் இதுக்கு பதில் எப்பவோ சொல்லிட்டேனே உன்னோட உன்னோட மனசோ உன்னோட காதலோ எதுவுமே நான் கணக்குல எடுத்துக்க மாட்டேன் சோ அதெல்லாம் என்னை பொருத்தவரைக்கும் குப்பைக்கு சமம்" என்று கூறிவிட இவனிடம் இனி பேசி பிரயோஜனம் இல்லை என எண்ணியவள் அவனது தலையாட்டியாக மாற முடிவு செய்தாள் ..ஏனெனில் அவள் மாறியே ஆக வேண்டும் அதுதான் அவனுடைய எண்ணமும் அவள் இனியும் மாறவில்லை என்றால் மாற வைப்பான் அதற்கான சாம்பிள் தான் அவன் இன்று முழுவதும் அவளுக்கு காட்டியது , "என்ன யோசிச்சு முடிச்சிட்டியா எந்த பெட்ல நான் கட்டின தாலியை தூக்கி எறிஞ்சிட்டு போனியோ அதே பெட்டில இன்னொரு ரவுண்ட் வைச்சுக்கலாம்" என்று கூற அவளோ கண்களை மூடிக்கொண்டாள் அடுத்த நொடி என்ன நடந்தது என அவளுக்கு தெரிய தேவையில்லையே.. அவள் மனம் முழுவதும் ரணமாக மாறி இருந்தது அதை அவன் இறுதி வரை உணரவே இல்லை..ஆனால் அவனே அறியாத ஒன்றை அவன் மனைவி நடத்தி கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அறிந்தாளோ??? என்ன ஆகும்??
ஸ்வரம் இசைக்கும்..
