ஸ்வரம் 10

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

ஸ்வரம் : 10

அவன் முகம் கடுகடுவென இருந்தது எவ்வளவு பெரிய அவமானம் எவ்வளவு பெரிய அசிங்கம் அனைத்து மீடியாக்களும் அவனை கேலி செய்து கொண்டு இருக்க இவனோ கண்டு கொள்ளாமல் இருக்கவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தான்..

அதையெல்லாம் யோசித்துக்கொண்டு வீட்டில் இருந்தவன் இப்படியே இருந்தால் சரியாகாது இனி என் பெயர் உச்சத்தில் ஒழிக்க வேண்டும் அதற்கான முயற்சி செய்ய வேண்டும் என்று கருதிதான் அவன் இங்கே வந்தது ஆனால் இங்கேயும் நிம்மதி இல்லாமல் தயாரிப்பாளர் அதே பேச்சை எடுக்கவும் தயாரிப்பாளரானதால் எதுவும் பேச முடியாது அதனால் அவனும் , "அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருந்தாங்க போல வீட்ல சொல்லல" என்று அதே மழுப்பலான பதிலை கூற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டான்..

இதோ அவளது காரில் ஹோட்டல் தாஜ் சென்று கொண்டிருந்தாள் ஹிமானி அந்த நேரம் பார்த்து அவளது போனில் மீண்டும் ஒரு மெசேஜ் வந்தது அவனிடம் தான் வேறு யார் அவளை அழைக்க போகிறான்..

"நீ இன்னும் பத்து நிமிஷத்துல வீட்டுக்கு வரல அப்படின்னா என்ன நடக்கும்னு எனக்கு தெரியும் ஆனா உனக்கு தெரியாது ஒரு சாம்பிள் தான் இப்போ உங்க அப்பா சுத்திட்டு இருக்காரு அடுத்த சாம்பிள் வேணுமா வேண்டாமா நீயே யோசிச்சு முடிவு பண்ணிக்கோ" என்று கூறினான்..

அவன் அந்த மெசேஜை படித்து பார்த்தவளுக்கு சர்வமும் அடங்கியது அப்போ அப்பாவுடைய படத்தின் செட்டை இவன் தான் வேண்டுமென்றே எரித்தான் என எண்ணியவளுக்கு கொஞ்சம் லேசாக பயம் அவளுள் எட்டிப் பார்த்தது என்னவோ உண்மைதான் என்ன இவன் இப்படி இருக்கான் என்று அவள் நினைக்க ,

என்ன ஆனாலும் பரவாயில்லை மீஹ்ரான் சந்திக்க வேண்டும் என அவள் எண்ணி சென்றாள் ஹிமானி இவன் என்ன பெரிய இவனா என்ன பண்றான் பார்த்துகிறேன் என்று அவள் உச்சகட்ட கடுப்பில் சென்றாள் ஆனால் அவளுக்கு அவனை பற்றி சரியாக தெரியவில்லை என்று தான் கூற வேண்டும்..

அங்கு அவள் தாஜ் ஹோட்டலை அடைந்து அவள் காரில் இருந்து இறங்கவும் பல மீடியாக்கள் அவளை மொய்த்து கொண்டன இதுபோல பல மீடியாக்களில் அவள் கண்டு வளர்ந்ததால் அவளுக்கு பெரிய மாற்றமாக தெரியவில்லை ஆனால் மீடியாக்களுக்கு நல்ல கண்டென்ட் அவள் கொடுத்து கொண்டிருந்தாள் என்பதை அவள் மறந்தாள் அவள் கழுத்தில் தாலி இல்லாமல் காரில் இருந்து இறங்கியது பல கேமராக்கள் புகைப்பிடித்து சுடச்சுட சோசியல் மீடியாக்களில் இட்ட வண்ணம் இருந்தன

அதையெல்லாம் பார்த்துக்கொண்டு அவனது அறையில் கையில் அவள் கழட்டி எறிந்த தாலியை சுழற்றிக்கொண்டு அவன் படுத்து இருந்தான் அவன் முகம் அவள் அருகே இருந்தால் அவளை வெட்டி போடும் அளவிற்கு கோபமாக இருந்தாலும் அவன் வேகமாக யாரையோ அழைத்தவன் ஏதோ பேசினான் மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ தெரியவில்லை குரூர புன்னகையுடன் போனை வைத்தான் ஆர்ய கௌரவ்..

அதற்குள் தாஜ் வந்துவிட , "மேடம் தாஜ் வந்துடுச்சு" என்று டிரைவர் கூறவும் அவனது மெசேஜின் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்தவள் காரை விட்டு கீழே இறங்க அந்த சமயம் சடசடவென கோபத்தோடு இறங்கி வந்தான் மிஹ்ரான்..

அவன் முகத்தில் கோபக்கனல் வீசிக் கொண்டிருக்க அதையும் ஒரு சிலர் போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தனர் அந்த சமயம் பார்த்து, " மிஹூ " என்று அவள் அவனைக் கண்டு அழைக்க அவனோ திரும்பிப்பார்த்து ஊடகங்களை பார்த்துவிட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் , "கால் பண்றேன் பேசு கொஞ்சம் டைம் ஆச்சு "என்று செய்கை மூலம் கூறிவிட்டு சென்றான்..

அதையும் படம் எடுத்துக் கொண்டிருக்க அவளும் அங்கே இருந்து கொண்டு நிற்க பிடிக்காமல் காருக்குள் ஏறி அமர்ந்து கொண்டாள் அடுத்த நொடி மிஹ்ரான் தான் அழைத்திருந்தான்..

"மிஹு "என்க அவனோ ,"வாய மூடுடி உன் கூட பழகின பாவத்துக்கு என்னோட கேரியரை நாசம் பண்ணலாம்னு முடிவெடுத்து இருக்கியா?? இப்ப எதுக்குடி என்னை பார்க்க வந்த அதுதான் அவனை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டீல மூடிட்டு அவன் கூட இருக்க வேண்டியதுதானே என்ன நினைச்சுட்டு இருக்க சும்மா போன் பண்ற பேசற உன்னால இன்னும் என்ன எல்லாம் அனுபவிக்கனும் சொல்லுடி சொல்லு??" என்று பேச,

" அப்படி எல்லாம் பேசாத மிஹூ நான் உன்னை பார்க்கத்தான் வந்தேன்" என்று கூற,

"எதுக்குடி வந்த உன்னை பார்க்கவே எனக்கு சுத்தமா பிடிக்கல" என்று கோபத்தோடு பேச , "நான் சொல்றத கேளு அவன் நல்லா ஏமாத்திட்டான்" என்று கூற , "ஏமாத்திட்டானா நீ மட்டும் என்ன செஞ்ச ??ஏமாத்திட்டு தானே இருக்க அவன் ஏதாவது செஞ்சா அதுக்கு நான் என்ன பண்ண முடியும் உன்னால என்னோட வாழ்க்கை அழிஞ்சிருச்சு அதுக்கு என்ன சொல்ல சொல்ற வெளியில ஒண்ணுக்கும் லாயக்கில்லாதவன்னு சொல்லிட்டாங்க இங்கே ஒரு சினிமா அதுவும் ரொம்ப சீக்ரெட்டா டிஸ்கஷன் வரை போயிடுச்சு இப்போ அது டிராப் ஆகிடுச்சு காரணம் நீ உன்னால மட்டும்தான் என்னோட இந்த படம் போயிடுச்சு" என்று கூற,

அப்பொழுதுதான் அவளுக்கு தெளிவாக புரிந்தது அவன் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வரவில்லை என்றால் நான் செய்வது வேறயாக இருக்கும் என்று மிரட்டி இருந்தானே அதுபோல செய்து விட்டானே என எண்ணியவள்,

"என்ன என்ன சொல்ற டைரக்டர் உன் ஃப்ரண்ட் தானே ??என்று கூற, " பிரண்டு தான் ஆனா புரொடியூசர் உன் புருஷனோட பிரென்ட் இப்போ போதுமா நடந்தது என்னன்னு" என்று கூற , "நாம வேணா அந்த படத்த தயாரிக்கலாம் நீ அதை விடு" என்று அவனுக்கு சமாதானம் கூற முயல அதுவும் அவனுக்கு எரிச்சலாக தோன்றியது..

" என்னை என்ன ஒண்ணுக்கும் லாயக்கில்லாதவன்னு நினைச்சிட்டு இருக்கியா ?? என்னோட அப்பா பணத்துல வாழ்ற ஆளு நான் கிடையாது "என்று கூற ,

"நான் வேணும்னா தயாரிக்கிறேன் டாடிகிட்ட சொல்றேன்" என்று கூற , "நீ வாய மூடிட்டு இருந்தாலே போதும் இனி என்னை கூப்பிடாத மத்தவங்களுக்கு உதவி செய்யப் போய் கடைசியில் எனக்கு தான் எல்லாம் நடக்குது இனி நீ யாரோ நான் யாரோ இனி நீ என்னை எங்கேயாவது பார்த்து பேச நினைத்த அப்படின்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என்று கூறி போனை வைத்து விட்டான் ..

அவளுக்கு இப்படியே காரில் இருந்து கீழே குதித்து விடலாம் என்று கூட தோன்றியது ஏனெனில் மிஹ்ரானுக்கு இந்த படம் அவனது கேரியரில் எவ்வளவு முக்கியம் என அவளுக்கு தெரியும் அதனால தான் நண்பனுடன் இணைய விரும்ப நண்பனும் இவனை விட பெரிய நாயகன் வரும் பொழுது அவனிடம் பாய்வது தானே இயல்பு அதனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரால் நொடி பொழுதில் புறக்கணிக்கப்பட்டு இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் வீடு திரும்பிக் கொண்டிருந்தான்

அவனது பேச்சை கேட்டே அவளுக்கு புரிந்து போனது அவன் எவ்வளவு வருத்தத்தில் இருப்பான் என அவளுக்கு தெரியும் என்னால் தான் தேவையில்லாத சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறான் எப்படியாவது அந்த கயவனிடம் கூறி இந்த திரைப்படத்தை அவனுக்கு மீட்டு கொடுக்க வேண்டும் என எண்ணி மீண்டும் அவனை காண சென்றாள்..

அவள் அவனது வீட்டை அடைந்து இதோ அவனது எதிரே நின்று கொண்டிருக்க அவனோ கண்களை மூடிக்கொண்டு கையில் அவன் அணிவித்த தாலியை சுழற்றிக்கொண்டு மெல்லிய இசையை கேட்டுக் கொண்டிருந்தான் அவனது மறுபக்கம் சரக்கு பாட்டில் திறந்திருக்க அதில் பகுதி காலியாகி இருந்தது கொடுத்து இருக்கிறான் என்பதை அவள் உணர உணர இவனிடம் போது என்ன பேசுவது என புரியாமல் முழித்தாள் மிசஸ் ஆர்ய கௌரவ்..

ஸ்வரம் இசைக்கும்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top