ஸ்வரம் 1

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  


ஸ்வரம் : 1

மும்பை - ஜூஹூ

செய்யோன் கிழக்கே உதித்து சில மணி நேரமே ஆன காலை பொழுது... தன் காதலியான மேக மூட்டத்தை விட்டு பிரிந்த ஏக்கத்தில் அந்த காலையிலேயே சுட்டு எரித்து கொண்டிருந்தான் பகலவன்..

அதே போல சூட்டை தன் உள்ளே பிறர் அறியாத படி அடக்கி அந்த கூட்டத்தில் முதல் ஆளாக அமர்ந்து இருந்தான் அவன்...அங்கே ஒரு வீட்டில் ஆடம்பர திருமணம் நடக்க இருக்கிறது அதற்காக வந்திருந்த பலரில் ஒருவனாக அவனும் அமர்ந்து இருந்தான்...

அந்த திருமணம் நடைபெறும் ஒரு வீடு இல்லையில்லை மிக பெரிய மாளிகை என்று கூற வேண்டுமோ கிட்டத்தட்ட 50 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கிய ஒரு பண்ணை வீட்டில் நம் நாட்டின் காதல் சின்னமான தாஜ்மஹால் போன்ற செட் பிரபல கலை வல்லுநர்கள் கொண்டு அமைக்கப்பட்டு இருந்தனர்..அங்கு தான் திருமணம் நடக்க இருக்க அங்கு நடக்க இருக்கும் திருமணத்தை ஒட்டி அதி முக்கியமான நபர்கள் கூடியிருந்தனர்..

அங்கே கூடியிருந்தவர்கள் அனைவரும் ஜாம்பவான்கள் உறவினர்கள் அனைவரும் பெரிய புள்ளிகள் தான் யாரை விடுவது யாரை போட்டோ எடுப்பது என தெரியாமல் கேமிரா மேன்கள் அனைவரும் மொய்த்து கொண்டு இருக்க , பிரபலங்கள் அனைவரும் ஒரு பக்கம் ஆட்டம் பாட்டு என ஆடிக்கொண்டிருக்க மறுபக்கம் இன்னும் பலர் போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருக்க இதை எல்லாம் கண்டும் காணாமலும் அவள் ஒருத்தி மட்டுமே அவனது இலக்கு என அவனிருக்க அந்த குடும்பத்திற்கு ஆகாத அவனது வீட்டில் தான் அந்த பிரம்மாண்ட திருமணமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது..

அவனும் விழா அழைப்பை ஏற்று திருமணத்திற்கு வந்திருந்தான்... அவனுக்கோ முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருக்க அதில் அமர்ந்தவனது விழிகள் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தது... அந்த விழிகளில் நக்கலும், கோபமும் ,ஆத்திரமும் சுடர்விட்டு எரிந்து கொண்டு இருந்தது...அந்த விழிகள் கூறிய மொழிகள் அவளுக்கு புரிய சற்று நேரம் எடுக்கும் என்றாலும் அந்த மொழியை அவளுள் புகுத்தி கொண்டிருப்பவனுக்கு அது தெரியாமல் போகாதே ...

அவனது அழுத்தமான பார்வையை மணமேடையில் அமர்ந்து பார்த்து கொண்டிருப்பவளுக்கோ அது தெளிவாக புரிந்தாலும் வைராக்கியமாக அமர்ந்திருந்தாள்..ஆம் அவளிடமே அவளுக்கு எதிரே இருந்தவன் ஒரு நாள் கூறி இருந்தான் , "இந்த திருமணம் நடக்காது நீ நினைத்து கொண்டிருக்கும் எதுவும் நடக்காது "...என்று அவன் கூறியிருந்தான் அதை தற்போது அவளுக்கு ஏனோ நியாபகம் வந்து போனாலும் இவன் யார் என் வாழ்க்கையை விதியை மாற்ற என்ற இறுமாப்பில் அவள் அமர்ந்து இருந்தாள்..

அப்படி அவள் எண்ணினாலும் ஏதோ ஒன்று அவளை தடை செய்வதை அவளால் தடுக்க முடியவில்லை..அதுவும் தன்னருகே தனது காதலன் அல்லவா அமர்ந்திருக்கிறான் என அவளால் மகிழ கூட முடியவில்லை... எல்லோருக்கும் கல்யாணம் என்பது ஒரு வரம் என்றே கூறலாம் அதிலும் காதலித்தவனுடன் திருமணம் நடக்கும் எனில் அதை விட சந்தோஷம் வேறு என்ன இருக்கிறது என அவளது குடும்பம் எண்ணி கொண்டிருக்க இதோ அவளருகே அவளது மாப்பிளை அமர்ந்திருக்கிறான்... அவன் வேறு யாருமல்ல அவளுடைய முறைப்பையன் தான் வீட்டாருக்கும் சம்மதமே அவளுக்கும் சம்மதமும் தான் இருந்தும் ஏனோ ஒரு அசௌகரியம் அவளுக்கு தோன்றிக்கொண்டே இருந்தது...

அது என்ன என அவளுக்கு புரியவில்லை எதிரே இருப்பவன் 6 அடி 4 அங்குலத்தில் அதற்கு ஏற்ற உடற்கட்டுடன் தனது முறுக்கு மீசையை முறுக்கி விட்டு கொண்டே அனைவரையும் வெட்டும் பார்வை பார்த்துக்கொண்டும் அதே வெட்டும் பார்வையால் அவளையும் பார்க்க அவளுக்கு அடிவயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருந்தது..இன்னும் சற்று நேரத்தில் திருமணம் நடக்க போகிறது பிறகு எல்லாம் சரி ஆகி விடும் என அவளை அவளே தேற்றி கொண்டிருந்தாள்...

ஐயர் மந்திரங்கள் ஓத ஹோம குண்டத்தின் புகை வேறு அவளது கண்களை எரித்து கொண்டிருக்க அந்த புகையால் அவனது முகம் அவளுக்கு தெளிவில்லாமல் தெரிந்தாலும் , அது கூட அவளுக்கு தொல்லை தான் கொடுத்துக் கொண்டிருந்தது ...என்ன செய்யலாம் ஏது செய்யலாம் என அவள் யோசிக்க கூட முடியவில்லை..

எதிரே உள்ளவனின் துளைத்தெடுக்கும் பார்வையை கணிக்க முடியாமல் அவள் அமர்ந்திருக்க அவளுக்கோ வியர்வை வழிந்து கொண்டிருந்தது கைகுட்டையால் வியர்வையை துடைத்து கொண்டிருந்தவளுக்கு அந்த நேரம் பார்த்து அவளுக்கு திடீரென கண்கள் சொருக அவள் நொடி பொழுதில் மயக்கம் அடைந்தாள்...

கூடியிருந்த ஆயிரம் பேரும் திடுக்கிட அவளது அம்மாவும் , "காலையிலிருந்து ஒன்னும் சாப்பிடல அதான் போல "... என்று கூற மீதமுள்ளவர்கள் எல்லாம் பதற காதலனோ அவளை மடியில் தாங்கி கொள்ள அதற்குள் அவளது தாய் பதறி மடி தாங்க சகோதரி தண்ணீர் தெளிக்க முற்பட மருத்துவர்களை அழைக்க அங்கே ஒரே பரபரப்புக்கு பஞ்சமில்லை...எதற்காக எதிரே உள்ளவன் இத்தனை நேரம் காத்திருந்தானோ அது நடந்தேற அவனது இதழ்களில் ஒரு குரூரப் புன்னகை தவழ்ந்தது அடுத்த நொடி அவன் அந்த இடத்தில் இருந்து எழுந்து நின்றான்...

அவன் ஆர்ய கௌரவ்... வயதோ சுமார் இருபத்தி ஒன்பது இருக்கும்..தனது உயரமான ஆறு அடி நான்கு அங்குலத்திற்கும் உடலை வளர்த்து வைத்திருப்பவன்..கைத்தேர்ந்த நாயகன் இன்றைய பெண்களின் கனவு நாயகன்..ஒரு முறையாவது அவனை கண்டு விட மாட்டோமா என ஏங்குபவர்கள் பல அவர்களுக்கு எல்லாம் அவனது அன்பு முத்தங்கள் எப்போதும் எந்த இடத்திலும் உண்டு ..என்ன தான் அழகனாக இருந்தாலும் அவனுடைய கோபமும் அவனுடைய ரசிகர்களுக்கு தெரிந்ததே பதினெட்டு வயது முதல் நடிக்கிறான் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக நடிப்பதால் இந்தி திரை உலகில் அசைக்க முடியா நட்சத்திரம் அவன்..இனி வரும் காலம் அவன் பெயர் இல்லாமல் இந்தி சினிமா துறை இல்லை என்றே கூறலாம் அந்த அளவுக்கு பெயரை சம்பாதித்து வைத்திருப்பவன்...

அவன் ஒரு கதையை தேர்ந்தெடுத்து விட்டால் அந்த படம் முடியும் வரை அனைவரும் அவன் கூறுவதை தான் செய்ய வேண்டும் செய்திருக்க வேண்டும் ...இல்லையேல் செய்ய வைப்பான் என்றே கூற வேண்டும்..

அவன் ஒரு முன்கோபி , கோபக்காரன் என்று ஒதுக்கினாலும் ஒதுக்காவிட்டாலும் அவன் கரடு முரடானவன் தான்..நல்ல மனிதன் தானா என்ற கேள்விக்கு அவனுடன் பழகி பார்க்க வேண்டுமே அவன் தான் யாரையும் தன்னுடன் அவ்வளவு எளிதில் பழக விட மாட்டானே...தனிமையில் இனிமை காணும் ரகமோ...என்னதான் அவன் மிக பெரிய பெயரை சம்பாதித்து வைத்திருந்தாலும் அதை பகிர்ந்து கொள்ள கூட யாருமில்லை..

ஆம் அவனுக்கு என்று சொல்லி கொள்ள யாருமில்லை என அவனே கூறி கொண்டிருக்கிறான் ..இத்தனைக்கும் இந்த திருமணம் நிகழ இருக்கும் அந்த மல்கோத்ரா குடும்பத்தின் மூத்த வாரிசு அவன் அவனுடைய தாய் இப்போது உயிரோடு இல்லையென்றாலும் தந்தை உயிரோடு தான் இருக்கிறார்...ஆனால் அவன் தன்னை யாருமற்றவன் என்று தான் கூறுவான்..

இவ்வளவு ஏன் இப்போது நடந்து கொண்டிருக்கும் திருமணமே அவனுடைய தம்பிக்கும் அவனுடைய மாமன் மகளுக்கும் தான் என்று கூறினால் பிறர் அதை ஒப்பு கொள்வர் அவனோ ஒப்பு கொள்ள மாட்டான்...பெற்ற தந்தையையே தந்தை என்று கூறாதவன் அவருக்கு பிறந்த மகனை தான் சகோதரன் என கூற போகிறானோ???

ஆம் மும்பை திரைப்பட உலகில் மல்கோத்ரா மற்றும் கபூர் குடும்பத்தை அறியாதவர் யாரும் இல்லை...ஆம் திரைப்பட உலகம் தொடங்கிய போதே சினிமாவில் முதலீடு செய்த ஜாம்பவான்கள் தான் ஜோதிராதித்தியா மல்கோத்ரா மற்றும் சிவேஷ் கபூர் அவர்கள் ..இருவரும் தொழில்முறை போட்டியாளர்கள் என்றாலும் உண்மையில் இருவரும் நண்பர்களே...

அவர்களுக்கு பிறகு நாலைந்து தலைமுறையாகியும் கூட அந்த குடும்பத்துக்கு சினிமா மோகம் விட்டு போகவில்லை...

அப்படி பரம்பரையாக பரம்பரையாக வந்த குடும்பத்தில் உத்ரகேஷ் மல்கோத்ரா தனது மகனான உபேந்திராவுக்கு கபூர் குடும்பத்தின் சாராவை திருமணம் செய்து கொடுத்து அந்த குடும்பத்தை சொந்தங்களாக மாற்றிய பெருமை அவரை சேர அந்த தம்பதிக்கு பிறந்தவன் தான் ஆர்ய கௌரவ் ...

சினிமா குடும்பம் என்பதாலோ என்னவோ அந்த குடும்பங்களில் உள்ள அனைவரும் சினிமா துறை சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு துறையில் இருக்க உபேந்திராவும் நடிகராக இருந்தவர் தான் ஆனால் இப்போது சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார்..

ஆர்யனுக்கு ஐந்து வயது இருக்கும் போதே உபேந்திராவும் சாராவும் விவாகரத்து வாங்கி பிரிந்து விட அன்றிலிருந்து தொடங்கிய தலைவலி தான் இன்று வரை முடியவில்லை...

உபேந்திராவும் வேறொரு பெண்ணை திருமணமும் செய்து கொண்டார் விதிவசத்தில் சாராவும் நோய் தொற்றால் இறந்து விட அன்றிலிருந்து தனிமரம் ஆகி விட்டான் ஆர்யன்..அந்த இறுக்கம் அவனுள் எப்போதும் இருக்க தாத்தா உத்ரகேஷ் தனது பேர மகனை கண்ணுக்குள் வைத்து கவனித்தாலும் அவனின் குணத்தை அவரால் மாற்ற முடியவில்லை...

உத்ரகேஷ் தன் சொத்துக்களை எல்லாம் தன் மக்களுக்கு பிரித்து கொடுத்தவர் தனக்கு என்று அவர் ஒதுக்கி வைத்திருந்ததை தனது பேர மகனான ஆர்யன் பேரில் எழுதி வைத்திருந்தார்..

எப்பொழுதும் எந்த திருமணம் சுபகாரியம் என்று மல்கோத்ரா குடும்பத்தில் நடந்தாலும் அது உத்ரகேஷுக்கு சொந்தமான இந்த பண்ணை வீட்டில் தான் நிகழும் அது இப்போது ஆர்யனின் பேரில் உள்ளதாலும் குடும்ப விழா அனைத்தும் இங்கு தான் நிகழ வேண்டும் என பெரியவர் கோரிக்கை வைத்திருப்பதாலும் அதில் எந்த மாற்றமும் நிகழவில்லை பெரியவர் இறந்து ஆறு மாதம் ஆனாலும் கூட அதை மாற்றாமல் அங்கு தான் விழா நடத்தி கொண்டிருக்க இவள் வேறு மயங்கி விட்டாள்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top