காதல் 8

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

 

அத்தியாயம் : 8

   தன் மீது மோதியவளை இடையோடு இடை பிடித்து தாங்கியவன் அவள் கீழே விழாமல் இருக்க தான் அவளை காப்பாற்றினான்...தான் விழுந்து விடுவோம் என்று பயத்தில் கண்களை மூடி இருக்க தம்மை யாரோ காப்பாற்றி இருக்கிறார்கள் என்று கண்களை திறந்தவள் கண்ணோடு கண்கள் கலக்க அவளது உதடு துடிக்க அத்தனை நெருக்கத்தில் அவன் முகத்தை கண்கள் திறந்து பார்த்தவள் ...அது விக்ரம்.....இவரா என்று அதிர்ச்சியில் விழி விரித்து பார்த்தாள்...

ஆனால் அவனோ உணர்ச்சி துடைத்த அவனது முகத்தில் ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை...ஆனால் காலையில் இருந்து அவன் உருவம் அவள் மனக்கண்ணில் இருந்து மறைய மறுத்தது... அன்று உடுத்தி இருந்த உடை இதோ மிக நெருக்கத்தில் காணும் அவனது முகம் என எல்லாம் சேர்ந்து ஒரு கலவையாக அவளை வாட்ட ஏதோ ஒரு தைரியத்தில் அவன் கண்ணை பார்த்து , "சார் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்று கூற அவனோ அதிர்ந்து விட்டான்....ஆம் காலையில் அவனை பார்த்ததில் இருந்து மனதில் தோன்றிய வார்த்தையை வெகு இயல்பாய் அவள் கூறி விட...அவன் இதை எதிர்பார்க்க வில்லை...

அதுவரை அவளை மென்மையாக பட்டும் படாமலும் அவளை இடையை பிடித்து இருந்தவனின் கண்கள் தீ பிளம்பு போல காட்சி அளிக்க இந்த நொடியே அவளை நான் பொசுக்கி விட முடியாதா என்று நினைத்து சடுதியில் அவன் முகம் கோபத்தில் சிவந்து அவளை பிடித்த பிடியில் ஒரு அழுத்தம் கொடுத்து அப்படியே அவளை கீழே விட்டு விட்டான்...அவன் அவளை விட்டதும் மது கீழே விழுந்து விட்டாள்...

அவளோ இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை...நல்ல வேலை யாரும் அந்த பக்கம் வரவில்லை அவளை முறைத்து பார்த்து கொண்டு விடு விடுவென நடந்து சென்று விட்டான்...அவள் மேல் உள்ள கோபம் அவனின் ஷூவிற்கு நன்றாக உணர முடிந்தது...அவள் மீது உள்ள கோபத்தை தனது ஷூவிற்கு அழுத்தம் கொடுத்து நடந்து போய் கொண்டு இருந்தான்...

யாரும் இல்லா காரிடோரில் அவனின் அழுத்தமான காலடி ஓசை கேக்க மெல்ல ஓடி வந்து கொண்டு இருந்த ரம்யா அவனை  கண்டு சிரிக்க அவளை பார்த்து முறைத்து விட்டு சென்றான்...

இவரு என்ன நம்மலை பார்த்து முறைச்சு பார்த்துட்டு போறாரு என்று அவள் அவன் சென்ற திசையை பார்த்து விட்டு திரும்ப அங்கே அவளின் உயிர் தோழி விழுந்து கிடந்தாள்...எழுந்து கொள்ள முடியாமல் தட்டு தடுமாறி எழுந்து கொண்டு இருக்க அதற்குள் ரம்யா வந்து அவள் எழ உதவி புரிந்தாள்...

"என்ன ஆச்சு மது ஏன் சார் இப்படி போறாரு நீ ஏன் விழுந்து கிடக்கிற "...என்று கேட்க

"அவளோ வழுக்கி விழுந்துட்டேன் டி ...அவரு எப்போ முறைக்காமல் இருந்தாரு ...எப்போ பாரு முறைச்சுட்டு தான் இருக்காரு "என்று கீழே விழுந்த எரிச்சலில் கூற ரம்யாவும் தன் தோழி தன்னிடம் ஒன்றும் மறைக்கமாட்டாள் என்ற தைரியத்தில் ஆமாம் போட்டு கொண்டு இருவரும் நடையை கட்டினர்...

அவனுக்கோ அவள் மேல் உள்ள கோபம் சற்றும் குறையவில்லை என்னை பார்த்து அவள் எப்படி அது போல கூறலாம்...அவள் காலையிலே அவள் பார்த்த பார்வை சரி இல்லையே வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டு இருந்தாலே என்ன நினைத்து கொண்டு இருக்கிறாள்....என்று கோபம் எழ தான் நினைத்தது சரி தான் என்பது போல அவளுடன் நடந்தாள்...

பின்னே மது வேறு என்ன சொல்ல முடியும் விக்ரம் அவளை கீழே தள்ளி விட்டு விட்டான் என்றா கூற முடியும் அவளோ உண்மையை தானே சொன்னேன் அதுக்கு ரொம்ப தான் பண்றாரு என மனதுக்குள் அவனை திட்டி கீழே விழுந்ததில் இடுப்பில் அடி பட்டு இருக்க அந்த இடுப்பிற்கு சற்று மேல் தான் அவளை தாங்கி பிடித்து  இருந்தான்....அந்த இடம் குறுகுறுக்க அதை மறைத்து கொண்டு நடந்து வந்தாள்...

வீட்டுக்கு சென்றும் அதே போல நொண்டி நொண்டி நடக்க என்னவென்று கோல்ட் விசாரித்தார் , "கீழே விழுந்து விட்டேன் "..என்று அவள் மெதுவாக கூற ,"என்ன விழுந்துட்டியா".. என்று தன் சவுண்ட் ஸ்பீக்கரில் கத்த அவளோ பதட்டத்தில் ,"ஏன் சவுண்ட் ஐ கூட்டி உன் பையன் கிட்ட நீயே போட்டு கொடுப்ப போலையே"....என்று அவர் வாயை பொத்தி கொண்டு கூற கன கச்சிதமாக தன் தாயின் சத்தம் மிக தெளிவாக வெங்கிக்கு கேட்டது...

அடுத்த அரைமணி நேரம் அவளின் சத்தம் கோல்டுக்கு ஈடு கொடுத்தது ஆம் ஏதோ ஒரு மூலிகை எண்ணெய் கொண்டு வந்து கோல்டுடிடம் தேய்த்து விட சொல்ல வெச்சு செய்து விட்டார் கோல்டு...

அவளின் சத்தம் இரவு உணவு செய்யும் விக்ரமுக்கு மிக தெளிவாக கேக்க யாரு இப்படி கத்துறது என்று யோசனையுடன் வெளியே பார்க்க அவனுக்கு முன்னே வாசுதேவன் நின்று கொண்டு இருந்தார்..எதிர் வீட்டை நோட்டம் விட்ட படியே...

"இங்கே என்ன பண்றீங்க நீங்க "...என்று கேட்க போகும் முன் , "அயோ பாட்டி "...என்று அவளின் சத்தம் வர

"பாவம் பா அந்த வீட்டு பொண்ணு கீழே விழுந்துடுச்சாம் ...அதான் அழுகுது "...என்று கூற அதற்கு காரணம் ஆனவனோ "ஓ "...என்று அசால்ட்டாக கூறி ,"நீங்க வாங்க சாப்பிடலாம்"... என்று கூறி அவரை இழுத்து சென்றான்...

ஆம் நமக்கு என்ன வந்துச்சு என்பது போல இருந்தது அவனின் செயல் அவரோ மகனின் செயலை கண்டு தன் தலையில் அடித்து கொள்வதை தவிர வேறு என்ன செய்ய இயலும் அவரால்....

இடுப்பு வலி என்று பெயர் சொல்லியே அந்த வாரத்தின் மீதி நாட்களையும் லீவ் எடுத்து ஓட்டி விட அடுத்த இரு நாட்கள் சனி மற்றும் ஞாயிறு வீட்டில் எண்ணெய் தேய்த்து விடும் போதே இங்கே அவள் கணக்கு கூட்டி விட்டாள்...2+2 = 4 என்று இரு நாட்கள் லீவ் எடுத்து விட்டு இரு நாட்கள் விடுமுறை என கணக்கிட்டு வைத்து இருந்தாள்...

அவள் தந்தை மருத்துவமனை செல்லும் வரை நொண்டி நொண்டி இடுப்பை பிடித்து கொண்டு நடப்பவள் அதன் பிறகு கோல்ட் மற்றும் அவளின் அம்மா உடன் டிவி , நடனம், உண்பது, உறங்குவது என பொழுதை போக்கி கொண்டு இருந்தாள்...அவள் வரவில்லை என்பதை அவன் உணர்ந்தாலும் அவன் அவளை தான் பொருட்டாகவே நினைக்க வில்லையே...

இப்படியே இரு நாட்கள் கழிய சனிக்கிழமை வீட்டில் பிள்ளைகளுக்கு விடுமுறை என்பதால் காலை எழுந்து படித்து கொண்டு இருந்தனர்.. காலை தன் தந்தை வெளியே செல்லும் வரை தான் இந்த நடிப்பு எல்லாம் அவரது தலை மறைந்ததும் அவரவர் விருப்பப்படி கோல்ட் மற்றும் அழகு டிவி முன்னும்... மது, மிதுன், மதி இவர்கள் வெளியே போர்டிகோவில் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தனர்....

மூவரும் படிக்கிறேன் பேர்வழி என்று குளிக்காமல் விளையாடி கொண்டு இருக்க வியர்த்து ஒழுக கடுமையாக விளையாடி கொண்டு இருந்தனர்...அப்போது மதுவின் முறை அவள் அடித்த பந்து மிக சரியாக எதிர் வீட்டுக்குள் செல்ல இவளோ பெருமையாக," பார்த்தியா மிதுன் நான் அடிச்ச பந்து எப்படி பறக்குதுன்னு "..என்று கூறி சிரிக்க...

இளையவர்கள் இருவரும் சிரிக்காமல் பந்து சென்ற வீட்டையே பார்த்து கொண்டு இருக்க இவளோ ,"என்ன நீங்க ரெண்டு பேரும் என்ன அங்கையே பார்த்துட்டு இருக்கீங்க ...தம்பி போய் பந்து எடுத்துட்டு வா "...என்று கூற...அவர்களின் முன் அனுபவம் விக்ரமிடம் கிடைத்து இருக்க இருவரும் ஒரே நேரத்தில் மறுத்து விட்டனர்...

"என்னங்கடா ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்"... என்று கூறி வாசுதேவனை அவள் ஒன்று இரண்டு முறை அவருடன் பேசியதில் இருந்து அவர் காரை பற்றி ஒன்றும் கேக்காமல் இருப்பதால் அவர் மேல் எழுந்து இருக்கும் பயம் சற்று மட்டு பட்டு இருக்க கிளம்பிவிட்டாள் வீராங்கனை திரும்பி வரும் போது அவனிடம் வாங்கி கட்டி கொண்டு வர போகிறாள் என்று அறியாமல்...

அதுவும் அவளோ வீட்டில் இடும் சிறு பாவாடை சற்று முட்டில் இருந்து இறங்கி இருக்க ஒரு சிறு பனியன் கையை மேலே தூக்கினாள் அவள் இடை அனைவருக்கும் காட்சி தரும் அப்படி ஒரு ஆடையில் நேற்று மாலை கட்டிய தலை முடி களைந்து பரபரவென இருக்க பொட்டு வைக்காமல் முகம் முழுவதும் வியர்த்து ஒழுக அவன் வீட்டை நோக்கி புறப்பட்டு விட்டாள்...

இதோ இப்போது அர்ஜூன் வீட்டு காலிங்பெல்லை அடித்தவள் யாரும் எடுக்கவில்லை என்பதால் பொறுத்து பொறுத்து பார்த்தவள் கேட்டை திறந்து உள்ளேயே சென்று விட்டாள்....

வீடு வாயில் வெளியே நின்று , "அங்கிள் அங்கிள்".. என்று அழைக்க, வீட்டுக்குள் அங்கிள் இல்லாத காரணத்தினால் அங்கிளின் மகன் விக்ரம் வாசுதேவன் வெளியே வந்தான்...

ஒரு கையால் நகத்தை கடித்து கொண்டு நின்று கொண்டு இருந்தவள் தன் முன் நிழல் ஆடுவதை கண்டு தலை நிமிர்ந்து நோக்க அவளின் வாத்தியார் விக்ரம் வாசுதேவன்....தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்று கொண்டு இருந்தான்...

இருவரும் ஒருவரை ஒருவர் சத்தியமாக எதிர்பார்க்க வில்லை என அவர்களின் முகமே காட்டி கொடுத்தது... விக்ரம் இவள் அவன் கண் முன் நிற்பது அதிர்ச்சி தான் என்றாலும் வெளிக்காட்டாமல் கைகளை கட்டி கொண்டு அவள் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்...

மது என்ற சிலை சிலையாகி அறுபது வினாடிகள் கழிந்து விட்டன....

என் கண்கள் உனை தேடும்....



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top