காதல் 7

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

 

அத்தியாயம் : 7

காதலது கண்ணில் கண்டேன்...

அதிகாலை ஐந்து மணி விக்ரம் எழுந்து தன் தந்தை அறையை பார்க்க அவர் உறங்கி கொண்டு இருந்தார்..அவர் ஏழு மணி வரை உறங்க வேண்டும் என்பது அவனின் கட்டளை என்றே கூறலாம்...அவர் எழுவதற்குள் வீட்டின் பாதி வேலையை அவன் முடித்து விடுவான்....தந்தைக்கு ஓய்வு தேவை என்பதால் தான் இது எல்லாம்...அதில் கூர்ந்து பார்த்தால் ஒரு அன்பு உண்டு...வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அவன் கரடு முரடாக தெரிந்தாலும் அவனை மிக சரியாக கணித்த அவனின் தந்தைக்கு தெரியும் அவரின் மகனை பற்றி....

அதனால் தான் மகன் கோபப்படும் சமயம் அவர் அமைதியாக கடந்து விடுகிறார்...அதற்கும் அவர் மகன் காய்வான் அது வேறு கதை....

ஐந்து மணி அடித்ததும் மேலே உள்ள அறையில் அவனுடைய அறைக்கு பக்கத்து அறை அவனுடைய உடலை கட்டு கோப்பாக வைத்து இருக்க உதவும் சாதனங்கள் குழுமி இருக்க அங்கே தனது உடற் பயிற்சியை தொடங்கினான்...

அதே நேரம் எதிர் வீட்டு பைங்கிளி கஷாயத்தை எடுத்து வழமை போல மணிக்கு கொடுத்து விட்டு கோல்டுடிடம் சிக்னல் கொடுக்க சொல்லி யோகா செய்கிறேன் பேர்வழி என மொட்டை மாடியில் உறங்க சென்றாள்...

உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது திறந்து இருந்த வீசும் இளம் தென்றல் காற்று திறந்து இருந்த ஜன்னலின் வழியே வீச அந்த குளிர் இதத்தை அளித்தாலும் அதை அடைக்கலாம் என கருதி அடைக்க போக ஒரு உருவம் எதிர் வீட்டு மாடியில் நின்று கொண்டு அது ஏதோ பாய் அல்ல துணியும் அல்ல பார்க்க மேட் போல ஒன்றை விரித்து கொண்டு இருக்க யாராக இருக்கும் என அவன் பார்க்க அதற்குள் மேட் ஐ விரித்து அவள் படுத்து விட இவன் முகத்தை சரியாக பார்க்க வில்லை...

அவனுக்காவது அந்த உந்துதல் இருந்தது அவளுக்கு உறக்கமே முதன்மையாக இருக்க படுக்கையை கண்டதும் உறங்கி விட்டாள்.... ஏழு மணி இருக்கும் போது கோல்ட் ,"மது மது "...என்ற கத்த அந்த தெருவிற்கே கேட்டு இருக்கும் எதிர் வீட்டில் வாசம் செய்யும் அவனுக்கா கேக்காது.... அவன் வெளியே வந்து பார்க்கும் போது ஒரு சிறு பெண் மாடியில் இருந்து இறங்கி கொண்டு இருந்தாள்...

இவனோ மனதுக்குள் எப்படி கத்துறாங்க பாரு... வீடா இல்லை வேற ஏதாவதா அந்த வீட்டு பையன் சும்மா சும்மா பால் இங்கே எரியுறது அப்புறம் வந்து எடுத்துட்டு போறது சரியான இம்சைங்க என்று மனதுக்குள் அவள் வீட்டு பெரிய மனிதர் கோல்ட் முதல் அந்த வீட்டு கடைக்குட்டி வரை யாரையும் அவனுக்கு பிடிக்கவில்லை.....ஏன் என்ற கேள்விக்கு அவனுக்கு பதில் இல்லை...அவன் பட்ட சூடு தான் காரணமாக இருக்குமோ....அது தொடர வேண்டாம் என்று தான் அவன் அவர்களை தவிர்க்கிறானோ...என்னவோ...

எப்போதாவது வழியில் வெங்கியை பார்த்தால் மட்டும் அவர் தலை அசைத்தால் பதிலுக்கு இவனும் தலை அசைத்து விட்டு செல்வான்...இல்லையேல் கண்டு கொள்ள மாட்டான்....இதில் வேறு அவளை இது வரை காணாத காரணத்தினால்...வெங்கிக்கு இரு பிள்ளைகள் என்று நினைத்து கொண்டு இருக்கிறான்...மூத்தது மது என்று அவனுக்கு தெரியவில்லை... தெரிந்தால் என்ன நடக்கும் ....

ஒரு நாள் அவன் வகுப்பில் பாடம் எடுத்து கொண்டு இருக்க எல்லோரும் கவனித்து கொண்டு இருந்தனர்...அவனுடைய வகுப்பில் யாரும் புக்கை திறக்க கூடாது அவனை தான் பார்க்க வேண்டும்....மாணவர்கள் புக்கை பார்க்கிறேன் என்று தலையை கவிழ்த்து கொள்வதால் தான் இந்த ஏற்பாடு...தலை அந்த பக்கம் இந்த பக்கம் திரும்பினால் வெளியே செல்ல வேண்டியது தான்...அந்த எல்லையையும் அவன் கடப்பான்... செய்தும் காட்டுவான்...என்பதால் அவனிடம் இதுவரை யாரும் வால் ஆட்டியது இல்லை....இவனை வைத்து கொண்டு ஒரே தொல்லை அப்பா என்று நினைத்து கொண்டு விதியே என்று அவன் பாடம் எடுப்பதை கவனித்து கொண்டு இருந்தாள் மது....அப்போது தான் அவனை கூர்ந்து கவனித்தாள்...

ராயல் ப்ளூ மற்றும் வெள்ளை நிற புள்ளிகள் ஷிர்ட் அணிந்து கருப்பு நிற பாண்ட் அவன் நிறத்தை எடுத்து காட்ட அவனை அடி முதல் நுனி வரை அவள் பார்வையால் வலம் வர குப்பென சிவந்து விட்டாள்...என்ன உடல் அவனுக்கு செதுக்கி வைத்த கிரேக்க சிற்பம் போல இருக்கிறான்...கையில் ஒரு வாள் தான் இல்லை... அதற்கு பதில் புக்கும், சாக் பீஸ் யும் இருந்தது... அவ்வளவு கம்பீரம் அதில் வெளிப்பட்டு கொண்டு இருந்தது....அவனை கூர்ந்து பார்க்காதே என்று அவளின் உள்மனம் சொல்கிறது...ஆனால் முடியவில்லையே... மீண்டும் மீண்டும் அவனை பார்த்தாள்.... அவளால் கட்டு படுத்த முடியவில்லை...

அவன் முகத்தை ஏன் திரும்ப திரும்ப பார்க்க துடிக்கிறது என் மனம்...என்ன ஆச்சு எனக்கு ...என்று இது என்ன மாதிரி ஆன உணர்வு இது என்று தெரியாமலே வந்த உணர்விற்கு தடை இட்டாள்...

ஏதோ ஒரு உள்ளுணர்வு அவளை காண சொல்லி அவனை உந்த பாடம் எடுத்து கொண்டே அவனின் பார்வை அவளின் மேல் விழுந்தது...வைத்த கண் வைக்காமல் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள் மதுர யாழினி...என்ன இவ இப்படி பார்கிறா என்று கொண்டு அவளை பார்க்க அவனை தான் என்று உறுதி ஆனதும் முறைக்க தொடங்கி விட்டான்...

அவளின் சிவப்பை அவன் கண்டு விட்டதால் முறைத்து கொண்டே பாடம் எடுக்க அயோ பார்த்து இருப்பாரோ என்ற பீதி உள்ளுக்குள் எழுந்தாலும் அமைதியாக இருந்தாள்... அவனின் மனமோ கடகடவென அவளின் உணர்ச்சிகளை படம் பிடித்து வைத்து கொண்டது....அதை முளையிலேயே வெட்டி விட வேண்டும் என்று மட்டும் நினைத்து கொண்டான்...

அதன் பின் எல்லோருக்கும் ஒரு சில பகுதிகள் பாடத்தில் இருந்து கொடுத்து அதை எல்லோர் முன்னிலையில் செமினார் எடுக்க வேண்டும் என்று கூற சிலருக்கு சந்தோசம் ஆகவும் பலருக்கு வருத்தமாகவும் இருந்தது...

"இந்த செமினார் மார்க் உங்க இன்டெர்னல்ஸ் ல ஆட் ஆகும் சோ கவனமாக உங்களுக்கு ஒத்துகின டாபிக் ஐ ப்ரீப்பேர் பண்ணிட்டு வாங்க ..ஒரு வாரம் உங்களுக்கு சமயம் தரேன் "...என்று கூறி விடை பெற்றான்....

புதுசா வந்து இருக்க விக்ரம் சார் என்ன கேட்டகரி னே புரியல பா நல்லா தான் பாடம் எடுத்துட்டு இருந்தார் தீடீர்னு செமினார் னு சொல்லி ஒரு குண்டை வீசிட்டு போறார் என்று மாணவர்கள் புலம்பி கொண்டு இருந்தனர்...

மதிய இடைவேளை முடிந்து ஐந்து நிமிடம் கழிந்து இருக்க மது மற்றும் ரம்யா மட்டும் வகுப்புக்கு செல்லாமல் அமர்ந்து இருந்தனர்.... யாரும் இல்லை அங்கே....தோழி ரம்யாவை ஏதோ கிண்டல் செய்ய அவள் தனது குண்டு உடம்பை தூக்கி கொண்டு மதுவை துரத்த இருவரும் அங்கே இங்கே ஓடி கடைசியில் ஸ்டாப் ஏரியா க்குள் வர அந்நேரம் பார்த்து வெளியே வந்த விக்ரமின் மீது மோதினாள்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top