காதல் 6

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

அத்தியாயம்: 6

வெங்கடாசலம் வந்து வண்டியை எல்லோரையும் ஒரு பார்வை பார்க்க அங்கே நின்ற வாசுதேவனை பார்த்து சிரிக்கலாமா வேண்டாமா என்று யோசிக்க அதற்குள் வாசுதேவன் தன்னை அறிமுக படுத்தி கொண்டார்...

"நான் வாசுதேவன் ...ரீடயர்ட் பேங்க் மானேஜர்"... என்று கூறி வெங்கடாசலத்திற்கு கை கொடுக்க வெங்கியும் கை கொடுத்தார்... "எனக்கு ஒரு மகன் இருக்கிறான்...புதிதாக குடி வந்து இருக்கோம்".. என்று தன்னை அறிமுக படுத்தி கொள்ள அவரின் தோற்றத்தை அளவிட்டு கை கொடுத்து, “ உள்ளே வாங்க” என்று கூறினார் வெங்கி....

அந்த வீட்டு பெண்மணிகளுக்கு எட்டாவது அதியசமாக இருந்தது...பின்னே இருக்காதா யாரையும் வீட்டுக்குள் விடாத மனிதன் இப்போது ஒருவரை வீட்டுக்குள் அனுமதிக்கிறார் என்றால் மதுவுக்கு அவளின் அப்பாவின் தீடீர் மாற்றம் சத்தியமாக விரும்பவில்லை.... அது அவளின் முகமே பிரதிபலிக்க...எத்தனையோ தடவை அவள் நண்பர்களுடன் வெளியே செல்லவோ அவர்கள் இங்கே வரவோ அனுமதி இல்லை..
கேட்டால் எல்லாம் வெளியே வைத்து கொள்ளுங்கள் வீடு வரை வரும் பந்தம் ஒன்றும் வேண்டாம் என்று ஒரு நீள அறிவுரை செய்தி வாசிக்க பிள்ளைகள் அதற்கு பயந்தே யார் வீட்டுக்கும் செல்வதும் இல்லை...யாரையும் கூட்டி கொண்டு வருவதும்  இல்லை...

இப்படி இருக்கும் ஒரு மனிதன் வீட்டுக்குள் அழைத்தாலோ அவர்களுக்கு தலை சுற்றுமா சுற்றாதா.. ஆனால் வெங்கடாசலம் ஒரு மரியாதை நிமித்தமாக தான் அழைத்தார் அதும் எதிர் வீடு வேறு என்று தான் இந்த உபசரிப்பு...வாசுதேவனை கண்டதும் ஏனோ வெங்கடாசலத்திற்க்கு பிடித்து போக தான் அந்த வீட்டுக்குள் அழைத்து ஜூஸ் கூட அளிக்க பட அதற்குள் மதி மற்றும் மிதுனும் வந்து விட எல்லையோரையும் வெங்கடாசலம் அறிமுக படுத்தி வைத்தார்...

"வாசுதேவனும் நானும் என் மகனும் தான் வேறு யாரும் இல்லை..மகனுக்கு இங்கே வேலை கிடைக்க நாங்கள் இங்கே வந்தோம்..சிறிது காலம் அமெரிக்கா வில் இருந்தோம் அதனால் சொந்தம் பந்தங்கள் உடன் கூடுதல் இணக்கம் இல்லை "...என தானும் ஒரு வெள்ளை மனிதன் தான் என வெங்கடாசலத்திற்கு அவர் தன் வாழ்க்கை முறையை பற்றி கூறி கொண்டு இருக்க அதிலும் அவரும் ஒரு இயற்கை விரும்பி என்றும் அதற்காக தான் , இங்கே வந்ததாகவும் கூற சொல்லவே வேண்டாம் வெங்கடாசலம் ஒரு படி மேலே வாசுதேவனை கொண்டு போய் வைத்து விட்டார்...வீட்டில் உள்ள அனைவருக்கும் அதிசயம் வெங்கி தானா அது என்று....

வாசு தேவன் உள்ளே வந்ததும் மது தலைமறைவு ஆனவள்...அவர் செல்லும் வரை வெளியே வர வில்லை.... உள்ளேயே பதுங்கி கொண்டாள்...அவரும் சற்று நேரம் உரையாடிவிட்டு வெளியே வரும் நேரம் சரியாக அவர் மகன் விக்ரம் வர அவரை வழி அனுப்ப வெளியே வந்த வெங்கடாசலம் கண்களுக்கு வாசுதேவனின் மகன் விக்ரம் பட தந்தை யாருடனோ பேசி கொண்டு இருக்கிறார் என்று மரியாதை நிமித்தமாக அவருக்கு கை கொடுத்து தன்னை கம்பீரமாக அறிமுக படுத்தி கொள்ள அவனின் கம்பீரம் அவருக்கு பிடித்து போனது...

அவளோ வெளியே தலையை காட்டததால் அவள் அவனை சந்திக்கவில்லை...அவனுக்கும் இது அவளின் தந்தை தான் என அறியவில்லை..இவரும் ஒருவரை ஒருவர் இன்னும் சந்தித்து கொள்ளவில்லை...வெங்கடாசலத்திற்கும் அவரின் மகள் பின்னாளில் வாழ போகும் வீடும் அந்த வீட்டு இரு ஆண்களும் பிடித்து போனது...ஆனால் இப்போது அது தெரிந்தால் இந்த இணக்கம் இருக்குமா....

வாசுதேவன் கேட்டது போல அறிய வகை செடிகள் கிடைக்குமிடம் பற்றிய விபரங்களை அளிப்பதாக கூறி விட்டு மூவரும் பிரிந்தனர்...

உள்ளே சென்ற வாசுதேவனை பிடி பிடியென பிடித்தான் விக்ரம்.."என்ன நினைச்சுட்டு இருக்கீங்க யாரை கேட்டு நீங்க வெளில போனீங்க... நமக்கு யாரும் வேண்டாம் உங்களுக்கு நான் எனக்கு நீங்க வேற யார் கூடேயும் நாம பழக வேண்டாம் னு சொல்லி தானே இங்கே வந்தோம் உங்களுக்கு எவ்ளோ பட்டாலும் புத்தி வராது பா"....என்று பொரிந்து தள்ளி விட்டான்...
அவரோ எப்போதும் போல தலையை ஆட்டி கொண்டே இருந்தார்...அதை பார்த்து கடுப்பு ஆனவன் அவர் மேல் இருக்கும் கோபத்தையும், ஏனோ அந்த நொடி மதுவின் நினைவு வர அந்த நிமிடம் தன் கார் உடைப்பட்ட நொடியும் மனதில் வந்து போக  அங்கே கிடந்த டேபிளை உதைத்து அதில் தன் முழு கோபத்தை இறக்கி  விட்டு சென்றான்.....

இப்படியே ஒரு வாரம் செல்ல விக்ரம் அந்த கல்லூரியின் ஹார்ட் தோர்ப் ஆகி விட்டான்...எல்லா மாணவிகளின் கண்களும் அவனை தான் மேய்ந்தது...வேண்டும் என்றோ தேவை இல்லாமல் எல்லாம் அவன் வகுப்பில் பாடம் எடுக்கும் போது மாணவிகள் கேள்வி கேட்டு அவனை தொல்லை செய்து கொண்டு இவனுக்கு சில சமயம் கோபம் எழும்...சிலது அவனுக்கு புரிந்தாலும் அவள் வகுப்பில் தொடர்ந்து பாடம் எடுத்து கொண்டு தான் இருந்தான்....

ஆனால் மதுவின் வகுப்பு க்கு வந்தால் மட்டும் முதலில் அவன் கண்கள் அவளை தான் தேடும் யாரும் அறியாமலே ...அவளை கண்டதும் அங்கே அப்படி ஒரு ஜீவன் இல்லை என்பது போல பாடம் எடுப்பான்... அவளும் அவனை கண்டால் கொஞ்சம் அடக்கி வாசிப்பாள்... எப்போதும் கல் போன்று இறுகி இருக்கும் அவனை யாருக்கு தான் பிடிக்கும் என்பது அவளின் எண்ணம்..ஆசிரியர்கள் என்றால் இனிமையாக பழக வேண்டும் என்பது இவளின் எண்ணம்...ஆனால் இவள் பார்வைக்கு தான் அவன் அப்படி தெரிகிறான் என்றும் பொதுவாக அவனை தேடி வரும் படிக்கும் மாணவர்களுக்கு அவன் ஒரு அமுத சுரபி என்று இவளுக்கு தெரியவில்லை... இவள் தான் சந்தேகம் வந்தாலும் அவன் இருக்கும் பகுதிக்கும் சென்றால் தானே..பின் பாடத்தை கவனித்தால் தானே...

முதலில் பணி புரிந்த இடத்திலும் சரி புதிதாக இந்த ஆசிரியர் பணி எடுத்த போதும் சரி நான் எடுத்த காரியத்தை மிக சிறப்பாக செய்து முடிப்பான் விக்ரம்...அவனின் பாடம் எடுக்கும் திறன் மாணவர்களுக்கு மேற்கொண்டு சந்தேகம் எழா வகையிலே இருக்கும்...அதனால் அவனை கூடுதல் மாணவர்களுக்கு பிடித்து போனது...

அவன் இடை இடையே கேள்வி கேக்கும் பொழுது பலர் மிக சரியாக பதில் அளித்தனர்...சிலர் தடுமாறினர்...நம்முடைய மதுவை போன்ற ஆள்கள் கேள்வி கேக்கிறார்கள் என்று தெரிந்தாலேயே தலையை நிமிராமல் அமர்ந்து இருப்பார்...

அப்படி இருப்பவர்களை தான் அவன் முதலில் அழைப்பதே... மதுவுக்கு போதும் போதும் என்றானது...இவன் வகுப்புக்குள் வந்தாலே அவள் அமைதி இழந்தாள்....கேள்வி கேட்டே அவளை குடைந்து எடுத்து விடுகிறான்...அவளோ அவன் கேக்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தாலும் அவனின் பார்வையின் வீரியத்தை எதிர் கொள்ள முடியாமல் பதில் கூறாமல் வகுப்பில் அவன் முன்னே அவமான பட்டு கொண்டு இருக்கிறாள்...இதற்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டாள்...

இந்த ஒரு வார காலமும் இருவரும் எதிர் எதிர் வீட்டில் தான் இருக்கிறார்கள் என்று இருவருக்கும் அறியவில்லை...ஒரு வேளை இருவரும் அறிந்தால் அவர்களின் நிலை என்ன??...அவனுக்கு மற்றவர்கள் காரியத்தில் மூக்கை நுழைக்கும் பழக்கம் அவனுக்கு இல்லாத காரணத்தினால் அவன் வீடு உண்டு கல்லூரி உண்டு என பழகி கொண்டான்...இதில் வாசுதேவனுக்கு வருத்தமே...இந்த பையன் அவனுடைய இயல்பை மறைத்து கொண்டு ஏன் இப்படி இருக்கிறான்...நானே இந்த வயதில் பழகி கொண்டேனே என்று அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை....ஆனால் அவன் இப்படி தான் இருப்பேன் என்று முரண்டு பிடிப்பவனை அவரால் எப்படி மாற்ற இயலும்.....காலம் மாற்றுமா இல்லை எதிர் வீட்டு புயல் வந்து அவன் வாழ்க்கையை சீர் செய்யுமா????புயல் வந்தால் அந்த மலையை புரட்டி போடுமா???...

என் கண்கள் உனை தேடும்....



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top