காதல் 5

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

அத்தியாயம் : 5

காதலது கண்ணில்  கண்டேன்

    வெளியே மரத்தடியில் அமர்ந்து வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை கொறித்து கொண்டு இருந்தனர் மதுவும் அவள் தோழி ரம்யா இருவரும்..இருவருக்கும் புதிதாக வந்த வாத்தி அவர்களை வேண்டும் என்றே அவமானம் செய்து விட்டதாக கருதினர்..

அதிலும் மதுவுக்கு காலையில் இருந்தே நேரம் சரி இல்லை..சேற்றை வாரி இறைத்து அதை மாற்றி வீட்டில் இருந்து அவசரமாக கிளம்பி பஸ் ஏறி இங்கே வந்தால் அந்த புதிதாக வந்து இருக்கும் ப்ரொபஸ்ஸோர் வெளியே அனுப்பி விட்டார்...என்று காலை முதல் ஐந்து நிமிடம் முன் நடந்தது வரை தன் தோழியிடம் கூற (புலம்ப)அவளோ ஏதோ லோகத்தில் இருந்தாள்...

மது ரம்யாவை உலுக்க அவளோ ஆஹ் என்று தூக்கத்தில் இருந்து விழிப்பது போல விழித்தாள்...

"என்ன டி நான் இங்கே கத்திட்டு இருக்கேன்...நீ என்னடா னா தூங்கிட்டு இருக்க "...என்று மது கத்த

'இல்லை டி மது...இன்னிக்கு புதுசா வந்த சார் பார்த்தியா ...அழகா இருக்கார் ல "...என்று கூற

அவளுக்கோ அவன் முறைத்தது தான் அவனை நினைத்தால் நியாபகத்திற்கு வர மதுவோ,  "எனக்கு பார்த்தா அப்படி ஒன்னும் தெரில... நல்லா பார்க்க ஜிம் ல வேலை செய்றவன் மாதிரி இருக்காரு ...அவரை போய் நல்லா இருக்கு னு சொல்ற...ரொம்ப ஓவரா பேசிட்டாரு...என்னை பத்தி தெரில அவருக்கு..
பேசாம பழைய சாரே இருந்து இருக்கலாம்"... என்று அவனை பார்க்கவில்லை என்று கூறி வர்ணித்தும் அதில் தன்னை திட்டியது வேறு நியாபகம் வர அதில் கோபமும் வர ரம்யாவிடம் புலம்பினாள்..

ரம்யா அதை எல்லாம் கேட்டால் தானே....அவள் இந்த உலகத்தில் இல்லை...தூரத்தில் அவளுடைய நண்பன் அசோக் வந்து கொண்டு இருக்க அவனும் இவர்கள் அருகில் வந்து அமர்ந்து மதுவின் கையில் இருக்கும் டிஃபன் பாத்திரத்தை பிடுங்க "அவளோ எனக்கு பசிக்குது டா".. என்று தர மறுக்க அதற்குள் அந்த பீரியட் முடிந்து விக்ரம் வெளியே வந்தான்....மேல் தளத்தில் இருந்து தூரத்தில் கீழே அவள் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருப்பது மிக சரியாக அவன் கண்களுக்கு அந்த காட்சி பட அவள் மேல் மேலும் எரிச்சல் மூண்டது...

பொதுவாக பெண்கள் மீது வெறுப்பில் இருக்கும் விக்ரம் கண்களுக்கு இவளும் அந்த ரகத்தை சேர்ந்தவள் தானே என தோன்ற அவளை பார்த்து முறைத்து கொண்டே விரிவுரையாளர்களுக்கான அறைக்கு சென்று தன் இருக்கையில் அமர்ந்து கண்களை இறுக மூடி கொண்டான்...அவன் கண்களுக்கு ஏதேதோ அவன் மறக்க நினைக்க விஷயங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் அவனின் மனக்கண்ணில் வலம் வந்து கொண்டு இருந்தது...

  அதன் பின் மதியம் ஆகி வழமை போல அவள் தன் நட்பு வட்டத்தில் தன்னை உள்புகுத்தி காலை நடந்த சம்பவங்களை எல்லாம் மறந்து சிறகில்லா பறவையாக பறந்தாள்...மாலை கல்லூரி முடிந்து மது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருக்கும் அவள் வீட்டின் எதிரே உள்ள வீடு இப்பொழுது தான் கட்டி முடித்து இருக்க இந்த மாதம் கடைசியில் வருவார்கள் என்று அந்த வீட்டை கட்டி கொண்டு இருக்கும் போது கோல்ட் கேக்க அவர்கள் கூறிய கதை...இப்போது அந்த புதிய வீட்டின் உடைமையாளர் போல தோற்றம் கொண்ட மனிதர் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு இருக்க அவர் அவள் வருவதை பார்த்து புன்னகைத்தார்...அவளும் பதிலுக்கு புன்னகை புரிந்து கொண்டு நடக்க இவள் அந்த வீட்டையும் அங்கே நிறுத்த பட்டு இருந்த காரை பார்த்து அதிர்ந்தாள்...

அந்த கருப்பு நிற ஆடி கார் பின்னால் உடைக்கப்பட்டு இருந்தது...அயோ இவருடைய காரை தான் உடைத்து விட்டேனா ...நம்ம வீட்டு எதிர் வீட்டுலயா இருக்காரு...இப்போ என்ன பண்றது என்று வாசுதேவனை பார்த்து திருதிருவென விழித்து கொண்டே வர பேசாம ஒன்னும் தெரியாத மாதிரி போயிடலாம் என்று உள்ளுக்குள் பயந்து கொண்டே அவரை தாண்டி அவள் வீட்டுக்கு அருகே போகும் முன், " அம்மா ஒரு நிமிஷம் "...என்று வாசுதேவன் அழைக்க,

இவளுக்கு இங்கே உதறல் எடுத்தது...எதுக்கு கூப்பிடறாரு...ஒரு வேளை நான் தான் கார் உடைச்சேன் னு தெரிஞ்சு போச்சா மாட்டிட்டேன் னா என்று நினைத்து கொண்டே அவள் முகமெல்லாம் வியர்த்து அதை துடைத்து கொண்டே திரும்ப அதற்குள் அவர் அருகில் வந்தார்...வந்தவர் , "நீ இந்த வீட்டுல தான் இருக்கியா "...என்று கேட்க

அவளோ இன்னிக்கு முடிஞ்சோம் அப்பா க்கு மட்டும் தெரிஞ்சுது என்னை கொன்னே போட்டுருவாரு...இன்னிக்கு பேசாம மணியோட கூண்டுல போய் படுத்துக்க வேண்டியது தான் என்று இவள் யோசித்து கொண்டு இருக்கும் போதே நா வறண்டு அவர் திட்டி விடுவாரோ என்று பயந்து கொண்டே அவரை நிமிர்ந்து பார்த்து ஆமாம் என்று தலை ஆட்டும் முன் வெளியே வந்த அழகு மயில் மற்றும் கோல்ட் ,"யாரு கிட்டே நீ பேசிட்டு இருக்க "..என்று கூறி கொண்டே வெளியே வர அங்கே வாசுதேவனை கண்டதும் "யாரு நீங்க "...என்று கோல்ட் கேக்க

அவரோ கோல்ட் ஐ கண்டு "வணக்கம் அம்மா நான் பக்கத்து வீட்டுல புதுசா குடி வந்து இருக்கேன்"..என்று கூற

"ஓ அது நீங்க தானா "...என்று கூறி , "வாங்க உள்ளே வாங்க".. என்று மகனை பற்றி தெரிந்து கோல்ட் அழைப்பு விட

மது மற்றும் அழகு மயில் அதிர்ந்தனர்...மதுவோ இந்த பாட்டிக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை என்ற எண்ணமும் அழகு மயிலுக்கோ தன் கணவர் வரும் நேரம் வெளியே நின்று வேறு ஒருவனிடம் பேசி கொண்டு நிற்பதை பார்த்தால் அவ்வளவு தான் என்று நினைத்து கொண்டு இருக்க...

அழகு மயில் தன் கணவரை பற்றி நினைத்து விட்டது வெங்கடாசலத்திற்கு கேட்டு விட்டதோ என்னவோ அவர் தன் பைக்கில் வந்து கொண்டு இருந்தார்...மதுவுக்கு அப்பாவின் வண்டி சத்தமும் அந்த காரும் வாசுதேவன் இங்கே நிற்பதும் , இந்த கோல்ட் வேறு அவரை வெட்டி விடாமல் பேச்சு வளவளத்து கொண்டு இருப்பதும் எல்லாம் சேர்ந்து அவளுக்கு பயம் கலந்து அதும் அவளின் தந்தையை கண்டதும் அவ்வளவுதான் பூமிக்குள் புதைந்து கொண்டு இருந்தாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top