காதல் 4

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

 

அத்தியாயம் : 4

மது இரண்டாம் வருட கணனி அறிவியலை முதன்மையாய் எடுத்து படிக்கும் பொறியியல் மாணவி அந்த கல்லூரி அனைவருக்கும் சிம்ம சொப்பனம் என்றே கூறலாம்...பணம் வாங்கி கொண்டு சீட் கொடுக்கும் தனியார் கல்லூரிகளுக்கு மத்தியில் நல்ல படித்த மாணவர்களுக்கு மட்டுமே அங்கே இடம் வழங்கப்படும் ....பணத்திற்கு விலை போக கூடாது என்று அந்த நிறுவனத்தை தொடங்கினர்...அதையே இப்போதும் நடைமுறை படுத்தி வருகின்றனர் இந்த தலை முறை இயக்குனர்கள்...

இப்படி பெருமையில் ஊறி திளைத்து கொண்டு இருக்கும் அந்த கல்லூரி தான் மதுவின் சொர்க்க பூமி...ஒரு வருடமாக வாழ்க்கை என்ன என்பதை கற்று வருகிறாள்...நண்பர்கள் படை சூழ தன்னுடைய குறும்பு தனத்தை வெளியே அவிழ்த்து விட்டு சந்தோசமாக வானில் சிறகில்லா தேவதை ஆக வலம் வந்து கொண்டு இருந்தாள்...

அவள் தனது வகுப்பை நோக்கி நடந்து வந்து கொண்டு இருக்கும் போதே அங்கே ஒருவனும் அவள் வகுப்பை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்தான்..

.பிளாக் ஷூ லைட் ப்ளூ நிற சட்டையும் கருப்பு நிற பாண்ட் மட்டும் கருப்பு நிற டை அணிந்து அந்த சட்டை வெடித்து விடும் நிலையில் அவன் புஜங்கள் வெளியே தெரிய அடர்ந்த கேசம் காற்றில் அலை அலையாய் முன்நெற்றியில் வந்து அது ஒரு கையால் கோதி கொண்டே அங்கே இங்கே திரும்பி பார்த்து கொண்டே கர்லா கட்டை எடுக்க வேண்டிய கையால் ஒரு குண்டு புக்கை பிடித்து கொண்டு அவன் முகத்திற்கும் கையில் இருக்கும் புத்தகத்திற்கும் சம்பந்தமே இல்லாதது போல அவ்வளவு ஸ்டைலிஷ் ஆக ஒரு வகுப்புறைக்குள் நுழைந்தான்....

   அத்தனை நேரம் சலசலத்து கொண்டு இருந்த அந்த வகுப்பு மாணவ மாணவிகள் ஊசி விழுந்தாள் கூட கேக்கும் அவளுக்கு அவனை கண்டதும் அமைதியாகி இருந்தனர்...

அந்த வகுப்பறையின் 49 பேரையும் ஒரே நேரத்தில் மூச்சு அடைக்க வைத்து விட்டான்...மாணவிகளை சொல்லவே வேண்டாம் கிரிக்கெட் வீரர் போல தங்கள் மனதில் உருவக படுத்தி வைத்து இருக்கும் கனவு நாயகன் போல ஒருவன் உள்ளே நுழைந்தால் அவர்களுக்கு எல்லாம் மூச்சு அடைக்காமல் என்ன செய்யும்...

அவர்கள் கண்ணுக்கு அவன் ஒரு தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்த இந்திரனை போல இருக்க மாணவிகள் அவனை கண்டதும் வீழ்ந்து விட்டனர்..

மாணவர்களோ அவர்களின் மனதில் பொறாமையா இல்லை தங்களை விட உயரமும் அழகும், அதே சமயம் எங்களுக்கு எல்லாம் உடற்கட்டு இவ்வளவு ஒல்லியாக இருக்கும் வேளையில் இவனுக்கு மட்டும் இப்படி இருக்கானே என்று நினைக்க வைத்து விட்டான்...

அது மட்டும் இல்லாமல் இவன் யார் நம்மை மாணவர்ரா பார்த்தால் அப்படி தெரியவில்லையே எப்படியோ வந்த ஒரு நொடியில் எல்லாம் பெண்களையும் வீழ்த்தி விட்டான் என்று நினைத்து கொண்டு இருந்தனர்...

உள்ளே நுழைந்தவன் எல்லோரையும் அளவிட்டான்...அளவிட்டு கொண்டே அங்கே பாடம் நடத்தும் இடத்திற்கு போய் நின்று அங்கே இருக்கும் மேசையின் மீது தான் கொண்டு வந்து இருக்கும் புத்தகத்தை வைத்து விட்டு ஒரோ முகங்களாய் அளவிட எல்லோரும் அவனையே பார்த்து கொண்டு இருந்தனர்....

   பின் ஒரு இளநகை பூத்து டேபிளின் முன்னால் வந்து நின்று கை கட்டி இயல்பாக , "நான் விக்ரம் வாசுதேவன் ...உங்க நியூ ப்ரொபஸ்ஸோர் "..என்று கூற அங்கே பெண்கள் அனைவரும் கை  தட்டி மற்றும் சில குறும்பு மாணவிகள் விசில் கூட அடித்து அவன் வரவை ஆரவாரமாக வரவேற்றனர்....

அவர்களின் மகிழ்ச்சியை கண்டு அவனுக்கு சிறிது இதம் தர மெல்ல மீண்டும் சிரித்தான்...மாணவர்களோ முதலில் பேருக்கு என்று கை தட்டினாலும் பின் அப்பாடா சார் நம்மளை விட பெரிய ஆளு என்று நினைத்து கொண்டே அவர்களும் அவனின் வரவை வரவேற்றனர்...அவர்களுக்கு ஒரு பீதி இருந்தது எங்கே இவனும் தான் ஒரு மாணவன் தான் என்று கூறி எங்களின் இள மொட்டு விரியாத சொல்லாத சொல்லப்படாத காதலுக்குள் நுழைந்து  ஒரு ஆட்டம் காட்டி விடுவானோ என்ற பயம் இருந்தது....ப்ரொபஸ்ஸோர் என்றதும் தான் சில மாணவர்களுக்கு மூச்சே வந்தது...

இருந்தும் சில மாணவர்கள் பொறும அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அனைவரையும் பார்த்து சிரித்து கொண்டே , "ஹலோ பிரின்ட்ஸ் நான் விக்ரம் வாசுதேவன் நான் தான் உங்களுக்கு system software கிளாஸ் எடுக்க போறேன்...அண்ட் உங்க கிளாஸ் இஞ்சார்ஜ் நான் தான் "...என்று கூறி கொண்டு இருக்கும் போதே ஒரு பெண்ணின் குரல் வாயிலில் கேட்டது...

"நீயும் லேட்டா டா சீனி, நானும் லேட் "என்று தன் கூட வந்த ஆடவனுக்கு கை கொடுத்து கொண்டே வர இவர்களின் வகுப்பு அமைதியாக இருந்ததால் அனைவருக்கும் தெளிவாக கேக்க விக்கிரமும் தன் பார்வையை வெளியே பதிக்க வாயிலை அடைத்து நின்ற படி ஒரு பெண் அவளை கண்டதும் இத்தனை நேரம் இருந்த அவனின் முகத்தில் இருந்த இதம் மாறி ஒரு கடுமை வந்தது...

அவளோ இது யாரு புதுசா ஸ்டுடெண்ட் மாதிரி இல்லையே பார்க்க அழகா தான் இருக்கான் என்று முகத்தில் ஒன்றையும் காட்டி கொள்ளாமல் மனதுக்குள் அவனை அளவிட்டு கொண்டு இருக்க அவனுக்கு மட்டும் அவள் பார்வையின் மொழி புரிந்ததோ என்னவோ முகத்தை கடுமையாக வைத்து, " வாட் டூ யூ வான்ட்"....என்றான்....

அவன் உருத்து விழித்தது அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் "உள்ளே வரனும்".. என்க....அவள் நின்ற விதமும் தாமதமாக வந்து உள்ளே அவள் வர வேண்டும் என்று கூறியதும் காலையிலே அவனின் காரை உடைத்த மங்கையர் திலகம் இவள் தான் என்பதாலும் அவளை கண்டதும் அவனுக்கு பிடிக்கவில்லை.... அவள் இவ்வளவு சீக்கிரம் தன்னிடம் அதும் தன்னிடம் படிக்கும் மாணவியாய் தன்னிடம் சிக்குவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை...அவன் தான் அவளை கவனித்தானே ஒழிய அவள் அவனை கவனிக்கவில்லை.... அதனால் அவளுக்கு அவனை தெரியவில்லை...

"அவுட் "...என்று கூறி வாயிலை காட்டி வெளியே போக சொன்னான்...

இவளோ அவனை தெனாவெட்டாக ஒரு பார்வை பார்க்க இவளுக்குள் மூண்டது இவன் யார் என்பது போல அவள் பார்வையை பதிக்க, அதற்குள் அங்கே அமர்ந்து இருக்கும் அவளின் நண்பி அவளிடம் செய்கை மொழியில் சார் என்று கூற அவளின் நண்பி கூறியதை கண்ட அவன் அவளையும் வெளியே போக சொன்னான்...

அவளோ "சாரி சார் "..என்று கெஞ்ச மதுவின் மேல் உள்ள கோபத்தில் ,"வெளியே நீ போறியா இல்லை நான் போகட்டா "..என்று அத்தனை நேரம் சிரித்து பேசிய இவனா என்று எல்லோரையும் நினைக்க வைக்கும் வகையில் முகத்தை கடுமைக்கு மாற்ற அந்த வகுப்பே அதிர்ந்தது...

அவனோ அதை எல்லாம் ஒரு பொருட்டாக கொள்ளாமல் , "டேக் யூர் புக்ஸ் "..என்று கூறி வகுப்பை தொடங்கினான்....அவளோ அவனை பார்த்து முறைக்க அவன் அதை கண்டு கொள்ளாமல் பாடத்தை எடுக்க தொடங்கினான்......

என் கண்கள் உனை தேடும்......



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top