காதல் 3
அத்தியாயம் : 3
காதலது கண்ணில் கண்டேன்
காரை கோபத்துடன் எடுத்தவன் ஆத்திரம் மிகுதியில் தான் என்ன நினைக்கிறோம் என்றே தெரியாமல் எனக்கு நடந்தது எதற்கும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை...யாரையும் தன் வாழ்வில் ஒன்றும் செய்ய முடியவில்லையே... இதோ போறாளே என் கார் கண்ணாடியை உடைத்து விட்டு திமிராக நடந்து போறாளே...என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே என்கிட்ட நீ சிக்குவ எப்போவாவது என்று யாரோ மேல் இருக்கும் கோபத்தை அவள் மீது திணித்து மனத்திற்குள் கருவி கொண்டே தாங்கள் புதிதாக கட்டி இருக்கும் வீட்டுக்குள் வந்தனர் அந்த நெடியவனும் அவன் கூட பிரயாணம் செய்யும் நபர்...
வீட்டுக்குள் நுழைந்ததும் அவன் அவரிடம் "நீங்க தூங்கி ரெஸ்ட் எடுங்க ...நான் வந்து எல்லாம் பார்த்துக்கறேன் ....என்னால இன்னிக்கு லீவு போட முடியாது...சாப்பாடு சொல்லி இருக்கேன் வந்திடும் ஒரு ரூம் சரி பண்ணி இருக்காங்க அங்கே இருங்க "...என்று ஏதோ சிறு பிள்ளைக்கு அறிவுரை கூறுவது போல அவன் கூறி கொண்டு இருக்க தன் அருமை மகன் தன்னை குழந்தை போல பார்த்து கொள்வதை எண்ணி அகம் மகிழ்ந்தார் வாசுதேவன்...
ஆனால் வெளியே தன் தலையை மட்டும் ஆட்டி கொண்டு இருக்க அவர் மகன் அதற்கும் முறைத்தான்..."உங்களுக்கு வர வர நக்கல் அதிகம் ஆக்கிடுச்சு "....என்று தன் தலையை சிலுப்பி கொண்டு ரெடி ஆக சென்றான்....
ரெடி ஆகி வந்தவன் வெளியே வந்தவன் தன் காரை பார்த்ததும் அவள் மீது எழும் கோபத்தை அடக்கி , "கார் நான் வந்து ஒர்க்ஷாப் கொண்டு போறேன் ...நீங்க வண்டியை எடுத்திங்க னு தெரிஞ்சுது...இந்த வீடு இப்போ நான் போகும் போது எப்படி இருந்ததோ அதே மாதிரி தான் இருக்கணும் ...ஒரு பொருள் அங்கே இங்கே நகர கூடாது "....என்று ஒரு வேலையும் செய்யாமல் ஓய்வில் இருக்க சொல்லி கூறி விட்டு தான் சென்றான்...
அவருக்கோ தன்னை இவ்வளவு பொறுப்பாக கவனித்து கொள்ளும் என் மகன் திருமணம் புரிந்தால் அவனின் மனைவியையும் பொறுப்பாக கவனித்து கொள்வான்...ஆனால் அவன் தான் கல்யாணம் என்ற வர்த்தைக்கே பிடி கொடுக்க மாட்டேன் என்கிறான்...அதுமட்டுமின்றி மகன் தான் பெண்கள் என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை என்று விட்டானே...அவன் வாழ்வில் கடந்து போன பெண்கள் கொடுத்த வலி அவனை இப்படி மாற்ற வைத்து இருக்கிறது எல்லாம் என்ன செய்ய விதி தான் என்று நினைத்து வெளியே செல்லும் மகனை வழி அனுப்பினார்..
அவரும் மகன் சென்றதும் வெளியே சென்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு வீடுகள் நிறைய இருக்கிறது ....அமைதியாகவும் இருக்கிறது ...என்று நினைத்து கொண்டே வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்தி கொண்டார்..
தன் பிங்க் நிற புதிய குர்தா முழுவதும் கரை படிந்து இருக்க இப்படியே எப்படி காலேஜ் செல்வது என வந்த வழியே வீட்டிற்கு சென்றாள் மது ...அங்கே அவளது கோல்ட் டீயை உறிஞ்சி குடித்து கொண்டு நேற்று இட்ட சீரியலின் மறு ஒளிபரப்பை பார்த்து கொண்டு இருக்க இவளுக்கு இங்கே புகை வந்தது...ஆமாம் மகன் வீட்டுக்குள் நுழையும் நேரம் டிவியின் சத்தம் எங்கேனும் கேட்டால் அவ்வளவுதான்.... வீட்டை கெடுக்கும் நிலைக்கு தள்ளிய இரண்டு விஷயங்கள் டிவி மற்றும் மொபைல் என்பது அவரின் எண்ணம்....
இருந்தும் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப சில விஷயங்கள் வேண்டும் என்பதால் தான் இது எல்லாம் வீட்டுக்குள் நுழைந்து இருப்பதற்கான காரணம் இல்லையேல் அதும் வீட்டுக்குள் கிடையாது...அதனால் குடும்பமே அவர் இரவு வரும் நேரம் அறிந்து டீவியை அணைத்து விடுவர்...அது தான் கோல்டின் காலை வாசம் டிவி... அவள் எதிர்பார்த்தது போல அவர் அங்கே இருக்க இவள் கடுப்பு ஆனாள்... அந்த கார்காரன் மேல் இருக்கும் எரிச்சலை அவளுக்கு யார் மீதாவது காட்ட வேண்டும்...எப்போதும் போல அவளின் கோல்ட் மாட்டி கொண்டார்...
நான் இப்படி நாறிட்டு வந்து இருக்கேன் ...இந்த கோல்ட் காலை ஆட்டிட்டு குடிக்கிறியா என்று நினைத்து பாட்டி என்று புனை போல் வீட்டுக்குள் நுழைந்து அவர் பின்னால் சென்று "கோல்ட்...."
கத்த அவரது கையில் இருந்த மொத்த டீயும் கீழே சிந்த தான் எண்ணியது நிறைவேறிய சந்தோசத்தில் அவள் கோல்ட் ஐ பார்க்க அவரோ அவளது கோலத்தை கண்டு சிரித்தார்...
அவர் சிரிப்பதை கண்டு எரிச்சல் பட்ட மது, "கோல்ட் நீ சிரிச்ச இப்போவே அப்பாவுக்கு தெரியாம நீ பண்ற தில்லாலங்கடி வேலையை போட்டு கொடுத்துவேன் "...என்று கூற
அவரோ அவளையும் அவள் உடையையும் பார்த்து ஒரு நக்கலான சிரிப்பை உதிர்த்து , "இது உன் அப்பன் போன வாரம் எடுத்து கொடுத்த துணி தானே"... என்று கேட்க
அயோ இதை எப்படி மறந்தேன் என்று நினைத்து பாவமாக முகத்தை வைத்து தன் மொட்டு கண்களால் அவரை பார்க்க
அவரோ இதை பார்த்து கொண்டு இருக்கும் போதே மதுவின் அம்மா அழகு மயில் வந்தார்.." யார் கிட்டே நீங்க பேசிட்டு இருக்கீங்க "..என்று கூறி கொண்டே சேலை முந்தானையால் தன் கைகளை துடைத்து கொண்டே அடுக்களைக்குள் இருந்து வெளியே வர அவரோ தன் மகளின் கோலத்தை கண்டு அதிர்ந்து விட்டார் .."என்னடி இது கோலம்".. என்க
"அம்மா ஒரு கார் ல வந்தவன் சேரை வாரி இறைச்சுட்டான் மா "...என்று உதட்டை பிதுக்கி கொண்டு கூற ...
அழகு மயில் கடிய தொடங்கினார் , "நடு ரோட்டில பராக்கு பார்த்திட்டு போனா அப்படி தான் சேற்றை வாரி இறைப்பாங்க... நீ ஒதுங்கி போய் இருந்தினா இது எல்லாம் நடந்து இருக்காது...போய் ட்ரெஸ் மாத்திட்டு போ....உங்க அப்பா மதியம் வருவாரு"... என்று கூற...
அதாவது மட்டம் போடும் எண்ணத்தை கை விட்டு மரியாதையாக கல்லூரி செல்லும் வழியை பார் உங்க அப்பா வருவாரு என்று அவர் தெளிவாக மகளின் மனம் புரிந்து கூற
தான் இன்று இதை சாக்கிட்டு மட்டம் போடும் எண்ணத்தை புரிந்து கொண்ட தாய்க்கு ஒரு சபாஷ் இட்டு உடை மாற்றி விட்டு கல்லூரி செல்ல முடிவு செய்தாள்...
ஏற்கனவே லேட் ஆகி இருந்ததாலும் இதில் வேறு அந்த கார் ஓட்டி சேற்றை இறைத்ததால் வீட்டிக்கு வந்து உடை மாற்றி பஸ் பிடித்து கல்லூரி நிறுத்தத்தில் இறங்கும் பொழுது ஒரு பீரியட் முடிந்து விட்டது...
எப்போவும் முதல் பீரியட் பாதி ல போவோம் ஆனா இன்னிக்கு செகண்ட் பீரியட் தொடங்கிடுச்சே...
என்ன பீரியட் ...ஆமா என்ன பீரியட் னு தெரிஞ்சு நீ என்ன பண்ண போற என்று அவளின் மனசாட்சி கேள்வி கேட்க நீ உன் வேலைய பாரு எங்களுக்கு தெரியும் என்று ஒரு கொட்டு அதற்கு கொடுக்க அதோ நான் என் வேலைய தான் பார்த்தேன்..என்னையே திட்டுனில அங்கே போ உனக்கு காத்து இருக்கு ஆப்பு என்று மனசாட்சி கேலி செய்து அவளுக்கு தெரியாமல் ஓடி ஒளிந்தது..
