காதல் 2

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

 

அத்தியாயம் : 2

கோல்டோ மனதுக்குள் பேசாமல் இவனை டாக்டர் ஆக்கி இருக்க கூடாது... மிலிட்டரி க்கு அனுப்பி இருக்கனும் என்னமா எதுக்கு எடுத்தாலும் திட்டுறான்...இவனை "நான் பெத்தேனா இல்லை இவன் என்னை பெத்தானா".. என்று வாய்க்குள் முணுமுணுக்க அவர் வயதுக்கு பாவம் சற்று எல்லோர் காதுக்கும் கேட்டு விட அதற்க்கும் முறைத்த அவர் மகன் , "என்ன அங்கே சத்தம் போங்க "...என்று தன் தாயை விரட்ட அங்கே அவரின் மகள் பூமிக்குள் இருந்து தான் வைரம் எடுப்பார்களா என்ற ஆராய்ச்சியில் ஈடு பட்டு கொண்டு இருந்த மகளை , "இன்னும் இங்கே என்ன பண்ற ..காலேஜ் க்கு டயம் ஆகல "...என்று விரட்ட அவளோ இனியும் அங்கே நிற்க அவளுக்கு என்ன பைத்தியமா ஓடி விட்டாள்...

ஒரு வழியாக எல்லோரும் உணவு உண்டு சமயம் 8.30 என மணி நொடியை கடக்கும் முன் வெங்கடாசலம் வீட்டை விட்டு தன் பைக்கில் மருத்துவமனைக்கு புறப்பட்டார்... பள்ளிக்கூடத்துக்கு செல்லும் மதிவதனி மற்றும் மிதுன் சைக்கிளில் செல்ல அவளோ ரெடி ஆகி தன்னை அழகு படுத்தி கொள்ள மேலும் ஒரு பதினைந்து நிமிடங்கள் எடுத்து கொண்டு, கோல்டுக்கும் அவள் அம்மாவிற்கும் முத்தத்தை பரிசு அளித்து வீட்டை விட்டு வெளியே செல்லும் அவரின் செல்ல பேத்தியின் அழகை கண்டு பெருமிதம் தான் அந்த வயசான மூதாட்டிக்கு..
அதும் இன்று அவள் அணிந்து இருக்கும் பிங்க் கலர் குர்தா அவளுக்கு அத்தனை கச்சிதமாக பொருந்தி இருக்க குண்டும் இல்லாமல் ஒல்லியும் இல்லாமல் மிதமான உடற்கட்டையில் இருக்கும் பேத்தி அவரின் மருமகள் போல நல்ல நிறம்...குறும்பு கூத்தாடும் விழிகள்...நடனமும் பயின்றதால் நல்ல உடல் வாகு... வயது 19 தொடங்க போகிறது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்....விழிகளில் மட்டும் அல்ல இயற்கையிலே குறும்பை பெற்றவள் அவரின் பேத்தி...

"நல்லா படிச்சு ஒரு ராசகுமாரனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கனும் முருகா ...என் பேத்தி கல்யாணத்தை பார்த்ததும் தான் நான் கண்ணை மூடனும்"..என்று தினமும் வேண்டும் கோரிக்கையை முருகனிடம் சலிக்காமல் இன்றும் கோரிக்கையை வைக்க முருகனோ அதற்கான சமயம் உனக்கு வந்து விட்டது ஆனால் மரணம் அல்ல உன் பேத்தியின் ராஜகுமாரன் ஆடி காரில் வந்து கொண்டு இருக்கிறான் என்று கூற முருகன் கூறியது ஒன்றும் பாவம் அவருக்கு கேட்கவில்லை...அவரோ , "ஆத்தா அழகு எனக்கு இன்னொரு டீ குடு த்தா" ..என்று அவரின் பணியை தொடர்ந்தார்...

வீட்டை விட்டு வெளியே வந்த மது அப்பாடா என்று ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டாள்... வீட்டில் கார் இருந்தாலும் , செல்வம் இருந்தாலும் ஒரு நடுத்தர குடும்பம் எப்படி வாழுமோ அது போன்றதொரு வாழ்க்கையை தான் தன் மக்களுக்கு படிப்பித்து வருகிறார் மதுவின் தந்தை...அவர் செய்யும் ஒரோ செயலுக்கும் ஒரு அர்த்தம் உண்டு...ஆனால் கண்டிப்புடன் கூறுவதால் அவரை ஏமாற்ற வேண்டும் என்று மட்டுமே நினைக்கின்றனர் அவரின் செல்வங்கள்...அது அவரின் மக்களுக்கு புரியும் காலம் தான் வெகு தொலைவில் உள்ளது....

வெளியே வந்தவள் மெல்ல தன் மொபைலை நோண்டி கொண்டே வந்தவள் அந்த தெருவை தாண்டி கூட இருக்க மாட்டாள்...அதற்குள் அந்த வழியாக வந்த ஒரு ஆடி கார் அவளின் பிங்க் நிற குர்தாவின் மீது சேற்றை வாரி இறைக்க... அவ்வளவுதான் அவளுக்கு எங்கு இருந்து கோபம் வந்ததோ தெரியவில்லை...

அவளோ வேகமாக அங்கே கீழே கிடக்கும் ஒரு கல்லை எடுத்து அந்த காரில் மிக சரியாக குறி பார்த்து அடித்தாள்...அவளுக்கு வேறு ஒன்றும் யோசிக்க சமயம் இல்லை...நீ யோசிக்காமல் என் மீது சேற்றை வாரி இறைத்தாய்... நானும் உன் வாகனத்தின் மீது கல்லை எறிந்தேன் அவ்வளவே என்பது போல அந்த காரை பார்த்து முறைக்க அந்த கல் காரின் பின்னால் எரியப்பட்டதும் அந்த கார் க்ரீச் என்று நின்றது...

ஆனால் உண்மையில் அவள் தான் மொபைலை பார்த்து கொண்டே நடு வீதியில் நடந்து வந்து கொண்டு இருந்தது...அந்த கார் அடித்த ஹாரன் கூட அவளுக்கு கேட்கவில்லை... அவன் எப்படி சேற்றை வாரி இறைக்கலாம் என்றே கல் எடுத்து அடித்து உடைத்து விட்டாள் அந்த காரின் கண்ணாடியை...

கார் நின்று விட்டது என்பதை அறிந்ததும் அவளோ அந்த தெருவின் எதிர்புறம் போய் மறைந்து கொண்டாள்... காரில் இருந்து இறங்கிய நெடியவன் சுற்றி முற்றியும் பார்த்து , "யூ டேம்மிட்"...என்று அவன் கத்த, மேலும் அடங்காமல் தன் கோபத்தை அவள் எறிந்த கல்லை உதைத்து அதில் காட்ட உள்ளே இருந்த நபர் , "டயம் ஆச்சு வா பா"...  என்க கோப விழிகளில் அவரையும் முறைத்து விட்டு அந்த காரில் ஏறினான்...கார் பறந்தது.....

ஆனால் மதுவிற்கு இப்போது தெரியவில்லை அந்த காரையும் கார் ஒட்டுபவனிடம் இருந்து இப்போது தப்பித்து விட்டோம் என்று மறைந்து நிற்கும் அவள் , அந்த நெடியவனிடம் இருந்து தன் வாழ்க்கையிலேயே இனி அவள் ஒளிந்து மறைய போவதும் இல்லை...அது அவளால் இயலாத காரியம் என்று அவள் இப்போது அறிய வாய்ப்பு இல்லை...

அவளோ அவன் தன்னை அவன் கவனிக்கவில்லை என்ற தைரியத்தில் மறைவில் நின்று கொண்டு இருந்தாள்... அவன் கவனித்து விட்டான் என்றும் சிறிது நேரத்தில் அவர்களின் அடுத்த கட்ட தாக்குதல் நடுக்கும் என்பதை அவள் இப்போது அறியவில்லை...

என் கண்கள் உனை தேடும்....



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top