காதல் 1

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

அத்தியாயம் : 1

காதலது கண்ணில் கண்டேன்

நாயகன்  :  விக்ரம் வாசுதேவன்

நாயகி     :  மதுரயாழினி வெங்கடாசலம்

கோயம்பத்தூர் மாநகரம்

      உலகம் நகரமயமாதலை வரவேற்று நகரத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தாலும் நகரமும் நகரத்தை நோக்கி பயணப்பட்டு கொண்டிருக்கும் மக்களுக்கு நடுவில் இன்னும் நான் கிராமத்தான் தான் என்று கூறும் அளவிற்கு ஒரு மருத்துவர் இருந்தார் அவர் வேறு யாரும் அல்ல திரு. வெங்கடாசலம் அவர்கள்...தான் ஒரு மருத்துவன் என்றாலும் பாரம்பரியமாக தான் ஒரு விவசாயி என்பதை அவர் வீட்டை காணும் அனைவருக்கும் புரிந்து போகும்...எங்கு பார்த்தாலும் பசுமை நிரம்பி அந்த இடம் முழுவதும் குளுமையை பரப்பி இருக்க, தான் ஒரு பழமை விரும்பி என்பதை எங்கும் பறைசாற்றி வரும் பொருட்டு வீடு முழுவதும் பழமையான பொருட்களால் அலங்கரித்து வைத்து இருந்தார்...முருக பெருமானின் பக்தனான அவர் தனது வீட்டுக்கு குமரன் குடில் என்ற பெயரும் வைத்து இருந்தார்...

அந்த முருகனை தினம் தொழுகை புரியவும் தன் வீட்டில் முருகன் குடி இருக்கவும் தோட்டத்திற்கு நடுவே ஒரு சிறிய முருகன் கோவிலை கட்டி தினமும் தன் பக்தியை என் பெருமான் முருகனுக்கு நினைவு படுத்தி வந்தார் ...

அவர் அந்த ஏரியாவில் கைராசி டாக்டர் என்ற பெயரும் இருந்தது...கொஞ்சம் செல்வாக்கு நிறைந்த நபர்....கண்டிப்பானவர்...ஆங்கில மருத்துவம் வெளியே பார்த்தாலும் மனிதன் வீட்டுக்குள் ஆங்கில மருத்துவத்தை அனுமதிக்க மாட்டார்...தலைவலி காய்ச்சல் என்றாலும் கஷாயம் தான் மருந்து...இயற்கையை பின்பற்றுவதால் அவர் வீட்டில் நோய் நொடி இதுவரை இல்லை...ஆனால் அதற்காக அவர் அந்த வீட்டில் செய்யும் கொடுமை சொல்லி மாளாது...

அந்த வீட்டு பெரிய மனுஷி பொன்னம்மாள் முதல் கடை குட்டி மதிவதனி வரை எல்லோரும் இவரை கண்டால் தெரித்து ஓடுவர்... ஓட வைப்பார் என்றே கூற வேண்டும்...அவருக்கே டிமிக்கி கொடுக்கும் ஒரு அழகிய ராக்ஷஸி அந்த வீட்டில் உண்டு...அது அவரது சீமந்த புத்திரி மதுரயாழினி ...காலை ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்தால் அவர்களுக்காக அருகம்புல் சாறு காத்து இருக்கும் அதை முடித்ததும் அனைவரும் யோகா செய்ய வேண்டும்....

யோகா முடித்ததும் அனைவருக்கும் ஒரோ பணிகள் காத்து கொண்டு இருக்கும்..
மூத்த மகள் மது வீட்டை கூட்டி பெருக்கி துடைத்து விட்டே அவள் கல்லூரிக்கு செல்ல வேண்டும்...இரண்டாவது மகன் பன்னிரண்டாவது படிக்கும் மிதுன் அவரது கார், பைக் மற்றும் அவனுடைய சைக்கிள் எல்லாம் துடைத்து விட்டே பள்ளிக்கு செல்ல வேண்டும்...மூன்றாவது கடை குட்டி மதிவதனி பத்தாம் வகுப்பு அவளுக்கும் அந்த வீட்டை சுற்றி இருக்கும் செடி கொடிகளை நனைக்க வேண்டும்..

அந்த வீட்டு பெரிய மனுஷிக்கும் ஒரு பணி உண்டு அவருக்கு கஷாயம் குடித்து யோகா செய்து விட்டு அப்படியே தோட்டத்தில் உள்ள பூக்களை மகன் குளித்து தொழுக வரும் முன் பூஜை அறையில் காத்து இருக்க வேண்டும்...இதர பணிகள் எல்லாம் அவருடைய மனைவி அழகு மயில் பார்த்து கொள்ள வேண்டும்...அவர்கள் என்ன செய்தாலும் எட்டு மணிக்கு சரியான உணவு மேடையில் காத்து இருக்க வேண்டும்...இல்லையேல் அந்த நாள் இனிமையான நாளாக மாற கூடிய எல்லா வார்த்தைகளும் அவர் வாயில் இருந்து கேக்கும்..அதற்கு பயந்தே அங்கே எல்லாம் மிக சரியாக நடக்கும் இடையில் தன்னை ஏமாற்றும் மகள் மதுவுக்கு சில பல நேரங்களில் அடியும் விழும்...

வயது வந்த பெண் என்ற பேச்சுக்கு எல்லாம் அங்கே இடம் இல்லை...அடி அடி தான்...உதை உதை தான்...ஆனால் அவரையும் பல நேரங்களில் ஏமாற்றி விடுவாள்....காலை  அவளுடைய கஷாயத்தை அவள் வீட்டு செல்ல நாய்க்குட்டி மணி குடிப்பதில் இருந்து யோகா பேர்வழி என்று வீட்டு மொட்டை மாடியில் தூங்குவது வரை எல்லாம் அவள் கையில் உண்டு....நிமிடத்தில் எல்லோர் கண்ணையும் ஏமாற்றி விடும் கலையை அவர் சிறு வயது முதல் கற்று வருவதால் அதில் ph.d தேர்ச்சி பெற்று இருக்கிறாள்...ஆனால் அவள் கண்ணையும் நோண்டும் அளவுக்கு ஒருத்தன் அவள் வாழ்க்கையில் நுழைய போகிறான் என்பதை அவள் இந்நேரம் அறியவில்லை...

  காலை ஏழு மணி நாற்பத்தைந்து நிமிடம்

வெங்கடாசலம் குளித்து உடை மாற்றி விட்டு வரும் போது அங்கே தன் மக்கள் யாரையும் காண வில்லை..."மது ...மது .."என்று அவளை அழைக்க அப்பா என்று மாடியில் இருந்து அங்கே பாட்டிலில் வைத்து இருக்கும் தண்ணியை எடுத்து முகத்தில் சிதறி வியர்வை துளி போல பாசாங்கு காட்டி அங்கு அங்கே துணியை நனைத்து விட்டு வேகமாக படி இறங்கினாள்...

"இதோ வரேன் பா "...என்று கத்தி கொண்டே அவளின் மாடி படுக்கையான யோகா மேட் ஐ எடுத்து கொண்டு வந்தாள்... "இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க ...அங்கே அப்பா கூட்டி வீட்டை துடைச்சியா "..என்று அவள் தலையை கண்டதும் அவர் தன் கோப விழிகளில் கேக்க

அவளோ மனதுக்குள் அலாரம் வெச்சுட்டு தானே தூங்கினேன் அதுக்குள்ள ஏழு மணி ஆகிடுச்சா என்று மணியை பார்க்க அது 7.47 என காட்ட தன் மொபைலை தூக்கி எறிந்து உடைக்கலாம் என்று தோன்றிய எண்ணத்தை கை விட்டாள்... வேறு மொபைல் இனி வாழ்க்கையில் அவள் பார்க்க முடியாது...

அப்பா அங்கே சுப்ரபாதம் பாடி கொண்டு இருக்க இவள் குனிந்த தலையை நிமிராமல் அமைதியாக கேட்டு கொண்டு இருந்தாள்...அத்தனை பவ்யம் வெளிப்பட்டது அவளின் நடத்தையில்...அழகு மயில் எல்லாம் கேட்டு கொண்டு இருந்தாலும் வெளியே வரவே மாட்டார்...வந்தால் பிள்ளையை வளர்த்து வைத்து இருக்கும் லச்சனத்தை பார் என்று அவருக்கும் கிடைக்கும்...அதனால் அவர் ஒதுங்கி நின்று விடுவார்...

அந்த வீட்டு கடை குட்டிகள் மிதுன் மற்றும் மதிவதனி வெளியே வழக்கம் போல நின்று சிரித்து கொண்டு நிற்பார்கள் ...பின்னே எப்போதும் போல அவள் திட்டு வாங்கும் அழகை பார்த்து அவர்களுக்கு காலையே கண் கொள்ளா காட்சியை கண்டு கழித்து கொண்டு நிற்கும் போதே , "மதி, மிதுன்".. என்று அடுத்த கட்ட குற்றவாளிகளை அழைத்தார்...

அதில் மதி குளித்து முடித்து தந்தை கூறிய அனைத்தையும் செய்து தந்தை சொல் மீறாத பெண் என்பதை நிரூபித்து வந்தாள்.... மிதுன் குளிக்காமலேயே உடை மாற்றி இருப்பதால் மது மற்றும் மிதுன் இருவரையும் கண்டு அவளை கொண்டே இல்லாமல் கூண்டில் ஏற்றி வெளுத்து கட்டினார்...

மதியை அளவிட்டு ஒன்றும் கூறாமல் தன் கண்டிப்பு குரலிலே பாட்டியை அழைத்து வா என்றார்...

மிதுனை பார்த்து , "குளித்து உடை மாற்றி விட்டு யாராவது இந்த வேலைகளை செய்வாங்களா... உன் உடையை பார் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் நாம் சுத்தமாக இருந்தால் எந்த நோயும் நம்மை அண்டாது "..என்று தான் ஒரு மருத்துவன் என்பதை அங்கே பறை சாற்றி , "போ போய் குளித்து உடை மாற்று.... பத்து நிமிடத்துக்குள் நீ இங்கே இருக்க வேண்டும் "..என்று கூறி அவனை அனுப்ப அப்பாடா தப்பித்தோம் என்று மனதுக்குள் நினைத்து ஒரே ஓட்டம்...

மதுவுக்கோ இன்னும் அவளை விட வில்லை...அடுத்த கட்ட தாக்குதலுக்கு தயார் ஆகி விட்டார் என்று மேலும் பூமி க்குள் புதையும் முன் அவளை காக்கும் தெய்வமான அவளின் பாட்டி பொன்னம்மாள் அவளுக்கு மட்டும் கோல்டு ஆடி மெதுவாக படி ஏறி அந்த வீட்டுக்குள் நுழைந்தார்...

நுழையும் போதே அங்கே நடக்கும் அரங்கேற்றத்தை பார்வையாலேயே அளவிட்டு கொண்டே ஏற அவரின் வருகையை எதிர் பார்த்து காத்து இருந்த மது குனிந்த தலையை இலேசாக திருப்பி தன்னை காப்பாற்றும் படி கண்களால் தன் பாட்டி க்கு தூது விட அதற்குள் மெல்ல உள்ளே வந்தவரையும் ஒரு பிடி பிடித்தார்..

அவரோ தான் எதுக்கு திட்டு வாங்குகிறோம் என்று தெரியாமல் நிற்க , "எதுக்கு நீங்க டீ குடிச்சிங்க...வயசு ஆகுதே கொஞ்சம் கூட அறிவு இல்லை... வயசு ஏற ஏற சின்ன பசங்க கூட சேர்ந்து கூத்து அடிக்கிறது...." என்று தொடங்க...அவரோ ஆசைக்கு டீ குடித்து விட்டார் அதும் தன் மகன் குளிக்க போய் விட்டான் என்பதை உறுதி செய்து விட்டு தான் அடுக்களைக்குள் புகுந்து குடித்து விட்டு வெளியே வர இவனுக்கு எப்படி அது தெரிந்தது என்று புரியாமல் விளிக்க அதற்கும் தன் மகனிடம் வாங்கி கட்டியபோது அப்பாடா நான் தப்பித்தேன் என்பது போல மது நின்று கொண்டு இருந்தாள்...

 


This thread was modified 3 days ago by udhra-siddharth

   
Quote
error: Content copy warning!!
Scroll to Top