தூவானம் 9.2
தூவானம் : 9.2
ஆனால் அவளுக்கு தான் அவன் மீது ஒரு வித உரிமை வெறி ஆகிற்றே...அவள் என்ன ஆயினும் அவனை திருமணம் செய்து இருப்பாளே...அவன் வரவும் அவள் அவனை நிமிர்ந்து பார்த்து புது பெண் என்ற வெட்கம் எல்லாம் இல்லாமல் மிக சாதாரணமாக தன் மாமனிடம், " மாமா உங்களுக்கு இந்த பாலை பாட்டி கொடுக்க சொன்னாங்க "...என்று அவள் கூற,
அவனோ மார்பில் கைகளை கட்டி அவளை தீர்க்கமாக பார்த்து, " அங்கே வைத்து விடு "...என்று ஒரு மேசையை காட்டினான் அவளும் வைக்க,
" அப்புறம் உங்க கால்ல விழ சொன்னாங்க மாமா"... என்று யோசித்து கூற , அதை கேட்ட அவனுக்கு அதுக்கு மேல் பொறுமை இல்லை, " அதான் குடும்பமா செய்து காலை வாரி விட்டீர்களே அப்புறம் எதுக்கு கால்ல விழுற இந்த செண்டிமெண்ட்ஸ் எல்லாம் வேண்டாம் அதெல்லாம் கல்யாணம் நல்லபடியா நடந்தவங்களுக்கு நமக்கு கிடையாது"... என்று கூற ,
அவளோ , "ஏன் மாமா நமக்கும் நல்லபடியா தான் நடந்தது".. என்று அவள் சாதாரணமாக கூற, அவளது முகத்தை பார்த்து, " அப்போ உனக்கு கல்யாணம் நடந்தது சந்தோஷம் தானா??".. என்று வினவ,
"ஆமாம் மாமா சந்தோஷம் தான் மாமா"... என அவள் கூறவும்,
"அப்போ உனக்கு இந்த கல்யாணம், இனி வாழ போற வாழ்க்கை எல்லாம் பிடிச்சிருக்கு??".. என்று கேள்வி கேட்டவன் அவளைப் பார்க்க,
அவளோ அவனைப் பார்த்து, " உனக்கு விருப்பம் இல்லன்னு எனக்கு தெரியும் மாமா..ஆனால் எனக்கு பிடிச்சு இருக்கு "..என்று அவள் அமைதியாக கூறவும் ,
"அப்போ உனக்கு ரொம்ப பிடிச்சது என்னை கல்யாணம் பண்ணி இருக்க ".. என்று அவன் ஒரு கேள்வியை முன் வைக்க அவளோ என்ன நினைத்தாளோ என்னவோ அவனது முகத்தைப் பார்த்து, " ஆமா மாமா எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை இருந்துச்சு அதனால நான் பண்ணிக்கிட்டேன் இதுல என்ன தப்பு?? என் மாமா நீ எனக்கு உன்னை கட்டிக்க எல்லா உரிமையும் இருக்கு "...என்று அவள் கண்ணில் சிறு துளி பயமும் இல்லாமல் கூற
அதை கேட்ட அதிர்ந்த அவனோ , "ஓ உரிமையா ?? ஹ்ம்ம்...தப்பு ஒன்னும் இல்லை ஆனா கல்யாணம் பண்ணினா என்ன எல்லாம் நடக்கும்னு கூட தெரியுமா??"... என்று கேட்டான்..
அவனது நினைப்பை எதிரே உள்ளவள் பொய்யாக்கி இருந்தான்...அவன் முன் வளர்ந்ததால் என்னவோ இன்னும் அவனது கண்ணுக்கு பனி மலர் சிறு பெண்ணாக இருக்க அவளோ தான் வளர்ந்ததை அவனுக்கு பறை சாற்றியவள் அதே போல அவனது மனதில் அவளது குடும்பத்தார் போல தான் அவளும் தன் குடும்பத்தை ஆட்டி வைக்க துடிக்கிறாள் எனவும் அவன் மனதில் தோன்றியது..
அவளுக்கு அவன் என்ன தெளிவாக என்ன கூற வருகிறான் என தெரியவில்லை என்றாலும் அவனை ஏறிட்டுப் பார்க்க அவனோ , "என்ன உனக்கு புரியல இரு புரியவைக்கிறேன்".. என ஒரு குரூரமான மனதோடு அவளை வதைக்க வேண்டும் என எண்ணி அவளருகே அவன் நெருங்கி நின்றான்..
நெருங்கி நின்றவன் அவளது தோளைப் பிடித்து அவளுக்கு மூச்சு முட்டும் நெருங்கி நிற்க அவளது கை கால்கள் வெடவெடக்க தொடங்கியது....ஆணின் வாசம் அறியா பெண்ணுக்கு முதன் முறையாக அவனது அருகாமை அடி வயிற்றில் பிரண்டியது..இரண்டு முறை அவளை அவன் தாங்கிய போது எழுந்த அதே படபடப்பு அவளுள் எழுந்தது...மேலும் அவன் அடித்த சரக்கின் போதையும் கூடவே அவனது வாசனையும், அறையின் நறுமணமும் கலந்து அவளுக்கு மயக்கம் வரும் போல இருக்க,
அவள் கால்கள் ஏனோ மெல்ல பின்னால் செல்ல அவனோ மேற்கொண்டு முன்னேறி அவளை மேலும் செல்ல விடாமல் தடுக்கும் விதமாக அவளது இடையை சட்டென்று பிடித்து தன்னை நோக்கி இழுக்க அவளோ அதிர்ந்து பசை போல அவன் மீது மோதினாள் மலர்..
அவனை விட்டு விலக பார்க்க அவனோ விடாமல் அவளது இடையின் பிடியில் அழுத்தத்தை கூட்டி அவளது முடிகளை தன் விரல்களால் அளந்தவன் அப்படியே அவளது முகத்தில் தன் ஒற்றை விரலால் கோலமிட்டு கொண்டே, " கல்யாணம் பண்ணினா இதெல்லாம் நடக்கும் அது கூட உனக்கு தெரியாதா??".. என்று கேட்க ,அவளோ மூச்சுமுட்ட பேச்சின்றி தத்தளித்துக்கொண்டிருந்தாள்..
அவனோ மேலும் நெருங்க , "மாமா ப்ளீஸ் மாமா".. என்று மலர் விலக முனைய , அவனோ விடாமல் நீ தான் எல்லாம் தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ண அப்புறம் எதுக்கு பயப்படுற?? உனக்கு கல்யாணம் பண்ண உரிமை இருக்கு எனக்கு இப்போ இதுக்கு உரிமை இருக்கு"... என்று கூறி மேலும் முன்னேற அவளோ ஏதோ உணர்வுகள் ஆட்கொள்ள பெண்களுக்கே உரிதான பயம் இந்த நேரத்தில் ஆட்கொண்டு ,"மாமா என்னமோ மாதிரி இருக்கு..ப்ளீஸ் மாமா "...என்று அவள் தயக்கத்துடன் அவனது பிடியில் இருந்து கொண்டே அவனது கண்களை பார்த்து கூற என்ன நினைத்தானோ என்னவோ நொடிப்பொழுதில் அவளிடமிருந்து விலகினான்..
விலகியவனோ அவளை பார்த்து, " அது ஏன் உனக்கு தெரியுமா??"... என்று கேட்க அவளோ முழித்தாள்.....
அவனோ அவளிடம் இருந்து இரண்டு அடி விலகி நின்று , "கல்யாணம்னா என்னன்னு தெரியுமா ??..இரு மனசு சேர்ந்து நடக்குறது தான் கல்யாணம் இங்கே நடந்தது கல்யாணம் இல்ல நான் உன்கிட்ட அப்பவே சொன்னேன் எனக்கு இதுல விருப்பம் இல்லைன்னு நீ கேட்கல இதோ எது நடக்கக் கூடாதோ அது நடந்திருச்சு எனக்கு அதில் துளியும் விருப்பமில்லை "..என்று அப்போதும் அவளை குழந்தை என நினைத்து அவளுக்கு புரியும்படி பொறுமையாக கூறியவன்,
ஆழ்ந்த ஒரு பெருமூச்சை ஒன்று இழுத்து விட்டு பால் சொம்பு அருகே வைத்திருந்த விடுதலை பத்திரத்தை எடுத்து அவளது கைகளில் நீட்டினான்...." இதுல கையெழுத்து போடு".. என்று கூற ,
அவளோ அவனையும் அவனது கையில் உள்ள பேப்பரையும் பார்த்து பேய் முழி முழித்தவள் , "இதுக்கு தான் நீ வெளியே போனியா??"... என்று கேட்க,
அவனோ , "ஆமாம்...இதுக்கு தான் போனேன்..இந்த விஷயத்தை நான் எங்க அம்மா கிட்டயோ இல்ல உங்க வீட்டு ஆட்கள் கிட்டயோ நான் சொல்லப்போவதில்லை இப்ப நீ கையெழுத்து போடு அதனால ஒன்னும் உடனே நமக்கு விவாகரத்தும் கிடைச்சிடாது... கொஞ்ச நாள் போகணும் அதுவரை இப்படியே இருக்கலாம் எப்போ இது ப்ராசஸ் ஆகுதோ, அப்போ உனக்கும் எனக்கும் ஒத்துப்போகலை அப்படின்னு சொல்லி பிரிந்து விடலாம் என்ன புரியுதா?? இப்போ நான் உன்ன தொட்டது கூட உனக்கு அதை உணர்த்தனும்னு சொல்லி தான் இல்லாம உன் மேல ஆசைப்பட்டு உன் பக்கத்துல நான் வரல ரெண்டு பேரும் காதலோடு சேரும் போது இதோ இந்த கூச்சம் வெட்கம் எதுவுமே இருக்காது அங்க காதல் மட்டும் தான் இருக்கும்..
அந்த காதலால் பேச்சே வராது அது இரண்டு பேரோட கண்ணில் தெரியும் உணர்வுகளில் புரியும்... இப்போ நீ என்ன தான் விருப்பம்ன்னு சொன்னாலும் அது எனக்கு தெரியல உனக்கு புரியவும் இல்லை..உன் சிறுபிள்ளை தனமான விளையாட்டு இல்லை இந்த காதல், கல்யாணம் எல்லாம் அதனால் இதில் கையெழுத்து போடு "... என்று கூற ,
அவளோ, " மாமா நான் என்ன சொல்றேன்னா எனக்கு உன்னை பிடிச்சிருக்கு ..வாழ்ந்து பார்த்தா தானே தெரியும் காதல் இருக்கா என்ன அப்படின்னு "..என்று கூற அவனுக்கு மீண்டும் இதையே திரும்பத் திரும்ப பேசுவது எரிச்சலாக இருக்க, "உலறிட்டு இருக்காமல் கையெழுத்து போடு ".. என்றான்..
" மாமா சொல்றதை கேளு மாமா ".. என்க,
" என்ன டி சொல்ல சொல்ற குடும்பமே சேர்ந்து டார்ச்சர் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு அதை நியாயப்படுத்திட்டு இருக்கியா?? ... சரி உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு நான் ஒத்துக்குறேன் இப்போ என் முன்னாடி ஒட்டுத்துணி இல்லாம நில்லு நான் அதுக்கப்புறம் ஒத்துக்கறேன் "..என்று அவன் எரிச்சலோடு கூற என்ன தான் பிடித்தவன் என்றாலும் இப்படி கூறினால் எந்த பெண் தான் நிற்பாள்...
அவளோ திகைத்து நிற்க அவனோ, " உன்னால முடியலல மூடிட்டு கையெழுத்து போட்டுட்டு போடி"... என்று கூறி விட்டு அவனது வேலை முடிந்தது போல அவன் போய் படுத்து விட்டான் ..
அவன் கூறியதை கேட்ட அவளுக்கு அப்பொழுது தான் ஒரு உண்மை உறைத்தது மாமாவுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கலை என்று மேலும் ஏதோ வெறியில் கல்யாணம் கட்டிக்கொண்டு வெளியே மாமாவின் உறுதியை அவளால் உடைக்க முடியும் என அவளுக்கு தோன்ற வில்லை... என்றாலும் என்னுடைய உறுதி அதை விட பெரியது என நினைத்த அவளோ தனது படுக்கையில் படுத்து இருக்கும் தன் மாமன் அருகில் சென்றவள் , "நான் கையெழுத்து போடனும்னா என்கிட்ட சொன்னியே அது மாதிரி நீ நில்லு மாமா நான் கையெழுத்து போடுறேன் "...என்க,
அதை கேட்ட அவனோ சத்தியமாக அதிர்ந்து விட்டான் ..இவளுக்கு இப்படி பேச தெரியுமா என்று அவன் அதிர அவளோ சிறு துளி பயமும் இல்லாமல் அவனுக்கு எதிர்புறம் அவன் அருகே வந்து படுத்தாள் பனி மலர் நித்திலன்....
தூவானம் தூறும்...
