தூவானம் 9.1
தூவானம் : 9.1
இதுவரை இல்லாத அழகில் பனி மலரின் அறை மலரால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது...அவன் காணாத அறை இல்லை அவன் காணாத பெண் இல்லை..புதிதான இடமும் இல்லை இதோ இந்த அறையில் தான் அவன் பிறந்ததும் வளர்ந்ததும் எல்லாம்...ஆனால் இன்று ஏனோ அந்த அறையில் பூக்களின் நறுமணம் வீசினாலும் அவனுக்கு மனம் ஒப்பாமல் தள்ளாடியவன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்...
அதற்கு முக்கிய காரணமே இளங்கோ தான்...அவனை மேலும் எரிச்சல்படுத்தும் விதமாக மலரின் அண்ணன் இளங்கோ நித்திலனிடம்,
மலரின் அறைக்கு செல்ல போகும் போது அவனை அழைத்த இளங்கோ, " என் தங்கச்சி சின்ன பொண்ணு ..அவ விருப்பப்படி படி தான் அவ வளர்ந்தா அவ விருப்பப்படி தான் இருப்பா ..அதில் எந்த மாற்றமும் வர வேண்டாம்...அவள் விருப்பம் தான் எங்களுக்கு முக்கியம்னு உனக்கே தெரியும் "..என்று கூற
அதை கேட்ட அவனுக்கு எங்கிருந்து தான் ஆத்திரம் வந்தததோ அவ்வளவு நேரமும் தன்னை அடக்கி அடக்கி வைத்திருந்தவன் இளங்கோவை பார்த்து சூடாக, " என் அக்காவும் எங்களுக்கு அப்படி தான்"... என்று கூற
அவனோ முறைத்து, " என்ன சொல்ல வர உங்க அக்காவை நான் கொடுமை படுத்துறேன்னு சொல்றியா??".. என்க
"நான் சொல்லல எல்லாமே நீங்க தான் சொல்றீங்க அதான் எனக்கு உங்க தங்கச்சியை கட்டி வைச்சிட்டிங்களே அப்புறம் எதுக்கு இதை எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க அப்படி உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லனா எதுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிங்க?? ஒரு பொம்மையை உங்க தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்க வேண்டியது தானே ..அந்த பொம்மை உங்க தங்கச்சி சொல்ற மாதிரி எல்லாம் நடந்து இருக்கும்".. என்று இளங்கோவின் முகத்தை பார்த்து நேருக்கு நேர் சிறு எரிச்சலோடு கேட்டு விட்டான்..
இளங்கோவிடம் இது நாள் வரை அதிகமாக நித்திலன் பேசிய வார்த்தை இதுவாக தான் இருக்கும் ஆனால் திருப்பி இளங்கோவால் பதில் அளிக்க முடியவில்லை.. எனினும் இதற்கு கயலை தாக்கலாம் என அவன் நினைக்க அதற்கும் நித்திலன் அவனை பார்த்து, " இதோ பாருங்க இப்போ நீங்கி என்ன யோசிக்கறீங்கன்னு தெரியும் எனக்கு...நான் பேசியதை வெச்சு என் அக்காவை காயப்படுத்தணும்னு நெனைச்சீங்கனா உங்க தங்கச்சி என் கையில தான் இருக்கா அதை மறந்துடாதீங்க "...என்க,
"என்ன மிரட்டுறயா ?? மாப்பிளை திமிரை என்கிட்டேயே காட்டறியா??யார் கிட்ட பேசிட்டு இருக்கன்னு உனக்கு தெரியுதா??"..என்று இளங்கோ கொந்தளிக்க
"உங்ககிட்ட தான் உங்களுக்கு என்ன தெரியலையா??நான் இப்போவே லேட் தான் இப்போவாது உங்ககிட்ட பேசுறேன்னு சந்தோசப்படுங்க"...என்க
"உனக்கு அவ்வளவு திமிரா?? நீ இப்படி என் முன்னால இப்படி பகட்டா பேச வைச்சது நாங்க அதை மறந்துடாத ??".. என்று வார்த்தையில் கடினத்தை கூட்டி இளங்கோ கூற,
"என்ன எனக்கு செலவு பண்ணினதை சொல்றீங்களா இருக்கட்டும் ஆமாம் உங்க பாக்கெட்ல இருந்து ஒன்னும் எனக்கு செய்திடலையே..உங்க தாத்தா எனக்கும் தாத்தா தான் அதை மறந்துடாதீங்க...அவர் என்னை படிக்க வெச்சார்..என்னமோ எப்போ பார்த்தாலும் இதையே சொல்லிட்டு இருக்கீங்க எல்லோரும்...எவ்வளவு செலவு பண்ணிங்கன்னு இப்போ சொல்லுங்க அதை எடுத்து வெச்சிட்டு போயிட்டே இருக்கேன் அதுக்காக தான் காத்துகிட்டு இருக்கேன்" என்க,
"டேய் என்ன மட்டு மரியாதை இல்லாமல் பேசிட்டு இருக்க..கல்யாணம் ஆனதும் ஏகத்தாளமாக தான் திரியற".. என்று இளங்கோ சாட,
அவனோ , " ஆமாம் அப்படி தான் உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.. மீறி போனா என் அக்காவை என் வீட்டுக்கு அனுப்புவன்னு சொல்லுவ ..அனுப்பிக்கோ அதே மாதிரி உன் தங்கச்சியும் உன் வீட்டுக்கு வருவா அதையும் மறந்துடாத..உன் கூட முதுகெலும்பு இல்லாமல் வாழுறதை விட அவ என் வீட்டுல ராணி மாதிரி இருக்கட்டும்..".. என்க இளங்கோ, " என்ன டா விட்டா பேசிட்டே போற??"... என்று எகிறி அவனது சட்டையை பிடிக்க வர,
ஏதோ முடிவில் இருப்பான் போல நித்திலன் இளங்கோவை பார்த்து , " நான் பாசத்துக்கு தான் கட்டுப்பட்டவன் அதுக்குன்னு கோழைன்னு நினைச்சிடாத..இப்போ நீ என் சட்டையை பிடிச்ச..நான் உன் சட்டையை பிடிக்க அதிக நேரம் ஆகிடாது கூடவே இழுத்து நாலு அறை விடவும் ரொம்ப நேரமாகிடாது..எதுக்கும் என்கிட்ட ஒதுங்கியே இரு அது தான் உனக்கு நல்லது இந்த அதிகாரம் எல்லாம் என் அக்கா கிட்ட வெச்சுக்கோ என்கிட்ட வேணாம் " என்று ஆத்திரத்தில் சிவந்த கண்களோடு கூற,
இளங்கோ இது நாள் வரை காணாத முகத்தில் நித்திலனை காணவும் என்ன நினைத்தானோ சட்டையில் இருந்து கையெடுத்தான்..ஏனோ யார் கண்ணுக்கும் இவர்களின் சம்பாஷணை படவில்லை...
நித்திலன் கூறியதற்கு இளங்கோ ஏதோ கூற வரவும் அதற்குள் முத்தரசு வரவும் சரியாக இருக்க இளங்கோ நொடி பொழுதில் அங்கிருந்து விலகினான்..அவன் மனதில் தன் தங்கையின் வாழ்க்கை கேள்வி குறியாகி விடுமோ என்ற பயம் வந்து போனது இதை பற்றி தன் தந்தையிடம் பேச வேண்டும் என நினைத்து கொண்டான்..
பிறர் பார்வைக்கு மச்சானும் மச்சானும் கொஞ்சி கொள்வது போல இருந்தாலும் உள்ளே இருவருக்கும் நன்றாக முட்டி கொண்டது அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த விடயம் நித்திலனும் பொறுமையாக போயிருப்பான் இந்த அளவுக்கு இறங்கி இருக்க மாட்டான் அவன் உள்ளே சென்ற சரக்கு நன்றாக வேலை பார்த்து கொண்டிருந்தது...போதை செய்த மாயமோ?? அது அவனது மனைவியையும் பதம் பார்க்க காத்து கொண்டிருந்ததோ..
அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவன் கதவு திறக்கும் ஒலி கேட்க அவன் திரும்பி பார்க்கும் போது அரக்கு நிற புடவை உடுத்தி தலை எல்லாம் பூ சூடி கையில் பெரிய பால் சொம்பை பிடித்து குனிந்த தலையோடு உள்ளே நுழைந்தாள் மலர்..எப்போதும் அவளது வரவை அவனுக்கு உணர்த்தும் அவளது கொலுசொலி இன்று சிணுங்கி கேக்கிறதோ என அவனுக்கு சந்தேகம்..
இது நாள் வரை அவளை தனியாக சந்தித்தது போல அல்லாமல் ஒரு புது வித உணர்வை அவனுக்கு கொடுத்தது..அதிலும் அவளது அலங்காரம் அந்த கோபத்திலும் அவனது கண்களை நிறைத்து இருந்தது ..எப்பொழுதும் அவளது கண்களை பார்த்து பேசும் அவன் பார்வை அவளது கழுத்தை தாண்டி சென்றது...அது ஏன் என அவனுக்கு புரியவில்லை...
அதே போல தான் அவளுக்கும் போல அவளது மாமன் நித்திலன் அவளை எப்போது பார்த்தாலும் திட்டி தள்ளுவான் முதலில் அவனுடன் ஒரு அறையில் இருக்க போகிறோம் என்ற உடனே அவளுக்கு தோன்றிய ஒரே விஷயம் , "மாமா இன்னிக்கு என்ன திட்ட போகுதோ என்னவோ "...என்று தான் அவளுக்கு தோன்ற,
அதே போல இது நாள் வரை அவர்கள் இருவரும் ஒரே அறையில் அதுவும் இரவு நேரத்தில் இது போல இருந்தது இல்லை... அவனது தாலியை அவள் சுமந்து இருந்தாலும் ஏனோ அவளது கையில் உள்ள பால் சொம்பு அவனுடன் ஒரே அறையில் நிற்கும் போது கையில் இருந்து நழுவவது போல இருந்தது என்னவோ உண்மைதான்..
அந்த நிலையிலும் அவளுள் சந்தோஷ ஊற்று ஒன்று எழுவதை அவளால் தடுக்க இயலவில்லை... அவள் எதையோ சாதித்த வெறி ப்ரீத்தியை தோற்கடித்து விட்டோம் என்ற ஒரு வெறி மனதுக்குள் இருக்க மெல்லிய சிரிப்பு அவளது இதழ்களில் விரவிக் கிடந்தது...அதை அவன் காணாமல் மறைக்க அரும்பாடுபட்டாள் பனி மலர்..
அவனோ தலை முதல் கால் வரை அவளை அளவெடுத்தவன் கண்களுக்கு அவளது சிரிப்பும் பட்டு தொலைக்க அவனோ அவனது முகம் நொடிப்பொழுதில் கடுகடுவென மாறியது..அவளை அளவெடுத்த அவனது கண்கள் ஆத்திரத்தில் சிவந்தது... அவனைப் பொறுத்தவரை அவளுக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை அவளும் பெரியவர்களின் கட்டாயத்தால் தன்னைப் போல அவனை மணமுடித்து இருக்கிறான் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தான்..
அதனால் அவள் மேல் அவனுக்கு இந்த திருமணம் நடந்ததில் கோபம் வரவில்லை.. இந்த திருமணம் நடைபெறாமல் இருக்க அவள் எந்த முயற்சியும் அவள் எடுக்கவில்லை என்று அவள் மீது கோபம் இருந்தது..அதை இப்போது வரையும் அவன் நினைத்து கொண்டிருந்தவன் அவன் அவளருகே அழுத்தமான காலடியோசையுடன் வந்தான்..
