தூவானம் 8.2
தூவானம் : 8.2
வேகமாக அந்தப் பெட்டியில் இருந்த பாட்டிலை எடுத்தவன் இதுவரை வெளிநாட்டில் இருந்தாலும் குடி பழக்கம் இல்லாதவன் அவன் வாழ்க்கையில் எதை மாற்ற வேண்டும் என்று நினைத்தானோ அது மீண்டும் தன் வாழ்க்கையில் வந்துவிட்டதே என நொந்தவனுக்கு அதைத்தான் தாங்க இயலவில்லை எந்த குழியில் விழ கூடாது என அவன் நினைத்தானோ அந்த குழியிலேயே மீண்டும் மீண்டும் விழுவது போன்ற உணர்வை அவன் உணர, அவளை திருமணம் செய்வதில் உள்ள முக்கியமான பிரச்சனையே அவளது படிப்போ , அழகோ, பேச்சோ அதையெல்லாம் விட அந்தக் குடும்பம் தான் காரணம் முக்கியமாக அந்த குடும்பத்தினர் மீது மொத்தத்தில் அவன் வைத்துள்ள வெறுப்பு எல்லாம் தான் அவன் கண் முன்னே படம் எடுத்து ஆடிக்கொண்டு இருந்தது..
அந்த ஒரு விஷயம் தான் அவன் வாழ்க்கையில் எதை ஒதுக்க வேண்டும் என எவ்வளவு முறை நினைத்தாலும் அதுவே அவன் வாழ்க்கையில் மீண்டும் உழன்று கொண்டிருக்க இதுவரை குடிக்கு அடிமை ஆகாதவன் தன் நண்பர்களுக்காக வாங்கி வைத்த பாட்டிலை தன் வாயில் கவிழ்த்தான்..
அவனது தொண்டையிலிருந்து வயிறு வரை ஒரு எரிச்சல் அவனால் தாங்க முடியலை தலைக்கு வேறு புரை ஏறி விட தலையை தட்டி கொடுத்தான் ..
இப்படி முறைத்து கொண்டு சென்று விட்டானே என அவனை அழைக்க வந்த கயல்விழியோ வீட்டுக்குள் அவனை தேட கயல்விழியின் சத்தத்தை கேட்டதும் வேகமாக பாட்டிலை மூடி அதே இடத்தில் வைத்தவன் பாத்ரூமுக்குள் நுழைந்து முகத்தையும், வாயையும் சுத்தம் செய்து கொண்டு வெளியே வந்தான்..
இதற்குள் கயல்விழி இவனது பெயரை மூன்று நான்கு முறை ஏலம் விளித்து விட்டாள்.. அவனோ பாத்ரூமுக்குள் இருந்து வெளியே வர, " என்ன தம்பி நீ சொல்லாம போயிட்ட நீ பாட்டுக்கு இங்கே வந்து உட்கார்ந்து இருக்க ..எதுக்கு அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வந்த"...என்று கேட்க கயல்விழி கேட்க,
தன் அக்காவே என்றாலும் அவளின் இந்த நேர பேச்சு அவனுக்கு கோபத்தை கொடுக்க மேலும் அவனுள்ளே சென்ற போதை சரியாக வேலை செய்தது அதனால் பட்டென்று, " எல்லாம் உன்னால தான் என் வாழ்க்கையே முடிச்சிட்ட"... என்று கூற ,
"என்ன தம்பி சொல்ற?? என்னாலயா?? என்று அதிர்ந்து கேட்க,
" ஆமா உன்னால தான் நீ உன் புருஷனை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா நான் உன் புருஷனோட தங்கச்சியை கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன் "... என்று கூற ,
"என்னடா தம்பி இப்படி சொல்ற அதுதான் அட நம்ம குடும்ப வழக்கம் அது உனக்கு தெரியாதா?? இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையாடா??".. என்று தெரியாதது போல கேட்க,
அவனுக்கு சுர்ரென்று ஏறியது, " அது இப்போ தான் உனக்கு தெரியுமா?? எனக்கு விருப்பம் இல்லைன்னு உனக்கு முன்னாடி தெரியாது .. நீ ஏதாவது வாய் திறந்த அக்கானு கூடி பார்க்க மாட்டேன் அடிச்சுட போறேன் போ இங்கே இருந்து போயிட்டு போய் உன் புருஷன் சொல்ற மாதிரி பாத்திரம் தேச்சு கழுவிட்டு இரு"... என்று அவன் ஆத்திரத்துடன் கூற ,
அவன் திட்டியது கூட சரியாக விளங்காமல் "என்னடா சொல்ற??"... என்று அப்பாவியாய் கேட்டாள் கயல்விழி..
ஆனால் நித்திலனோ இலகுவதாக இல்லை, " உனக்கு இத்தனை நாள் எனக்கு அவளை பிடிக்காதுன்னு உனக்கு தெரியாது ?? இது எனக்கு விருப்பமில்லாத கல்யாணம் எனக்கு தெரியாது இல்லையா?? என்ன புதுசா கேட்கிற மாதிரி நடிச்சுட்டு இருக்க?? கிளம்பி போ!! என் மூஞ்சி மேலே நிக்காத "..என்று கூறவும் அவளோ செய்வதறியாது திரும்பி சென்றவள் வேகமாக கண்களாலேயே தன் தாயிடம் வீட்டுக்கு செல்லும்படி சைகை செய்ய தாயோ பின்னாடியே வந்தார்..அவரது மனம் முழுவதும் பதைப்பதைப்புடன் இருந்தது..
அவர் வரும் போது தன் மகனோ அவனது அறையில் படுக்கையில் அமர்ந்து இருக்க அதைக் கண்ட அவனது தாய் , " என்ன தம்பி இங்கே இருக்க?? அங்க போகலையா?? சமயம் ஆச்சு உனக்காக மலர் காத்து இருக்கா".. என்று ஒன்றும் தெரியாதவர் போல கேட்கவும்,
அவனுக்கு ஆத்திரம் மிகுதியானது, " அது தான் நீங்க நெனைச்சது எல்லாம் நடந்திருச்சு இல்ல அப்புறம் என்ன??"... என்று சூடாக அவன் கேட்க ,
"என்ன தம்பி சொல்ற எல்லாம் உன் நல்லதுக்கு தான்"... என்று அவர் கூறவும், " நல்லதுக்கு நல்லதுக்கு தான்னு சொல்லியே என்னோட வாழ்க்கையை சிதைக்காதீங்க மா அல்ரெடி புதை குழியில் தள்ளிட்டிங்க..இனி என்ன??? என்ன தான் உங்களுக்கு கொடுத்த வாக்குக்காக நான் இந்த திருமணம் செய்து இருந்தாலும் என்னால ஒத்துக்கவே முடியல மா இத உங்க கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை இப்படி உங்க விசுவாசத்துக்கு என்னை அவங்க கிட்ட அடமானம் வச்சிட்டீங்களே ..உங்களுக்கு என் மனசு தெரியலயா சின்ன வயசில இருந்து இந்த ஒரு விஷயம் என் வாழ்க்கையில் நடக்க கூடாதுன்னு நினைச்சு இருந்தேன் ஆனால் அதை உங்க விசுவாசத்துக்கு என மனசை கொன்னுட்டீங்க மா "..என்று அவன் வருத்தத்தோடு தாய் வருத்தப்படுவார் என்று தெரிந்தும் அவன் கூற,
"நானா என்னப்பா சொல்ற"... என்று மகன் கூறியதை கேட்டு கண்களில் பொலபொலவென நீர் வர அவர் கேட்க,
அவனும் , "நான் எதை என் வாழ்க்கையில் நடக்க கூடாது அப்படின்னு நினைச்சு இருந்தேனோ அந்த கல்யாணத்தை நீங்க எல்லாரும் சேர்ந்து நடத்தி வச்சிட்டீங்களே இப்படி பிடிக்காத கல்யாணத்தில் என்னால அவ கூட நல்லா வாழ முடியும் உனக்கு தோணுதா??? இல்ல நல்லா வாழ்ந்துட தான் போறேன்னு உங்களுக்கு நினைப்பா?? கல்யாணம் அப்படிங்கிறது மனசு சம்பந்தப்பட்டது உங்களுக்கு தெரியலையா இந்த கல்யாணத்துல என்னோட வாழ்க்கை மட்டுமில்ல அவ வாழ்க்கையும் சேர்த்து நீங்க கெடுத்து இருக்கீங்க..அப்படி என்ன குடும்பம் குடும்ப வழக்கம்ன்னு ஒரு வேளை நான் பிறக்காட்டி மலருக்கு யாரை கல்யாணம் பண்ணி வெச்சு இருப்பீங்க சொந்தக்காரன் இல்லை முறைப்பையன் இல்லைன்னு அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்காமல் இருந்து இருப்பீங்களா?? யாருக்கும நிரூபிக்க வேண்டி இந்த கல்யாணம் நடத்துனீங்க??"...என்று கேட்க அவனது ஒவ்வொரு கேள்விக்கும் விடை இல்லாத சிவகாமியும் அதிர்ந்து அறையின் மூலையில் அமர்ந்தார்...
அப்படியே அமர்ந்தவர் மகனை அதிர்ந்து பார்த்து கொண்டே சரிய அவரது முகத்தை கோபத்துடன் பார்த்தவனுக்கு தாய் நிலை இல்லாமல் கீழே சரியவும் இவனுக்கு அடித்த போதை கூட இறங்கிப் போனது சிவகாமி நொடிப்பொழுதில் மயக்கமாகி இருந்தார் ..
அவனோ பதறி , "அம்மா அம்மா "...என்று கத்தி வேகமாக தண்ணீரை எடுத்து தெளித்து அவரை அமர வைக்க அவரோ எழுந்து அமர்ந்தார்...
நொடியில் அவருக்கு ஏகத்துக்கும் ரத்த அழுத்தம் கூடியிருந்தது... பின் அவனே தன்னை நிலைநிறுத்தி சுயமாக தன் மனதை சமாதானம் செய்து கொண்டவன், " ஒன்னும் கவலை படாதீங்க.. உங்களுக்கு ஒன்னுமில்ல".. என்று தாயின் உடல்நிலை கருதி அவருக்கு அவரது ரத்த அழுத்த மாத்திரையை கொடுத்து கொண்டே சமாதானம் சொன்னான்..
அவரும் சிறிது நேரத்தில் சரியாக இருந்தும் தாய் அவனை பார்த்து, " நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னமோ சொன்னியே??"... என்று தாய் வினவும்
"நான் ஒன்னும் சொல்லல நீங்க சமாதானத்தோடு இருங்க"... என்று தாயிடம் பேசியவன் அறையில் ஒரு பகுதியில் போய் தன் தலையை தானே அடித்துக்கொண்டான்...
அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை எதிர்த்து அவர்களிடம் பேச தைரியம் இல்லாமல் இல்லை ஆனால் பாசம் அவனை கட்டிப் போட்டு இருக்க அவனால் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தான்...
அதற்குள் செந்தாமரை பின்னாலேயே ஓடி வந்தார், " அண்ணி அண்ணி இங்கே என்ன பண்றீங்க அங்க எல்லாம் தயார் ஆயிடுச்சு நீங்க பையன் கூட பேசிட்டு இருக்கீங்களா??"... என்று வினவ அவரோ எழ முடியாமல் எழுந்தார்...
அங்க என்ன தயாராகி கொண்டிருக்கிறது என அறிய பச்சைக்குழந்தை அல்லவே சிவகாமி தன் உடலை தூக்க முடியாமல் தூக்கி எழ முயல நித்திலனோ வேகமாக ஓடி வந்து , "அம்மாக்கு உடம்பு சரியில்லை.. ".. என்று கூற
அவரோ , "பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலே உங்களுக்கு முடியலனா அவங்க தூங்கட்டும் அத்தையை இங்கே படுக்க சொல்றேன் நீ கிளம்பு சமயம் ஆச்சு ".. என்று அவனை முதல் இரவு அறைக்கு செல்ல கூற அவனுக்கோ அவமானமாகவும் கூடவே எரிச்சலாக இருக்க மகனது எண்ணத்தை சரியாக கணித்த தாய், " எதையும் யோசிக்காமல் போ பா " என்க,
அவனோ தாயின் முகத்தை உணர்ச்சிகள் உடைத்த ஜடத்தை போல பார்த்தான்... ஆனால் அங்கே பனி மலரோ மிக சந்தோசமாக எதையோ சாதித்து விட்ட வெற்றி களிப்பில் தயாராகி கொண்டிருந்தாள்...
தூவானம் தூறும்....
