தூவானம் 8.1
தூவானம் : 8.1
திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் ஒரு முக்கியமான வேலை இருப்பதாக வெளியே செல்ல நித்திலன் முனைய அவரது மொத்த குடும்பமே, " என்ன கல்யாணம் முடிஞ்சதும் கிளம்புறீங்க?? என்ன வேலையா இருந்தா ??அப்புறம் பார்த்துக்கலாம் "...என்று செந்தாமரை கூறி விட்டு அடுக்களைக்குள் நுழைந்து கொண்டார்..
அதை கேட்ட அவனுள் ஆத்திரம் சுழன்று கொண்டிருந்தது அவனுக்கு எப்படியாவது தன்னுள் இருக்கும் அழுத்தத்தை வெளியேற்ற வேண்டுமென்று எண்ணம் இருக்க அதற்கும் தடை விதித்தனர் குடும்பத்தினர்..
அவனோ யார் கேட்டாலும் பதிலே கூறாமல் இருக்க, "எங்க போற சொந்தக்காரங்க வந்து இருக்காங்க??"... என்று சிவகாமி கேட்கவும் தாயை பார்த்து ஒரு முறை முறைத்தவன், " உங்க ஆசை நடந்துடுச்சுல இனியும் என்ன?? இங்கே இருக்கிறவங்க எல்லோருடைய காலையும் கழுவனுமா??.. எனக்கு வெளியில போகனும்னு சொன்னேன் இல்ல அதுக்கும் கூட உங்க கிட்ட பர்மிஷன் கேட்கணுமா??"... என்று தாயிடம் கூற சிவகாமியோ மகனது பதிலில் அதிர்ந்து நிற்க,
பின்னாலேயே வந்த கயல்விழியோ, " அது தான் அம்மா சொல்றாங்களே ".. என்று கூற , அதை கேட்ட அவனோ, "சொன்னா நீ கேளு நான் ஏன் கேட்கணும் ??"...என்று எப்பொழுதும் அடங்கிப் போனவன் இப்பொழுது எதிர்த்து பேசவும் புரியாமல் இருவரும் விழித்தனர்.
இவர்களின் சம்பாஷனை எல்லாம் அவளது அறையில் அமர்ந்து கொண்டு கவனித்து வந்த மலருக்கு, " இப்ப மாமாக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்லி இப்படி கோபப் படுறாங்க எல்லாம் அந்த சிறுக்கியை கல்யாணம் பண்ணலன்னு சொல்லி வருத்தமா இருக்கும் " என்று நினைக்க, அதற்குள் பாலும் பழமும் கொடுக்க வேண்டுமென மணமக்களை அழைத்தனர்...
இவன் வெளியேறலாம் என நினைக்கும் முன்பே அதற்கு தடை சொல்ல அவனை அவள் அருகே அழைத்து வந்து நிறுத்தினார் அங்கே என்ன விஷயம் சென்று கொண்டிருக்கிறது என அறியாத ஒரு முதியவர் ..
அவனும் அவரது வயதுக்கு கட்டுப்பட்டு அடங்கி அவள் அருகே அமர அவளோ அவனை மெல்ல தன் தலையை தூக்கி ஒரு பார்வை பார்த்தாள் அவனோ திரும்பி அவளை ஒரு முறை முறைக்க வேகமாக தலையை கவிழ்த்துக் கொண்டாள்...
தலை கவிழ்த்தவளோ, " மாமா ரொம்ப சூடா இருப்பீங்க போல இப்போ நடந்தது நடந்துடுச்சு..கல்யாணம் தானே நடந்துச்சு அதுக்கு எதுக்கு இப்போ இப்படி மூஞ்சியை தூக்கி வைச்சி இருக்கீங்க..என்ன ஆனாலும் இனி நான் தான் உங்க பொண்டாட்டி"... என்று மீண்டும் மீண்டும் தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்...
அங்கே அவனோ பிரித்தியை நினைத்து கொண்டு இருந்தான்.. திருமணம் முடிந்த கையோடு அவனது போனை எடுத்துப் பார்க்க அதில் ப்ரீத்தியின் செய்தி அவனை வெகுவாக வாட்டியது.. ஆம் அதில், "என் இனிய அன்பனே.. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் இனி நான் உன் வாழ்க்கையில் வருவது சரியல்ல..நான் உனக்கு தோழியாகவே இருந்திருக்கலாம் என தோன்றுகிறது நான் தோழி என்ற படியில் இருந்து காதல் என்ற படியில் நுழைந்துவிட்டேன் ...மீண்டும் நான் ஏறிய படிகளில் இருந்து நானே இறங்கி கொள்கிறேன்...இனி நீயும் நானும் சந்தித்துக் கொள்வது சரியல்ல உன் மனைவியுடன் ஒரு நல்ல வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன் பழைய விஷயங்களை எதுவாக இருந்தாலும் அதை நினைத்துக்கொண்டு உனது அழகான வாழ்க்கையை கெடுத்து விடாதே இனி நீயும் நானும் சந்தித்துக் கொள்ள மாட்டோம் அதற்க்காக நான் வேலையை விட்டு செல்கிறேன் அமெரிக்காவின் வடக்கு மாகாணத்தில் எனக்கு ஒரு புதிய வேலை கிடைத்துள்ளது அங்கு செல்கிறேன்..இந்த செய்தியை நீ பார்க்கும் போது நான் அங்கு பயணப்பட்டு கொண்டிருப்பேன் "... என்று கூறியிருந்தாள்..
அந்த செய்தியை பார்த்தது முதல் நித்திலனுக்கு தாங்கொண்ணா வலி எழுந்தது... அவள் எவ்வளவு தான் அந்த குறுஞ்செய்தியில் தன் மனதை மறைக்க முயன்று இருந்தாலும் ஒரு சில இடங்களில் அவளது மனம் வெளிப்பட்டதை நித்திலன் வெகுவாக உணர்ந்திருந்தான்... இப்படி அவளையும் கூட நான் கஷ்டப்படுத்தி விட்டேன் என நொந்தவனுக்கு இதற்கு எல்லாம் காரணமான மலர் மீது கோபம் எழ தன் அழுத்தத்தையும் அவள் மீது இறக்கி வைக்க முனைந்தான்..
அதற்குள் மலரை சுற்றி ஆட்கள் கூடி விட அவனால் அவளிடம் பாய முடியவில்லை ஆனால் தக்க தருணம் நோக்கி காத்திருக்கிறான் கல்யாணம் முடிந்து அனைவரும் வீட்டிற்கு வந்த போது அவள் அவனிடம் தனியாக சிக்காமல் இருக்க மெல்ல வெளியே செல்ல முனைந்தவனை ஒரு பெரியவர் அவளருகே அமர வைத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒவ்வொருவராய் பாலும் பழமும் கொடுக்க அதை ரசித்து உண்டு கொண்டிருந்தாள் மலர் ...இவனுக்கோ இங்கு வெறுப்பு சூழ்ந்து கொண்டிருந்தது எப்பொழுது தான் வெடிக்கலாம் என்ற நிலையில் இருந்தான் ...
ஒரு வழியாக மாலை ஆனதும் யாரிடமும் எதுவும் சொல்லாமல் வெளியே சென்று விட்டான்... அனைவரும்," அவன் எங்கே அவன் எங்கே"... என முத்தரசு ஒரு பக்கம் மற்றும் செந்தாமரை ஒரு பக்கம் பாண்டியம்மா ஒரு பக்கம் என ஆளாளுக்கு தேட சிவகாமி மற்றும் கயலும் தலையை பிடித்துக் கொள்ள அவர்கள் இருவருக்கும் அவன் எங்கே சென்றிருக்கிறான் என்று தெரியவில்லை போனில் அழைத்தாலும் அழைப்பை அவன் எடுக்கவில்லை.. அவர்கள் இருவரும் கையை பிசைந்து கொண்டு நிற்க கிட்டத்தட்ட 8 மணி வாக்கில் வீட்டுக்குள் வந்தான் நித்திலன்... அதற்குள் வீடு பெரும் அதிர்வலைகளை சுமந்து கொண்டு இருந்தது..
"எங்க போயிட்ட இத்தனை நேரமா???"... என்று முத்தரசு கேட்க,
அவனோ அவரது முகத்தை கூட பார்க்காமல், " வெளியே போயிட்டேன்"... என்று மட்டும் கூறி தன் தாயை தேட அதைக்கண்ட பாண்டி அம்மாவோ மலரை தான் தேடுகிறான் என நினைத்து, " உன் பொண்டாட்டி தயராகிட்டு இருக்கா "... என்று கூற அதை கேட்ட அவனுக்கு எரிச்சல் ஏகத்துக்கும் ஏறியிருந்தது.
"கல்யாணமாகிடுச்சுன்னு ஒரு பொறுப்பு வேணாமா இப்படி தான் சுத்திட்டு வரதா??"... என்று செந்தாமரை இவர்களின் அறையை தயார் செய்து கொண்டே ஒரு குத்தல் வாக்கை கொடுத்து கொண்டு செல்ல கூடவே இளங்கோவும் கயல்விழியை முறைத்து , "கொஞ்சமாவது பொறுப்பு வேணாம் உன் தம்பிக்கு "...என்று அவன் பங்குக்கும் சாடி கொண்டு சென்றான் கயல்விழியை கையை பிசைந்து கொண்டு நிற்க சிவகாமியும் ஒரு ஓரத்தில் தரையில் அமர்ந்திருந்தார் ..
இந்த காட்சியை எல்லாம் காண அவனுக்கு எங்கே கொண்டு போய் முட்டிக் கொள்ளலாம் என இருக்க இனி இவர்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை என நினைத்த நித்திலன் அவனது வீட்டுக்கு சென்றுவிட்டான்..
யாருக்கும் எந்த பதிலும் அளிக்கவில்லை அதை மிகச் சரியாக கவனித்த இளங்கோ தன் மனைவியிடம் , "என்ன உன் தம்பி மாப்பிள திமிரை காட்டுறானா என்கிட்ட?? பெரியவங்க கேக்கிறாங்க பேசாமல் போறான்?? என் தங்கச்சி கண்ணுல மட்டும் தண்ணி வந்துச்சு அவ வருத்தப்பட்டா நீ தொலைஞ்ச உன் தம்பி கிட்ட இத முன்னாடியே சொல்லி வை.. அவ இஷ்டப்படி தான் அவ இருப்பா.. அவளுக்கு எது பிடிச்சி இருக்கோ அதை செய்வா இதுக்கெல்லாம் தடை சொல்லிட்டு இருந்தான்னு வை உன் தம்பி முடிஞ்சான் "...என்று தங்கையின் அண்ணனாய் இளங்கோ மிரட்ட கயல்விழியோ, "சரிங்க நான் சொல்லிடறேன் "...என்று கூறி ஒதுங்கிக் கொண்டாள்..
வீட்டுக்கு வந்தவன் தன் கையில் உள்ள விடுதலை பத்திரத்தை பார்த்து ஏதேதோ யோசித்து தன்னை குழப்பி கொள்ள கல்லூரியில் படித்த ஒரு சில நண்பர்கள் அவனிடம் வெளிநாட்டு சரக்கு வேண்டுமென கேட்டிருக்க அவர்களுக்காக அவன் வாங்கிக் கொண்டு வந்த சரக்கு இனியும் அவனது பெட்டியில் படுத்து உறங்கிக் கொண்டிருக்க அவனுக்கோ உள்ளே ஆத்திரம் கொதித்துக் கொண்டிருந்தது..அதற்கு நிவாரணியாக இந்த சரக்கு செயல்படும் என கருதினான்..
