தூவானம் 7.2
தூவானம் : 7.2
அனைவரும் அவரை முறைக்க கூடவே நித்திலனும் சேர்ந்து தன் தாயை முறைத்தான் எதற்காக தேவையில்லாத வேலை பார்த்தாய் என முறைக்க கயல்விழியோ அந்த இடத்தில் இருந்தால் பிரச்சனை வரும் என அகல முயல மலரோ, " நல்லா மாட்டிட்டு முழிங்க உங்க எல்லோருக்கும் என்னை விட அவ முக்கியமா போய்ட்டாளா ..அவளை என் கூட சக்காளத்தியா என்கூட தங்க வைக்கணுமா?? "...என்று மனதார தன் அத்தை குடும்பத்தை வைதாள்..
ப்ரீத்தியும் அங்கே நடக்கும் கூத்தை எல்லாம் பார்த்து ஏதோ யோசித்து கொண்டிருக்க," என்ன யோசிக்கிறீங்க ப்ரீத்தி அக்கா வாங்க" என்று அழைக்க ,
செந்தாமரையோ ஜாடையாகவும் தன் கணவனிடம் போட்டு கொடுக்கும் விதத்தில் , " இந்த காலத்து புள்ளைங்க பாருங்க அடுத்தவன் வீடு அதுவும் ஆம்பிளை வீட்டுக்கு வந்து தங்கறாங்க..நாம எல்லாம் நம்ம மலரை அடுத்த வீட்டு படியை மிதிக்க விட்டு இருப்போமா அதுவும் ஒரு ஆம்பிளை கூட என்ன தான் சிநேகிதம்ன்னு சொன்னாலும் இப்படியா அண்ணி இப்போ எல்லாம் ரொம்ப மாறிட்டாங்க போல அதான் இதை எல்லாம் அவங்க கண்டுக்கல நமக்கு தான் அந்த இளவு எல்லாம் வரல ".. என்று அவர் முத்தரசுவிடம் போட்டு கொடுக்க அவரோ அதை கேட்டு கடுகடுவென முறைத்தார்..
அதற்கு பாண்டி அம்மாவோ, " உன் மவ இந்த ஆட்டையாம் பாளையத்தை விட்டு வெளியே போனது இல்லை அந்த அளவுக்கு உன் மவளுக்கு கூர் இல்லை..என் பேரன் அப்படியா வெளிநாட்டில் இருக்கான்..அந்த பொண்ணும் நல்லா படிச்சு வெளிநாட்டில் வேலை செய்யுது..அவங்க சிநேகிதமா பழகுறாங்க..அந்த அளவுக்கு அந்த பொண்ணு வீட்டுல என் பேரனை மதிக்கிறாங்க..உன் மவ நாலு பாடத்தில பெயிலு...ஒண்ணுக்கும் கையாலாகாது ".. என்று ஒரு போடு போட, அதை கேட்ட மலர் முதல் மலர் அம்மா வரை கடுப்பின் உச்சத்தில் இருந்தனர்..
இதை சும்மா விட கூடாது என நினைத்த மலர், "அக்கா வாங்க பாட்டி அப்படி தான் ஏதாவது பேசுவாங்க".. என்று அவளை அழைக்க
பிரீத்தியோ , "ஒரு போன் கால் பேசனும் நான் இப்போ வரேன்"... என்று கூறிவிட்டு வெளியே சென்றவள் சிறிது தூரம் நடக்க அவளுக்கு ஏதோ யோசனை தோன்றியது..
நாம் இங்கு இருந்தால் சரிவராது என நினைத்தாள்.. அவள் மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்க என்ன விஷயம் என்றாலும் அவன் முடிவு செய்யட்டும் நான் இங்கு இருந்தால் ஏதாவது ஏடாகூடமாக நடந்து விடும் என நினைத்து ப்ரீத்தி மீண்டும் மலரின் வீட்டுக்குள் வந்தவள் , "நான் கிளம்பனும் என்னால் இங்கே இன்னிக்கு ஸ்டே பண்ண முடியாது எனக்கு எங்க வீட்டுக்கு போகணும்"... என்று அவள் பொதுவாக நித்திலனை பார்த்து கூற,
அவள் எதற்காக இப்படி கூறுகிறாள் என்பதை புரிந்து கொண்ட நித்திலன் மட்டும் தான், " ஃபங்ஷன் முடிச்சிட்டு போலாமே".. என்று கூற , அவளோ , " இல்லை எனக்கு போகனும் "... என்று கூற அதை கேட்ட மீதமுள்ள ஒரு எல்லாருக்கும் அப்பொழுது தான் மூச்சே வந்தது என கூறலாம் ..மலரோ, " இருங்க அக்கா மெதுவா போகலாம் " என்க,
"இல்ல பாட்டி என்ன பாக்கணும்னு சொன்னாங்களாம் அம்மா கூப்பிட்டாங்க எனக்கு போகணும் "... என்று கூறியவள் ஏதேதோ சப்பை கட்டு கட்டிக் கொண்டு பிரீத்தி அங்கிருந்து வெளியேறி விட்டாள்..
அவளுக்கு அங்கேயே தங்கி இருக்க முடியவில்லை அது ஏன் என்று தெரியவில்லை தன் மனதை ஓபனாக உடைக்க தைரியம் கொண்ட ப்ரீத்திக்கு ஏனோ மலரின் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை மொத்த குடும்பமும் அவளை எதிரி போல பார்வையிட அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விலகிக் கொண்டாள்..
அவள் வெளியேறியதும் அன்று இரவே மிகப்பெரிய குத்தாட்டம் போட்டாள் பனிமலர்.. அவளுக்கு மிக சந்தோஷமாக இருந்தது..எங்கே அடித்தால் எங்கே வீழ்வார் என தெரிந்து அடித்தாள் அவள்..." மாமா போயும் போயும் உன்ன விட ஆறு மாசம் பெரிய பொண்ணு காதலிக்கிறேன்னு சொல்ற உனக்கு வெட்கமா இல்லை உனக்கு நான் தான்.. மாமா வேற யாரும் கிடையாது மாமா"... என்று திரும்பத் திரும்ப அந்த வார்த்தையை கூறி தன் மனதை அதில் ஒரு நிலைப்படுத்த முயன்றாள் மலர்...ஆம் பிரித்தீ நித்திலனை விட ஆறு மாதம் பெரிய பெண்ணாக இருக்க அதை எப்படியோ தன் அத்தை வாயில் இருந்து தெரிந்து கொண்டவளுக்கு இவர்களின் காதல் கண்றாவியை ஏற்று கொள்ள முடியவில்லை...
இதில் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க நித்திலனுக்கு நிலைமை தன் கையை விட்டு போவது போல இருந்தது ..
மறுநாள் மொட்டை அடிக்க தயாராகிக் கொண்டிருந்தான் குடும்பத்தை எல்லாம் பார்த்து முறைத்துக் கொண்டே நின்ற நித்திலன் கண்களுக்கு பனிமலர் சரியாக பட்டாள்... எப்பொழுதும் பட்டு பாவாடை தாவணியில் இருக்கும் அவள் இன்று சாரி உடுத்து பெரிய பெண் போல காட்சி அளித்தாள் அவளைப் பார்ப்பதற்கு ஏதோ ஒரு பெரிய பெண் போல அவனுக்கு தோன்றியது..
19 வயது பெண்ணா இது என்பது போல அவன் ஒரு நொடி பார்த்தாலும் மறுநொடி இறுகிப்போய் நின்றவன் அவளைப் பார்த்து கண் அசைக்க நித்திலனை பார்த்து கொண்டே இருந்தாலும் அவள் பார்க்காதது போல நின்றாள்...
குடும்பத்தார் சூழ்ந்து நிற்க அதிலும் விழா தொடங்க அவனுக்கு எப்படியாவது அவளிடம் பேசியாக வேண்டும் என்ற முனைப்போடு அவன் இருக்க அவளோ அவனுக்கு சிக்காமல் நவீனை தூக்கிக் கொண்டு சுற்ற சிறிது நேரத்தில் விழா தொடங்கியது..
" வா வந்து உட்கார்".. என்று முத்தரசன் அழைக்க அவன் மடியில் நவீனை அமரவைத்து மொட்டை அடித்தனர்.. விழா இனிதே முடிய விருந்தினர் அனைவருக்கும் அங்கேயே உணவு பரிமாறப்பட்டது நவீன் தொடர்ந்து அழுகிறான் என பனிமலர் அவளை அவனை தூக்கிக்கொண்டு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த போது உணவு பரிமாறிக் கொண்டிருந்த நித்திலன் கண்ணில் அந்த காட்சி பட அவளை தேடி சென்றான்..
குழந்தையோ அழுது கொண்டிருக்க அவளோ அவன் அவள் அருகில் செல்லும் போது குழந்தைக்கு விளையாட்டு காட்டி கொண்டிருந்தாள்..., " இங்க தா"... என்று குழந்தையை வாங்கியவன் குழந்தையை முதுகில் போட்டு தட்டி கொடுத்து கொண்டே, அவளைப் பார்த்து , "இதோ பார் எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கலன்னு உனக்கு நல்லாவே தெரியும் எனக்கு ப்ரீத்தியை பிடிச்சிருக்கு இந்த கல்யாணத்துனால எனக்கு எந்த சந்தோஷமும் கிடைக்கப்போவதில்லை அதனால இந்த கல்யாணத்தை நிறுத்த வழியை பாரு "...என்று மீண்டும் அவளிடம் கூற,
அவளோ அவன் கூறியதை கேட்டு உள்ளுக்குள் கடுப்பானவள், " நீங்களே சொல்ல வேண்டியதானே மாமா எதுக்கு என்கிட்ட எப்போ பார்த்தாலும் இதையே சொல்லிட்டு இருக்கீங்க??".. என்று கேட்க ,
அவனோ, "என்னால இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாமல் இல்ல நான் எங்க அம்மாவுக்கு வாக்கு கொடுத்து இருக்கேன்.. அந்த வாக்கை காப்பாற்ற எனக்கு வேற வழி தெரியல...நானா இந்த கல்யாணத்தை நிறுத்த மாட்டேன்..அதுனால நீயே நிறுத்து ".. என்று கூற ,
அவளும் , "நீங்க இப்போவும் அத்தைக்கு கொடுத்த வாக்கை காப்பற்றலையே மாமா ..இப்பவும் ஒரு வகையில நீங்க என்ன வைச்சு காரியம் சாதிக்க தானே பாக்குறீங்க அதுக்கு பேர் என்ன மாமா??".. என்று அவள் கேட்க,
அதற்கு அவனிடம் பதில் இல்லை பதில் இல்ல அவனது முகத்தை பார்த்துக்கொண்டே நின்றவள், " உங்களுக்கு ஏன் என்னை பிடிக்கலயா?? இல்லை இந்த கல்யாணம் பிடிக்கலையா??"... என்று வினவ, அவனோ, " உனக்கும் எனக்கும் ஆன இந்த கல்யாணம் தான் எனக்கு பிடிக்கல "...என்று கூற
"மாமா ஆம்பள உங்களாலே ஒன்னும் பண்ண முடியல என்னால என்ன பண்ண முடியும் மாமா நீங்க பேசாம தைரியமா எங்க அப்பா கிட்டே போய் சொல்லு எங்கப்பா கல்யாணத்தை நிறுத்திடுவாரு "... என்று அவன் எங்கே அடித்தாள் அவன் வீழ்வான் என அறிந்து மிக சரியாக அவள் கூற,
அதைக்கேட்ட அவனும் அவளைப் பார்த்து முறைத்து , "அது தெரிஞ்சா போய் கேட்க மாட்டானா முடியலன்னு அதான் உன்கிட்ட கேக்கறேன்..அதான் முடியலன்னு சொல்லிட்டில டி மூடிட்டு போடி என் முகத்துல முழிக்காத "...என்று அதுக்கும் அவளை திட்டினாள் ..
அவளோ மனதுக்குள், " உனக்கு அந்த பயம் வேற இருக்கா இரு வச்சிக்கிறேன் "...என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு முகத்தை பாவமாக வைக்க அவனோ யோசித்து தள்ளி கொண்டிருந்தான்...ஆனால் அவனுக்கு விடை தான் கிடைக்கவில்லை ப்ரீத்தி அவளது காதலை கூறியிருக்கா விடினும் கூட அவன் மனம் இத்தனை பதைபதைத்து இருக்கமோ என்னவோ ஆனால் இப்போது அவனது மனம் பதைப்பதைத்து கொண்டிருந்தது ..
இதோ ஒரு வாரம் கடந்த பின்னும் தன்னருகே புத்தம் புது மலராய் நாணம் என்னும் பூவை சூடி அமர்ந்திருக்கும் பனி மலரை பார்க்கப்பார்க்க ஆத்திரம் மின்ன அவனுடைய அழுத்தத்தை யாரிடம் வெளிப்படுத்துவது என்று தெரியாமல் குடும்பத்தார் தொல்லையில் அவனுக்கு என்று ஒரு மனம் உள்ளதை உணராத உறவுகளுக்கு இடையில் இதோ அடுத்த இரு நொடியில் தன் மனைவியாக போகும் அவளுக்கும் அவனது மனம் புரியாமல் போக,
அவனுக்கு , தான் விரும்பாதது நடந்து கொண்டிருந்தாலும் மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களே என தன் மனதை அடக்கி அவனுக்கு வாழ்நாளில் எந்த ஒரு செயலை அவன் செய்யக்கூடாது என எண்ணி இருந்தானோ அந்த செயலை செய்ய தயாரானான் நித்திலன்..
ஆம் , "கெட்டி மேளம் கெட்டி மேளம்"... என ஐயர் முழங்க சொந்த பந்தங்கள் மகிழ்ச்சியாக நிற்க குடும்பத்தார் அனைவரும் சிரித்த முகத்தோடு நிற்க நித்திலன் மட்டும் கடுகடுவென பணிமலர் என் கழுத்தில் பொன்மஞ்சள் தாலியை பூட்டினான்...
ஊரார் முன்னிலையில் சுற்றத்தார் முன்னிலையில் அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான் அவன் மனதிலோ அவளை கடுகளவும் மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.... நித்திலன் அவனது மனதையோ அவனது உணர்வையோ மதிக்காத பணிமலரோ தன் எண்ணம் நிறைவேறியதை எண்ணி மேலும் மேலும் சந்தோஷத்த்தில் முத்து எடுத்து கொண்டிருந்தாள்...
தூவானம் தூறும்...
