Share:
Notifications
Clear all

தூவானம் 6.2

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  


தூவானம் 6.2

பிரீத்திக்கு நித்திலனை எந்த அளவுக்கு பிடிக்கும் என்றால் தன்னை பெற்ற அம்மா ,அப்பாவை கூட ஐந்து வருடங்களாக பார்க்க செல்லாமல் கடந்த ஒரு வாரமாக நித்திலனை காண முடியாமல் தவித்தவள் அவனை முதலில் கண்டு விட்டு தன் வீட்டுக்கு செல்லலாம் என அவள் முடிவெடுத்து அவனுடன் பயணம் செய்து கொண்டிருக்க, அதிலும் அவள் இந்த காலத்துப் பெண் அவளுக்குள்ளும் சங்கடங்கள் இருந்தாலும் அதை கட்டுப்படுத்தும் ஆற்றலையும் அந்த இறைவன் அவளுக்கு கொடுத்திருக்கிறான்...

அதிலும் அவள் மனதில் நினைப்பதையும் பிறர் அறியாமல் மறைக்கும் வல்லமையை இறைவன் கொடுத்து இருந்தாலும் இந்த விஷயத்தை மட்டும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை என அவளுக்கு தெளிவாக புரிய, என்ன செய்யலாம் என அவள் யோசித்து கொண்டிருந்தாள்...

அவனோ அது புரியாமல், " நீ சொல்றதெல்லாம் சரி தான் ப்ரீத்தி ஆனா நான் உன்னை மாதிரி வீட்டுக்கு ஒரு பிள்ளை இல்லை அதுமட்டுமில்லாம என்ன படிக்க வச்சது அவங்க... எனக்கு எல்லாமே பண்ணினதும் அவங்க தான் அவங்கள ஒரு லெவலுக்கு மேல என்னால எதிர்த்து நிற்க முடியாது காரணம் என்னோட அக்கா...நான் ஏதாவது செய்யறதுனால என்னோட அக்காவோட வாழ்க்கையும் பாதிக்கும் தெரியுமா ??"...இன்று கூற

"நீ சொல்றதெல்லாம் உண்மை தான் நான் அதை மறுக்கல ஆனால் எவ்வளவு நாள் தான் இதை சொல்லி இப்படியே இருக்கப் போற உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு அத நீ யோசிக்கல "...என்று மீண்டும் ஒரு குத்தல் வார்த்தை பிரீத்தியிடம் இருந்து வந்ததோ ???

அவளுக்கு ஆத்திரம் அவள் அவனிடம் காதல் என்ற மொழியை கூறவில்லை என்றாலும் காதலன் போல் தான் அவனிடம் நடந்து கொண்டாள்.. அதற்காக எல்லை எல்லாம் மீறவில்லை அவள் எல்லை மீற நினைத்தாலும் நித்திலன் அதற்கு தயாராக இருந்ததில்லை என்ன தான் அவன் கோட்டு சூட்டு போட்டாலும் அவன் ஒரு கிராமத்தான் தான் அதிலிருந்து எள்ளளவும் அவன் மாற மாட்டான்..

அப்படி இருக்க ப்ரீத்தியும் விடாமல் , "உனக்கு பிடிக்காத விஷயத்தை நீ செய்யணும்னு அவசியம் இல்ல உன்னால சொல்ல முடியும்னா சொல்லி விடு ..இது ஒன்னும் சினிமா கிடையாது பிடிக்காத ஒரு திருமணத்தை பண்ணிட்டு ஒரு பிடிக்காத வாழ்க்கை வாழ ??"...என்று அவள் கூற ,

அதைக் கேட்ட அவனோ நடந்ததை எல்லாம் கூறி , "நான் சொல்லியிருக்கேன் அவகிட்ட ஆனால் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை"... என்று கூற அதைக் கேட்ட ப்ரீத்தியும் , "ஒரு வேளை அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமோ என்னவோ ??"..என மிகச்சரியாக ப்ரீத்தி கணிக்க

அதைக்கேட்ட நித்திலன் வெகுவாக மறுத்தான் , "சான்சே இல்ல ப்ரீத்தி அவளுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் தான்...அவளைக் கண்டாலே எனக்கு பிடிக்காது அவளுக்கும் என்னை பிடிக்காது நான் இருக்கிற பக்கம் கூட வரமாட்டா இதுல அவளுக்கு என் மேல விருப்பமா சான்ஸே இல்லை அது மட்டும் இல்லாம நான் சின்ன வயசுல இருந்தே அவகிட்ட சொல்லி இருக்கேன் இந்த மாதிரி எல்லாம் உன் மனசுல வர கூடாதுன்னு சொல்லிட்டென் மேலும் வீட்ல யார் என்ன சொன்னாலும் இந்த கல்யாணம் நடக்காதுன்னு நான் சொல்லி இருக்கேன் "... என்று கூற

"அப்போ கல்யாணத்துல உனக்கும் அவளுக்கும் விருப்பம் இல்லையா??"... என்று தனக்கு தெரிய வேண்டிய பதிலை தெளிவாக ப்ரீத்தி கேட்டாள்...

அதற்கு அவனும், " சான்ஸே இல்லை"... என்று கூற ,"அப்போ ரெண்டு பேரும் சேர்ந்து உங்க வீட்டில பேச வேண்டியது தானே இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல அப்படின்னு எதுக்காக இந்த வெட்டி கல்யாணம் "....என்று கேட்க

"எங்க வீட்டப் பத்தி தான் உனக்கு தெரியுமே சொந்ததுக்குள்ள தான் கல்யாணம் பண்ணிட்டாங்க... என் அக்கா மலர் அண்ணாவை தான் கல்யாணம் பண்ணி இருக்கா... எங்க அப்பா ,என் பாட்டி அக்கா தம்பி அதனால எங்க அம்மாவை எங்கப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு ...இப்படி எல்லாருமே சொந்தத்துல தான் இப்போ அடுத்து நாங்க ரெண்டு பேரும் தான் இத எப்படி மாற்றுவதுன்னு எனக்கு தெரியல நான் அவகிட்ட இதெல்லாம் நடக்காதுன்னு அவகிட்ட சொல்லி இருந்தேன் அவளுக்கும் இதில் விருப்பமில்லை ...என்று தான் நினைக்கிறேன்.. ஆனா பெரியவங்க இப்படி முடிவு பண்ணி இருக்காங்க".... என்று அவன் தலையை பிடித்துக் கொள்ளும் அளவுக்கு நித்திலன் கூற, " அப்போ நீ உன் அம்மா கிட்ட பேச வேண்டியதுதானே "...என்று ப்ரீத்தி கேட்க

"என்னோட அம்மா தான் இந்த கல்யாணம் நடக்க ரொம்ப முனைப்பாய் இருக்காங்க... அவங்களுக்கு அவங்க பொண்ணோட வாழ்க்கை ரொம்ப முக்கியம் அதற்கு நான் பலிகடா மேலும் நான் இந்த கல்யாணத்தை நிறுத்த மாட்டேன்னு சொல்லி இருக்கேன் அவங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கேன்"... என்று கூற

அதை கேட்ட பிரீத்தியோ உன் வாக்கில் தீயை வைக்க யாரு டா உன்னை இப்படி எல்லாம் வாக்கு கொடுக்க சொன்னது என மனதுக்குள் நொந்தவள், "இல்லாட்டி நான் பேசுறேன்"... என்று ப்ரீத்தி கூற

அதற்கும் அவனோ, " என்னால இந்த கல்யாணம் நிற்காது என்று சொல்லி இருக்கேன் அப்போ என் மூலமா என் உறவாக நீயும் கல்யாணத்தை நிறுத்த பேசினா அது பெரிய பூகம்பம் வெடிக்கும் இதுக்கெல்லாம் ஒரே ஆளு மலர்தான் அவ பேசினா காரியம் எடுபடும் "...என்று கூற

"அதுக்கு அவ கிட்ட சொல்லி நிறுத்த வேண்டியது தானே"...என்று கூற,

"அதுக்குதான் நான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் ப்ரீத்தி"... என்று கூறிக் கொண்டிருக்கும் போதே ப்ரீத்தி அவனது கண்களை பார்த்து," எனக்கு உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்".. என்க,

"சொல்லு பிரீத்தி என்ன விஷயம்"... என்று வினவினான் நித்திலன்...

"நான் உன்ன காதலிக்கிறேன் என்று பட்டென்று போட்டு உடைத்தாள் ப்ரீத்தி"... அவனோ அதிர்ந்து பார்க்க, " என்னடா எனக்கு கல்யாணம் நான் சொல்லி இவ்வளவு பிரச்சினைகளில் நான் இருக்கேன் இதில் இவ எல்லாம் தெரிஞ்சும் காதலை சொல்றாலேன்னு நினைச்சுட்டியா??"... என்று அவனை பார்த்து பிரீத்தி கேட்க,

"இதுக்கு என்ன ரிப்ளை செய்யறதுன்னு தெரியல பிரீத்தி..."..என்க

அதற்கு அவளோ, "நான் இப்போ சொல்லாட்டி எப்போவாது உனக்கு விஷயம் தெரிஞ்சு நீ என்கிட்ட வந்து நீ எப்பவாவது என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல பிரீத்தி அப்படின்னு ஒரு வார்த்தையை சொல்லிட்டா அதுக்கு தான் நான் இப்ப சொல்றேன் நான் என்னோட காதலை சொன்னேன்னு சொல்லி உன்னை டார்ச்சர் பண்ணி உன் பின்னாடி வர அந்த மாதிரி வேலையெல்லாம் நான் செய்ய மாட்டேன் என் மனசுல இருக்கறத சொல்லிட்டேன் அவ்வளவு தான்..நான் சொன்னதுனால நீ என்னை தான் கல்யாணம் பண்ணனும்னு அவசியம் இல்லை..உன் முடிவை நீ சுதந்திரமா எடுக்கலாம் ..மலரை கல்யாணமும் செய்துக்கலாம் நான் பின்னாடி வந்து தொல்லை எல்லாம் செய்ய மாட்டேன் "...என்று அவள் கூற

அதைக்கேட்ட அவனுக்கோ தலைசுற்றியது என்று தான் கூற வேண்டும் இந்த ஒரு வார்த்தையை அவள் வாயிலிருந்து அவன் கேட்க வெகுவாக ஆசைப்பட்டான்... அப்போதெல்லாம் அவள் கூறவில்லை இவனும் தன் மனதை அவளிடம் திறக்கவில்லை அப்படி இருக்க இப்படி ஒரு இக்கட்டில் அவன் இருக்கும் போது அவள் தன் காதலை சொல்வாள் என அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை...

இப்படி ஒரு வழியை அந்த ஆண்டவன் வாழ்க்கையில் விட வேண்டுமா என்று கூட நினைத்து விட்டான் என்ன தான் அவள் அமெரிக்க வாசத்தில் மூழ்கி இருந்தாலும் சுதந்திரமாக தன்னம்பிக்கையோடு அதே சமயம் சிறிது திமிரோடு பிரீத்தி வளர்ந்திருந்தாலும் நித்திலனை பொருத்தவரை அவனை தூக்கி விட்டது ப்ரீத்தி மட்டும் தான் அப்படி இருக்க அந்த விசுவாசம் நித்திலனுக்கு எப்போதும் வெகுவாக உள்ளது..

இப்படி ப்ரீத்தி அவளது காதலை கூறிய பின் தன் வேலை முடிந்தது என்பது போல வேடிக்கை பார்த்த வர அவனும் அவளுக்கு என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் முழித்தான்...

அந்த நொடி அவனுக்கு ஒரு யோசனை உதிக்க அவளைப் பார்த்து, " ப்ரீத்தி எனக்கு ஒரு உதவி செய்வியா??"... என்று வினவினார்..

அவளோ , "என்ன உதவி??"... என்று கேட்க

"பேசாம நீயும் நானும் காதலர்கள் என்ன சொல்லி விடலாமா??"... என்று கேட்க ப்ரீத்தியை சிரித்தாள் ..

"அதுக்கு நமக்கு இடையில் காதல் இருக்கா என்ன?? நான் ப்ரொபோஸ் பண்ணி ரெண்டு நிமிஷம் தான் ஆச்சு"... என்று பிரீத்தி கூற ,

நித்திலன் அவளிடம்," உன்னை பகடைக்காயாக யூஸ் பண்ணிக்கிறேன்னு நினைக்காதே எனக்கு வேற வழி தெரியல உன் மூலம் இந்த கல்யாணம் நின்னாலும் எனக்கு சந்தோஷம் தான் "... என்று கூற ,

"அப்போ என்னோட காதல்"... என்ற கேள்வியை பிரீத்தி அவன் முன் வைக்க ,

அவனோ , "கல்யாணத்தை நிறுத்தி விட்டு சொல்றேன் என்னோட பதிலை "... என்று சிரித்தபடி கூறினான் நித்திலன்..

"ஆமாம் நீயோ நானோ கல்யாணத்தை நிறுத்த கூடாது பிறகு எதுக்கு இந்த நாடகம் "...என்று பிரீத்தி கேட்க

"அதை எல்லாம் பனி மலர் பார்த்துப்பா அவ மனசில் நாம காதலர்கள்னு பதிய வெச்சிட்டா போதும்".. என்று தன் மாமன் மகளின் மனம் அறியாமல் கூறினான் நித்திலன்...

தூவானம் தூறும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top