தூவானம் 6.1
தூவானம் : 6.1
மறுநாள் ப்ரீத்தியை அழைத்து வர விமான நிலையம் செல்ல தயாராகி கொண்டிருந்தவனை பார்த்த சிவகாமி , "தம்பி எங்கே கிளம்பிட்ட ??"...என்று தெரிந்தே அவன் முன்னே ஒரு கேள்வியை வைக்க,
அவனோ, " ஏர்போர்ட்க்கு மா பிரீத்தி வரா "... என்க
சிவகாமியோ, " தம்பி அவளை அவங்க வீட்டுக்கு போக சொல்லு..இங்கே கூட்டிட்டு வராத ".. என்று கூற,
அதைக்கேட்ட நித்திலன், " ஏன் இப்படி சொல்றீங்க வீட்டுக்கு ஏன் அவளை அழைச்சிட்டு வரக்கூடாதுன்னு சொல்றீங்க??"... என்று தாயைப் பார்த்து அவனுக்கு விளங்காமல் கேட்க,
அவரோ பிரீத்தி இங்கே வந்தால் தன் மகன் மனம் மேலும் அலைபாயும் என கருதி, " உனக்கும் மலருக்கும் திருமணம் முடிவு பண்ணி இருக்கு உனக்கு அது தெரியுமா?? தெரியாதா??? இந்த நேரத்துல எதுக்கு ப்ரீத்தியை இங்க அழைச்சிட்டு வர அது எல்லாருக்கும் விருப்பத்தை கொடுக்காது "...என்று தாய் குடும்பத்தாரின் மனநிலையை உணர்ந்து கூற அதைக் கேட்ட அவனுக்கு புசுபுசுவென கோபம் வந்தது
"அது என்னம்மா எல்லாமே அவங்க இஷ்டம் அவங்க இஷ்டம்ன்னு சொல்றிங்க?? என் வாழ்க்கையில எல்லாமே அவங்க சொல்றது தானா?? இன்னும் அப்படியே நினைச்சிட்டு இருந்த எனக்குன்னு ஒரு வாழ்க்கை இல்லையா?? எனக்குன்னு ஒரு முடிவு தான் இல்லையா?? அதை ஏன் யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்??க நான் படித்துவிட்டு வேலை தேடிட்டு இருக்கும் போது அதை முடக்க பலவழி பார்த்தவங்க அவங்க... எனக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்து என் கூட இப்போ வரைக்கும் உறுதுணையாக நிற்கிறது பிரீத்தி அவளை எப்படி விட சொல்றீங்க ???உங்களுக்கு உங்க குடும்பம் முக்கியமா எனக்கு ப்ரீத்தி முக்கியம் தயவு செஞ்சு இப்படி எல்லாம் பேசாதீங்க "...என்று தாயிடம் காய,
அதைக்கேட்ட சிவகாமியும், " தம்பி நான் சொல்றதை கேளு உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன் "...என்று கூற ,
அவனும் , "இதுவரை நீங்க செஞ்சா நல்லதே போதுமா ரொம்ப நல்லது பண்ணி இருக்கீங்க ரொம்ப நல்லது பண்ணிடாதீங்க என்னால அதிலிருந்து கரையேற முடியாது "... என்று பொடி வைத்துப் பேசி விட்டு வெளியேறி விட்டான்.. சிவகாமியும் இந்த பையனை வைத்துவிட்டு என்னதான் செய்கிறது என முழித்துக் கொண்டு நின்றார் சிவகாமி...
அவன் மனதுக்குள்ளே பல எரிச்சல்கள் மண்டிக்கிடந்தது எப்படி இப்படி அம்மாவால் பேச முடிகிறது என நொந்து கொண்டே செல்ல அப்பொழுது தான் கல்லூரிக்கு தயாராகி வெளியே வந்தாள் மலர்...
அவளை கண்டதும் மேலும் எரிச்சலாக அவளைப் பார்க்க வெள்ளையும் சிவப்பும் கலந்த ஒரு பாவாடை தாவணி அணிந்திருந்தாள் அதுவும் முறையாக அணியாமல் வாசல் வரை வந்து கொண்டே அவளது மாராப்பை சரி செய்து கொண்டே வர அதைக் கண்டவன் கடுப்புடன், " ஹேய் இங்க வா "...என்று அழைக்க ,
அவளோ அவனை பார்த்து தன்னைத்தான் அவன் அழைக்கிறான் என தெரிந்தும் , "எப்ப பார்த்தாலும் என்னை மட்டும் ஏய், நீ வா, போன்னு சொல்றது எனக்கு என்ன பேர் இல்லையா மலரென்னு கூப்பிட்டா குறைஞ்சா போயிருவாரு ".. என்று நொடித்துக்கொள்ள அவனை கண்டும் காணாமலும் முகத்தை திருப்பிக் கொண்டாள்...
அவளது திருப்பல் வேறு அவனது கண்களில் வேறுபட்டு தொலைக்க, " ஏய் உன்ன தான் காது கேட்கல இங்கே வா டி "...என்று மீண்டும் அழைக்க அவளோ இந்த முறை அவனிடம் சென்று , "எதுக்கு மாமா எப்ப பார்த்தாலும் நீ வா போன்னு சொல்லிட்டு இருக்க எனக்கென பெயர் இல்லையா?? "... என்று கேட்க,
" உன் பெயரை சொல்ல கூட எனக்கு பிடிக்கலன்னு தான் இப்படி கூப்பிட்டேன் எதுக்கு டி காது கேட்காம அதுவும் என்னை பார்த்து மூஞ்சிய திருப்புற என்ன கொழுப்பா டி?? உனக்கு மட்டும் கொழுப்பு இல்லை டி..உன் குடும்பத்தில இருக்கிற எல்லோர்க்கும் கொழுப்பு இருக்கும் போது உனக்கு மட்டும் இல்லாமல் போகுமா??"... என்று அவளது குடும்பத்தையே இழுத்து விட்டான் நித்திலன் ..
அதைக்கேட்ட பனிமலரோ எதுவும் பேசாமல், " இப்ப எதுக்கு என்ன வர சொன்ன??"...என்று முகத்தை திருப்பிக் கொண்டு கேட்க,
"எனக்கு உன் கூட பேசணும் ஆசை எல்லாம் இல்லை மூஞ்சிய ரொம்ப திருப்பிக்காத ...உன் மூஞ்சிய நேராகவே பார்க்க சகிக்கலை இதுல உன் பின்னாடி பார்க்க ரொம்ப சகிக்கல அதிலும் கேவலமானது உன்னோட இந்த பாவாடை தாவணி தான்..அதை கூட நீ சரியா உடுத்தி இருக்கியா?? "... என்று அவளை தலை முதல் கால் வரை அளந்து விட்டு அவன் கருத்து சொல்ல ,
அதைக்கேட்டவளோ அவனை பார்க்க அவனோ அந்த நேரம் பார்த்து அவளை தான் பார்த்து கொண்டிருந்தான் அந்த நேரம் ஏனோ பனி மலரின் உள்ளே பனி பெய்வது போல இருக்க நித்திலனின் கடுகடுவென இருக்க அவளோ தன் மனதை மறைத்து , "இத சொல்லத்தான் என்னை கூப்பிட்டியா நான் போகட்டா "...என்று கேட்க,
அவனோ, "ஏய் நில்லு டி எதுக்குடி போறேன் போறேன் குதிச்சிட்டு இருக்க..எனக்கு ஒன்னும் உன்கிட்ட வழிஞ்சு பேசனும்ன்னு ஆசை இல்லை.. நான் நேத்து சொன்ன விஷயத்தை உன் அப்பாகிட்ட சொன்னியா??"... என்று கேட்க
அவளோ திருதிருவென முழித்தாள்...அதை கண்ட அவனோ எரிச்சல் மேலிட, " என்னடி சொன்னியா இல்லையா??"... என்று அவளது முகத்தைப் பார்த்து ஏதோ ஒரு கள்ளத்தனம் அவளது முகத்தில் தாண்டவமாடுவதை மிகச் சரியாக கணித்த நித்திலன் வினவ
அவளோ , "சொன்னேனே "..என்று அவனது முகத்தை பார்க்காமல் கூற,
அவனோ , "உங்க அப்பா என்ன சொன்னாரு ??"...என்று வினவ , "அவருக்கு கல்யாணத்த நிறுத்துற உத்தேசம் இல்லை போல நான் சொல்லியும் அவரு தேதி குறிக்க தான் இப்போ கிளம்பிட்டு இருக்காரு மாமா"... என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூற,
அவனது முகமோ இடிவிழுந்தது போல ஆகிவிட்டது , "என்னடி சொல்ற??? நீ சொல்லியும் அவர் கேட்கலையா??"... என்று குரலை இறக்கி கூற ,
அவளோ மனதுக்குள், " அந்த குந்தாணியை கட்டிக்க அம்புட்டு ஆசையா நடக்காது மாமா நடக்காது உனக்கு நான் தான்... நான் மட்டும் தான்"... என்று மனதுக்குள் கூறிக் கொண்டவள் வெளியே ஒன்றும் அறியாத பச்சை பிள்ளை போல, " ஆமா மாமா நான் சொல்லியும் அவர் கேட்கவே இல்லை மாமா "...என்று வார்த்தைக்கு நூறு மாமா கூற அவனோ தலையை பிடித்துக்கொண்டு நடந்து சென்றான்..
அவளோ அவன் எங்கே செல்கிறான் என பார்த்து , " எங்க மாமா போற"... என்று கத்தி கேட்க அவளைப் பார்த்து முறைத்தவன், "நான் எங்க போனா உனக்கு என்னடி உன் வேலைய பாத்துட்டு போ டி "....என்று கத்தி விட்டு சென்று விட்டான்...
அவளோ , "மாமா நான் உன்கிட்ட தான் அடங்கி போறேன் அதை வெச்சு சும்மா சும்மா என்னை திட்டிட்டு இருக்க கல்யாணத்துக்கு பின்னாடி எப்படித் திட்டுவன்னு நானும் பார்க்கிறேன் ".. என்று நொடித்துக்கொண்டு அவளும் கல்லூரிக்கு சென்றுவிட்டாள்...
நித்திலனும் கோயம்புத்தூர் சென்றடைந்து விட்டான் தன் மனதில் தோழிக்கும் காதலிக்கும் இடையில் இருக்கும் நின்று கொண்டு இருக்கும் ப்ரீத்தியை அழைத்து வர விமான நிலையத்தை அடைந்தான்..பயணிகள் விமானமும் தரையிறங்க,
அங்கே மேல் நாட்டு வாசம் தன் மீது முழுவதும் வீசும்படி ப்ரீத்தி வந்து கொண்டிருந்தாள் ...அவனைக் கண்டதும் , "ஹே நித்தி"... என்று கத்திக்கொண்டே வந்தவள் அவனை மேற்கத்திய முறையில் அணைக்க அவனும் திருப்பி அணைத்துக்கொண்டான்...இந்த அணைப்பு மட்டும் தான் நித்திலன் இந்த ஐந்து வருடங்களில் அமெரிக்காவில் சென்று பழகிய விஷயம்...
அவனது முகத்தை பார்த்த பிரீத்தி , "ஏன் ரொம்ப டல்லா இருக்க என்ன விஷயம்??"... என்று வினவ,
"என்ன சொல்றது ப்ரீத்தி இங்க வந்தாலே டென்ஷன் இருக்குமே"... என்று கூறியவன் அவளை அழைத்துக்கொண்டு சென்றான் ..
வரும் வழியில் பல விஷயங்களை பேசிய நித்திலன் கல்யாண விஷயத்தையும் அவளிடம் கூற அதைக் கேட்ட பிரீத்தியின் முகம் நொடிப்பொழுதில் மாறியது...
ஏனெனில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் விருப்பம் தான் அது இருவருக்கும் தெரியும்...இருவரும் இதுவரை அவர்களது காதலை வெளிப்படுத்தியது இல்லை..
ஆனால் முதலில் நண்பர்களாக பழகிய இருவரும் நண்பர்கள் என்ற படியிலிருந்து அடுத்த படிக்கு தாவி உள்ளதை இருவரும் உணர்ந்து தான் இருந்தனர் ...ஆனால் யார் முதலில் தங்களது மனதை திறப்பது என்பது இருவருக்குள்ளும் கேள்வியாக அமைய அதில் வேறு இப்பொழுது நித்திலன் இந்த விஷயத்தை கூறவும் ப்ரீத்தி உள்ளுக்குள்ளே வருத்தம் அடைந்தாலும் வெளியே அதை காட்டிக் கொள்ளாமல், " ஓ அப்படியா விஷயம் "..என்று மிகச்சாதாரணமாக கேட்க முயன்று தோற்றாள்...
ப்ரீத்தியின் கண்ணை வைத்து அவளுக்கு அவள் கேட்ட விஷயம் மிகவும் அவளை வருத்தி எடுத்து இருக்கும் என புரிந்து கொண்ட நித்திலனோ அவளை பார்த்து, " எனக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை ஆனா இப்படி குடும்பமே சேர்ந்து முடிவு செஞ்சு இருக்காங்க அதுல இருந்து எப்படி வெளில வரணும்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன் ஒரு 26 வயசு ஆண்மகன் ஒரு முடிவை என் வாழ்க்கையில நடக்கப்போற முக்கியமான முடிவை மாற்ற முடியாமல் குற்றவாளியாக நின்னுட்டு இருக்கேன் பிரீத்தி".. என்று கூற,
அதை கேட்ட அவளோ , "இதுக்குப் பேரு குற்றவாளி இல்லை.. சொந்த முடிவு தைரியமா வெளியில் சொல்ல முடியாத கோழைத்தனம் முதுகெலும்பு இல்லைன்னு அர்த்தம் "... என ப்ரீத்தி சட்டென்று எதுவும் யோசிக்காமல் கூறினாள்...அவளது வார்த்தைகளில் வீரியம் சற்று கூடியிருந்தது என்ற சந்தேகம் அவனுக்கு எழாமல் இல்லை.. இருந்தாலும் அவள் கூறியது உண்மையே..
பிரீத்தியின் முகத்தை பார்த்து தைரியமாக அவன் கூறியிருந்தால் கூட அவளால் ஏற்றுக் கொள்ள முடிந்திருக்கும் ஏதோ சப்பைக்கட்டு கட்டுவது போல அதிலும் சிறு குழந்தை போல வீட்டில் கட்டாயப்படுத்தினார்கள் என அவன் கூறுவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் வெளிப்படையாகவே அவள் கூறிவிட,
அவனோ அவளை அதிர்ச்சியாக பார்க்க , "என்ன பாக்குற நித்தி நான் சொல்றது உண்மை தான்..நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்லை உன்னோட முடிவை மிக சரியாக எடுக்க முடியாமல் இப்படி முழிச்சிட்டு இருக்க உனக்கு கல்யாணம் வேண்டாம்னா வேண்டாம்னு சொல்ல வேண்டியதுதான் அதுக்குன்னு அவங்க கம்பெல் பண்ணாங்க அதுக்காக கல்யாணம் பண்ண போறேன்னு நீ சொல்றது எனக்கு சரியா படல.. உன் இஷ்டம் உன் வாழ்க்கைல முடிவு சொல்ல வேண்டிய உரிமை எனக்கு இல்லை அதே நேரம் நானும் உனக்கு ஒரு பிரிண்ட் அதனால எனக்கு இத சொல்ல உரிமை இருக்குன்னு நினைச்சு தான் சொல்றேன் "...என்று அவள் தான் ஒரு தோழி தான் நட்பு என்பதை அவனிடம் தெளிய வைக்க முயன்று கடினமான மனதோடு அவள் கூறினாள்..
