தூவானம் 5.2
தூவானம் : 5.2
முத்தரசோ இவனிடம் பேசினால் வேலைக்கு ஆகாது என்று நினைத்து விட்டார் போலும், "நம்ம வீட்டு பழக்கத்தை நீ உன் பையனுக்கு சொல்லி குடுக்கலையா?? இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறானா?? அமெரிக்காவில் போய் வேலை பார்க்கிறவனுக்கு என் பிள்ளை எல்லாம் பார்த்தா அவனுக்கு பொண்ணா தெரியலையா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்ன்னு சொல்றான் ".. என்று முத்தரசன் எகிற தொடங்கி விட்டார்..
சிவகாமியோ , "அண்ணே நான் பேசுறேன் நீ அண்ணே நீ கோபப்படாமல் இரு அண்ணே "..என்று கூற ,
இளங்கோவோ இது தான் சாக்கு என்று நெனைத்தானோ என்னவோ, " அவனுக்கு என் தங்கச்சி வேண்டான்னா எனக்கு எதுக்கு அவளோட அக்கா அவளையும் கூட்டிட்டு கிளம்ப சொல்லுங்க "...என்று மனசாட்சியே இல்லாமல் கூற கயல்விழியும் என்ன செய்வது என்று புரியாமல் முழித்தாள்..
இளங்கோவிற்கு அவன் சொன்னதைக் கேட்டு நடந்தால் எல்லாம் நல்ல விதமாகவே இருக்கும் இல்லையேல் அவன் குணம் அவனே மாற்றிக் கொள்வான் நொடிப்பொழுதில் மாற்றிக்கொள்ளும் தன் கணவனின் குணத்தை அறிந்தவள் வேகமாக தன் தம்பியிடம் வந்து , "என்ன தம்பி இப்படி பண்னிட்ட மலருக்கு நீதான் சொல்லி குடும்பத்தில் எல்லாருமே முடிவு பண்ணி இருக்கோம்ன்னு உனக்கு தெரியாதா???"... என்று தான் வாக்கப்பட்ட குடும்பத்திற்கு சப்போர்ட்டாக பேச ,
இளங்கோவோ கயலிடம், " என்னடி நடிக்கிறியா?? அக்காவும் தம்பியும் சேர்ந்து போடுற நாடகமா?? குடும்பமா சேர்ந்து என் தங்கச்சிய வேண்டான்னு சொல்ல தான் இப்படி பண்றீங்களா??".. என்று கேட்க மலருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ..
"மாமா என்ன அவள மனசுல நினைச்சுட்டு என்னை வேண்டாம்னு சொல்றாங்க".. என்று நினைத்தவள், " என்ன ஆனாலும் சரி மாமா.. பிரச்சனை நடந்தாலும் சரி இந்த கல்யாணம் நடந்திருக்கும்".. என முடிவு செய்துகொண்ட அவள் அமைதியாக நின்று நடப்பதை வேடிக்கை பார்க்க
நித்திலன் தன் தாயும் , சகோதரியும் அழுவதை பார்த்து வருத்தம் அடைந்தவன், " மாமா நான் என்னோட வாழ்க்கையை பத்தி பேசறேன் எதுக்காக நீங்க இதுல அக்கா அம்மாவெல்லாம் இழுக்கறீங்க அவங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நான் எனக்கு வேணாம் தான் சொல்கிறேன் ஒழிய அவங்க ஏதும் எனக்கு சொல்லி தரல ".. என்று அவன் கூற ,
அதைக் கேட்ட இளங்கோவோ, " அப்ப நான் சொல்றேன் உங்க அக்கா எனக்கு வேண்டாம் கூட்டிட்டு போ".. என்று ஒரே முடிவாக நின்றுகொண்டான்.. அவன் கூறியதை கேட்ட கயலோ, " என்னங்க இப்படி சொல்றீங்க நீங்க இல்லாம என்னால வாழ முடியாது அது தெரிஞ்சும் ஏன் இப்படி பேசறீங்க?? ".. என்று பக்கா அக்மார்க் பொண்டாட்டி போல அவள் பதிலளிக்க ,
சிவகாமியும் , "தம்பி மாமா செஞ்சது எல்லாம் நீ மறந்துட்டியா மாமா உனக்காக எவ்வளவு செஞ்சு இருப்பாங்க அதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா மாமா கிட்ட முதல் மன்னிப்பு கேளு இதனால் எல்லாரோட வாழ்க்கை என்ன பாதிப்படையுது உனக்கு புரியலையா".. என்று கடுமையாக கூற ,
செந்தாமரையோ, " அந்த நினைப்பு உங்க பையனுக்கு இருந்தா உங்க பையன் ஏன் என் பொண்ணை வேண்டான்னு சொல்ல போறான்.. ஏன் அவர் பெத்த பையனை கூட படிக்க வைக்காமல் உங்க பையன படிக்க வச்சாங்க அதுக்கு காட்டுற மரியாதை இதுதானா??..அவரு பணம் தந்து படிக்க வைக்காட்டி உங்க பையனுக்கு இந்த வேலை கிடைச்சு இருக்குமா ".. என்று செந்தாமரை கூற
அவர் கூறியது செருப்படியாக அவனது முகத்தில் விழுந்தது போல உணர்ந்தான் நித்திலன்..எதை அவன் எண்ணி குமைந்து கொண்டிருக்கிறானோ அதை வாய் வார்த்தையாக கேட்க அவனுக்கு தாங்கொன்னா வலியை கொடுத்தது..
அதோடு நிற்காமல் இளங்கோவும் தன் தாயுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, " தங்கச்சி தங்கச்சின்னு சொல்லி செஞ்சிங்களே பார்த்திங்களா?? உங்க தங்கச்சி மகன் செய்றது"..என்று தன் தந்தையிடம் முறையிட,
கயலோ, " என்னங்க என்னங்க "..என்று அவனிடம் கெஞ்ச இளங்கோ நொடிப்பொழுதில் அவளை மீண்டும் உதாசீனப்படுத்த அதில் மனம் உடைந்த நித்திலனோ என்ன செய்வதென்று புரியாமல் இருக்க,
அதுவரை அங்கு நடந்து கொண்டிருந்த காட்சிகளை எல்லாம் பார்த்து கொண்டிருந்த பாண்டியம்மாவோ, " என்ன ஆளாளுக்கு செஞ்சேன் செஞ்சேன்னு சொல்லிட்டு இருக்கீங்க?? நம்ம வீட்டு பொண்ணுக்கு செஞ்சது கணக்கு பேசிட்டு இருக்கீங்களா?? இது தான் ஆம்பளத்தனமா?? அவ வேற வீட்டுல இருந்து வந்தவ கிடையாது இந்த வீட்டில் பிறந்த குழந்தை தான் அவளுக்கு நீங்க செய்யாம?? வேற யாரு செய்ய போறா?? அத கணக்கா பேசிட்டு இருக்கீங்க?? இனி இப்படி வார்த்தையை பேசிட்டு இருக்காதீக ".. என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க ,
ஆனால் அவர்களின் பேச்சு எல்லாம் நித்திலனின் மனதில் ஆறாத வடுவை கொடுத்தது.. மேலும் செந்தாமரையோ, " படிக்க வச்சு இப்ப நல்ல வேலைக்கு போனதுக்கு அப்புறம் நம்ம வேண்டாம் அவங்களுக்கு என் பொண்ணு வேண்டாம் அவனுக்கு அதனால தான் இப்படி எல்லாம் பேசுறான் அதை ஒன்னும் நீங்க கேக்காதீங்க உண்மையை பேசினா மட்டும் எங்களை குத்தம் சொல்லுங்க ".. என்று தன் மாமியாரிடம் வாக்குவாதம் செய்ய ,
அந்த பேச்சில் மலருக்கும் உள்ள உண்மையால் கண்கள் கலங்கியது..மேலும் , "பாரு என் புள்ள அழறா பாரு".. என்று செந்தாமரை மலரை காட்டி கூற மேலும் ஆளாளுக்கு அவன் மீது பாய,
இறுதியில் முடிவாக சிவகாமியோ தன் மகனிடம் வந்து , "தம்பி அம்மா ஏதாவது சொன்னால் செய்வாயா நீ எனக்கு சொத்து சுகம் எதுவும் சம்பாதித்துக் கொடுக்க வேணாம் அது இல்லனாலும் பரவாயில்லை உன் அம்மா சந்தோஷமா இருப்பேன்..ஆனால் நீ மலர கல்யாணம் பண்ணிக்கோ அம்மாக்கும் சமாதானம் ஆகும் " என்று கூற,
அவனோ பதிலே பேசாமல் அமைதியாக நின்றான்.. மகன் எப்படி இருந்தாலும் ஒத்துக் கொள்வான் என்ற நினைப்பில் திரும்பி நின்று அனைவரையும் பார்த்து, " யாரும் வருத்தப்படாதீங்க இங்க நடந்ததை மறந்திடுங்க என் பையன் தான் மலருக்கு புருஷன்.. கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க ..நாங்க என்ன செய்யணும்னு மட்டும் சொல்லுங்க நாங்க செய்யுறோம் "..என்று கூறிவிட்டு தன் மகனை இழுத்து கொண்டு சென்றுவிட்டார் சிவகாமி..
" அம்மா அம்மா "..என அவன் கூற வருவது எதையும் அவர் கேட்க தயாராக இல்லை நேராக வீட்டுக்கு வந்தவர் கதவை அடைத்து கதவில் சாய்ந்து அமர்ந்து அழுத சிவகாமி, " என்ன தம்பி நீ இப்படி பண்ணிட்ட உன் அக்கா வாழ்க்கையை நினைத்து பார்க்கலையா?? நீ இப்படி பேசிட்டு நாளைக்கு அவ எப்படி அந்த வீட்டில் இருப்பான்னு நினைச்சு பார்த்தியா நீ?? நம்ம குடும்பத்துல தான் சொந்தத்துக்குள்ளேயே கல்யாணம் பண்றது தானே முறை உன் அக்காவை கூட இப்படித்தான் கொடுத்திருக்கோம்?? நீ மட்டும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னா என்ன நினைப்பாங்க??? எனக்கு இரண்டு பிள்ளைகளும் கண்ணு மாதிரி அதுல யாருக்கு என்ன தீங்கு நடந்தாலும் என்னால தாங்கி கொள்ள முடியாது எனக்கு இந்த கல்யாணம் நடந்து ஆகனும் அவங்க எப்படி பேசினாங்கன்னு பார்த்தல நன்றி கெட்டத்தனமாக நாம நடந்துகிட்ட மாதிரி பேசுறாங்க?? அப்படியா நாம இருந்தோம் இந்த மாதிரி பேச்சு வரக் கூடாதுன்னு சொல்லி தான் அவ்வளவு பாடுபட்டேன் அதை நீ ஒரு நிமிஷத்துல சுக்குநூறாக உடைச்சிட்ட அவங்க என்ன தான் சொன்னாலும் உனக்காக எல்லாம் செஞ்சு இருக்காங்க அதை மனசில வைச்சு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ ".. என்று சிவகாமி அழுது கதறி கூற அதை கேட்டு இறுகிய கல் போல இருந்தான் நித்திலன்..
என்னதான் மகள் வாழ்க்கை, மற்றவர்கள் மூன்றாம் மனிதர்கள் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் சிவகாமி கூறினாலும் அவனுக்கு ஒரு மனம் உண்டு அல்லவா அவனுக்கு என்று ஒரு வாழ்க்கை உண்டல்லவா அதை யாரும் புரிந்து கொள்ளாமல் போனார்கள்..தங்களை யாரும் குறை சொல்ல கூடாது அது போன்ற நம் சமூகத்தில் பெரும்பாலும் நடப்பதே இதுபோன்ற திருமணங்கள் தானே..
ஒரு திருமணம் என்பது நிர்ப்பந்தத்தின் பேரில் நடப்பதாக இருந்தால் அந்த திருமண வாழ்க்கை எப்படி நல்ல முறையில் இருக்கும்..
தாய் மேலும் மேலும் அழுவதைப் பார்த்து தாங்க முடியாத அவன் இறுதியாக, " உங்களுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கணும் பண்ணிக்கிறேன் விடுங்க "...என்று கூறியவன் இதைப்பற்றி மலரின் அபிப்பிராயத்தை கேட்க வேண்டும் என நினைத்துக்கொண்டான்..
அவனுக்கு அந்த வாய்ப்பு வெகு சீக்கிரத்தில் வந்தது..
அடுத்த நாள் ஒன்றும் தெரியாதவள் போல மலர் காலேஜுக்கு செல்ல அவளை பார்த்து பேசவேண்டும் என நினைத்த நித்திலன் அவளுக்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தான்..
அவளும் கல்லூரி முடிந்து செல்வியுடன் வர அங்கே அவனது மாமா காத்திருப்பதை கண்டதும் இவன் நேற்றைய விஷயத்தை பற்றி பேசத்தான் வந்திருக்கிறான் என்பதை அவனது முகத்தை வைத்தே தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டவள் செல்வியிடம் ஏதோ வளவள என பேசிக்கொண்டே கண்டும் காணாமல் ஸ்டாப்பில் வந்து நின்றாள்..
நான் அருகில் சென்று பேச போனால் ஏதாவது ஏடாகூடமாக சொல்லி விட்டால் என்ன செய்வது என அவள் நான்கடி தள்ளி நிற்க , அவனோ அவளைக் கண்டதும், " ஏய் இங்க வா".. என்று அவனது பெயரைக் கூட அழைக்காமல் அழைத்த அவன் வர சொன்ன போது பேரை கூட சொல்லமாட்டியோ உனக்கு இருக்கு என்று மனதுக்குள் கூறிக்கொண்டே அவன் முன்னே போய் நிற்க
அவனோ , "என்னடி பார்த்தும் பார்க்காத மாதிரி அங்கு போய் நின்றிருக்க திமிரா உனக்கு" என எடுத்ததுமே அவள் மீது சாட அவளும் பதிலுக்கு, " நீங்களும் தான் பார்த்துட்டே இருந்தீங்க என்ன சொல்றீங்க ??அப்படி தானே "..என்று திருப்பி அவனிடம் சாடினாள்....
அவள் அவ்வாறு கூறியதும் ஆரம்பத்திலே கடுப்பில் இருந்தவனுக்கு இவளது இந்த பேச்சு கடுப்பை கொடுக்க ரோடு என்றும் கூட பார்க்காமல் சட்டென்று அவளது கையைப் பிடித்து முறுக்கி, " என்னடி எப்ப பாத்தாலும் திருப்பி பேசிட்டே இருக்க ?? இனி ஏதாவது பேசின ஓங்கி அறைஞ்சிடுவேன் பார்த்துக்கோ "...என்று கூற ,
அவளோ அதிர்ந்தாள் ஏனெனில் இதுவரை அவனது ஸ்பரிசத்திலோ இல்லை அவனது அருகாமையையோ உணர்ந்திராதவள் முதன்முதலாக அவனது அருகாமையை உணர அதுவும் அவன் அழுத்தத்துடன் அவளது கையைப் பிடித்து இருக்க அவனுக்கும் அவளுக்கும் ஒரு இன்ச் இடைவெளிக்கும் குறைவான இடைவெளியில் இருவரும் நின்று கொண்டிருக்க அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை ஆனால் அவளுக்கு தான் என்னவோ தோன்றியது...அவனது சூடான மூச்சு காற்று அவளது முகத்தில் அலைமோத சட்டென்று அவளது முகம் அந்த உணர்வில் சூடானது...அவனது முகம் அவளது முகத்துக்கு அருகே கண்டவள் முகம் செம்மையுற்று அவளை என்னவோ செய்தது..சுற்றுப்புறம் அனைத்தையும் மறந்தாள் பனி மலர்..செல்வியோ ஏதோ சண்டை நடக்க போகிறது என வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தாள்..
அந்த சமயம் பார்த்து மிகச்சரியாக ப்ரீத்தி அழைக்க அவளது மென்மையான தருணம் தடைபட்டது போல அவள் உணர்ந்தாள்..அவனோ அவளை முறைத்து கொண்டே போனை எடுக்க அதன் ஒளித் திரையில் ப்ரீத்தியும் நித்திலனும் கட்டியணைத்தபடி இருந்த ஒரு புகைப்படத்தை கண்ட பனி மலர் தீ சுட்டது போல வெடுக்கென்று அவனை விட்டு நீங்கி நின்று கொள்ள,
அவனோ அதை உணராதவன் போனை எடுத்து காதில் வைக்க ப்ரீத்தியோ, " நான் கிளம்பிட்டேன் பேபி நாளைக்கு மார்னிங் வந்துடுவேன்".. என்று கூற அவனும் சரி என்று கூறி வைத்து விட்டான்..
அவளோ முறைத்து கொண்டு நிற்க அவளைப் பார்த்து, " நேத்து பெரியவங்க பேசினது உனக்கு கேட்டுச்சு நினைக்கிறேன் "..என்று கூற ,
இவளோ , "உங்களுக்கும் தானே கேட்டுச்சு".. என்று திருப்பி எகத்தாளம் பேசினாள்..
மீண்டும் கடுப்பானவன் , " நான் சொல்றத கேளு டி தேவையில்லாமல் பேசிட்டு இருக்காத உன் மூஞ்சியை பார்த்தாலே எனக்கு கடுப்பா இருக்கு "..என்று கடுப்பாக கூற ,
அவளும் அவன் கூறியதை கேட்டு அதே கடுப்பிலேயே தான் இருந்தாள் ஏனெனில் அவளது நீண்ட கனவை ப்ரீத்தி தான் கலைத்து கொண்டு இருக்கிறாள் என்று நினைத்து அவளும் கடுப்புடன் பதிலளிக்க இறுதியான நித்திலன் அவளை பார்த்து, " இதோ பாரு எனக்கு உன்ன சுத்தமா பிடிக்காதுன்னு உனக்கு முன்னாடியே தெரியும் எனக்கு சுத்தமா பிடிக்கல இந்த கல்யாணம் கருமம் எல்லாம்... பெரியவங்க சொல்றாங்கன்னு சொல்லி என்னால உன்ன மாதிரி ஒரு படிக்காத தத்தியை, ஒரு பட்டிகாடை கல்யாணம் பண்ணிக்க முடியாது ".. என்று கூற,
மலரோ மனதுக்குள், " நான் பட்டிக்காடா?? அப்போ உங்களுக்கு கண்டிப்பா பொண்டாட்டி நான் தான்?? நான் தத்தி தான் உங்களை போய் நினைச்சு இருக்கேன் பாருங்க நான் தத்தி தான் ".. என்று மனதுக்குள் கூறியவள் ,
ஒன்றும் பேசாமல் அவனையே பார்க்க , "நீயே போய் உங்க அப்பாகிட்ட எனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைன்னு சொல்ற ?? என்ன புரியுதா??..மவளே இந்த கல்யாணம் மட்டும் நடந்துச்சு நீ முடிஞ்ச " என்று கூற அவளும் நல்ல பிள்ளை போல அவனிடம் தலையாட்டி விட்டு அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு பதிலே அளிக்காமல் செல்வியை அழைத்து கொண்டு சென்று விட்டாள்..
"என்ன இப்படி பார்க்கிறா?? கரெக்டா சொல்லிடுவாளா?? இல்லையா?? " என நித்திலன் குழம்பி நிற்க மீண்டும் அவளை பார்த்து , " ஏய் சொல்லிடுவ தானே ?? " என்று நித்திலன் கேட்க,
" சொல்லறேன் சொல்ற விதத்தில சொல்லுறேன்"... என்று மட்டும் பதில் அளித்து விட்டு பஸ் ஏறி சென்றுவிட்டாள்..
பஸ்ஸில் முழுவதும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவள் வீட்டுக்கு சென்றதும் தந்தையிடம், " அப்பா எப்போ எனக்கும் மாமாக்கும் கல்யாணம்?? சீக்கிரம் பேசி முடிப்பா ..மாமாக்கு அதிகம் லீவ் எல்லாம் கிடையாதாமா ".. என்று கூற அதை கேட்ட முத்தரசு அதிர்ந்து விட்டார்..
தூவானம் தூறும்...
