Share:
Notifications
Clear all

தூவானம் 5.1

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

தூவானம் : 5.1

அன்றைய தினம் மாலை நடுக்கூடத்தில் அமர்ந்திருந்தார் முத்தரசன்... ஆழ்ந்த சிந்தனையில் உழன்று கொண்டிருந்தார் அவர்.. மகன் ஏதோ யோசனையில் இருப்பதை உணர்ந்த பாண்டியம்மா, " என்ன முத்து விஷயம்?? ".. என்று கேட்க,

அவரோ ஜோசியர் கூறியது எல்லாம் கூற அவர் கூறியதைக் கேட்ட பாண்டி அம்மாவும், " அது தான் அவன் வந்திருக்கானே சட்டுப்புட்டுன்னு பேசி முடிச்சுட வேண்டியது தானே இதுக்கு எதுக்கு இப்படி யோசிச்சிட்டு இருக்க ?? " என்று அவர் கூறவும்,

"அதைத்தான் மா யோசிச்சிட்டு இருக்கேன் முடிச்சுட வேண்டியது தான்".. என கூறியவர்,

உடனே தன் மனைவியை அர்த்தமுள்ள பார்வை பார்த்த முத்தரசனின் பார்வையை புரிந்துக் கொண்ட செந்தாமரையோ , " கயலு கயலு உங்க அம்மாவை கூட்டிட்டு வா ஒரு முக்கியமான விஷயம் பேசனும்" என்று கூற ,

கயல் என்ன விஷயம் என்று தெரியாமல் குழந்தை நரேனை தூக்கி கொண்டு தன் தாயை அழைத்து வந்தாள்.. சிவகாமியும் வர அவரிடம் முத்தரசன் , "சிவகாமி நித்திலனுக்கும் மலருக்கும் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் "..என்று கூற

அனுமதி கூட பெறவில்லை விஷயத்தை மட்டும் தன் தங்கையிடம் முத்தரசன் கூற சிவகாமிக்கு என்ன பதில் அளிப்பது என புரியவில்லை..

அவருக்கு ஒரு சின்ன சந்தேகம் மகன் ப்ரீத்தி உடன் நெருக்கமாக இருக்கும் படங்களை எல்லாம் பார்த்து விட்டு அவருக்கு இருவருக்கும் இடையே ஏதாவது இருக்குமோ என்ற சிறு துளி சந்தேகம் மனதில் தோன்றி இருக்க, " நித்திலன் வரட்டும் அண்ணா அவன் கிட்ட கேளுங்க".. என்று நாசூக்காக கூற

அவரோ , "அவன்கிட்ட என்ன கேட்க இருக்கு பெரியவங்க பாத்து நாம முடிவு பண்ண வேண்டியது தான்... நான் முடிவு பண்ணிட்டேன் மொட்டை போட்ட ரெண்டு நாள் கழிச்சு நிச்சயம் வெச்சுக்கலாம் அந்த வாரத்திலே கல்யாணத்த முடிச்சுடுவோம் "..என்று கூற சிவகாமிக்கு கேட்டாலும் எந்த விதமான பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார்...

அதைக்கண்ட செந்தாமரை, " என்ன அண்ணி எதுவுமே சொல்லாம இருக்கீங்க பொண்ணு கொடுக்கிறோம்ன்னு அதுக்காக சும்மா இருக்கீங்களா??? மாப்பிளை திமிரை காட்டலாம்ன்னு ஒரு எண்ணமா??"... என்ன கொஞ்சம் குத்தல் வாக்குகளை சேர்த்துவிட

அதைக்கேட்ட சிவகாமியோ வில்லங்கம் வந்து விட்டதே என எண்ணி, " ஐயோ அப்படி எல்லாம் இல்ல அண்ணி.. நீங்க அப்படி எல்லாம் நினைச்சுக்காதீங்க சின்ன பசங்க அவங்களோட சம்மதமும் வேணும் இல்லையா அதுக்காகத்தான் அப்படி சொன்னேன் வேற ஒன்னும் இல்ல எனக்கு என்னோட மலர் மருமகளாக வருவது தான் என்னோட விருப்பமும்"... என்று ஒருவழியாக சுற்றிவளைத்து தனது சம்மதத்தை கூறிவிட்டார் ...

கூற வைத்து விட்டனர் என்று தான் கூற வேண்டும்...அவருக்கு வேறு வழி தெரியவில்லை கயலுக்கு மலரை பிடிக்கும் என்றாலும் தன் தம்பி என்ன சொல்வானோ என நினைத்த அவள் இங்கே இருந்தால் தேவையில்லாத பிரச்சனை வரும் என நினைத்து அந்த இடத்திலிருந்து நகர்ந்து கொண்டாள்..

இன்று காலை காலேஜுக்கு சென்ற பனிமலர் ,செல்வியின் அருகில் செல்ல செல்வியோ, " என்னடி உங்கிட்ட இந்த வாசனையா இருக்கு ??"...என்று வாயை பிளந்து கேட்க,

மலரோ, " அது எங்க மாமா அமெரிக்காவில் இருந்து வாங்கிட்டு வந்துச்சு "...என்று செல்வியிடம் பந்தா செய்ய வேண்டும் என்று நினைத்து சென்றவள் ஏதோ ஒரு நினைவில் வாடிப்போய் சுரத்தே இல்லாமல் சொல்ல,

அதைக்கேட்ட செல்வியோ, " என்னடி சொல்ற எனக்கெல்லாம் வாங்கித் தர ஆள் இல்லாம இருக்கேன் உனக்கு அந்த மனுஷன் அங்கிருந்து வாங்கிட்டு வந்துருக்காரு அதுக்காவது சந்தோஷமா மூஞ்சிய வெச்சுட்டு சொல்ல வேண்டாமா இப்படி தொங்க போட்டுட்டு சொல்லிட்டு இருக்க ???"...என்று கூற

அவளோ நடந்த விஷயத்தை எல்லாம் ஒன்றும் விடாமல் கூறிய பனி மலர் மேலும் , "அந்த ப்ரீத்தி கூட மாமா ஒட்டுக்கா இருக்கிறதை பார்த்தா ஆத்திரமா வருது அவளை வெச்சு என்னை என்னை இவரு கேவலமா பேசிட்டு இருக்காரு "..என்று கூற அதைக் கேட்ட செல்வியோ அந்த நொடி மூளையில் உதித்ததை மலரிடம் கூறினாள்...

அதைக்கேட்ட மலரோ, " என்னடி சொல்ற?? " என்ன அதிர்ந்து கேட்க,

"ஆமாம் புள்ள நீ சொல்றதெல்லாம் வச்சு பார்த்தா உன் மாமா அவ அந்த ப்ரீத்தி வளைச்சுட்டா போல உன் சோலி அம்புட்டுத்தேன்"...என்று கூற அதைக் கேட்ட மலரோ அதிர்ந்து, " என்னடி சொல்ற??".. என்க

" ஆமாம் புள்ள அவங்க ரெண்டு பேரும் காதலிக்கிறாங்க கல்யாணமும் பண்ணிப்பாங்க பாரு இனி உங்க மாமா இங்கு வரவே வராது..உன் மாமா அவளுக்கு தான் சொந்தம் "... என்று கூற

"அப்ப மாமா என்னை கட்டிக்காதா??".. என்று பாவமாக கேட்டாள் மலர் அவளிடம் தான் பெரியவர்கள் நித்திலன் உன்னை கல்யாணம் செய்ய போகிறான் என சிறுவயதிலிருந்தே அவளிடம் கூறி வைத்துள்ளனரே..

அதை வைத்து அவள் அவ்வாறு கேட்க அதைக் கேட்ட செல்வியோ , "போடி நீயே படிப்பு ஏறாமல் இங்க வந்துட்டு இருக்க உன்ன போய் உங்க மாமா கட்டிக்குவாங்களா.. ப்ரீத்தியையும் பாரு உன்னையும் பாரு.. அவளுக்கு முன் ஏணி வச்சா கூட நீ எட்ட மாட்ட.. அவ அழகு என்ன படிப்பு என்ன அந்தஸ்து என்ன ?? அறிவு என்ன?? நீ முறுக்கு சுடத்தான் லாயக்கு"... என்று கூற தோழியின் கேலிப்பேச்சு மலரின் மனதில் வெகுவாக காயத்தை கொடுத்தது..

அவள் கூறுவது போல, " நான் முறுக்கு சுடத்தான் லாயக்கா?? " என்று நினைத்தவள்,

அடுத்த நொடியே, " அப்படியெல்லாம் விட முடியாது என் மாமனை.. என் மாமா எனக்கு மட்டும் தான் மாமா உங்களுக்கு என்ன பிடிக்காது எனக்கு தெரியும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை எனக்கு உங்கள புடிச்சிருக்கு அது எப்படி என்னை கட்டாம நீங்க வேற ஒருத்திய கட்டுவீங்க?? ".. என்று நினைத்தவள் ,

"என்ன ஆனாலும் சரி நித்திலனை விட போவதில்லை "..என முடிவு செய்துவிட்டாள்..

எப்படியாவது தன் தந்தையிடம் இதைப் பற்றி சொல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டு பனிமலர் வீட்டுக்கு வர அந்த நேரம் பார்த்து தான் வீட்டில் பெரியவர்கள் எல்லாரும் இவர்களின் திருமண விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்..

அதை கேட்டதும், " மாரியாத்தா கண்ணை தொறந்துட்ட இதை பிடிச்சே நான் மலையேறிடுவேன் "..என நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்து வெளியே நல்ல பிள்ளை போல வந்தாள்..

அப்போது முத்தரசு தன் மகளைப் பார்த்து , "உனக்கு கல்யாணம் முடிவு பண்ணி இருக்கோம் சம்மதமா ??"...என்று தன் தங்கை சிவகாமியை பார்த்து கொண்டே தன் மகளிடம் கேட்க,

அவளோ நல்ல பிள்ளை போல, " உங்க இஷ்டம் அப்பா..இதையெல்லாம் ஏன் என்கிட்ட கேக்குற ??"...என்று கூற, அதை கேட்ட முத்தரசனோ பார்த்தியா என் வளர்ப்பை என்பது போல தன் தங்கையை ஒரு பார்வை பார்த்தார்..

மலரோ அவளுக்குத்தான் தெரியுமே மாமா தான் அவளுடைய மணவாளன் என்று அதனால் தைரியமாக அவளது சம்மதத்தைக் கூறி விட மேலும் அவளுக்கு சிறு பயம் ..தன் மாமன் இருந்தால் என்ன செய்வது என்று வீட்டை சுற்றிப்பார்க்க அங்கு தன் மாமன் இல்லை என்பதை உறுதி செய்தவள் அமைதியாக மிகவும் நல்ல பிள்ளை போல குழந்தை நரேனை தூக்கிக் கொண்டு அவளது அறைக்கு சென்றுவிட்டாள்..

நண்பர்களைக் காண சென்றிருந்த நித்திலன் வீட்டிற்கு வரவும் தன் தாயை காணவில்லை என நினைத்து தன் தாய்மாமாவின் வீட்டுக்கு வர அனைவரும் கூடி அமர்ந்திருப்பதைப் பார்த்து அவனுக்கு என்னமோ சரியில்லை என தோன்றியது..

அவனது தாய் அவனது முகத்தை பார்த்துக் கொண்டே நிற்க அவனுக்கு ஒன்றும் புரியாமல் பார்க்க அப்போது முத்தரசு, " மருமகனே உனக்கு எத்தனை நாலு லீவு இருக்கு"... என்று கேட்க , அவனோ புரியாமல் தன் தாயை பார்த்து கொண்டே, "இரண்டு வாரம் மாமா "..என கூற

"ஹ்ம்ம் அப்போ பத்து நாள்ல விசேஷத்தை முடிக்கனும் அப்படி தானே "..என்று சிவகாமியை பார்த்து கூற

சத்தியமாக புரியவில்லை என்ன சொல்ல வருகிறார் என்று, "
ஞாயிற்றுக் கிழமை தானே விசேஷம் ரெண்டு நாள்ல முடிஞ்சிடுமே " என்று அவன் கூற,

அதை கேட்டு முத்தரசோ, " அது சின்ன விசேஷம் பெரிய விசேஷத்துக்கு பத்து நாள் வேணும்".. என்று கூறியவர் அவனது முகத்தை பார்த்து , "உனக்கு மலருக்கும் கல்யாணம் முடிவு பண்ணி இருக்கோம் " என்று கூற அவன் அதிர்ந்தான்..

அவன் எந்த ஒரு விஷயம் நடக்க கூடாது என நினைத்திருந்தானோ அதே விஷயம் நடக்க அவனுக்கு இப்போதே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது...

மேலும் என்ன ஆனாலும் சரி இதற்கு மட்டும் ஒத்துக் கொள்ளக் கூடாது என முடிவு செய்தவன் , "மாமா என் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்".. என்று கூற

அவரோ விடாமல், " நேரம் காலம் வரும்போது எல்லாம் பண்றது தான் இருந்தாலும் இருந்தாலும் இதெல்லாம் முன்னாடியே முடிவு செய்தது தானே"... என்று கூற

அதைக் கேட்ட அவனுக்கு மேலும் ஆத்திரம் தான் வந்தது..

"அத நான் தான் முடிவு செய்யணும் மாமா நீங்க முடிவு செஞ்சா எப்படி?? ".. என்று வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக ஒரே போடாக போட்டு விட்டான்..

அவரோ, " என்ன சொல்ற புரியல?? ".. என்று முத்தரசுவின் முகம் கடுமையை தத்தெடுக்க

அதற்குள் சிவகாமி தன் மகன் அருகில் ஓடி வந்து, " தம்பி என்ன பேசிட்டு இருக்க மாமாகிட்ட?? ".. என்று கூற

இளங்கோவோ, "ஏன்?? என் தங்கச்சியை கட்டிக்க உனக்கென்ன கசக்குதா ?? "..என இப்போது சண்டை என்ற மோடில் அவன் இருந்தான்..

தன் தாயைப் பார்த்து நிதானமாக நித்திலன், " மா என்னோட வாழ்க்கையை நான் தான் முடிவு பண்ணனும் நீங்க யாரும் இல்லையே அதை தானே நான் மாமா கிட்ட சொன்னேன் வேற எதுவும் சொல்லலையே"... என்று பொறுமையாகத்தான் கூறினான்..

அதற்குள் செந்தாமரை ஒரு பக்கம் முத்தரசுவிடம், " பார்த்தீங்களா எப்படி எல்லாம் பேசறான்னு பார்த்தீங்களா நாலெழுத்து படிச்சிட்டு வந்து செய்யற திமிர பாத்தீங்களா?? ".. என்று புலம்ப,

அடுத்த நொடி இளங்கோ அவனைப் பார்த்து முறைக்க முத்தரசன் , "அப்புறம் உன் கல்யாணத்தை யார் தான் முடிவு பண்ணனும் சொல்லு இன்னும் என்ன எல்லாம் முடிவு பண்ணி வச்சிருக்க ?? அதையெல்லாம் சொல்லு?? என்ன சிவகாமி உன் பையன் என்னமோ பேசிட்டு இருக்கான் அதையெல்லாம் நீ வேடிக்கை பாத்துட்டு இருக்க??" என்று முத்தரசன் கூற

வீட்டில் ஒரே பரபரப்பு தொற்றிக்கொண்டது அறைக்குள் இருந்து அவர்கள் அனைவரும் பேசுவதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த பனி மலரோ சத்தம் கேட்டு ஓடி வந்த மலருக்கும் அவன் கூறியது நன்றாக தெளிவாகவே கேட்டது ..

அவளோ மனதுக்குள் ,"எதுக்கு அந்த சொறி பிடிச்சவளை கட்டிக்கவா ..அதெல்லாம் முடியாது மாமா உனக்கு நான் தான் " என நினைத்து ஒன்றும் தெரியாதவள் போல வந்தாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top