தூவானம் 4
தூவானம் : 4
கோயம்புத்தூர் விமான நிலையம்..
கிட்டத்தட்ட நித்திலன் ஐந்து வருடங்களுக்கு முன்பு அவன் இந்த நாட்டை விட்டு சென்றாலும் விமானத்தில் இருந்து தரை இறங்கி கொண்டிருக்கும் போதே அவனுக்கு இன்னும் அவனுக்கு தமிழகம் அதே போலத்தான் இருப்பது போல இருந்தது..
அதே போலத்தான் விமான நிலையமும் பெரிதாக எந்த வித மாற்றமும் இன்றி இருந்தது ஒரு சில மாற்றங்கள் அவன் கண்ணை கவர்ந்தன..அதை எல்லாம் ரசித்தபடியே தன் ட்ரோலியை தள்ளி கொண்டு நடந்து வந்தான் நித்திலன்..
வரும் நேரத்தில் ப்ரீத்தியின் டிக்கெட்டில் ஏதோ ஒரு கோளாறு காரணமாக அவளது டிக்கெட் மூன்று நாட்களுக்கு பின் தான் விமானம் என்ற நிலைக்கு மாற்றப்பட்டது..
இருவரும் ஒன்றாக வரலாம் என நினைத்துக் கொண்டிருக்க குட்டையில் விழுந்த கல் போல ப்ரீத்தி மூன்று நாட்கள் கழித்து தான் வருவாள் என்ற விஷயத்தை அவளது குடும்பத்தினரிடமும் அவனது அம்மாவிடமும் தெரிவித்தவன்,
தன் தாயிடம், " நானே வீட்டுக்கு வந்திடறேன் அம்மா ".. என்று யாரும் அவனை அழைக்க வர மாட்டார்கள் என நினைத்து நித்திலன் கூற,
அதற்கு சிவகாமி அம்மாவோ, " வேணாம் தம்பி மாப்பிள வரேன்னு சொல்லி இருக்காங்க".. என்று கூறியவர் மேலும், " அவர் வரேன்னு சொல்லி இருக்காரு அவரு சொல்லி நீ கேக்கல அப்படின்னா பிரச்சினை ஆயிடும்".. என்று கூற அதை கேட்டவன் முகம் இருண்டது என்னவோ உண்மை தான்..
மேலும் அவனது தாய், "நல்ல வேலை தம்பி இப்பவாச்சும் வர ஒத்துகிட்டியே அதுவரைக்கும் சந்தோசம் "..என்று கூறி போனை வைத்து அம்மாவின் குரலின் சலிப்பில் இருந்து புரிந்துகொண்டான்.. அங்கே என்ன நிலவரம் என்று எதை மாற்ற வேண்டுமென அவன் முயற்சி எடுத்து வருகிறானோ அது இன்றளவும் துளியும் மாறாமல் இருப்பது அவனுக்கு வருத்தமே..
ஆனால் அவன் தான் அப்படி நினைத்து கொண்டிருக்கிறானா என்று அவனுக்கு பல முறை சந்தேகம் வந்தததுண்டு ஏனெனில் அவனுடைய அம்மாவோ அவனுடைய அக்காவோ இப்படி எல்லாம் பேசி அவன் கேட்டதே இல்லை..அதனால் எப்படியோ போகட்டும் நான் இப்படி தான் என நினைத்து விட்டும் விட்டான்..
இந்த ஐந்து வருடங்களில் அப்பா வைத்து விட்டு சென்ற ஒரு சில கடனை எல்லாம் ஒரு வழியாக அடைத்து முடித்தவன் மேலும் அவனது வீட்டுக்கு அருகிலேயே முன்பு ஜெகதீசன் விற்ற அவர்களுடைய இடத்தை மறுபடியும் அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறான்..
அதில் அவன் அம்மாவிற்கு மிகப்பெரிய வீட்டை கட்டவேண்டும் என்பது அவனது கனவாகும் அதற்கு வேண்டிய ஏற்பாட்டை துவக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு தான் அவன் வந்திருக்கிறான் ..
விமான சோதனைகளை எல்லாம் முடித்து வெளியே வர, இளங்கோ எங்கே என கார் நிறுத்தத்திற்கு சென்ற நித்திலனுக்கு ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது..
ஆம் கொட்டை எழுத்தில் , "பனிமலர் முறுக்குகள் "..என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு வேன் வந்து நின்றது எல்லோரும் அந்த வேனை திரும்பி பார்த்துக் கொண்டே செல்ல அவளது பெயரை கண்டதுமே என் புசு புசுவென கோபம் அவனுக்கு வந்தது ..
"இன்னும் காலை வைக்கல அதுக்குள்ள இவ பெயரை பாத்துட்டேன் கஷ்டம் ..ஐஞ்சு வருஷம் நிம்மதியா இருந்தேன் "...என முணுமுணுத்துக் கொண்டே நித்திலன் வர இளங்கோ அவனுக்காக வேனுக்கு வெளியே காத்திருந்தான்..
இருவரும் கட்டிப் பிடித்து உறவாடவில்லை என்றாலும் இரு மச்சான்களும் மரியாதையாக சின்ன சிரிப்பை உதிர்த்து கொண்டனர்... அதுவே அவர்களுக்கு இடையில் பெரிய விஷயம்..
இருவருக்கும் என்ன தான் பிரச்சினை என்று இருவருக்கும் தெரியவில்லை நித்திலன் சிறுவயதிலிருந்து இளங்கோவிடம் பழக மாட்டான் அதேபோல இளங்கோவிற்கும் எப்போதும் ஒரு ஒதுக்கம் இவனிடம் இருக்கும் அதனால் ஒரு வகையில் நித்திலனை தள்ளியே வைத்திருப்பான்..
அப்படி இருக்க இருவரும் கண்டதும் பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் , நித்திலன் தான் எப்போதும் போல, " எப்படி இருக்கீங்க?? " என்று கேட்க,
" ஹ்ம்ம்..நல்லா இருக்கேன் இப்பவாச்சும் வரணும் தோணுச்சே சம்பாதிச்சா மட்டும் பத்தாது மனுசங்களும் வேணும்னு நினைக்கனும் " என்று அப்போதும் இளங்கோ கடுகடுவென பேசினான்..
இந்தக் கேள்விக்கு என்ன பதில் அளிப்பது என தெரியாமல் முழித்த நித்திலனுக்கு உள்ளக்குள் கோபம் இருந்தாலும் அக்காவின் முகத்தைப் பார்த்து அமைதியாக இருந்தான்..
" சரி எவ்வளவு நேரம் தான் இங்கேயே நின்னுட்டு இருப்ப?? எனக்கு டெலிவரிக்கு போகணும் சீக்கிரம் வா! போவோம் "...என அவனை அழைக்க அவனுக்கு அந்த வண்டியையும் அவர் கூறிய விஷத்தையும் கேட்டதுமே மலைப்பாக இருந்தது..
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள் அவனும் இந்த தொழிலை கேவலமாக எண்ணவில்லை ஆனால் எதற்கும் இடம் பொருள் ஏவல் என்பது எல்லா இடத்திலும் உண்டு அது என்னவென்று தெரியாத அவனது மச்சானிடம் என்ன சொல்லி புரியவைப்பது என தெரியாமல் நொந்தவன்,
" நான் வேற கார்"... என வாயை திறக்கும் முன் , "வண்டியில ஏறு".. என இளங்கோ கூற நித்திலன் பேசாமல் ஏறிக்கொண்டான்..
அவன் மனமோ , "இதுக்கு தான் நான் இங்க வரதே இல்ல இவங்க ஆட்டி வைக்கிற பொம்மை மாதிரி என ஆக்கிடுவாங்க எனக்கு என்னோட வாழ்க்கையை எனக்காக வாழனும் அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது"... என புலம்பிக்கொண்டே இளங்கோ உடன் பயணமானான்..
அதுவும் அந்த வேனில் பயணம் செய்து அவனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.. ஆம் பல சந்து பொந்துகளில் இருக்கும் சிறுசிறு கடைகளுக்கு கூட அவர்கள் முறுக்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் கொடுப்பதால் அங்கே இருக்கும் எல்லா கடைகளையும் சென்று கிட்டத்தட்ட வீடு சேர இரவு 8 மணி ஆகிவிட்டது ..
காலையில் விமானத்தில் இருந்து இறங்கிய அவன் ஐந்து வருடங்களுக்கு பிறகு தனது தாயையும் அவனது சகோதரியையும் சகோதரியின் குழந்தையை காண ஆவலாக வந்தவனுக்கு சோதனை செய்து கொண்டிருந்தான் இளங்கோ..
ஒரு வழியாக ஆட்டையாம்பட்டி வந்து சேர ஐந்து வருடங்களுக்கு பிறகு தன் மகனை பார்த்து சிவகாமி தன் மகனை கட்டி அணைத்துக்கொண்டார்.. 21 வயதில் சென்றவன் முழு ஆண்மகனாக வளர்ந்து நிற்கும் தன் மகனை பார்க்க அவரது கணவரே சிவகாமியின் கண்முன் வந்து நிற்பது போல தோன்ற , "அப்பா மாதிரியே இருக்கு கண்ணா "..என்று கண்கள் ததும்பி கூற பாண்டி அம்மாவும் , "என் ஜெகதீச பார்த்த மாதிரியே இருக்கு கண்ணு".. என்று அவரும் உச்சம் நுகர்ந்தார்..
முத்தரசனும், செந்தாமரையும் , "வாங்க" என்று வரவேற்க செந்தாமரையின் பின்னால் கயல்விழிக்கு அருகில் குழந்தையை இடுப்பில் தூக்கியபடி இவர்களின் பாசத்தை மெல்லிய புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்தாள் பனிமலர்..
ஒரு வழியாக பாச போராட்டங்கள் எல்லாம் முடிந்த பின் ஒரு வழியாக பாண்டியம்மா, " இன்னைக்கு சமையல் நம்ம வீட்ல சமைக்கலாம் "என கூற பெண்கள் அனைவரும் சரியென கூறி அடுக்களைக்குள் சென்றனர்...
முத்தரசன் இளங்கோவும் ஏதோ கணக்கு பார்க்க வேண்டுமென அறைக்குள் சென்று விட பனிமலர் இடுப்பிலிருந்து இறங்காமல் இருந்த நரேனை பார்த்து அவர்கள் அருகில் சென்ற நித்திலன் , பனி மலர் அருகில் இருந்தாலும் அவளிடம் ஒரு வார்த்தை பேசாமல் கிட்டத்தட்ட அவளை கண்டு கொள்ளாமல் அவள் அருகே ஒரு இஞ்ச் இடைவெளியில் நின்ற நித்திலன், "நரேன் குட்டி மாமா கிட்ட வாங்க "..என்று அழைக்க குழந்தையோ முகத்தை திருப்பிக் கொண்டான் அதைக்கண்டு பணி மலருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..
அதை கண்டு கோபம் கொண்ட நித்திலன், "எதுக்கு டி இப்போ சிரிக்கிற நான் உன்கிட்ட எதுவும் பேசல நரேன் குட்டி வாடா கண்ணா ".. என்று மீண்டும் அழைக்க ,
நரேனோ திரும்பி தன் மாமனை பார்த்து மாமன் அவன் முகத்தில் தனது பிஞ்சு கையால் ஒரு அடி வைக்க மீண்டும் பனி மலர் சிரித்தாள்..
குழந்தை அடித்தது கூட அவனுக்கு கோபம் இல்லை ஆனால் இவள் முன்னால் அடித்து தன்னை அவமானப்படுத்தி விட்டதே என நினைத்து, "எதுக்கு டி இப்போ சிரிக்கற தேவையில்லாத எல்லாத்தையும் குழந்தைக்கு சொல்லி கொடுத்து வெச்சிருக்க அதுதான் குழந்தை இப்படி செய்யறான் " என அவளைப்பார்த்து கடிய ,
அதுவரை பொறுமையாக இருந்த அவளோ , "ஆமா நீங்க குழந்தை பிறந்ததும் போவீங்க திரும்ப அஞ்சு வருஷம் கழிச்சு வருவீங்க பொறவு வந்து மாமான்னு சொல்லு மாமா கிட்ட வா னா குழந்தை வந்துருமா குழந்தை முன்னாடி என்னை திட்டினா அப்போ குழந்தை எப்படி உங்க கூட வந்துடும் அடிக்கத்தான் செய்யும் ".. என்று கூற,
அவள் கூறிய உண்மை நித்திலனை சுட , "இதை எல்லாம் பார்க்க தான் டி என்ன பத்தி தப்பாக சொல்லிக் கொடுத்திருப்ப அதனால தான் குழந்தை வந்து என்கிட்ட வராம இருக்கான் நான் வராட்டி உனக்கு என்ன வேலை வீட்டு ஆளுங்களை பத்தி சொல்லி குடுக்கிறத விட்டிட்டு " என்று கூறியவன், அவளைப் பார்த்து முறைக்க ,
"என்ன பாத்து முறைக்காதீங்க மாமா இதுக்குத்தான் சொல்றது அடிக்கடி வந்துட்டு போகணும்னு சொல்றது இப்போ பாருங்க " என்று அவளும் கூற ,
"ஆமாமா வந்துட்டாலும் போடி உன் மூஞ்சியில முழிக்க கூடாதுன்னு தான் வரல போதுமா " என முணுமுணுத்துக் கொண்டு நித்திலன் அவனது வீட்டுக்கு சென்றுவிட்டான்..நல்லவேளை அதை பனி மலர் சரியாக கேட்கவில்லை..
பின் இரவு உணவு உண்ணும் சமயம் பார்த்து ஒரு பெட்டியோடு வந்த நித்திலன் தான் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் கடை பரப்பி அனைவருக்கும் கொடுத்தான் ..
மலருக்கும் ஒரு சென்ட் பாட்டில் வாங்கி வந்து இருந்தான் அனைவரும் அந்த பொருட்களை எல்லாம் பார்த்து மிகவும் மலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது..அவன் என்ன தான் ஒதுக்கி வைத்திருந்தாலும் தன் மாமா என்றால் அவளுக்கு விருப்பமே...அதிலும் பெரியவர்கள் பல தருணங்களில் அவனையும் அவளையும் இணைத்து பேசி அவள் மனதில் அவனை எண்ணி ஒரு பாதிப்பு உண்டு என்று கூறினால் மிகையாகாது.
அந்த சென்ட் பாட்டிலை கண்டவள் தன் மாமா தனக்காக வாங்கி வந்து இருக்கிறான் என்று மகிழ்ந்தவள், " செல்வி நாளைக்கு நான் பாரு குளிக்காம எப்படி மணக்கப் போறேன்னு " என நினைத்துக் கொண்டவள் அவளது அறைக்குள் சென்று அந்த சென்ட் பாட்டிலை பொக்கிஷமாக அவளது அலமாரியில் வைத்து பூட்டினாள்..
பிறகு வீட்டுக்கு வந்த சிவகாமியும் நித்திலனும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.. "என்ன மா இன்னும் அக்கா அப்படியே தான் இருக்கா".. என்று வருத்தத்தோடு நித்திலன் தன் சகோதரி ஓடியோடி வேலை செய்வதை பார்த்து கூற,
அவனது அம்மாவோ, "அவ அப்படித்தான் நித்திலா அவ அங்க அனுசரிச்சு போறனால தான் அவ வாழ்க்கை சந்தோஷமாப் போயிட்டிருக்கு அவளுக்கு குறையொன்னுமில்லை அவளை அவங்க நல்லாத்தான் பார்த்துக்கறாங்க அவளுக்கும் அங்க இருக்க விருப்பம் தான் "...என்று கூற,
பிறகு வீட்டில் உள்ள அனைவர் பற்றியும் கேட்டுக் கொண்டே வந்தவன் பனி மலரை விட சிவகாமியே மலரின் விஷயத்தை கூறினார்..
"மலருக்கு தான் படிப்பு சுத்தமா ஏறவே இல்ல இப்ப ஏதோ டுட்டோரியல் காலேஜ் இருக்கலாம் அங்கே படிக்கப் போற அங்க படிச்சு பாஸ் ஆனால் தான் காலேஜ்ல சீட்டு கிடைக்குமாமே " என்று சிவகாமி தனக்கு தெரிந்ததை கூற அவனோ அதை கேட்டு தலையிலடித்துக் கொண்டான், " தத்தி தத்தி "..என வாய்விட்டு கூறி கொண்டவன் அப்படியே உறங்கியும் போனான்..
மறுநாள் காலை எப்போதும்போல டுட்டோரியல் காலேஜுக்கு பனிமலர் தயாராகி தன் மாமன் வாங்கிக்கொண்டு வந்த சென்டை உடல் முழுவதும் பூசி விட்டு கிட்டத்தட்ட கால் பாட்டில் காலி செய்த பின் அதன் அதீத நறுமணம் அவளுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது ..
இருந்தும் செல்வியிடம் கொஞ்சம் பந்தா செய்ய வேண்டும் எனக் கருதியே அவள் தயாராகி செல்ல முத்தரசனும் செந்தாமரையும் நரேனுக்கு மொட்டை அடிப்பதற்கான நேரம் குறிக்க ஜோசியரிடம் சென்று கொண்டிருந்தனர்.. அப்போது இளங்கோவும் வெளியே செல்ல கயல் அவளது வீட்டுக்கு குழந்தை நரேனை தூக்கி கொண்டு வந்தாள்..
"டேய் தம்பி நேத்து ராத்திரி அவங்க எல்லாம் இருந்தனால மரியாதையா பேச கூட முடியல எப்படி டா இருக்க?? அங்க எல்லாம் வேலை எல்லாம் நல்லா இருக்கா?? "..என கயல் குழந்தையை தூக்கிய படி தன் தம்பியிடம் விசாரிக்க
"பரவால்ல அக்கா அங்க எல்லாம் வந்து நல்லபடியா போகுது நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க இன்னும் அப்படியே தான் இருப்ப போல "..என்று தம்பி சரியாக கணிக்க
கயலோ சிரித்து, "எனக்கு என்னடா நல்லா இருக்கேன் அவங்க நல்லா வச்சிக்கிறாங்க எனக்கு என்ன குறை?? ஏன் தம்பி அங்க எல்லாம் எல்லாமே மெசினாமே உண்மையா?? ".. என்று கண்களை விரித்து கயல் கேட்க,
அவள் கூறிய விதத்தை பார்த்து சிரித்தவன் , "அக்கா இங்க வர்ற மாதிரி தான் அங்கேயும் மனுஷங்க வாழறாங்க அமெரிக்கான்னு சொன்னதுமே நாம வாய் பிளக்க என்ன இருக்கு அது இந்த பூமிக்கு வெளியே இருக்குற கிரகம் எல்லாம் இல்ல..அதுவும் ஒரு ஊர் தான் "..என்று கூறியவன்,
" நாங்க என்னத்த கண்டோம் எங்களுக்கு இந்த அடுப்படியே உலகமாக போயிடுச்சு "..என்று கயல் கூற, " உனக்கு என்ன அமெரிக்கா சுத்தி பாக்கணும் அவ்வளவு தானே வா நான் காட்டறேன்".. எனக்கூறி தன் அக்காவையும் ,அம்மாவையும் நேற்று இரவு கூடை நிறைய சாக்லேட் வாங்கி வந்த மாமனை மிகவும் பிடித்துப் போன நரேன் இப்பொழுது , "மாமா மாமா".. என ஒட்டிக்கொள்ள அவனை ஒரு கையில் தூக்கி கொண்டு,
தன் குடும்பத்தாருக்கு தனது போனிலேயே அமெரிக்காவை சுற்றிக் காட்டிக்கொண்டிருந்தான் நித்திலன்..
அந்த சமயம் பார்த்து தயாராகி ஒரே வந்த பனிமலர் எப்போதும் தனது அண்ணன் மகனுக்கு முத்தம் வைத்துவிட்டு தான் அவள் கல்லூரிக்குச் செல்வாள் இல்லையேல் அவன் அழுது புரண்டு விடுவான் இன்று ஆளையே காணவில்லையே என அவனை தேடி அவள் வர ,
அவனது சத்தம் சிவகாமியின் வீட்டு வாசலில் கேட்க அவளும் அங்கு வந்தாள் இவர்கள் அனைவரும் அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு இருக்க ,
இவளோ , " என்ன எல்லோரும் குடும்பமா சேர்ந்து பாத்துட்டு இருக்காங்க??".. என எட்டிப் பார்க்க அவள் முதன் முதலில் கண்டது பிரீத்தியின் முகத்தை தான்..
ஆம் பிரீத்தி மற்றும் அவனும் காரில் உல்லாசமாக பயணம் செய்து கொண்டிருக்க சுற்றிலும் அமெரிக்காவின் ரோடும் அங்கே இருந்த எழிலை தான் அவன் காட்டிக்கொண்டிருந்தான்..
அதை கண்டவளுக்கு அமெரிக்காவை விட ப்ரீத்தியின் முகத்தை கண்டதும் மீண்டும் அவள் முகம் அஷ்ட கோணல் ஆகியது.." ஆளும் மூஞ்சியும் பாரு இதை தான் சிரித்து பார்த்துட்டு இருக்குங்க கிரகம் " .. என முணுமுணுக்க என்ன சத்தம் என்று திரும்பிப் பார்த்தவன் அவளைப் பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டான் அது வேறு இவளுக்கு கோபத்தை கொடுத்தது..
"ஆளும் மூஞ்சியும் பாரு என்ன பார்த்தா மட்டும் முகத்தை திருப்புறது அந்தப் பிரீத்தியை பார்த்தா மட்டும் பல்லை காட்டுறது இப்போ கூட பாரு எப்படி முறைச்சுட்டு இருக்காங்கன்னு பாரு ".. என முணுமுணுத்து விட்டு அவள் செல்ல முனைய அதை நித்திலன் கண்டும் காணாதது போல நிற்க,
கயல் தான் தன் நாத்தனாரை பார்த்து , " என்னடி வந்துட்டு நீ பாட்டுக்கு போற??".. என்று கேட்க,
" நீங்கதான் குடும்பமா பார்த்துட்டு இருக்கீங்களே நான் எதுக்கு உங்களுக்கு தொல்லை.. நான் காலேஜுக்கு போறேன் " என்று முறைத்து கொண்டு கூற, அதை கேட்ட கயலோ , "என்ன டி சொல்ற".. என புரியாமல் கேட்க,
அவளோ, " ஒன்னுமில்ல காலேஜுக்கு போறேன் போதுமா ??".. என்று கூற
நித்திலனோ அதற்கு மட்டும், " அது காலேஜ் இல்ல டுட்டோரியல் காலேஜ் இனியாச்சும் படிச்சு பாஸ் பண்ற வழிய பாரு "என்று கூற, அதைக்கேட்டவளுக்கு புசுபுசுவென முகம் சிவந்து மேல் மூச்சு இரண்டு பெரிதாக இழுத்து விட்டாள் ..
அவளுக்கு வாய் வேறு ஏதாவது சொல்ல துடிக்க அவளது அத்தையை பார்த்து அமைதியாக சென்று விட்டாள் அவளுக்கு உள்ளுக்குள் காந்தியது , "என்ன எப்ப பார்த்தாலும் என்னை மட்டும் சீண்டிக்கிட்டே இருக்காங்க என்ன பார்த்தா மட்டும் இவருக்கு எப்படி இருக்கு ஒரு நாளாச்சு அன்பா பேசி இருக்காங்களா சின்னதுல இருந்து திட்டிட்டே இருக்காங்க ..ஒரு நாள் என்கிட்ட வசமா சிக்குவீங்க மாமா அப்போ இருக்கு உங்களுக்கு ".. என்று புலம்பிக்கொண்டே சென்றாள் ..
அந்த சமயம் பார்த்து ஜோசியர் வீட்டில் அவர் முன்னால் அமர்ந்து கொண்டிருந்த முத்தரசு மற்றும் செந்தாமரையும் நேரம் குறித்து கொடுக்க சொல்ல அவரோ நேரம் கணித்தவர் , "என்ன அரசு உன் வீட்டுல உன்னை தொடர்ச்சியா விசேஷம் தான் போல" என்று சுருக்கமாக கூற ,
"என்ன சொல்றீங்க சாமி ??"..என்று கேட்டார் முத்தரசு ..
இந்த ஜோதிடரிடம் தான் காலம் காலமாக முத்தரசுவின் வீட்டுக்கு ஜாதகம் பார்ப்பவர்..அவர் சொன்னால் சொன்ன மாதிரி இருக்கும் என முத்தரசு நம்புவார்.
அப்படி இருக்க, " ஆமா அப்படித்தான் சொல்லுது முத்து மொட்டை போட்ட உடனே அடுத்த விஷயம் ரெடியா இருக்கு "..என்று கூற,
" என்ன சாமி சொல்றீங்க??"... என்று புரியாமல் விழித்தார் செந்தாமரை..அவரோ, " உன் பொண்ணுக்கு என்ன வயசு ஆகுது ".. என்க,
" 18 சாமி".. என்று அவர்கள் இருவரும் கூற,
" ஹ்ம்ம் அவளுக்கு தான் கல்யாண யோகம் கூடி வந்து இருக்கு "...என்று அவர் கூற
"என்ன அவங்க ஜாதகம் இருக்கா ?? "என அவர் கேட்க பாண்டியம்மாவின் வீட்டை பொருத்தவரை வீட்டின் உள்ள நபர்களின் அனைத்து ஜாதகங்களையும் ஒரு பையில் தான் போட்டு வைத்திருப்பார் அப்போது செந்தாமரை எடுத்து வேகமாக கொடுக்க,
ஜோசியரோ அதை எடுத்து பொறுமையாக பார்த்தவர் , " ஹ்ம்ம் இன்னும் ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் நடந்தா இவங்க ரெண்டு பேரோட வாழ்க்கை அமோகமாக இருக்கும் காலம் தாழ்த்தினால் நிலைமை கையை விட்டுப் போய்விடும் " என்று கூறினார் ஜோசியர்..
அதை கேட்டு அவர்கள் இருவரும் அதிர அவர்கள் குடும்பத்தில் தான் சொந்தத்திலேயே திருமணம் செய்பவர்கள் ஆகிவிட்டது அதனால் அவர்களுக்கு மேற்கொண்டு நித்திலனை பற்றி யோசிக்க ஒன்றும் இல்லை இப்போது கல்யாணம் செய்தால் என்ன என்ற முடிவுக்கு முத்தரசுவும் , செந்தாமரையும் வந்துவிட்டனர் ..
இதைப்பற்றி இன்று இரவே பேச வேண்டுமென முடிவெடுத்து வீட்டிற்கு விரைந்தனர்...ஆனால் அதை கேட்டு நித்திலனும், பனி மலரும் என்ன முடிவு செய்ய போகிறார்களோ???..நித்திலனுக்கு எப்படி இருந்தாலும் இந்த திருமணம் பிடிக்க போவதில்லை என்பது நூறு சதவீதம் நிச்சயம் என்றாலும் பனி மலர் இந்த செய்தியை கேட்டால் என்ன சொல்வாளோ???..
தூவானம் தூறும்..
