தூவானம் 21
தூவானம் 21
அதுலயும் சொந்ததுக்குள்ள தான் கல்யாணம் பண்ணனும்னு சொன்னா எப்படி இருக்கும் என்னால நினைச்சு கூட பார்க்க முடியல... அப்போ நீ எப்போ வயசுக்கு வந்தியோ அப்போவே முடிவு பண்ணினேன் உன்னை கட்ட கூடாதுன்னு அது தான் உன்னை எச்சரிக்கை செய்யவும் செய்தேன்...ஆனால் நீ கேட்கல. ..
இதெல்லாம் தான் என்னை மனசு அளவில் உன்கிட்ட இருந்து ஒதுக்கி வைத்த விஷயம் அதனால் தான் நான் உன்னை விட்டு வெளியேறினேனே தவிர வேறு எதும் கிடையாது"... என்று கூற ,
அதைக் கேட்ட அவளோ, " அதெப்படி என் மாமாவை விட முடியும் சும்மாவே உன்னைய தான் கட்டி இருப்பேன்..ஆனால் நீ தான் வார்த்தைக்கு வார்த்தை நீ எனக்கு வேணாம்னு சொல்லிட்டு இருந்த..அதெப்படி விடுவேன் எனக்கு என் மாமாவை பிடிக்கும் போது என் மாமாக்கும் என்னை பிடிக்க வைப்பேன்னு நினைச்சேன் உனக்கு பிடிச்சதை எல்லாம் விரும்பினேன்...இதோ உன் கண் முன்னாடி நிற்கிறேன் மாமா..
காதல் அப்படினா எனக்கு என்னன்னு கூட தெரியாது மாமா ஆனால் எனக்கு நீ தான் உலகம் என் மூச்சு உனக்காக தான் ..அதுக்காக உனக்கு பிடிக்காமல் நான் உன்னைய கட்டி இருந்தாலும் உன்னை கஷ்டப்படுத்தி வேதனைப்படுத்தி உன்கூட வாழ எனக்கு விருப்பம் இல்லை மாமா அப்படி நம் இணையை கஷ்டப்படுத்தி வேதனைப்படுத்தி நம்ம கூட தக்க வைச்சுக்கறது தான் காதலா?? இல்லையே மாமா நீ என்கிட்ட வந்து சேர்ந்துடுவன்னு நினைச்சு தான் நான் அந்த பேப்பர்ல கையெழுத்து போட்டேன் மாமா நீ வருவன்னு சொல்லி நான் சும்மா இருக்க முடியுமா முயற்சி செய்ய வேணாமா அதான் ஓடோடி வந்திட்டேன் ".... என்க
அதை கேட்ட அவனோ, " உன்னை ஏன் டி நான் புரிஞ்சிக்காமல் போயிட்டேன்...உன்னை இத்தனை நாள் வருத்தப்பட வைச்சுட்டேன் டி ".. என்க
"ச் சா நான் வருத்தம் எல்லாம் படல மாமா ..நீ அப்படி எல்லாம் நெனைச்சுக்காத மாமா ".. என்க
அவள் கூறிய விதத்தை பார்த்து சிரித்தவன், " உன் வீட்டு ஆளுங்கனால தான் "...என்க
" மாமா அதுக்கு தான் மாமா லெப்ட் ரைட் வாங்கிட்டு வந்திருக்கேன் நீ கவலைப்படாத ..பாஸ் பண்ணவே முடியாத பரிட்சையில் பாஸ் பண்ணி இருக்கேன் ..இவ்வளவு தூரம் வந்திருக்கேன்...இப்போ இங்கே படிக்கிறேன் இதுக்கு எல்லாம் காரணம் நீ தான் மாமா எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் மாமா".. என்க
அவள் கூறியதை எல்லாம் கேட்டு அகம் மகிழ்ந்தவன் அவளது முகத்தை கைகளில் ஏந்தி , " நீ என்ன தான் எல்லாத்துக்கும் காரணம் நான்னு சொன்னாலும் நீ தான் டி குட்டி காரணம்...உன்னோட அளவில்லாத தூய அன்பை நான் நேத்து வரை நான் புரிஞ்சிக்கல அவ்ளோ மடையனா இருந்து இருக்கேன்..எனக்கு உள்ள கோபத்தை உன் மேல திணிச்சு இருக்கேன்... உண்மையில் எனக்கு பிரித்தீ மேல இருந்தது நட்பா காதலான்னு தெரியல..ஆனால் உண்மையில் உன்னை கல்யாணம் பண்ண கூடாதுன்னு சொல்லி தான் நான் அவளை விரும்புறதான்னு நானே நெனைச்சுக்கிட்டேன் ஆனால் அவள் போனாலும் எனக்கு பெரிசா எந்த கவலையும் வரல ...அப்போ தான் எனக்கு புரிஞ்சது அவ மேல நான் வைச்சு இருக்கிறது நட்பு தான் காதல் இல்லைன்னு..என்னையும் நீ தான் ஆட்டி வைச்ச ..
எங்கே உன் கூட கல்யாணம் பண்ணி வைச்சுடுவாங்களோன்னு பயந்தேன்...ஆனால் அது தான் நடந்தது அதுவும் உன் பிடிவாதத்தில் எல்லாமே நல்லதுக்கு தான் என்ன தான் நாம ஒன்னு நெனைச்சாலும் அந்த கடவுள் நமக்கு ஒன்னு எழுதி நமக்கு எழுதி இருப்பான்...எனக்காக படைக்கப்பட்ட உயிர் நீ..
உன்னை கஷ்டப்படுத்திட்டேன் உன் அன்பை சத்தியமா அப்போ நான் புரிஞ்சிக்கல..அதுவும் நல்லதுக்கு தான் இப்போ பார் உன்னோட அன்பை நினைச்சு திக்கு முக்காடி போய் இருக்கேன்...என்ன டா தீடீர்னு உன் மாமன் மாறிட்டான்னு நினைக்காத இப்போ தான் உன் மாமன் சரியா புரிஞ்சு இருக்கேன்..
நான் பிரித்தீ கூட இருக்கும் போது உனக்கு எப்படி கோபம் வந்ததோ அதே கோபம் தான் நீ தியாகு கூட பேசும் போது எனக்கும் வந்தது...அதுக்கு பேர் என்னன்னு அப்போ புரியல இப்போ புரியுது டி குட்டி".. என்று கூற
அவளோ அவன் பேசுவதையே அதிசயமாக பார்த்து கொண்டிருந்தாள், " மாமா நீ என்கூட இது தான் அதிகமாக பேசின வார்த்தையா இருக்கும் "... என்று கூற,
அவனோ சிரித்து, " இனி எல்லாம் எனக்கு பேச சமயம் இருக்காது டி இப்போவே நான் லேட் பண்ணிட்டேன் சொந்த மாமா பொண்ணை இப்போ தான் முழுசா சைட் அடிக்கிறேன் எல்லாம் என் விதி ".. என்று கூறி அவளது இடையை பிடித்து தன்னோடு சேர்த்து அணைக்க அவளோ சுகமாக தன் மாமனின் நெஞ்சில் ஒன்றி போனாள்...
ஒன்பது மாதங்களுக்கு பிறகு...
"மாமா ...என்ன மாமா செய்யற எல்லோரும் நமக்காக காத்து இருக்காங்க மாமா"... என்று தனது காலுக்கு அடியில் எதையோ உருட்டி கொண்டிருக்கும் தன் கணவனை தேடி கொண்டிருந்தாள் நிறை மாத கர்ப்பிணியான பனி மலர்..
"இரு டி"... என்று கூறி எழுந்து அவளை படுக்கையில் அமர வைத்து அவன் கீழே அமர்ந்தவன் அவளது காலை அவனது மடியில் வைத்து தான் அவளுக்காக வாங்கி வந்த தங்க கொலுசை அவளது காலில் மாட்டினான்...
அவளோ , "மாமா தங்கம் காலில் போடக்கூடாது மாமா"... என்று கூற,
அவனோ , "என் தங்கத்துக்கு எல்லாம் போடலாம் ஏன் டி எனக்கு உன்னை விட இந்த தங்கம் ஒன்னும் விலை மதிப்பு இல்லை "...என்று கூறியவன் அவள் மறுக்க மறுக்க மற்றொரு காலிலும் தங்க கொலுசை அணிவித்தவன்,
கூடவே அவன் வாங்கி வந்த மிஞ்சியையும் அவளது காலில் அணிவித்தான்..
அதற்கு, பனிமலரோ, "நான் தான் போட்டு இருக்கேனே..அப்புறம் எதுக்கு மாமா இது "...என்று வினவ,
அவனோ, " நம்ம கல்யாணம் தான் எப்படி நடந்தது உனக்கு தெரியும் பழைய மிஞ்சி அப்ப போட்டது நான் அந்த நேரத்தில் என்ன செஞ்சேன்னு ஞாபகமே இல்லை இப்போ ஒவ்வொண்ணா ரசிச்சு செஞ்சிட்டு இருக்கேன் உனக்கு என்னடி கம்முனு இரு "...என்று கூறி மிஞ்சியையும் அணிவித்தவன்,
மெல்ல அவளது காலில் ஒரு முத்தத்தையும் வைத்தான்...அவளோ அவனது செய்கையில் நெளிந்து, " என்ன மாமா பண்றிங்க உங்க அலும்புக்கு ஒரு அளவே இல்ல மாமா இப்போ எல்லாம் எதுக்கு மாமா என் கால் எல்லாம் பிடிச்சிட்டு இருக்கீங்க "... என்று அவளுக்கு அவனது செய்கை இப்படித் இருந்தாலும் வெட்கப்பட்டு கூற ,
அவனோ, " குட்டி உன் காதலுக்கு அளவில்லைன்னு எனக்கு தெரியும் ஆனால் என் காதலை உனக்கு இப்படியெல்லாம் தான் டி உன் மாமனுக்கு உணர்த்த தெரியும் உனக்கு புரியுதா டி ??"...என்று அவன் வினவ,
அவளோ மென்மையாக சிரித்து அவனது தலை கோதி,"புரியுது மாமா நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் எனக்கு எல்லாமே புரியுது ..நீ இதெல்லாம் நீ செய்து தான் உன் காதலை எனக்கு புரிய வைக்கணும்னு இல்லை "..என்று கூற,
அவனும் அவளுக்கு நோகாமல் அவளை அணைத்து முத்தமிட்டான் அதற்குள் கீழே இருந்து சிவகாமி அம்மாள் அழைக்க அவளை தாங்கி கொண்டு படி இறங்கினான் நித்திலன்..
அவன் புதிதாக கட்டிய வீட்டில் தான் அவளுடைய சீமந்தம் இன்று நடக்க இருக்கிறது ஆம் நித்திலன் தன் மனைவியுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இந்தியா வந்தான்..
அவளையும் அவளது வயிற்றையும் கண்டே மேற்கொண்டு அந்த வீட்டின் பெரியவர்களுக்கு எதுவும் கேட்க வேண்டியது இல்லாமல் போனது...அன்றிலிருந்து இன்று வரை அவளை தாங்குகிறான்.. இப்போது வரையும் நித்திலன் தாங்குகிறான்...
கயலோ, " அடியே மலரு என் தம்பியை உன் பின்னாடி சுத்த வைச்சிட்டியே ".. என்று கிண்டல் செய்யுமளவுக்கு நித்திலன் மலர் பைத்தியம் ஆகி இருந்தான்.. அவளின் அளவு கடந்த காதலுக்கு சிறு துளி போல அவனும் அளவு கடந்த காதலை அவள் மீது வைத்துள்ளான்..அவளுக்கு ஒன்று என்றால் நித்திலன் பதறி விடுவான் அந்த அளவுக்கு அவள் மீது காதலை வைத்துள்ளான்..
பெரியவர்கள் அனைவரும் கூடி நிற்க தங்க தேர் போல பவனி வந்த தங்கள் மகளை கண்ட முத்தரசன் மற்றும் செந்தாமரைக்கு சந்தோசம் தாளவில்லை..அதே போல இளங்கோவும் பெரிதாக மாறவில்லை என்றாலும் கயலை பொறுத்தவரை பெரிய அளவில் மாறியிருக்கிறான்...ஆம் அவனும் அவளை பார்த்தால் இப்போதெல்லாம் சுடு சொல் கூறுவதில்லை இளையவர்களை பார்த்து அவர்களின் அன்பை பார்த்து அவனும் மாறி வருகிறான்...முத்தரசன் அன்று மகள் கேட்ட கேள்வியிலே மாறி விட்டார்..செந்தாமரை மட்டும் பழைய படி தான் இருக்கிறார்..ஆனால் அவரது பேச்சு அங்கு எடுபடுவதில்லை...அதனால் அடக்கி வாசிக்கிறார்.. பாண்டி அம்மாவிற்கோ தன் பேரமக்களை இப்படி பார்க்க பெரும் மகிழ்ச்சியாக இருந்தது..
விழா இனிதே துவங்க மலரின் அழைப்பை ஏற்று பிரித்தீ மற்றும் அவளது கணவன் ஜான் பீட்டருடன் வந்து இருந்தாள்.. ஆம் அவள் நித்திலனை விட்டு சென்றதும் அவளது அலுவலகத்தில் வேலை செய்யும் ஆங்கிலேயனை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வர அவளிடம் மலர் பேசி மீண்டும் நட்பை புதுக்கி கொண்டாள்...
தியாகுவும் சங்கவியும் இப்போது அமெரிக்காவில் உள்ளதால் அவர்களால் வர இயலவில்லை...அனைவரும் இணைந்து இருக்க காண்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது...
எண்ணம் போல வாழ்க்கை..எண்ணம் போலத்தான் வாழ்க்கை என்பதற்கு இணங்க அங்கே உள்ளவர்கள் அனைவரும் அவர்களின் நல் எண்ணங்களின் அடிப்படையில் அவரவர் வாழ்க்கை அமைய அவர்களுக்கு கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்..இப்படியே அவர்கள் அனைவரின் வாழ்க்கையும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்து விட்டு நாம் விடை பெறுவோம்..நன்றி..
**சுபம்**
