Share:
Notifications
Clear all

தூவானம் 20

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

தூவானம் : 20

அவனோ அவளுக்கு அதிர்ச்சி முத்தம் கொடுத்திருக்க அதும் நித்திலனிடமிருந்து இப்படி ஒரு அதிர்ச்சி முத்தத்தை அதுவும் அதிரடி முத்தத்தை அவள் நினைத்தே பார்த்ததில்லை...

முதன் முறையாக அவளது மாமன் முத்தமிடுகிறான் அதுவும் வன்மையாக... முதல் முத்தமே அவனுக்கு மோகன புன்னகையை வரவழைக்க, அவளின் இதழின் ருசி அறிந்த கள்வனோ மேலும் அவளை இறுக்கி அணைத்து அவளது இதழில் மேலும் மேலும் கவிபாட ,

அவளோ முதலில் அதிர்ந்தவள் பின் அவனது முத்தத்தில் மயங்கி போனாள் ...அவனது மூச்சுக்காற்று போதுமே அவள் மயங்க முத்தம் அல்லவா தந்து இருக்கிறான்..அவள் மயங்காமல் இருப்பாளா??

ஆனால் தன் மாமா இன்று தான் முதன் முறையாக அவனாக தன்னருகே வந்து முத்தமிடுகிறான்..இது கனவா நனவா?? நிஜம் என்று தான் என்னுடைய உதடு கூறுகிறது...ஆனால் அவன் தெரிந்து தான் முத்தமிடுகிறானா?? இல்லை சுயநினைவு இல்லாமல் செய்கிறானா என தெரியாமல் நொந்தவளுக்கு சற்று முன் ஏறிய அவன் மீது அவள் வைத்துள்ள போதை எல்லாம் வடிந்தது போல இருந்தது..

அவனை சரக்கடித்து போதையில் போதம் இல்லாமல் முத்தமிட நானும் மயங்கி இருக்கிறேனே என அவள் விலக பார்க்க அவனது பிடியோ இரும்பு பிடியாக மாறி அந்த தள்ளாடும் போதையிலும் அவளை தூக்கி எடுத்தவாரே கட்டிலுக்கு செல்ல அவளோ, " இறக்கி விடு மாமா உன்னாலேயே சரியா நடக்க முடியல இதுல என்னை தூக்கிட்டு வேற போற இப்போ இரண்டு பேரும் விழுவோம் பாரு"....என்று கூற

அவனோ அதை கேட்டு அவளது இடையை அழுத்தி பிடித்து கட்டிலில் அவளை பூ போல மெதுவாக இறக்கி விட்டவனோ அவளை ஒரு மாதிரியாக பார்க்க,

அவனது பார்வை வேறு அவளை ஏதோ செய்ய , "என்ன செய்றீங்க நம்ம ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்கோம் அது தெரியுமா?? எதுக்கு என்னை தூக்கிட்டு வந்திங்க??"... என்று வினவி எழ முயல,

அவனோ எழுந்த அவளை மீண்டும் படுக்கையில் தள்ளி அவள் எழாமல் இருக்க அவளின் இடது வலது புறமாக கால்களால் அவளை சிறை செய்து, "பிரிஞ்சி இருந்தா நீ ஏன் டி இங்க வந்த?? இப்போ எதுக்கு டி என்னை மாமான்னு சொன்ன ".. என்று கூறியவன் , " அப்புறம் இந்த தாலி அதை கூட கழட்டாமல் வெச்சு இருப்ப போல "..என அதிரும் அவள் முகத்தை பார்த்து கொண்டே அப்படியே அவள் மீது விழுந்தான்...

இந்த அதிர்ச்சியை அவள் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை அவனா என் மீது அத்துமீறி விழுந்து இருக்கிறான் என நினைக்கும் போதே அவளது இதழில் கவிபாட தொடங்கி விட்டான் அவன்..

இங்கே வந்தது முதல் அவள் அணியும் தொல தொல பனியனை சற்றும் அவள் எதிர்பார்க்க முன் தூக்கி அவனது முகத்தை அதில் நுழைத்து கொண்டான்...அவளுக்கு அதிர்ச்சி அடைய கூட அவகாசம் இல்லாமல் அவளுடைய உணர்வுகள் கிளர்த்து கொண்டு எழுந்தன..

பெண்மையின் வாசமும் அவளின் உடலின் நெளிவுகளை அளந்தவன் விரல்கள் பெண்மையின் சுகத்தை முதன்முதலாக உணர்ந்த அவளின் ஆண்மகன் மேலும் மேலும் முன்னேற அவளோ நிலை குலைய துவங்கினாள்...

அவன் தொடும் நேரம் தனது கணவன் என்ற எண்ணம் மட்டுமே அவளுக்கு தோன்ற வேறு எந்த விதமான எதிர்மறை எண்ணங்களும் எழ வில்லை...

அவனது சிறு கண் பார்வை போதுமே அவள் மயங்க , அவனின் விரல்களின் ஜாலத்தில் தன்னை தொலைத்தவள் அந்தநேரம் பார்த்து அவளுக்கு அவன் சுயநினைவு இல்லாமல் தொடுகிறானோ என நினைக்க அதை கூட நினைக்க விடாமல் அவன் மேலும் முன்னேறி அவளது ஆடை வழியாக தன் முகத்தை அவளது கழுத்து வழியே எடுத்தவன் மூச்சு விட கூட நேரமின்றி தொடர் முத்த போராட்டங்களால் அவளை ஆலிங்கனம் செய்தான்..அவளோ அவளது செயல்களால் நெளிய கூட முடியாமல் அவனுள் அகப்பட்டு போனாள்...

அவள் நினைப்பது போல அவனுக்கோ நினைவில்லாமல் இல்லை அவன் முழு நினைவோடு தான் அவளோடு கூடலில் ஈடுபட்டான்...இதோ அவளை அதிரடியால் அவன் வசமாக்கி இடையில் மென்மையான முறையில் கையாண்டு இறுதியில் வன்மையில் அவன் முக்குளிக்க இதோ தொடத் தொட மலரும் பூவை போல இருவருக்கும் அழகிய சங்கமம் அங்கே மலர்ந்தது...

விடியல் யாருக்கும் காத்திராமல் அழகாக விடிய தன் மாமனை முழுக்க கட்டிக்கொண்டு படுத்திருந்தாள் மலர்..அவளுக்கு நேற்றைய இரவின் தாக்கம் இனியும் குறையவில்லை போலும் இதழ்களில் மென்னகை புரிய படுத்திருக்க அவனும் இனி உன்னை பிரியேன் என அவனை அணைத்து கொண்டு படுத்து இருந்தான்..

அவனது கை வளைவில் சுகமாக படுத்து கொண்டு இருந்தவளுக்கு தீடிரென அவனது அணைப்பு இறுக அதில் அவளது சுகம் தடைபட மெல்ல கண்களை விழித்தாள் ..

சுற்றும் முற்றும் பார்க்க ஒரே போர்வைக்குள் ஈருயிர் ஓர் உடலாக படுத்து கிடந்த இருவரின் கோலத்தையும் கண்ட அவளுக்கு நேற்று நடந்த காதல் களியாட்டம் நினைவுக்கு வர அதில் வெட்கப்பட்டவள் ஓரிரு நிமிடங்கள் வேண்டும் என்றே அவனது அணைப்பில் சுகமாக கழிய அவனிடம் சிறு அசைவு தெரிய அவளுக்கு ஒவ்வொரு குற்ற உணர்வு மேல் எழும்பியது...

ஆம் நேற்று இரவு அவனுடன் போதையில் இருந்தவனுடன் உல்லாசமாக சல்லாபித்து விட்டோமே என அவள் நினைக்க ,

"மாமா இப்போ எழுந்து ஏதாவது கேட்டா என்ன சொல்றது?? மாமாக்கு இது தெரிஞ்சு நடந்ததா இல்லை தெரியாம நடந்துச்சான்னு தெரியலையே?? பக்கத்தில் வந்ததும் நான் என்னையே மறந்துட்டேன் "... என்ன செய்யறது என முழித்தவள்,

" சரி சத்தமே போடாம எழுந்து போயிடுவோம் மாமாவா கேட்டா மட்டும் பதில் சொல்லுவோம் இல்லாட்டி எதுவும் சொல்ல வேணாம்...".. என அவளாகவே ஒரு பிளான் போட்டு மெல்ல அவன் அருகே இருந்து எழுந்தவள் மெல்ல எழ,

அவளுக்கு அரை மணி நேரம் முன்பே கண் விழித்த அவனோ அவளை எழுப்ப வேண்டாம் என இல்லாத செய்கை எல்லாம் உறங்கும் அவளிடத்தில் செய்து அவளை எழுப்பி விட,

அவளிடம் அசைவு வருவது தெரிந்ததும் மெல்ல கண்களை மூடிக்கொண்டு அவன் மெல்ல ஒன்றும் அறியாதவன் போல கண்களை மூடிக் கொண்டான்..

அவளோ மெல்ல கையில் கிடைத்த உடைகளை எல்லாம் அணிந்து கொண்டு எழுந்தவள் வெளியே செல்ல எத்தனிக்கும் முன்,

கண்களை திறந்தவன், " எங்கே போற??"... என்று கேட்க சட்டென்று கேட்கவும் அவளோ பீதியில் உறைந்து மெல்ல குற்ற உணர்வில் திரும்பினாள்...அவளது முகத்தை வைத்து அவளது மனதை அறிந்து கொண்டவன் உள்ளுக்குள் சிரித்து வெளியே விரைப்பாக , "என்ன முழிச்சிட்டு இருக்க எங்கே போற என்னோட ட்ரஸை போட்டுட்டு ".. என கேட்க ,

அவளோ, " ஐயோ அவசரத்தில மாமா ட்ரஸை போட்டுட்டோமே" என மானசீகமாக தலையில் அடித்து," அது அது வந்து மாமா அது வந்து"... என பனி மலர் திணறினாள்..

அவனும் அவனது உடலையும் போர்வைக்குள்ளே ஒரு நோட்டம் பார்த்து விட்டு , "என்னடி இது என்ன இதெல்லாம் "...என்று கோபத்தோடு கேட்க ,

"அது அது ஒன்னு இல்ல மாமா நீங்க தான் நேத்து தண்ணி அடிச்சுட்டு என்கிட்ட ".. என்று அவள் குழறிக் குழறி கூற,

அதைக் கேட்ட அவனோ நான் உன் புதுசாவா குடிக்கிறேன் ...நீ தான் டி ஏதாவது செய்து இருப்ப உண்மையை சொல்லு டி "..என்று கூற,

அவளோ, " இல்ல மாமா நான் ஒன்னும் செய்யல நீங்க தான் என் கிட்ட வந்து நான் எவ்வளவோ வேண்டாம்னு சொன்னேன் ஆனா நீங்க தான் கேட்கல "..என அவள் வெட்கப்பட்டு கொண்டே கூற,

அவனோ அவளது வெட்கத்தை கண்டு மென்னகை அவள் காணாமல் புரிந்து அவள் முன்னே தலையில் அடித்துக்கொண்டு , "அப்போ நமக்கு உள்ள எல்லாமே நடந்துடுச்சு??".. என கூற,

"ஆமா மாமா".. என பாவமாக பதிலளிக்க,

அவனோ, " நானே போதை இல்லாமல் இருந்தா உனக்கு எங்கே டி போச்சு அறிவு இப்போ என்ன செய்யறது எல்லாம் என் தலையெழுத்து உன் கூட வாழ விதி இருக்கு இனி அதை வச்சு சாக்கு சொல்லி என் கூட வாழ போற அப்படித்தானே "..என உள்ளுக்குள் சிரித்து வெளியே விறைப்பாக கூற,

அவளோ அவன் கூறியதில் பொங்கி, " நீங்க அப்படியெல்லாம் என் கூட வாழ வேண்டிய அவசியமே கிடையாது ...நான் உங்க கிட்ட சொன்னேனா என் கூட வாழுங்கன்னு ஏதோ தப்பு நடந்து போச்சு ...நீங்க அப்படி சகிச்சு என்கூட வாழ வேணாம்... எனக்காக தியாகு இருப்பான் "...என்று அவனை வெறுப்பேற்ற வேண்டும் என்றே கடைசி வாக்கியத்தை சேர்த்து மலர் கூற ,

" செருப்பு பிஞ்சிடும் இனியும் அவன் இருக்கா இவன் இருக்கான்னு சொல்லிட்டு இருந்தா என்ன டி நெனைச்சுட்டு இருக்க ஏன் டி அவன் உன்கூட வந்தா அவன் பொண்டாட்டிக்கு யாரு டி இருப்பா??..இனி அப்படி ஏதாவது பேசு உனக்கு இருக்கு..."... என்று மிரட்டும் தொனியில் நித்திலன் கூற,

அதை கேட்ட அவளோ, " அப்போ மாமாக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சா "...என திருதிருவென முழிக்க

அவளது திருட்டு முழியை பார்த்து, " எல்லா விஷயமும் எனக்கு தெரியும்..இனியும் தெரியலனா என்னை மாதிரி ஒரு முட்டாளை பார்க்க முடியாது "... என கூற,

அவளோ நெளிந்து கொண்டே, " மாமா எல்லாமே தெரியுமா ??"...எனக் கேட்க , "ஆமா உன்னோட பிராடுத்தனம் எல்லாமே தெரிஞ்சிடுச்சு ...தியாகு எல்லாம் சொல்லிட்டான் இனி அவன் சொன்னான்னு சொல்லி அவனை மிரட்ட போயிடாத அவன் சொன்னதும் நல்லது தான் நான் கேட்டதால் தான் அவன் சொன்னான் "..என நித்திலன் பதிலளித்தான் ..

அதும் அவன் லேசான புன்னகை முகத்துடன் கூறவும் அதைக்கேட்ட அவளுக்கோ கண்களில் கண்ணீர் வந்தது ..அது ஆனந்தக் கண்ணீர் இதுவரை அவள் அழவில்லை...ஆம் அவனை திருமணம் செய்தது இதோ சற்று முன் பேசியது வரை அவள் கண்ணில் அழுகை வரவில்லை...பலரும் கவலை வேண்டாம் என சொல்லும் போதெல்லாம் அழவில்லை...

ஆனால் அவளைப் பார்த்து முதன் முறையாக அவன் மாமா புன்னகைக்கிறான் என்றதும் அதை கண்ட அவளுக்கு அழுகை முட்டியது... பேச்சு தடைபட்டது ...கண்களாலேயே அவனுடன் பேச அவள் முனைந்தாள் இருந்தாலும் அவளால் முடியவில்லை...

அவளது செய்கைகளைக் கண்டு அவன் அவளை ஒரு கையை தூக்கி வா என அழைக்க முயல்குட்டி போல் துள்ளி சாடி தான் இருந்த கோலம் மறந்து தன் மாமனின் மார்பில் புதைந்து போனாள் பெண்ணவள்...

அவனோ அவளை இறுக்கி அணைத்து கொண்டு பேசாமல் இருந்தான்..அவனது கண்ணிலும் சிறு துளி நீர் வந்தது என்னவோ உண்மை தான் தனக்காக உண்மை காதலை கண்டு கொண்டாதலோ பிறந்தது முதல் அவளிடம் காணாத காதலை அவன் கண்டவனுக்கு அவளுள் தன்னை தொலைக்க துடித்த மனதை அடக்கி கொள்ள அவளோ எப்போதோ நதி போல் பாய்ந்து அவனுள் நுழைந்து விட்டாளே... இனி அவளை வேதனைப்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுள் வந்தது..

இப்படி அவன் யோசித்து கொண்டு இருக்க அவன் மார்பில் சாய்ந்து இருந்தவளுக்கு எப்படி சட்டென மாமா மாறினார் என சந்தேகம் எழ, "மாமா நமக்குள்ள இது நடந்ததுனால நீங்க என்னை ஏத்துக்கலையே ?? "...என அவள் எழுந்த கேள்வியை அவனிடம் கேட்க,

அதை கேட்ட அவனும் அவளது முகத்தை நிமிர்த்தி பார்த்து, "என்ன தான் நான் சரக்கு அடிச்சு இருந்தாலும் சாப்பாடு தான் டி சாப்பிடுகிறேன்..வேற எதுவும் இல்லை...ஏன் டி தண்ணி அடிச்சா உனக்கும் மத்தவங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் போயிடுமா டி?? நானா விருப்பப்பட்டு தான் உன்னை தொட்டேன் நானுமே நேத்து இதே சந்தோஷத்தோட தான் இருந்தேன்... அந்த சந்தோஷத்தை உன்கூட கொண்டாடுவதற்கு தான் நான் தண்ணி அடிச்சேன்... சும்மா உன் கிட்ட ஒரு விளையாட்டு காட்டலாம்ன்னு தான் நினைச்சேன்...அதுக்கு தான் புல் போதை ஆன மாதிரி நடிச்சேன்...இன்னிக்கு காலையில் கூட அப்படி பேசினேன் ஆனா அதுக்கு மேல உன்னை கஷ்டபடுத்த எனக்கு பிடிக்கல டி எனக்கு உன் மேல பாசம் எப்போதும் இருக்கும் டி...

ஆனா அதை விட உங்க வீட்டு ஆளுங்க என்னையும் என் குடும்பத்தை பத்தி பேசின பேச்சுகள் தான் என் குடும்பத்துகிட்ட இருந்து ஒதுக்கி வைத்தது...

அடுத்தவங்க கையேந்திட கூடாது என்கிற ஒரு எண்ணம் எனக்குள்ள அப்போ இருந்து தான் வந்தது...என்ன தனியா என எதுவுமே சொந்த முயற்சியில் செய்ய விட மாட்டேங்குறாங்களே அப்படிங்கற ஒரு எரிச்சல் இதெல்லாம் தான் என்னை வெறுக்க வெச்ச காரணங்கள்..

அந்த கோபத்தை எல்லாம் தான் உன்கிட்ட நான் காட்டினேன்..ஆனால் உன்னை பிடிக்காமல் எல்லாம் இல்லை ...அதை விட என் குடும்பத்த அவங்க ஒதுக்கி வைத்தது...செயல்ல ஒதுக்கி வைக்கலனாலும் வார்த்தைகள் தான் டி குத்துது...அதுனால தான் வெறித்தனமா படிச்சு இங்கே ஓடி வந்தேன்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top