தூவானம் 2
தூவானம் : 2
ஜெகதிஸ்வரன் மறைந்த பின் ஜெகதிஸ்வரன் உருவாக்கிய கடனையும் தன்னுடைய பிள்ளைகளையும் மணாளன் கவனித்து வந்தாலும் முத்தரசனுக்கும், இளங்கோவிற்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் ஒன்றும் சிவகாமி, கயல் மற்றும் நித்திலனுக்கு கொடுக்கப்படவில்லை என்று தான் கூற வேண்டும்..
மகளை கட்டி கொடுத்து வேறு வீட்டுக்கு அனுப்பி விட்டோம் மகள் வேறு குடும்பத்தில் ஒருத்தி என்று நினைத்து விட்டார்களா என தெரியவில்லை.. அதே போல மகள் குடும்பம் விருந்துக்கு வந்து வெகு காலமாக தங்கள் வீட்டில் தங்கி இருக்கிறார்கள் என நினைத்து கொண்டனரா எனவும் தெரியவில்லை அதுவும் அவர்களுக்கே வெளிச்சம்..
இதற்கு எல்லாம் முக்கிய காரணம் சிவகாமியின் தாழ்வு மனப்பான்மை தான் காரணம் என்று தான் கூற வேண்டும்..ஆம் கணவன் உள்ள சொத்துக்களை எல்லாம் அழித்து விட்டு ஆக ஒரு வீடும் சிறு காணி நிலமும் விட்டு வைத்திருக்க அந்த வீட்டில் அவர் தங்கி இருந்தாலும் தன் தந்தையின் வீடே சரணம் என அவர் அடைந்தாலும் அவரால் இயன்ற வேலையை செய்து கொடுத்தே அவர் இருந்து வந்தார் ..
அதிலும் பிள்ளைகள் படிப்பு செலவு முதல் அனைத்து செலவுகளுக்கும் தன் வீட்டை சார்ந்து இருக்க உரிமையாக சிலதை பெறும் அதிகாரம் இருந்தாலும் சிவகாமி தன் பிள்ளைகளை அடக்கி ஒடுக்கியே வளர்த்திருந்தார்..
எதிலும் இளங்கோவிற்கு பிறகே அனைவருக்கும் அதே போல பனி மலர் பிறந்த பின்னும் அப்படியே அதை இன்று வரை அவர் கடைபிடித்து வர தாயின் ஒடுக்கத்தில் வளர்க்கப்பட்ட பிள்ளை கயல்விழி தாயின் மறுபதிப்பாய் வளர நித்திலனுக்கு மட்டும் இந்த விஷயம் சுத்தமாக பிடிக்கவில்லை..
அங்கே நிகழும் ஏற்றத்தாழ்வு வேறு அவன் மனதில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையை விதைத்து இருக்க இப்போது அது ஒரு விருட்சமாக வளர்ந்து நிற்கிறது...தன்னிடம் ஒன்றும் இல்லை என்று தானே பிறர் காலை தன் தாய் பிடிக்க வேண்டி இருக்கிறது அதை மாற்ற வேண்டும் என்றே அவன் நினைக்கிறான்..
உண்மையில் அவனுக்கு அவனது தாயின் குடும்பத்தை விட்டு எங்கேயாவது ஓடி போக எண்ணுகிறான் அவ்வளவே...
மேலும் அவன் சிறு வயதிலேயே நன்றாக படிக்கும் மாணவன் என்பதால் மெரிட்டில் சீட் கிடைத்து படித்து வருகிறான்..வெளிநாட்டுக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதில் தன்னை நிலைப்படுத்தி வருகிறான்...
இப்படி ஒரு நிலையில் செல்லும் அவனை தடை செய்யும் விதமாக எப்போதும் நடக்கும் தன் தாய் மாமன் குடும்பத்தை எண்ணி நொந்து கொண்டு பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தவன் மலரை எண்ணி, " நீ இப்போ தான் வயசுக்கு வரனுமா டி??"... என வாய் விட்டே புலம்பி கொண்டு பயணம் ஆகி கொண்டிருந்தான்..
ஆனால் இத்தனை தலைவலிக்கும் காரணமானவளோ தன் நித்திலன் மாமாவை நினைத்து கொண்டிருந்தாள்..ஆம் நேற்று காலை அவளும் அவளது நண்பர்களும் மலரின் சேர்ந்து வேறு ஒருவரின் தோட்டத்தில் மாங்காய் பறித்து கொண்டு இருக்க அப்போது மலர் மரத்தின் உச்சியில் இருந்து கொண்டு , "ஹே இது போதுமா டி என்று கேட்க??"...
அவளது தோழிகளோ, "அதுக்கு மேல இருக்கு பாரு புள்ள அந்த காயை பறி அது தான் ருசிக்கும்"... என கீழே இருந்து ஐடியா கொடுக்க, அவளும் அவர்கள் கூறிய இடத்தை நோக்கி தாவி ஏறினாள்..
பனி மலருக்கு மரம் ஏறுதல் ஒரு பொழுதுபோக்கான விஷயம் ஆம் அவளுக்கும் அவளது தோழிகளும் கை கால் உள்ள குரங்குகள் என்றே கூற வேண்டும்..
எங்கேயாவது ஒரு இடத்தில் தாவி கொண்டே இருப்பார்கள்..அவர்கள் இருக்கும் இடம் கலகலவென இருக்கும்..அதில் குறிப்பாக பனி மலர் அறுந்த வால் என்றே கூற வேண்டும்.. பூசிய மேனிக்கு சொந்தக்காரி படிப்பு பாகற்காயாக கசந்தாலும் தன் மாமன் நித்திலனுக்காக படித்து வருகிறாள்..
ஆம் அவளை அவள் வீட்டில் உள்ள அனைவரும் செல்லம் கொஞ்சி அவர்களது தலையில் தூக்கி வைத்தாலும் அவளை அவளது மாமன் மட்டுமே எப்போதும் கரித்து கொட்டிக் கொண்டிருப்பதால் அவனிடம் ஒரு முறையாவது நல்ல பெயர் வாங்கிட மாட்டோமா என அவள் முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்..
ஆனால் அது தான் நடக்கவே இன்றளவும் நடக்கவில்லை...இனியும் நடக்க போவதுமில்லை அது வேறு விஷயம்..
ஆம் அவன் தான் பெரியவர்கள் மீதுள்ள கோபத்தை எல்லாம் இவளிடம் காட்டி கொண்டிருக்கிறானே.. அவள் ஒன்றும் அவனுக்கு சளைத்தவன் அல்ல..அவனிடம் மட்டும் என்னவோ அமைதியின் திரு உரு போல நடித்து வைப்பாள்...அவன் காணாத போது அவளது சேட்டைகளை அவிழ்த்து விடுவாள்...
மரத்திற்கு கீழே நிற்பவர்களுக்கு சரசரவென ஒரு சத்தம் வர சத்தம் வரும் திசையை நோக்கி பார்த்த அவளது நண்பிகளுக்கு ஒரு பாம்பு ஒன்று தென்பட, " ஐயோ பாம்பு ..மலரு புள்ள ஓடிக்கோ "..என அனைவரும் பயத்தில் தெறித்து விட்டனர்..
நண்பர்கள் சரசரவென ஓடுவதை பார்த்து , "எங்க டி போறீங்க??".. பனிமலர் கேட்க , "பாம்பு பாம்பு".. என கத்திக் கொண்டே அவளது நண்பர்கள் ஓட்டம் பிடித்தனர்... அதைக்கண்டு ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து மாங்காயை கடித்துக்கொண்டே,
" போங்க டி பேடி பிள்ளைகளா..ஒரு சின்ன பாம்புக்கு பயப்படுறீங்க உங்களுக்கு எல்லாம் மாங்காய் வேணாமா?? ..அப்போ எல்லாமே எனக்கு தான்.."... என சிரித்துக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்தாள்...அவள் மரத்தின் மீது அமர்ந்திருக்கும் தைரியத்தில் அவள் கூறி கொண்டிருந்தாள்..
பாம்பும் வந்த வழியே சென்றுவிட இவள் அமர்ந்தது அதிக வலுவில்லாத ஒரு மரத்தின் கிளையாக இருக்க, அதில் அமர்ந்து மடியில் கட்டி வைத்திருந்த மாங்காயை காலை தொங்கபோட்டு அமர்ந்து கொறித்து கொண்டிருந்தாள்..
அவளுக்கோ மிகவும் சந்தோசம் யாருக்கும் பங்கு கொடுக்க வேணாமே என்று, " மலரு வீட்டுக்கு போனதும் அம்மியில் மாங்காயும் , பச்சை மிளகாயும் கொஞ்சம் கல் உப்பும் வெச்சு இடித்து சாப்பிட்டா எப்படி இருக்கும்??? " என மனதுக்குள் எச்சில் ஊற அதை எண்ணி ஒரு மாங்காயை கடித்து கொண்டிருந்தாள்..
அந்த நேரம் பார்த்து மரத்தின் கிளை சட்டென்று இவளது பாரம் தாங்காமல் ஓடிய , "ஐயோ அம்மா ".. என பனிமலர் கத்தவும் அந்த வழியாக நித்திலன் வரவும் சரியாக இருக்க அந்தக் காட்சி நித்திலன் கண்களில் பட்டது..
வேகமாக ஓடிச்சென்று மேலே இருந்து கீழே விழும் அவளை அவனது கைகளில் தாங்கினான்..அவளும் மிக சரியாக அவனது கைகளில் விழுந்தாள்...
அதும் அன்றைய தினம் அவள் பாவாடை சட்டை அணிந்து இருக்க, அவள் விழுந்த விசையில் அவனது ஒரு கை அவளின் வெண்ணிற இடையிலும் மற்றொரு கை அவளது பாவாடையிலும் இருக்க அதிலும் அவனது கை அவள் விழுந்து விட கூடாதே என நினைத்து அவளது தொடையில் அழுத்தமாக பதிய அவளுக்கு என்னவோ புதிதான உணர்வு எழுந்தது..
அவள் சிறு மொட்டு தான் இருந்தாலும் அந்த பருவத்தில் அவனது தொடுகையின் உணர்வு அவளுக்கு என்னவோ செய்தது...அவனது அழுத்தமான தொடுகையில் கூசி சிலிர்த்தவள் பதறி அவனிடம் இருந்து விடுபட முயல அவனும் அவளை காப்பாற்றியதும் கீழே இறக்கி விட முயல இவளும் இவன் தொட்டதும் துள்ளவும் நிலை தடுமாறி கீழே விழுந்தாள்..
"ஐயோ அம்மா "...என விழ
"ஹே அறிவு இருக்கா சோத்து மூட்டை அது தான் நான் இறக்கி விடுவேன்ல அதுக்குள்ள என்ன அவசரம் இப்போ பாரு கீழே விழுந்துட்ட??"... என கடிய
அவளோ அவனது கேள்விக்கு பதில் அளிக்காமல் எழ முடியாமல் தடுமாறி கொண்டிருந்தவளை கையை பிடித்து தூக்கி நிறுத்தியவன் அவளது கால் முட்டியில் தான் அடிப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து , "ஹே எங்கே காட்டு என்ன ஆச்சுன்னு பார்க்கலாம்"... என்று அவளது பாவாடையை தூக்க போக
"ஹா ..என்ன பண்ணுறீங்க எனக்கு ஒன்னும் இல்லை விடுங்க மாமா "...என விலக
இவனோ அவளது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், "ஹே காட்டு டி"... எனவும்
"எனக்கு ஒன்னும் இல்லை மாமா"... என்று மேலும் தயங்க
அதில் கடுப்பான அவனோ, " யாரை கேட்டு டி மரத்தில ஏறின??"... என்க
"யாரை மாமா கேட்கணும்??..நான் மட்டும் வரல என்னோட பிரின்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து தான் வந்தோம் அவங்க எல்லோரும் பாம்பை பார்த்து ஓடி போய்ட்டாங்க சும்மா என்னை மட்டும் திட்டாதீங்க "...என்று சிணுங்க
அதை கேட்ட அவனோ, "ஏன் டி அறிவு இருக்கா ?? மரத்தில ஏறி கீழே விழுந்ததும் இல்லாமல் ஏட்டிக்கு போட்டியா பேசிட்டு இருக்கியா??.. நான் வந்ததால இப்போ பெரிசா ஒன்னும் ஆகல நான் வரலனா என்ன டி ஆகறது ??" ...என காதைப் பிடித்து முறுக்க
"ஐயோ மாமா வலிக்குது மாமா இதுக்கு பேசாமல் விழுந்தே இருக்கலாம்..நான் என்ன விழுவேன்னு கனா கண்டேனா போங்க மாமா எப்போ பார்த்தாலும் திட்டிட்டு ".... என கூற,
அதை கேட்டு மேலும் காதை பிடித்து பலமாக அவன் முறுக்கவும் வலியால் துடித்தவள் , "அப்பா வாங்க பா மாமா என் காதை பிடிச்சு முறுக்குது"... என எதிர் திசையை பார்த்து கத்தவும்,
இவனோ அந்த பக்கம் திரும்பி முத்தரசன் தான் வந்து விட்டாரோ என எண்ணி திரும்பி பார்க்கவும் அவளோ இது தான் சமயம் என எண்ணி சிட்டாக பறந்து விட்டாள்..
அவனோ , " அரை காப்படி சைசில் இருந்துட்டு செய்யற வேலையை பாரு".. என்று முனகி அவள் பின்னே சென்றான்...
ஆனால் அவனுக்கு ஒன்றும் பெரிதாக இந்த உரையாடல் பாதிக்க எல்லாம் இல்லை..அவள் வீட்டினர் கூறுவது போல அவன் கண்ணுக்கும் அவள் குழந்தையாக தான் தெரிகிறாள்..
அவளுக்கும் அந்த உரையாடல் பாதிக்கவில்லை என்றாலும் அவனது தொடுகை அவளுக்கு என்னவோ ஒரு வித உணர்வை அளித்தது என்னவோ உண்மை தான்..
அவனது முரட்டு தொடுதலை உணர்ந்தவள் அன்றைய தினம் முழுவதும் மந்திரித்து விட்ட கோழி போலவே சுற்றிக் கொண்டிருந்தாள்..
அவளுக்கு அவன் கை இன்னும் அதே இடத்தில் இருப்பது போலவே இருக்க , "என்ன நான் தப்பு தப்பா நெனைச்சுட்டு இருக்கேன் கருப்புசாமி ராத்திரியில கண்ணை குத்த போகுது பாரு"... என்று ஏதாவது தவறு செய்தால் பாண்டியம்மா மிரட்டுவதற்காக கூறும் விஷயம் இப்போது சரியாக வேலை செய்ய,
அவளோ பயந்து போய் எதிலும் நாட்டமில்லாமல் அவளது அறையிலே முடங்கி போனவள் இரவானதும் அப்படியே உறங்கியும் போக,
கனவில் கருப்பு சாமி வந்து அவளது வயிற்றில் குத்துவது போல இருக்க தாங்கொன்னா வலியை உணர்ந்தவள் கத்த அவளது படுக்கையில் ரத்தத்தையும் பார்த்ததும் மேலும் பயந்து போய் ஊரையே கூட்டி விட்டாள்...
இதோ இளங்கோ கூறியது போல ஊருக்கு வந்த நித்திலன் கடுகடுவென அமர்ந்து இருக்க, விசயம் அறிந்து பனி மலரை காண வந்த நெருங்கிய உறவினர்கள் அமர்ந்து இருக்க அவர்களின் கேலி பேச்சுக்களை சகிக்க முடியாமல் அமர்ந்து இருந்தான் நித்திலன்..
"ஏலே முத்தரசா இன்னும் என்னயா உன் பொண்ணுக்கு தான் மாப்பிளை தயாரா இதோ ராசா மாதிரி பன மரம் ஒசரத்துல நிக்கிறானே அப்புறம் உனக்கு என்ன கவலை...உன் வீட்டோட இருப்பானே??".. என்று நித்திலனை பார்த்து ஒரு பெருசு கூற,
அதைக் கேட்டு முத்தரசன் மீசையை நீவி கொண்டு , "ஆமா மாமா நாங்க காசு பணம் பாக்குறது இல்ல நாங்க சொந்தத்தை தான் பார்க்கிறது".. என்று பெருமையாக கூற அந்த பேச்சு நித்திலன் மனதுக்குள் முள் போல குத்தியது ..
"என்கிட்ட பணம் இல்லைன்னு சொல்லி குத்திக்காட்டி இருக்கீங்களா?? நான் என்ன நாயா உங்க வீட்டிலே இருக்க?? ஒரு நாள் எனக்கும் காலம் வரும் ஆனா அதுக்கு தான் விடாமல் என் பாதையில் குறுக்கிட தான் நீங்களும் இருக்கீங்களே".. என தன் தாய்மாமனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அப்படியே அங்கே இவனையே பார்த்துக் கொண்டிருந்த இளங்கோவை ஒரு பார்வை பார்த்தவன் அமைதியாக நின்றான்..
கூடவே தனது தாயும் தமக்கையும் ஓடி ஓடி வேலை செய்ய நிறை மாத கர்ப்பிணி என்றும் பாராமல் அவள் வேலை செய்வதைப் பார்த்து வருத்தம் அடைந்தவன், " நீங்க கனவு கண்டிட்டு இருங்க இந்த குடும்பத்தில் மட்டும் நான் பொண்ணு எடுக்க மாட்டேன் கவலையே படாதீங்க..என் அக்காவோட முடிஞ்சது இந்த குடும்பத்து சங்காத்தம் "..என்று மனதுக்குள் சூள் உரைத்தவன்,
அவ்விடம் வீட்டுக்குள் செல்ல அங்கே அவனது பாட்டியும் கூட சில பெண்மணிகளும் கூட்டு சேர்ந்து இதையே தான் பேசிக் கொண்டிருந்தனர்..
அதற்கு அவனது பாட்டியோ பெருமையாக, " சிங்கம் மாதிரி என் பேரன் இருக்கும் போது அவல எதுக்கு வெளியில கொடுக்க போறோம்".. என்று பெருமை பேச ,
"மொத்த குடும்பமும் முடிவே கட்டிட்டாங்க போல இதை எப்படியாச்சும் மாத்திடணும்" என்று முடிவு செய்தவனை அதற்குள் சடங்கு செய்ய அழைத்தனர்..
எப்பொழுதும் பாவாடை சட்டையில் இருக்கும் பனிமலர் அன்று பாவாடை தாவணி அணிந்து அமர்ந்திருக்க அவன் கையில் ஒரு மாலை கொடுத்து அவள் நெற்றியில் குங்குமம், சந்தனம் வைக்க சொல்ல அவனும் அவள் அருகே சென்றான் கடுகடுவென என்ற முகத்தோடு ,
அவன் மிக சாதாரணமாக இருந்திருப்பான் காலை அவனது எண்ணம் நிறைவேறி இருந்தால் அதுவும் நிறைவேறாமல் போக மேலும் அவனுக்கு கோபத்தை கூட்டும் விதத்தில் வீட்டில் இந்தப் பேச்சும் எடுக்க,
அதிலும் அவனது வயதோ இருபத்தி ஒன்று தான் அவளது வயதோ 14 அதை கூட மனதில் கொள்ளாமல் இந்த பேச்சு பேசுவதை எண்ணி கடுப்பானவன் இதை எல்லாம் சேர்த்து வைத்து கடுப்பாக அவளை நெருங்கினான் ..
என்னவோ புதிதாக மேக்கப் எல்லாம் செய்து அனைவர் முன்னும் ஒரு கொலு பொம்மை போல அமர்ந்திருக்க என்னவோ போல மலருக்கு இருந்தாலும் தன் மாமன் தன்னருகே வரும் போது அவளுக்கு உடல் எல்லாம் சூடானதை போல அவள் உணர்ந்தாள்..
மேலும் அவள் காதுக்கும் பெரியவர்கள் பேச்சுக்கள் விழுந்து கொண்டு தானே இருந்தன..அது அவள் முகத்தில் மெல்லிய கீற்றை விதைக்க அதை கண்டவனுக்கு மேலும் காண்டானது...
அவனும் அவளை போல சூடாக தானே இருந்தான் அவள் அருகே வந்து அவள் கன்னத்தில் சந்தனத்தை பூசியவன் மெல்லிய குரலில், " உனக்கு வயசுக்கு வர வேற நாளே கிடைக்கலையா டி..இன்னிக்கு தான் வரனுமா??? என்னோட எதிர் காலத்தை தொலைச்சிட்டு வந்து சடங்கு செஞ்சுட்டு இருக்கேன்...இதுல நீ என்னை பார்த்து பல்லை காட்டிட்டு இருக்கியா?? ..அவங்க பேசுறதை எல்லாம் மனசில வெச்சிட்டு இருக்காத..ஏதாவது ஆசையை வளர்த்துட்டு திரியாத... நீ படிக்கிற புள்ள படிக்கறதை மட்டும் பாரு...நீ சின்ன பொண்ணுன்னு கூட பார்க்காமல் தேவையில்லாமல் அவங்க பேசுறதை நெனைச்சுட்டு இருக்காத அது எதுவும் நடக்க போறது இல்லை...உன்னைய நான் கட்டிக்க மாட்டேன்...அவங்க சொல்றது இந்த ஜென்மத்தில நடக்காது " என்று மெல்லிய குரலில் அவள் அருகே நெருங்கி நின்று யாரும் கேட்காத வண்ணம் அவன் கூற
அதுவரை அவன் என்ன கூறுகிறான் என தெளிவாக அவளுக்கு புரியவில்லை என்றாலும் அவள் மனதுக்குள் அவன் கூறிய கடைசி வரியான, " நான் உன்னை கட்டிக்க மாட்டேன் "...என்ற வார்த்தை ஆழமாக பதிந்து போனது...அந்த வார்த்தை அவளை எப்படி எல்லாம் மாற்ற போகிறது என அவள் இந்நேரம் உணரவில்லை...
தூவானம் தூறும்..
