தூவானம் 19
தூவானம் : 19
அவள் இந்த அளவுக்கு செய்ய கூடியவளா தான் எவ்வளவு முறை அவளை திட்டியும் அடித்தும் இருக்க அப்போதெல்லாம் அவள் நித்திலனை எதிர்த்ததே இல்லை என்ற விஷயமும் நியாபகத்திற்கு வர கூடவே தன்னை நண்பனிடம் விட்டு கொடுக்காமல் பேசியது அவனுக்கு பிடித்து தான் இருந்தது..உள்ளுக்குள் சந்தோஷ கீற்று வந்ததை நித்திலன் உணரவும் செய்தான்..காதலிக்கிறோம் என்பதை விட காதலிக்க படுகிறோம் என்பதே சுகமான விஷயமல்லவா அந்த சுகம் மெல்ல மெல்ல நித்திலனை தீண்டியது என்னவோ உண்மை தான்..
தன் நண்பனிடம் மென்மையாக, " இனி நான் அவளை பாத்துக்குறேன் நீ சந்தோஷமா கல்யாணத்துக்கு போயிட்டு வா வாழ்த்துக்கள் ".. என்று கூற தியாகுவோ, " நான் வரதுக்குள்ள ஒரு குட் நியூஸ் ரெடி பண்ணி வை " என்று கூறி அவனும் சந்தோசமாக கிளம்பி விட்டான்..
அதன் பிறகு அவனுக்கு சில விஷயங்கள் தெரிய வேண்டி இருந்தது...அவனுடைய வீட்டுக்கு அழைத்த நித்திலன் ஓரிரு முறை அழைப்பு போய் பின் அழைப்பு எடுக்கப்பட்டது போனை எடுத்ததோ சிவகாமியம்மாள்..
அம்மா இந்த முறையாவது என்னுடைய போனை எடுக்க வேண்டும் என நினைத்து இருந்தானோ அதே போல போனை எடுக்க ,
சிவகாமி அம்மாவுக்கோ ஒரு வேளை அழைத்தது மலராக இருக்குமோ என நினைத்து போனை எடுக்க , "ஹலோ".. என தன் மகனின் குரலை நீண்டகாலமாக கேட்காத அவருக்கு சட்டென்று கேட்டதும் கண் கலங்கியது..
அவனுக்கும் அதே நேரம் ஒருவித உணர்வை கொடுக்க , "அம்மா "...என்று கமறிய குரலில் அவன் அழைத்ததும் அவருக்கு பேச்சே எழவில்லை கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டு இருக்க, " உன் மனசு புரிஞ்சுக்காம இருந்ததற்கு என்ன மன்னிச்சிடு நித்திலா ஆனா இப்பவும் சொல்றேன் உனக்கு அவ ஏத்த பொண்ணு தான்..உனக்காக என்ன வேணாலும் செய்வா "... என்று கூற ,
அதைக் கேட்ட நித்திலனோ, " பரவால்ல விடுங்க அம்மா எனக்கும் தெரியும் அவ எனக்கு ஏத்த பொண்ணு தான்னு இனி என்னோட வாழ்க்கையும் மலர் வாழ்க்கையை பத்தியும் நீங்க கவலைப்படாதீங்க நாங்க சந்தோஷமா இருப்போம் இத அவ கிட்ட சொல்றதுக்கு முன்னாடி உங்க கிட்ட சொல்லனும்னு தான் எனக்கு தோணுச்சு நீங்க சந்தோஷமா இருங்க நாங்க கூடிய சீக்கிரம் அங்கு வரோம்".. என்று கூறினான்..
அதை கேட்டு தாயோ மகிழ்ந்தாலும் அவன் சென்றது முதல் மலர் செல்லும் வரை உள்ள விஷயங்கள் அவள் அவனுக்காக வீட்டை எதிர்த்து பேசியது அனைத்தையும் ஒரு வரி விடாமல் அவர் கூற அதை கேட்ட அவனோ அவளின் காதலின் நீளத்தை எண்ணி அவனுள் ஒரு குற்ற உணர்வு தான் எழுந்தது..அவளை சரியாக புரிந்து கொள்ளவில்லையோ என நினைத்தான்..
அதன்பின் நித்திலனின் பேச்சைக் கேட்ட தியாகு அவளிடம் , "நான் ஊருக்கு போறேன் உன் புருஷன் கிட்ட கல்யாணம்னு சொல்லல நீ கவனமாயிரு நான் அவன்கிட்ட சும்மா ஊருக்கு போறேன்னு சொல்லி இருக்கேன்".. என்று கூற ,
அதைக் கேட்ட அவளோ, " அதெல்லாம் நான் சமாளிச்சுக்கறேன் நீங்க திரும்பி வரும் போதும் அவர் இப்படியே தான் இருப்பாரு நான் இங்க வந்து ரெண்டு வாரம் ஆச்சு மனுஷன் மூஞ்சிய சரியா கூட பார்க்கல ஆனாலும் ஒரு நம்பிக்கை இருக்கு அவரு மாறிவிடுவார்ன்னு ".. என்று விரக்தி கலந்த புன்னகையை உதிர்த்தாள் மலர் ..அதை கேட்ட தியாகுவோ வருத்தப்பட்டாலும் இனி எல்லாம் மாறி விடும் என நினைத்து கொண்டு மகிழ்ச்சியாக ஊருக்கு செல்ல தயாரானான்..
அவளுக்கும் தான் என்ன செய்தால் அவன் தன்னிடம் பாசமாக இருப்பான் என அவள் நினைக்க நித்திலனும் அதே நேரம் அதை தான் நினைத்து கொண்டிருந்தான்...
அவர்களுடைய சிறுவயது காலமும் அவன் அவளிடம் அவள் பெரிய மனுஷி ஆகும் போது கூறிய வார்த்தையும் பின் ஒவ்வொரு முறையும் அவளிடம் பேசியதும் இரு முறை அவளை அவன் கைகளில் தாங்கியதும் பின் அவளை தான் எத்தனை முறை அடித்தாலும் அவள் தன்னிடம் எதிர்க்காமல் இருந்ததையும் கடைசியாக தான் அன்று அவள் உறங்கும் போது அணைத்ததைஎல்லாம் நினைத்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டவனுக்கு தன் மனையாளை காண வேண்டும் என ஆசை வந்தது ..முதன் முறையாக தன் மனையாளை அகம் நிறைய அவளின் முகத்தை அவனுள் நிரப்பி மகிழ்ச்சியாய் அவளை தேடி செல்லும் வழியில் அவனுக்கு ஒரு யோசனை உதித்தது...
அதாவது அவனை இது நாள் வரை வட்டம் சுற்ற வைத்தவள், மேலும் அவனை அதட்டி ,உருட்டி , எரிச்சல் படுத்தி விளையாடியவளின் காதல் விளையாட்டு போல அவன் ஒரு விளையாட்டு விளையாட வேண்டும் என அவனுக்கு தோன்ற எப்பொழுதும் சற்று வேதனைக்கு வேண்டி சரக்கு அடிப்பவன் இன்று சந்தோஷமாக ஒரு சிப் அருந்தினான்..
பின் மாலை ஆனதும் தன் வீட்டிற்கு வர அங்கே அவன் அவளோ எப்போதும் போல சமைத்துக் கொண்டிருந்தாள்...அவள் சமைக்கும் உணவின் வாசனை அவனின் நாசியை தீண்டியது..அவனுக்கோ அவளை தீண்ட வேண்டும் என்று கை பறபறக்க,
அவளும் அவன் வரவை கண்டாலும் அவளோ சமையல் வேலையில் முனைப்பாக இருந்தாள்..ஏதோ கேக் செய்வாள் போலும்...இன்று அவள் வகுப்பில் சொல்லி கொடுத்ததை வீட்டில் ட்ரையல் பார்த்து கொண்டிருந்தாள்...
அதைக் கண்ட அவனுக்கு புரிந்து எதுவும் பேசாமல் ஹாலில் உள்ள சோபாவில் படுத்து கொண்டு அவனுக்கு எதிரே உள்ள சமையலறையில் அவள் கேக் செய்வது தெள்ளத் தெளிவாக தெரியும் படி அவளை கண்டு கொண்டே படுத்து இருந்தான்...
என்னவோ அவளை இப்பொழுது தான் புதிதாக பார்ப்பது போல அவளை பார்த்து கொண்டிருந்தாள்..இன்று என்னவோ அவன் கண்ணிற்கு மிக அழகாக தெரிந்தாள் ...எப்போதும் பாவாடை தாவணி அணிந்து இடுப்பில் தாவணியை சொருகி பழகி இருப்பவள் அதே பழக்க தோஷத்தில் அவள் அணிந்து இருந்த தொல தொல பனியனை எடுத்து இடுப்பில் சொருகி இருக்க அவனோ அவளை கண்டு மென்னகை புரிந்து கொண்டிருந்தான்...
அவளோ தன் போக்கில் கேக்கில் கிரீம் தேய்த்து கொண்டிருந்தவள் லேசாகத் திரும்பிப் பார்க்க அவனோ சட்டென்று பார்க்காதது போல கண்களை மூடிக்கொண்டான்...
அவளும் ஒரு வழியாக சமையல் வேலை முடிந்து அவள் சமைத்த கேக் மற்றும் உணவு பதார்த்தங்களை உணவு மேசையில் வைத்து விட்டு, " எப்படி இருந்தாலும் நான் சமைச்சா நீங்க சாப்பிட மாட்டீங்க இருந்தாலும் கேட்கறேன்... சாப்பிடறீங்களா புதுசா ஒரு கேக் செஞ்சு இருக்கேன்... இல்லேன்னா என் லவ்வருக்கு கொடுத்திடவா??? அவர் ஊருக்கு போறார் இல்லையா அதுக்காக இன்னிக்கு நானும், அவரும் டேட்டிங் போனோம் அங்க வெளியே ஃபுல்லா சாப்பிட்டு தான் வந்தோம்... எப்ப தான் உங்களுக்கும் எனக்கும் டிவோர்ஸ் கிடைக்கும் எப்போ தான் நான் அவர் கூட போறது?? நீங்களும் என்கூட பேச மாட்டிங்க அவர் கூட பேசவும் விட மாட்டிங்க நான் தான் லொடா லொடான்னு பேசிட்டு இருக்கேன்.. இங்கே இருக்கவே ஒரே போர் இதுல அவர் வேற ஊருக்கு போறாரு நான் எப்படி அவர் இல்லாமல் இருப்பேன்".. என்று அவனை செய்ய வைத்திருக்கும் பல கேள்விகளை அவள் அவிழ்த்து விட அதை எல்லாம் கேட்டாலும் மனதுக்குள் சிரித்து வெளியே விறைப்பாக இருந்தான் நித்திலன்..
அவளோ ஏதாவது அவனிடம் ரியாக்ஷன் வருகிறதா என பார்த்து கொண்டிருக்க அவனோ அவன் கையோடு வாங்கி வந்த சரக்கை எடுத்து குடிக்க துவங்க அவளோ அவனைப் பார்த்துக் கொண்டே," இதே வேலை தானா மாமா ஒரு நாள் நான் எடுத்து அந்த கருமத்தை குடிக்க போறேன் பாருங்க".. என்று நினைத்து கொண்டிருந்தாள் ..
அவனோ மனதுக்குள் , "அடியே ராங்கி இத்துனுண்டு வாய்க்குள்ள இருந்து எத்தனை பேச்சு பேசுற என்னை வெறுப்பு ஏத்திட்டு இருக்கியோ?? இரு டி மவளே இத்தனை நாள் நீ பேசினதுக்கு உனக்கும் இருக்கு உன்னோட வாய்க்கும் இருக்கு "... என்று நினைத்து கொண்டே குடிக்க,
அவளோ பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஒரு பாட்டிலை அவன் குடித்து விட அதை கண்ட அவளோ , "நித்திலன் என்ன இன்னிக்கு ரொம்ப அதிகமா குடிக்கிறீங்க ...போதும் நிறுத்துங்க "...என்று மலர் கடிந்து கூற,
இப்படி அவன் குடித்தால் அவனுடைய உடல் என்ன ஆவது என்ற அக்கறை அதில் தொக்கி நிற்க,
அதை சரியாக புரிந்து கொண்ட அவனோ கண்கள் சொருக அவளைப் பார்த்து மெல்ல தள்ளாடி எழுந்தவன், " என்னடி நித்திலன்னு பேரை சொல்லி கூப்பிடுற நான் யார் டி உனக்கு??"... என்று கேட்க ,
அவளோ, "ஹ்ம்ம் உங்க பேரு நித்திலன் என்னோட கசின் "...என்று முறுக்கி கூற,
அவனோ, "என்னது கசினா ?? இப்போ நான் யாரு டி உனக்கு ??"... என்ற வினவ,
அவளோ , "எனக்கு டிவோர்ஸ் கொடுக்கப் போற ஒரு ஆளு அதுவும் என்னை பிடிக்காமல் "...என்று பட்டென்று கூற,
அவனோ மெல்ல எழுந்து நின்றவன் அவளை பார்த்து பொய்யாக உறுத்து விழித்து, " என்னடி விட்டா பேசிட்டே இருக்க ??என்ன நெனச்சிட்டு இருக்க?? நீயும் தானே கையெழுத்து போட்டு கொடுத்த நான் மட்டும் இல்லையே...".. என்று அவளருகே மெல்ல அவன் வந்து நிற்க,
இவனால் என்ன செய்து விட முடியும் என நினைத்துக் கொண்டிருந்த மலரின் அருகே ஒவ்வொரு அடியாக வைத்து வந்தவன் அவள் முகத்தை கோபமாக பார்த்தவன் நொடி பொழுதில் அவளே எதிர்பாராமல் அவளை இழுத்து இதழோடு இதழ் வைத்து முத்தமிட்டான் நித்திலன்...
தூவானம் தூறும்....
