Share:
Notifications
Clear all

தூவானம் 18

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

தூவானம் : 18

பனிமலர் இங்கு வந்தது முதல் நித்திலனை வெச்சு செய்துகொண்டிருந்தாள் என்றே கூற வேண்டும்..

ஆம் வெளியே செல்வதென்றால் தியாகுவுடன் செல்வதும் தியாகுவுடன் சேர்ந்து இவனை வெறுப்பேற்றுவது என தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்..

அதிலும் அவனை வெறுப்பேற்ற என்றே அவள் தியாகுவுடன் சிரித்து பேச அதை நினைக்கையில் நித்திலன் அவனது கண்ட்ரோலை விட்டிருந்தான்..

ஆம் என்ன வேணாலும் செய்யலாம் என நிலையில் இருந்தவன் ஒரு நாள் அவள் தாமதமாக வீட்டுக்கு வர பொறுத்து பொறுத்து பார்த்தவன் பொங்கி விட்டான்..

அவளிடம் , "உனக்கு அறிவு கொஞ்சமாவது இருக்கா?? கல்யாணம் ஆயிட்டுன்னு நினைப்பு இருக்கா?? கண்டவன் கூட கைய பிடிச்சிட்டு வெளியில போயிட்டு இருக்க?? வீட்ல தெரிஞ்சா உன்னை என்னன்னு சொல்லுவாங்க??..நானும் நீயும் டிவோர்ஸ்க்கு எழுதி கொடுத்திருந்தாலும் இனியும் நமக்கு டிவோர்ஸ் கிடைக்கலை அது நியாபகம் இருக்கட்டும் இப்போ வரை நீ என் பொண்டாட்டி தான் அது உனக்கு தெரியுமா??".. என்ன கேட்டே விட்டான்..

அதை கேட்ட அவளோ உள்ளுக்குள் சிரித்து, " என்ன மாமா பொறாமை தாண்டவம் ஆடுது...நீ பொறாமை படு மாமா அப்போ தான் உன் மனசில வந்து சம்மணம் போட்டு உக்கார முடியும்".. என்று மனதுக்குள் எண்ணி கொண்டவள், வெளியே அவனை பார்த்து , " சரி வாங்க உங்க கைய பிடிச்சுக்கிறேன் அப்போ யாரும் தப்பா நினைச்சுக்க மாட்டாங்களா?? "...என்று அவனது கையை பிடிக்க போக,

அவனோ தன் கையை அவன் புறமே இழுத்து, "போடி அந்தப்பக்கம் "...என்று முறுக்கிக் கொண்டு சென்றுவிட்டான்... அவளோ, " நீங்களும் என் கையை பிடிச்சு நடக்க மாட்டிங்க நடக்கறவங்களையும் விட மாட்டிங்களா??"... என்று கூறி சிரிக்க தொடங்கிவிட ஆனால் அவனுக்கு எரிச்சல் தான் வந்தது...

இதற்கிடையே அவள் தினமும் காலை தியாகுவுடன் தான் அவளது கோர்ஸ் படிக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தாள் அதற்கும் ஆப்பு வைத்தாள் அம்மணி...அவள் தியாகுவுடன் செல்லவா இங்கு வந்தாள்?? அவளுக்கு அவளது மாமா கூட்டி கொண்டு செல்ல வேண்டும் அதற்கு தியாகு இங்கு இருக்க கூடாது என நினைத்தவள்,

"உன் கூட வாழ ஒன்னும் நான் இங்க வரலை..அதுக்கு எல்லாம் உனக்கு என்னோட டீச்சர் இருக்காங்க.. என் மாமா கூட வாழ தான் நான் இங்கு வந்து இருக்கேன்... என்னை என் மாமா தான் கூட்டிட்டு போகனும் ".. என்று கூற ,

அதை கேட்டதும் தியாகுவோ, " அதுக்கு நான் என்ன செய்ய உன் புருஷன் தான் கண்டுக்காமல் இருக்கானே.. அவன் ஒரு ஜடம் தான் அவனும் சாமியார் ஆகி உன்னையும் சாமியார் ஆக்கிடுவான்"... என்று கூற,

" இதோ பார் என் மாமாவை பேசுற வேலை எல்லாம் வேணாம்.. என் மாமா அப்படி தான் இருக்கும்...ஒரு நாள் என்னை கூட்டிட்டு போகும்..அதை எல்லாம் நீ பேசாத..பேசாம நீ டிரான்ஸ்பர் வாங்கி போய்டு இல்லை எங்கேயாவது போ அப்போ என் மாமா தானே என்னை கூட்டிட்டு போகனும் உன்னை பார்த்தா தான் அது கண்டுக்காமல் இருக்கு
.உன் மூஞ்சி சரியில்லை அது தான் காரணம்".. என்று கூற ,

அதை கேட்ட அவனும் , " ஓ என் மூஞ்சி சரியில்லாதனால தான உன் புருஷன் உன் கூட பேச மாட்டேங்கிறானா... நீ வந்ததுல இருந்து என்கூட பேசாம இருக்கான்...நீ நல்ல பொண்டாட்டி மகராசி இப்படி தான் இருக்கணும் உன் மாமன் அப்படியே இடி விழுந்த இருளாண்டி மாதிரியே இருக்கட்டும் மா ..எனக்கு என்ன??? நீங்க இரண்டு பேரும் நல்ல ஜாடிக்கு ஏத்த மூடி தான் லீவு தானே மேடம் வாங்கிட்டு போறேன்.. கல்யாணம் வரப்போகுது நான் ஊருக்கு போறேன் நீ இங்கேயே கிடந்து சாகு ".. என்று அவனும் நக்கல் தொனியில் அவளை கரித்து கொட்டினான் ..

தியாகு கரித்துக் கொட்டினாலும் அவன் உள்ளே மலர் மீது பாசம் இருக்கத்தான் செய்கிறது ..ஆம் அவன் என்ன தான் மலர் தான் செய்த தவறை சங்கவியிடம் கூறி விடுவேன் என கூறி மலர் மிரட்டி தியாகு அதற்கு பயந்தாலும் அவளுக்கு அடி பணிந்து இருந்தாலும் அவள் எதற்காக இப்படி செய்கிறாள் என நினைத்தவனுக்கு ஒரு உண்மை தெளிவாக விளங்கியது..

அவள் உலகமே நித்திலன் மட்டும் தான் அவனில்லாமல் அவளால் வாழ முடியாது என்பதையும் அவள் உணர்ந்தான் அதை எண்ணியவன் அவளுக்கு துணை போக வேண்டும் என்று நினைத்தான்..

அதனால் அடுத்த மாதம் செல்ல வேண்டிய அவனது திருமண லீவை இப்பொழுதே எழுதிக் கொடுத்து விட்டு செல்ல முடிவெடுத்தான் ...

அதற்கு முன் தன் நண்பனைப் பார்த்து பேச வேண்டும் என நினைத்தவன் தன்னிடம் மலர் வந்த பிறகு பேசாமல் முறுக்கி இருக்கும் தன் நண்பனைத் தேடி அவனது அலுவலகத்துக்கு சென்றான் தியாகு...

அங்கே சென்றவன் அவனை அழைக்க சில பல கால்கள் சென்றும் போனை எடுக்காமல் முறுக்கிக்கொண்டு திரிந்த அவனது குணத்தை எண்ணி நண்பனைத் தேடி அவனது கேபினுக்கே தியாகு செல்ல அவனோ அந்த சமயம் பார்த்து தான் மொபைலை பார்த்து கொண்டே வெளியே வந்தான்.

தியாகுவை கண்டும் நித்திலனோ கண்டு கொள்ளாமல் செல்ல அவனை வழி மறைத்த தியாகுவோ," என்ன மச்சி என் மேல கோபமா?? உன்னை பார்க்க வந்தா கண்டுக்காம போற??".. என கேட்டான்..

அதற்கு நித்திலனோ தியாகுவை பார்த்து முறைத்து, " உன் மேல கோபப்பட நான் யார் ??"..என்று கேட்க,

அவனோ, " என்ன மச்சான் இப்படி பேசுற ?? "...என்று கேட்க,

"பின்ன என்னடா உனக்கு கல்யாணமா?? நம்ம கூட படிச்ச ராஜேஷ் சொன்னான் ".. என்று கூறும் போதே ஆத்திரம் நித்திலன் முகத்தில் தாண்டவமாடியது,

ஆம் தியாகுவின் கல்யாண விஷயத்தை பற்றி நித்திலனுக்கு இது நாள் வரை தெரியவில்லை அதிலும் பெண் வேறு மலர் இல்லை என்ற விஷயம் வேறு எரிச்சலையும் நிம்மதியையும் ஒருங்கே அவனுக்கு கொடுத்தாலும் என்ன நடக்கிறது இங்கே என அறிய அவன் காத்திருந்தான்...

" அதுவும் பொண்ணு எங்க ஊரு ஆமே.. "..என்று நித்திலன் அழுத்தி சொல்ல,

" ஆமாண்டா உனக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சா இதை சொல்ல தான் நான் வந்தேன் ".. என்று தியாகு கூறவும்,

வெகுண்ட நித்திலன், " அப்புறம் ஏன்டா மலரை காதலிக்கிறேன்னு சொன்ன?? எதுக்கு டா அவ கூட சுத்திட்டு இருக்க?? ".. என்று சட்டையை பிடித்து விட்டான்..

நண்பன் கோபத்தில் இருப்பதை உணர்ந்து, " மச்சி சொன்னா கேளு.. அவ என் தங்கச்சி அவள நான் எப்படி டா கல்யாணம் பண்ணிக்கிறது??".. என்று தியாகு சிரித்தபடி கூற ,

அதை கேட்ட நித்திலன் முகமோ அதிர்ச்சியில் உறைய, "என்ன தங்கச்சியா ?? "..என கேட்டான்..

"ஆமா தங்கச்சி தான் நீ ஒழுக்கமா வாழ்ந்து இருந்தீனா இந்த அளவுக்கு அவ இறங்கி இருக்க மாட்டா.. அவளுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் டா உனக்கு தான் அவள பிடிக்கல... அவளுக்கு என்ன குறை சொல்லு பாப்போம்..அவளை மாதிரி ஒருத்தி கிடைக்க நீ குடுத்து வெச்சு இருக்கனும்..எந்த அளவுக்கு அவ ராங்கியோ அந்த அளவுக்கு பாசக்காரி மச்சான்".. என்று கூற

அதை கேட்ட நித்திலனோ , "எனக்கு அவ குடும்பத்தை பிடிக்கல அதனால அவள பிடிக்கல ".. என்று கூற

அதை கேட்ட தியாகுவோ, தெளிவாக நித்திலனிடம், " இந்த சுண்டைக்காய் பதிலை எல்லாம் விடு.. உன் கூட வாழ போறது அவ தான் அவ குடும்பம் இல்ல...பர்சனலா உனக்கு அவளை எதற்காக பிடிக்கல?? அவளுக்கு உன் அளவுக்கு படிப்பு இல்லைனா இல்ல அழகில்லை அப்படின்னா?? இல்ல அவங்க குடும்பமா???".. என்று கேட்க,

இதைக் கேட்டதும் அவனோ, " என்னை பொறுத்தவரை படிப்பு அழகு பணம் இதை எல்லாம் விட அவளை பிடிக்காத ஒரே காரணம் நான் சிறு வயதில் இருந்து அனுபவிச்ச வலி..முக்கிய காரணம் அவ குடும்பம் தான் அதனால தான் எனக்கு பிடிக்கலை "...என்று கூற ,

"உன் கஷ்டம் எனக்கு புரியுது..அவ அந்த குடும்பத்தில் பிறந்து அவளோட முறைப்பையனை உயிருக்கு உயிரா நேசிக்கிறதை தவிர வேறு எந்த தவறும் அவ செய்யல...ஆனா அவ உன் மேல உயிரையே வைத்திருக்கா அதை அவ உன்கிட்ட மட்டும் சொல்லாம இருக்கா..ஊருக்கே உன்னை விட்டு கொடுக்காமல் இருக்கா..அவளை பொறுத்தவரை உனக்காக அவ எந்த அளவுக்கு வேணாலும் இறங்கி போவா...அவளுக்கு நீ மட்டும் தான் முக்கியம் ".. என்று தியாகு கூறவும் ,

அதை கேட்ட நித்திலனோ உள்ளுக்குள் இவன் சொல்வது எல்லாம் உண்மையா என அதிர்ந்தாலும் வெளியே சிரித்து, " நான் அவகிட்ட இந்த கல்யாணம் நடக்காது என தெளிவா சொல்லியும் என்னை பிடிவாதமா கல்யாணம் பண்ணியிருக்கா அத என்னன்னு சொல்றது?? அதுலயும் இப்படி எல்லாம் கல்யாணம் பண்ணினவ விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்தும் போட்டு இருக்கா..இதுக்கு என்ன சொல்ற ".. என்று நித்திலன் கேட்க,

"உன் மேல வெச்ச காதல் முட்டாள் இது கூட புரியலையா உன்னை தேடி இவளவு தூரம் வந்து இருக்கா அது கூட உனக்கு தெரியலையா?? அவ என்னை காதலிக்கிறேன்னு சொல்லி உன் கிட்ட சொன்னாலும் உன் கூட தான தங்கி இருக்கா உன்கூட தானே வாழ்ந்துட்டு இருக்கா இதிலிருந்தே தெரியவில்லையா?? அவளோட காதல உனக்கு ஒன்னு தெரியுமா அவ எப்படி இங்க வந்தா என்ன தெரியுமா?? என்னை மிரட்டி தான் இங்கே வந்து இருக்கா அதுவும் உன்னை பார்க்கத்தான் அவ செய்யறது பூரா நடிப்பு தான் உனக்காக எக்ஸாம் பாஸ் பண்ணினா அதுவும் உன்னை பார்க்கணும்ன்னு சொல்லித்தான்..இங்கிலீஷ் வாசனையே தெரியாத பொண்ணு இப்போ கத்துகிட்டா இப்போ இங்கே வந்து கோர்ஸ் படிக்கிறா அது எதுக்குன்னு தெரியுமா அவளோட மாமாக்கு சமமா அவளும் உயரனுமாம் அப்போ தான் நாலு பேரு உங்க இரண்டு பேரையும் பார்த்தா உன்னை கிண்டல் பண்ண மாட்டங்களாம்".. என்று நடந்ததையெல்லாம் தியாகு நித்திலனிடம் கூற,

அதைக்கேட்ட நித்திலன் அவளின் சாகசங்களை கேட்டு அறிந்து கொண்டவனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது..கூடவே ஒரு அதிர்ச்சியும் தான் தனக்காக இவ்வளவு தூரம் இறங்கி இருக்கிறாளா என்ற மகிழ்ச்சியும் வர அதிலும் தியாகு மாட்டிய இடத்தில் அவள் செய்த வேலை அவனுக்கு மெச்சும்படியாகவும் அதே போல அவனை வைத்து செய்திருப்பதை எண்ணி சிரிப்பும் வர தனக்காக இந்த அளவுக்கு இறங்கி இருக்கும் அவளை இப்போதே காண வேண்டும் என்ற எண்ணமும் வந்தது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top