Share:
Notifications
Clear all

தூவானம் 17

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

தூவானம் 17

அவனுக்கு கேட்க வேண்டும் என்று இருந்தாலும் அவனது பிடிவாதம் வாயை திறக்காமல் இருக்க அவளே அவனது முகத்தை பார்த்து , "கிளாஸ் இன்னிக்கு போகனும் ".. என்று கூறி அரக்க பறக்க உணவை உண்டாள்.. அவனோ காது கொடுத்து கேட்டாலும் கேட்காத பாவத்தில் இருந்து கொண்டான்..

அவளை அழைத்துச் செல்ல இதோ வாசலில் தியாகு காத்திருந்தான்.. அவனை கண்டதும் எங்கிருந்து தான் நித்திலனுக்கு கோபம் வந்ததோ தெரியவில்லை ..

" என்ன மச்சான் ஆபீஸ் போகலை"
.. என்று அவன் வினவ நித்திலனோ அவனிடம், " அதை நான் கேட்கணும் உனக்கு போக வேண்டாமா??".. என்று திருப்பி சூடாக பதில் கூற

தியாகுவோ மனதுக்குள், " எனக்கும் போகனும் தாண்டா அந்த சண்டாளி விட்டாத்தான "..என்று நித்திலனின் முன்பே நித்திலனின் மனைவியை கரித்து கொட்டிக் கொண்டிருந்தான்..

இதை அறியாத மலரோ, " தியாகு வந்துட்டீங்களா உங்களுக்காக நான் என்ன சமைச்சிருக்கேன் பாருங்க".. என்று ஒரு உணவுப் பொதியை அவனிடம் கொடுக்க அதைக்கண்டு காண்டாகினான் நித்திலன்..

ஆம் காலையில் அவள் சமைத்துக் கொண்டிருக்கும் போது தயாராகி வந்தவன் அவனுக்கான உணவை சமைக்க அவளோ , "விடுங்க நான் செஞ்சு தரேன் "...என்று கூறவும்,

" என் வேலை எனக்கு செய்ய தெரியும் உன் வேலையை பாரு போடி "...என்று நித்திலன் கூற, அதை கேட்டவளோ , "சரி நான் பார்க்கிறேன்..நீங்களே உங்களுக்கு தேவையானதை செஞ்சுக்கோங்க"... என்று தோளைக் குலுக்கிக் கொண்டு சென்றுவிட்டாள்.. அதன் பயனாய் இப்பொழுது வரை மலர் நித்திலனை வெறுப்பேற்றி கொண்டிருக்க ,

நித்திலனின் காதில் புகை வர நின்று கொண்டிருந்தான் தியாகுவுக்கு இதெல்லாம் புரிந்தாலும் இந்த ராட்சசியின் கையில் அகப்பட்ட பொம்மை போல தியாகு நின்றுகொண்டிருந்தான்...

இடையிடையே சங்கவியின் அழைப்புகள் வரவும் முதலிலேயே சங்கவியிடம் மலர் சொல்லி வைத்திருப்பாள் போலும் ..

அதனால் அவள் பெரிதாக கேள்வி எழுப்பவில்லை..அவளுக்கு தான் தெரியுமே அவளது மாணவியின் குறும்பை.. எப்படியாவது படித்து ஆள் ஆக வேண்டும் என்று தியாகுவிடம் வேறு விஷயம் அறியாமல் அவளுக்கு உதவி செய்ய கூறி இருந்தாள் பாவம் சங்கவி...அவள் இங்கு வர பெரும்பங்கு வகித்தது என்னவோ சங்கவி மற்றும் தியாகு தான்...

ஆம் இந்த மூன்று மாதத்தில் சங்கவியிடம் கஷ்டப்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவள் இரண்டு மாதத்தில் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் கற்று அதில் லேசான புலமை பெற்று அமெரிக்க பறந்து வந்துவிட்டாள்..இது எல்லாம் மலரை போன்ற பெண்களுக்கு சாத்தியமா என்று கேட்டால் சாத்தியமே..அவள் மாமன் மீது வைத்திருந்த வெறி அவளை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது...

என்ன தான் தன் மாமனுக்கு வேண்டி இவ்வளவு எல்லாம் அவள் மாறினாலும் அவளது மனதில் அவளுடைய பழைய நேசங்கள் அப்படியே இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அதில் எந்த விதமான மாற்றங்களும் வரவில்லை...

அவளுக்கு அவளது மாமா மீது உரிமை வெறி அவள் மாமன் அவளை வேண்டாம் என கூறும் போது அந்த உரிமை வெறி அதிகமானது... அது அவன் மீது காதலாக மாறியது போல இருந்தது அவனுக்கு தன்னைப் பிடிக்க வில்லை என்றாலும் பிடிக்க வைக்கும் முயற்சியில் தான் அவள் இறங்கியிருக்கிறாள்..

அதும் அவளுக்கு அறிந்தது போல அவள் இறங்கியிருக்கிறாள் அவளாக போய் தன் மாமனிடம், " மாமா என்னை எடுத்துக்கோ..ஏத்துக்கோ "...என்று கெஞ்ச முடியாது..

கெஞ்சினால் அவன் மிஞ்சுவான் மிஞ்சினால் அவன் அடங்குவான் என நன்றாக தெரிந்தே அவள் களம் இறங்கி இத்தனை கஷ்டபடுகிறாள்...

அவளது வீட்டில் அவள் அமெரிக்கா செல்கிறேன் என்ற விஷயத்தை கூறியதும் எப்போதும் போல பெரிய எதிர்ப்பு கிளம்பியது...

அதை கண்டதும் தான் அவளுக்கு தன் மாமனின் மனது புரிந்தது... எனக்கே ஒரு விஷயத்தை நான் செய்ய முனையும் போது அதை தடுக்கும் இவர்கள் மீது கோபம் வருகிறதே அப்படி தானே என் மாமனுக்கும் இருக்கும் என்று நெனைத்தவள்,

நடுக்கூடத்தில் சிவகாமியை நிற்க வைத்து , "அத்தை என் புருஷனை பார்க்க நான் போறேன் அதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கா??".. என்று சிவகாமியிடம் கேட்க , அவரோ தன் அண்ணனையும் அண்ணியும் பார்த்து என்ன கூறுவதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார்..

அதற்குள் செந்தாமரையோ, " யாரை கேட்டு நீ இப்படி ஒரு முடிவை எடுத்த அவன் உன்னை வேணாம்னு கையெழுத்து போட்டு அனுப்பி விடுவான் நீ அவனை பார்க்க போவியோ?? அதெல்லாம் நீ போக கூடாது " என்று அவர் கூற,

பாண்டி அம்மாவோ பேரப் பிள்ளைகளின் வாழ்க்கை இப்படியே பாழாகி விடக்கூடாது மலர் கூறியதை எண்ணி மகிழ்ந்து அவள் இப்போது அவனை தேடி செல்வது தான் சரி என நினைத்து, " அது தான் போறேன்னு சொல்றால்ல அப்புறம் உங்களுக்கு என்ன வந்தது?? அவ புருஷன் அவ பார்க்க போறா?? உங்களுக்கு என்ன வந்தது??அவ போகட்டும்".. அவர் பொதுவாக கூற,

அதை கேட்ட இளங்கோவோ, " அப்போ எதுக்கு அந்த விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கனும் இப்போ என்ன பார்க்க போறேன்னு சொல்லி கிளம்பி போகனும் அப்படி எல்லாம் என் தங்கச்சியை அனுப்ப முடியாது என்ன நடக்குது இங்கே அவன் அவன் இஷ்டத்துக்கு நடக்கிறான் எங்க முன்னாடி என் தங்கச்சியை அடிப்பான் விவாகரத்து கேட்பான் இதை எல்லாம் பார்த்துட்டு நான் சும்மா இருக்கனுமா??".. என அவன் கூற,

அதற்கு மலரோ, " அண்ணா கல்யாணம் பண்ணி கொடுத்திட்டில அதோட உன் கடமை முடிஞ்சது..எங்களுக்குள்ள ஆயிரம் நடக்கும் நாங்க இன்னிக்கு அடிச்சுப்போம் நாளைக்கு சேர்ந்துப்போம் அதுல நீ தலையிடாதே நீ உன் குடும்பத்தை மட்டும் பாரு ...இதை சாக்காக வைத்து அண்ணியை திட்டிட்டு இருக்காத..என் புருஷன் என் கூட பேசாட்டியும் என்னைய நல்லாத்தான் பார்த்துக்கிறார் நாங்க பேசிக்கலனாலும் எங்க செலவுக்கு மாசாமாசம் அக்கவுண்ட்ல பணம் போட்டுட்டு தான் இருக்காங்க தெரியுமா?? நான் ஒன்னும் உங்க தயவுல இல்லை அப்படி என் மாமன் எங்களை விடவும் செய்யாது ".. என்று கூற

அதை கேட்ட செந்தாமரையோ, " நாங்க செலவு பண்ணாட்டி உன் புருஷன் கிழிச்சுடுவானா?? அன்னிக்கே உன் அப்பா கிட்ட சொன்னேன் இதெல்லாம் தேவையில்லாத செலவுன்னு அவர் கேட்கலை இப்போ அனுபவிக்கிறார் ". என்று கூற

அதை கேட்ட மலரோ கோபம் கொண்டு, " என்ன நினைச்சுட்டு இருக்கீங்க?? ஆளாளுக்கு அவரை தரகுறைவா பேசிட்டு இருக்கீங்க?? அவர் இந்த வீட்டு மாப்பிள்ளையா இல்ல வேற யாரோவா??..மரியாதை ரொம்ப முக்கியம் அதை மறந்துடாதீங்க..நீங்க இப்படி பேசி தான் மாமா போய்ட்டாங்க"... என்று சூடாகவே மலர் கூற

அதை கேட்ட செந்தாமரையும், " அத்தனை ரோசம் இருக்கிறவன் எதுக்கு டி உன்னை வேண்டாம்ன்னு சொன்னான் நீ எதுக்கு டி கையெழுத்து போட்டு கொடுத்த??".. என்று அவர் எகிற,

அவளோ , "நான் கையெழுத்து போடாம நீயா போடுவ?? நான் தான் போடணும் .. கட்டிக்கொடுத்திட்டில்ல உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு புரியுதா சும்மா அது இதுன்னு சொல்லிட்டு இருக்காத?? என்ன நெனச்சிட்டு இருக்க?? அவன் இவன்னு சொல்லிட்டு இருக்க?? ஏன் மாப்பிள்ளைன்னு மரியாதையா சொல்ல முடியாதா உன்னால?? என்னை தான் நீ மாமாக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்க!! மாமா வா நீ என்ன விலைக்கு வாங்கிட்டியா அவர் நீ சொல்றது எல்லாம் கேட்க,

உன் பேச்செல்லாம் என் மாமா கேட்காது அதுக்கு என்ன பிடிக்குமோ அது தான் என் மாமா செய்யும் ".. என்று லெப்ட் ரைட்டாக மலர் தன் மாமனுக்கு வரிந்து கட்டி கொண்டு வந்தாள்..

மேலும் தன் தந்தையிடம், " இதோ பாரு இப்ப சொல்லிட்டேன் இந்த குடும்பத்தில் யாராவது என் மாமனை படிக்க வச்சேன் படிக்காம வச்சேன்னு அது இதுன்னு சொல்லிட்டு இருந்தீங்க சுத்தப்படாது சொல்லிப்புட்டேன்.. என்னமோ உங்க பணத்தை வச்சு என் மாமன் படிச்ச மாதிரி பேசிட்டு இருக்கீங்க?? அது நல்லா படிச்சு நல்ல வேலைல இருக்கு என்னமோ உங்க பணத்தில் வாழ்ந்த மாதிரி பேசிட்டு இருக்கீங்க..அப்படி வாங்கி இருந்தாலும் இப்போ என்ன இது ஒன்னும் நீங்க கஷ்டப்பட்டு சாம்பாதிச்சது இல்லையே தாத்தா சாம்பாதிச்சது தானே என்னமோ என் தாத்தா காசை எடுத்து கொடுத்தா நீங்க எல்லாம் பெரிய ஆள் ஆகிடுவீங்களோ?? அதனால உங்க கால்ல என் மாமா வந்து விழுந்து கிடக்குமா என் மாமா சுயமா எழுந்திருச்சு நிக்க கூடாதா??..

இதோ பாருங்க என் மாமா தப்பு பண்ணினாலும் சரி தான் சரி பண்ணினாலும் சரி தான் புரியுதா??அது என்ன பண்ணினாலும் சரி தான்.. என் மாமா என்ன பண்ணாலும் அது கூடத்தான் நான் இருப்பேன் "..என்று ருத்ர தாண்டவம் ஆடி விட்டாள் பனி மலர்..அவளது வீட்டாரே அவள் பேச்சில் அதிர்ந்து நிற்க அவளோ அவர்களை எல்லாம் கண்டு கொள்ளாமல்,

அவளது அத்தையிடம் வந்து, " அத்தை நான் என் மாமாவை பார்க்க போறேன் திரும்பி வரும் போது உங்க பையன் கூட தான் வருவேன் என்னை அனுப்பி வைங்க "..என்று கூற அதைக் கேட்ட சிவகாமியும்,"இந்த ஒரு வார்த்தை போதும் மலரு எனக்கு ".. என்று கண்ணீர் மல்க கூற,

அவளோ , "எங்க போயிட போறாரு என் மாமா அதெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க அத்தை "...என்று கூறியவளை பார்த்து, " அவன் கண்டுக்காமல் இருக்கும் போதே என் மாமா என் மாமான்னு சொல்றாளே இதே அவன் கொஞ்சம் பேசிட்டா நீங்க எல்லாம் யாருன்னு கேப்பா போல "..என்று செந்தாமரை அங்கலாய்க்க

அதை கேட்ட அவளோ, " கண்டிப்பா அப்படி தான் பண்ணுவேன்..என் மாமா உன்கூட பேச கூடாதுன்னு சொன்னா நான் உன்னை கண்டுக்க கூட மாட்டேன் ".. என்று எடுத்தெறிந்து பேச செந்தாமரையை விடுத்து மீதம் உள்ள அனைவருக்கும் அவளது மனம் புரிந்தது இளங்கோ கூட தன் தங்கையின் மனதை புரிந்து கொண்டான் கயலோ மலரை நினைத்து மகிழ்ந்தாள்..

இளங்கோவிற்கு ஏனோ தன் தங்கை அவன் மீது வைத்திருக்கும் பாசத்தை எண்ணி அகம் மகிழ்ந்தாலும் சிறு பொறாமை உணர்வு எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை..அவளை போல தானே எனக்கு கயல்விழி என்பது உணர அவளை தான் நடத்தும் விதமும் அவனுக்கு புரிந்தது..

இதற்கு எல்லாம் தூய அன்பு தான் காரணம் என புரிந்து கொண்டான் சிரித்தபடி நிற்கும் தன் மனைவியை முதன் முறையாக பாசமாக பார்த்தான் இளங்கோ...

எல்லோரையும் ஆட்டி வைத்தவள் இதோ இங்கும் வந்துவிட்டாள் வந்ததும் வீட்டிற்கு அழைத்து அவளது நலத்தை அனைவருக்கும் அறிவுறுத்தியவள் இதோ அடுத்த கட்டமாக தன் மாமனை பாடாய் படுத்த இறங்கி விட்டாள்..

தூவானம் தூறும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top