Share:
Notifications
Clear all

தூவானம் 16

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

தூவானம் : 16

தியாகுவை அவள் அனுப்பி அவனது அறைக்கு வர அவனோ கடுகடுவென கடுவன் பூனை போல இருந்தான் நித்திலன்.. அவன் முகத்தில் அப்பட்டமாக பொறமை வெளிப்பட்டு கொண்டிருந்தது..எனக்கு சொந்தமான பொருள் நான் வேண்டாம் என்றாலும் என்னிடம் தான் இருக்க வேண்டும் மற்றவர்களிடம் போக கூடாது என்ற நல்ல எண்ணமும் உதித்தது என்னவோ உண்மை தான்..

அவளோ அவனை கண்டும் காணாமலும் அவனது அறைக்குள் நுழைய, நித்திலனோ அவளை முறைத்து,

" இங்கே பார் நீ இந்த பெட்ல படுத்துக்கோ நான் ஹாலில் உள்ள சோபாவில் படுத்துக்கறேன் ".. என்று நித்திலன் கூற

அதை கேட்ட அவளோ நமட்டு சிரிப்புடன், "உங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா நித்திலன்??"...என்று குத்தார்க்கமாய் கேள்வி கேட்டாள் பனி மலர்..

அவள் கூறியதில் அவனுக்கு கோபம் சுறுசுறுவென்று ஏறி , "யாருக்கு டி நம்பிக்கை இல்லை நானும் நீ வந்ததில் இருந்து பார்த்திட்டு இருக்கேன் ஓவரா பண்ணிட்டு இருக்க??".. என்று எச்சரிக்கை செய்ய,

"உங்களுக்கு தான் என்னை பார்த்து பயம்.."... என்று அவனை உசுப்பி விட,

"யாருக்கு டி பயம்?? சொல்லுடி ..."..என்று நித்திலன் அவளிடம் எகிறி கேட்க,

அவளோ , "உங்களுக்கு தான் அதில் என்ன சந்தேகம் ஹால்ல போய் படுக்கிறேன் சொல்றீங்களே??"... என்று கூற,

" எனக்கு என்னடி பயம் நான் எங்க வேணாம் படுப்பேன்
.இதோ பார் உன்னை எனக்கு பொறந்ததுல இருந்து எனக்கு தெரியும் கல்யாணம் பண்ணினாலும் மனசுக்கு பிடிச்சா மட்டும் தான் என் பார்வை உன் கழுத்துக்கு கீழே போகும் அதுவரை நீ துணியே இல்லாமல் நடந்தா கூட என் பார்வை தப்பா போகாது..என்னை என்னன்னு நினைச்ச பொம்பளை தோலை பார்த்ததும் வாயை பொலந்திட்டு பார்ப்பேன்னு நெனைச்சியோ அதுக்கு எல்லாம் வேற ஆளை பாரு..நான் பார்க்காத பொண்ணுங்களா எனக்கு அதில் எல்லாம் நாட்டம் இல்லை..கட்டின உன்னையே மனசுக்கு பிடிக்காமல் தான் தள்ளி வைச்சு இருக்கேன்..இதுல இவளை பார்த்து பயமா எனக்கு போடி மூடிட்டு".. என்று கூறியவன் பெட்டில் படுத்துக் கொள்ள,

அதை கேட்டு அவனை காதலோடு ஒரு நொடி பார்த்த அவளும் அவனுக்கு அந்த பக்கம் படுத்துக் கொண்டாள்..அவளோ மனதுக்குள், " அய்யடா ரொம்பத்தான் மாமா நீங்க ஆனாலும் இந்த முரட்டு கோபம் தான் மாமா எனக்கு உன்கிட்ட பிடிச்சு இருக்கு".. என்று கூறியவள் அவன் அருகே படுத்து அவனை திரும்பி பார்க்க அவனோ அவளுக்கு முதுகை காட்டி கொண்டு படுத்திருக்க அவளுக்கு ஓடி சென்று அவனிடம் ஒளிந்து கொள்ள வேண்டும் என தோன்றியது...

இவளோ இதற்காகத்தான் காத்திருந்தது போல அவன் அருகே படுக்க அவனோ அவளுக்கு முதுகு காட்டி கொண்டிருந்தாலும் அவளுடைய அருகாமை அவன் உடலில் சூட்டை கிளப்பி விட்டது என்னவோ உண்மை தான், " எங்க போனாலும் தேடி வந்து இருக்கு சனியன் நிம்மதியா வாழவும் முடியல அவ கூட சேரவும் முடியல ஒரே வேதனையா இருக்கு இந்த மானம் கெட்ட வாழ்க்கையை நினைச்சி பார்த்தா கண் முன்னாடி அந்த பரதேசி கூட பேசறதை பார்த்தாலே இழுத்து இவளை நாலு அறை விட கை பறக்குது எங்கே கொண்டு போய் முடிய போகுதோ தெரியல "..என்று புலம்பிக்கொண்டே அப்படியே உறங்கியும் போனான்..அவளும் அவனை பார்த்து கொண்டே அப்படியே உறங்கியும் போனாள்...

திடீரென இரவு ஒரு இரண்டு மணி இருக்கும் அந்த நேரத்தில் நித்திலனின் மீது ஏதோ ஒன்று இருப்பது போல இருக்க அவனால் சரி வர அசைய முடியவில்லை மேலும் அவனுக்கு சரியாக உறங்கவும் முடியவில்லை..என்னதான் என அவன் அவன் உடல் மேல் இருக்கும் அந்த பாரத்தை மெல்ல தடவி பார்க்க வழுவழுவென இருந்தது அவனோ பட்டென்று கண் விழித்து, " என்ன இது".. என பார்க்க,

அது பனி மலர் தான் அவன் அருகே கட்டிலின் ஓரமாக படுத்துக் கொண்டிருந்தவள் அந்த ஒரு சென்டி மீட்டர் இடைவெளியையும் குறைத்துக்கொண்டு அவன் அருகே நெருங்கி அவன் மீது காலைப் போட்டுக்கொண்டு கையை அவன் மார்பிலும் போட்டுக் கொண்டும் படுத்துக் கொண்டிருந்தான்..

அதுவும் அவள் அணிந்திருந்ததோ நைட்டி வேறு உறக்க கலக்கத்தில் அவளது உடை சற்று மேலேறி அவளது கால்கள் அவனது வயிற்றில் பட்டு அவனுக்கு என்னென்னவோ உணர்வு ஆட்கொள்ள துவங்கிவிட்டது..அவள் அறியாமலேயே அவனது உணர்வுகளை தட்டி எழுப்பி கொண்டிருந்தாள்..

அதிலும் அவள் அவன் மீது காலையும் கையையும் மட்டும் போட்டு வைக்காமல் மேலும் ஏதோ தலையணையை கட்டி அணைத்து படுப்பது போல அவனை இருக்கி அணைத்து படுக்க ஏற்கனவே குளிரில் படுத்து கொண்டிருந்தவனுக்கு நல்ல கதகதப்பை அவள் அளித்தாள்...

அவள் அறியாமலேயே அவனை அணைத்து படுத்திருந்தாள் அவளது ஆழ் மனம் அவனது அருகாமையை விரும்பி இருந்ததோ என்னவோ அவள் ரசித்து படுத்திருக்க அவனோ நியாயத்திற்கு பிறந்தவன் போல உணர்வுகள் எழுந்தாலும் மெல்ல அவளை தன்னிடம் இருந்து நீக்கி படுக்க வைக்க முயல அவளோ விடாமல் அவனை மேலும் அணைத்துக்கொண்டு படுத்தவளுக்கு உறக்கம் கலைகிறதோ என்னவோ ,

மெத்தை மீது படுப்பது போல அவன் மீது ஏறி படுத்து விட்டாள்... இப்போது அவளுடைய உடல் முழுவதும் அவன் மீது இருக்க அவனுக்கு தன் மேல் ஏறி அவளை உடல் முழுவதும் அவன் மீது உரச அவனது நாடி நரம்புகள் எல்லாம் சிலிர்க்க தொடங்கிவிட்டது..

அதிலும் அவளது இளமையின் செழிப்பு அவனது மார்பில் மோதி அவனுக்கு மோகன உணர்வுகளை தூண்டி விட அவனது கையோ அவளது இடையை அவன் அறியாமலேயே அந்த உணர்வுகளின் சங்கமத்தில் அழுத்திப் பிடித்தது... அவளது முகம் வேறு அவனது கழுத்தில் பதிந்து இருக்க அவளது மூச்சுக்காற்று அவனை வெகுவாக தாக்க நித்திலனின் கோட்பாடுகள் சற்று முன் பேசிய வீராப்பு எல்லாம் ஆட்டம் காண துவங்கியது என்னவோ உண்மை தான்..நல்ல வேளை அவள் உறங்குவது அவனுக்கு நல்லது தான் இல்லையேல் நித்திலன் நிலையோ அதோ கதி தான்...இன்று அவள் அமைதியாக இருந்து அவனைக் கொன்றாள்..

அவன் உள்ளே எழுந்த மாற்றத்தை அடக்க அவனால் முடியவில்லை.. இவள் தான் தாலி கட்டிய மனைவி என அந்த நேரம் அவன் நினைத்தானோ என்னவோ அவளை தன் உடலோடு சேர்த்து அணைத்தான்... அந்த அணைப்பில் சற்று காமம் தொக்கி நின்றது யாரும் அறியார்...

அவன் மட்டுமே உணர்ந்த தருணம் அவளை அவன் வாழ்வில் வெறுத்தது அவனுக்கு நினைவில்லையோ மூச்சு முட்ட அவளை இறுக்கி அணைக்க அவளது முகம் அவனது முகத்தில் படிய அவனது மீசை அவளது உதட்டில் குத்தியது.. மேலும் அவன் உணர்ச்சிப் பிழம்பில் கொந்தளித்து அவளை மேலும் மேலும் இறுக்கி அணைக்க அவளிடம் சிறு அசைவு தென்பட்டதும் சட்டென்று நினைவு வந்தவன்,

தான் செய்த காரியத்தை எண்ணி நொந்து அவளை சற்று தள்ளி படுக்க வைத்துவிட்டு ஹாலில் வந்து படுத்துக் கொண்டான் ..,

"என்ன தான் அவன் ஹாலில் வந்து படுத்தாலும் அவனால் அவனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை பெண்களை இதற்கு முன் கண்டிராதவன் அல்ல உரிமை உள்ள இடத்திலேயே அவனது ஆசாபாசங்களை தேட வேண்டும் என நினைத்து இருப்பானோ என்னவோ உரிமையானவள் அருகே வந்ததும் அவனது உணர்வுகளும் கொந்தளிக்க தொடங்கியது ...அவள் அவன் அருகே வந்ததும் அவனுக்கும் தாபங்கள் பொங்கி விட்டதோ???

அந்த சமயம் பார்த்து தான் அவனது காதல் கதை மற்றும் அவளது குடும்பத்தின் மீதுள்ள வெறுப்பு எல்லாம் நினைவில் வர அவனது உணர்வுகள் சட்டென்று வடிந்து போனது...

அவனால் அவனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை அவளை விட்டு விலகவும் முடியவில்லை அவளை சேர்த்து கொள்ளவும் முடியவில்லை அதற்கு அவனது தன்மானம் இடம் கொடுக்க வில்லை..அவனாக அதுவும் அவளை எடுத்து எறிந்து பேசி விட்டு இப்போது போய் அவளை என்ன காரியம் செய்து விட்டு வந்து இருக்கிறேன் இது அவள் அறிந்தால் என்ன செய்வது என்று பல கேள்விகள் அவனை சூழ ஒன்றும் புரியாமல் தத்தளித்தான்...என்ன தான் தத்தளித்தாலும் சற்று முன் அவளது அருகாமையை எண்ணியவன் மனது இலேசானது என்னவோ உண்மை தான் அந்த நினைவுகளில் உறக்கத்தில் ஆழ்ந்தான்..

இப்படியே மலர் அமெரிக்கா வந்து மூன்று நாட்கள் கடந்து விட்டது..இந்த மூன்று நாட்களில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழ வில்லை என்றாலும் நித்திலன் அவள் இருக்கும் திசை பக்கமே வரவில்லை...வீட்டிற்கு கூட தாமதமாக தான் வந்தான் அவளோ அவனுக்காக காத்திருந்தாலும் நித்திலனின் மனமோ ஒரு வேளை தியாகுவிற்காக காத்து இருக்கிறாளோ என நினைத்தான்

இதற்கிடையே மலர் ஒரு இந்திய தனியார் நிறுவனம் நடத்தும் சமையல் தொடர்பான சர்ட்டிபிகேட் கோர்ஸில் சேர்ந்திருந்தாள் அந்த படிப்பை காரணம் வைத்து தான் அவள் இங்கே வந்து இருந்தாள்..ஆம் படிக்க என்று தான் இங்கு வந்திருந்தாள்..அதிலும் அவள் குடும்பமே முறுக்கு பிசினஸ் செய்தாலும் இவளுக்கும் அதில் ஈடுபாடு உண்டு... தன் மாமனுக்காக அவள் மாற வேண்டும் என அன்றே அவள் நினைத்து இருந்தாள்.. அதற்கான முதல் படி தான் அவள் இங்கு வந்தது... இதோ அவள் இந்த பட்டய படிப்பில் சேர்ந்தது வரை எல்லாமே தன் மாமாவின் காதலை பெறவே..

படிப்பை காரணம் காட்டி அவள் வந்திருந்தபடியால் அவள் எப்படியிருந்தாலும் அவள் ஆறுமாத அந்த பட்டயப் படிப்பை படிக்க வேண்டும் அதற்காக இதோ இன்று காலை பரபரப்பாக தயாராகி கொண்டிருந்தாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top