தூவானம் 15
தூவானம் : 15
ஒழுகி வரும் அணையின் கீழே குளித்து கொண்டிருந்த பெண்களை கண்ட அவனது நண்பர்களோ, " டேய் மச்சி பச்சை கிளிங்க மச்சான் வா டா வீடியோ எடுப்போம்".. என்க
"டேய் கண்ணுல பார்கிறதோட விடுங்க டா வீடியோ எல்லாம் தப்பு டா..அழகை ரசிக்கிறதோட ஸ்டாப் பண்ணுங்க டா .."... என்று தியாகு சிறு கண்டிப்போடு சொல்ல,
அவனது நண்பர்கள் கேட்கவில்லை.." டேய் பெரிய நல்லவன் மாதிரி பேசாத டா உன்னை பத்தி எங்களுக்கு தெரியாதா ?? எங்களை கூட்டிட்டு வந்ததே நீ தான் "..என்று அவர்கள் கூற,
"டேய் சொன்னா கேளுங்க டா பிரச்சனை ஆகிட போகுது யாராவது பார்த்துட்டா அசிங்கமாகிடும் டா..இது வேற என் மாமியார் ஊர் "...என்று கூற
ஆனால் தியாகுவும் சைட் அடித்தான் அது வேறு விஷயம்..நண்பர்கள் கேட்கவில்லை என்று தெரிந்ததும், " என்னமோ பண்ணி தொலைங்க டா ".. என்று அப்படியே வேடிக்கை பார்த்தவன் கண்களில் கூட்டத்தில் சங்கவியை பார்த்தது போல இருக்க தியாகுவோ, " டேய் மச்சி அங்கே போறது சங்கவி மாதிரி இருக்கு நான் பார்த்துட்டு வரேன் நீங்க இங்கேயே இருங்க டா..எந்த பிரச்சனையும் பண்ணாதீங்க இது கிராமம் அடி பலமா இருக்கும்".. என்று எச்சரிக்கை செய்ய,
அவர்களும் , "நாங்க ஒன்னும் பண்ண மாட்டோம் டா உன் பொண்டாட்டிக்கு இவ்ளோ பயம் உனக்கு இருக்கும்ன்னு தெரியல டா".. என்று அவர்களும் கூற
அவளை கண்ட பதட்டத்தில் அவனும் நண்பர்களின் பேச்சில் வழியும் நக்கலை சரி வர கவனிக்காமல் அவசரமாக செல்ல அவனது நண்பர்கள் கூட்டத்தில் உள்ள ஒருவன் அவனுடைய செல்லை தியாகுவின் பாண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து விட்டான்..இதை பாவம் தியாகுவும் கவனிக்கவில்லை..
அவனது நண்பர்களும் தியாகுவின் மொபைலில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுக்க இந்த விஷயம் தியாகுவிற்கு தெரியாது..
அவனோ எப்படியோ சங்கவியை கண்டதும் அவன் போன் மற்றும் நண்பர்களை எல்லாம் மறந்து அவளை பார்ப்பதற்காக வந்தது போல தியாகு நடிக்க சங்கவியும் அவனை அவளது மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த அவர்களோ இவர்கள் இருவரையும் கிண்டல் செய்தனர்..அந்த கிண்டலில் இருவரும் ரசித்து கொண்டிருந்தனர்.. செல்வியும் மலரும் கூட தியாகுவையும் மற்றும் சங்கவியையும் கிண்டல் செய்தனர்..
இவர்கள் இருவரும் வெட்கப்பட அதை பார்த்து சிரித்து கொண்டே மலர் வேடிக்கை பார்க்க தூரத்தில் ஒரு கும்பல் அந்த டேம் அருகே ஒரு சிலர் மட்டும் பெண்களை வீடியோ எடுப்பதை மலர் பார்த்து விட்டாள் மலர்.. மொபைலில் பலரும் செல்பி எல்லாம் எடுத்து செல்ல அந்த ஒரு சிலர் மட்டும் மொபைலை வைத்து கொண்டே கொஞ்சம் நேரமாக நிற்க அதை கண்டவளுக்கு அவர்களின் செய்கை புரிந்து போனது..
வெறிகொண்ட வேங்கை போல சம்பவம் நடக்கும் இடத்திற்கு சென்று விட்டாள் மலர்..
"ஏ புள்ள எங்க போற ??"...என்று செல்வி கேட்க,
அவளுக்கு பதில் அளிக்காமலே செல்லவும் செல்வி அவள் பின்னால் ஓட முனைய சங்கவியும் அந்த திசையை பார்க்க அவள் அருகில் நின்று கொண்டிருந்த தியாகுவும் மலர் செல்லும் திசையை பார்க்க அங்கே அவள் அவனது நண்பர்கள் நிற்பதை கண்டதும் அவனுக்கு ஒரு நிமிடம் அரண்டு விட்டது...கூடவே தன் மானம் போக கூடிய எல்லாம் கனவும் அவன் கண் முன்னே வந்து போனது...
அவள் பின்னால் செல்ல போனவர்களை தடுத்த தியாகுவோ, " நீங்க இங்கேயே இருங்க நான் போய் என்னன்னு பார்த்துட்டு வரேன்"... என்று அவர்களை எல்லாம் நிறுத்தி விட்டு மலரின் பின்னால் ஓடினான் தியாகு..அவர்களையும் இழுத்து கொண்டு சென்றால் காரியம் கெட்டு விடும் என தெரிந்தே விட்டு சென்றான்...
மலரோ வேகமாக சென்று வீடியோ எடுத்து கொண்டிருப்பவனின் முதுகில் பட்டென்று ஒரு அடி போட அடி வாங்கியவனோ சட்டென்று மொபைலை தவறவிட்டான்..
அந்த போன் மிகச் சரியாக கேட்ச் பிடித்தாள் மலர்..போன் அவள் வசமானது அவளோ அந்த போனை பார்த்து கொண்டே, " வீடியோவா எடுக்குறீங்க பொண்ணுங்கனா உங்களுக்கு என்ன அவ்வளவு கேவலமா போயிடுச்சா?? உங்க வீட்டு பொண்ணுங்களை இப்படி ஒரு வீடியோ எடுக்க வேண்டியது தானே.." என் கூறிய மலருக்கு ஆத்திரம் தாளாமல் காலில் கிடந்த செருப்பை எடுத்து அடிக்க போக அதற்குள் நண்பர்கள் கூட்டத்தில் பலர் அடித்து பிடித்து ஓடி விட ,
வீடியோ எடுத்த ஒருவன் மட்டும் மாட்டி முழி பிதுங்கி நின்றான்...அதை கண்டு வேகமாக ஓடி வந்த தியாகு அவளிடம் , "ப்ளீஸ் அவன விடு மா "...என்று கெஞ்ச
அவளோ ,"இவன பார்த்து எதுக்கு சார் பயப்படுறீங்க நீங்க பயப்படாதீங்க பொறுக்கி நாய்ங்க என்ன வேலை பண்றாங்க பாருங்க " என்று அவள் கூற,
" அதெல்லாம் சரிதான் மா.. பரவால்ல விடுமா எல்லாரும் பார்கிறாங்க..விடுமா பிரச்சனையாயிடும் "..என்று தன் நண்பர்களை தியாகு காப்பாற்ற முயல ,
இவளோ, " ஆனால் ஆகட்டும் சார் நாலு பேர் கிட்ட அடி வாங்கினா தான் புத்தி வரும்..சும்மா விட கூடாது சார் "... என்று கூறி வீடியோ எடுத்தவனின் சட்டையை பிடித்து ஓங்கி ஒரு அறை அறைந்தாள் மலர்..அடி வாங்கிய அவனுக்கு கண்ணில் பொறி பறந்தது என்றே கூற வேண்டும்..
அதைக் கண்டதும் தியாகுவுக்கே என்னவோ போல இருக்க அவனது நண்பனோ, " மச்சான் காப்பாத்து மச்சான்". என்று கூற ,
அதை கேட்ட மலரோ தியாகுவை குற்றவாளியாக பார்த்து, " உங்க பிரண்டா இது?? "..என்று கேட்டே விட்டாள் ..
அவனும் அவளது முகத்தை பார்த்து விட்டு தலை குனிந்த தியாகு , "ஆமாம்".. என்று கூற ,
இவளோ அதிர்ச்சி அடையும் முன் தியாகுவின் நண்பன் விட்டால் போதுமென்று ஓடி விட தியாகுவோ , " இதை சங்கவி கிட்ட சொல்லிடாத பிளீஸ்".. என்று கூறவும்,
அதை கேட்ட அவளோ வெகுண்டு, " உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா ஒரு ஆம்பளையா நீங்க ..அவங்க செய்யறதை வேடிக்கை பார்த்திட்டு இருந்து இருக்கீங்க..நீங்க இதை எதிர்க்க வேண்டாமா??".. என அவள் திருப்பிக் கேட்க,
அவனோ , "நான் அவங்க கிட்ட சொன்னேன் அவங்க தான் கேக்கல அவங்க செஞ்சது தப்பு தான் ஆனால் இதை ப்ளீஸ் பெரிசு பண்ணாத..எல்லோரும் நல்ல வேலையில் இருக்கிறவங்க அவங்க லைப் ஸபாயில் ஆகிடும் ".. என்று கூற,
" இது தான் ஒரு நல்ல ஆம்பள சொல்ற பதிலா ?? அப்போ அவங்க வீடியோ எடுப்பாங்கன்னு உங்களுக்கு தெரியும் அப்படி தானே தெரிஞ்சிருந்தும் நீங்க எனக்கு என்னன்னு நெனச்சு வந்துட்டீங்களா?? இதே இடத்துல உங்க அக்கா ,தங்கச்சி யாராவது இருந்தாங்கன்னா நீங்க இப்படி தான் செய்வீங்களா?? இருங்க நான் டீச்சர் கிட்ட சொல்றேன்"... என்று அவள் மிரட்டி கூற ,
அவனோ , "தயவு செஞ்சு உங்க டீச்சர் கிட்ட சொல்லிடாதே".. என்று கெஞ்சினான் தியாகு..
"இல்ல நீங்க என் டீச்சருக்கு சரியான ஆள் கிடையாது.. அப்படியே நீங்க சரியான ஆம்பிளையா இருந்தா நீங்க இதை எதிர்த்து இருப்பீங்க ஆனால் நீங்க அப்படி இல்லை".. என்று கூற,
அவனும் , "நானும் நான் நல்லவன் தான்..உன் டீச்சரை நல்லா பாத்துப்பேன் தயவு செஞ்சு சொல்லி என் மானத்தை வாங்கிடாத "..என்று தியாகு அவளிடம் கெஞ்ச,
அவளோ , "என்னால நம்ப முடியல.." என்று கூற ,
அவனோ, " ப்ளீஸ்மா தயவு செஞ்சு சொல்லிடாத என்னோட வாழ்க்கையே போயிடும்..இதில் நான் எந்த தப்பும் செய்யலேயே".. என்று தன்னை விட வயதில் சிறியவள் என்றாலும் அவளிடம் கெஞ்சினான் தியாகு..அவளோ அவனை நம்ப முடியாத பார்வை பார்த்து கொண்டிருக்க தியாகுவோ அங்கும் இங்கும் திரும்பி பார்த்து சங்கவி வருக்கிறாளோ என பார்த்து கொண்டிருந்தாள்...சைட் அடிக்க சற்று முன் தன் நண்பனிடம் அவன் பேசிய பஞ்ச் டயலாக் நியாபகம் வந்து அவனை கொலையாக கொன்று தின்றது..சிறு பெண்ணிடம் மாட்டி விட்டோமே என்று முழி பிதுங்கி நின்றான் தியாகு..
அதற்குள் அவள் கையிலிருந்த தியாகுவின் மொபைல் போன் ஒலிக்க அதில் நித்திலனின் புகைப்படமும் நித்திலன் பெயரும் கொட்டை எழுத்துக்களில் தென்பட்டது..போன் அடித்து கொண்டே இருக்க,
அதை கண்டதும் இவளோ அதிர்ந்து , "இது யார்??".. என்று கேட்க,
தியாகுவோ என் பிரண்டு நித்திலன் இவன் கூட சேலம் தான் இவன் கிட்ட கேட்டு பார் என்னை பத்தி "..என்று கூற ,
"அதெல்லாம் எங்களுக்கு தெரியும் இது என் மாமா தான் அதைவிட இப்போ என் புருஷன் அவரு"..என்று அவள் திரும்பி பதிலளிக்க,
தியாகுவோ, " என்ன அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ?? அடேய் உனக்கு கல்யாணம் பண்ணிக்க வேற பொண்ணே கிடைக்கலையா டா நித்தி"...என்று முதல் வாக்கியத்தை அதிர்ச்சியில் வாயை திறந்தும் இரண்டாவது வாக்கியத்தை மனதுக்குள்ளும் அவன் வினவ ,
அவளோ, " ஆமாம் அதுக்கு என்ன இப்போ ஆமாம் நீ அமெரிக்க மாப்பிளை தானே??"...என்று வினவ
அவனோ, "ஆமாம் தாயி இப்போவாச்சும் என்னை விட்டுடு".. என்று அவன் கைகூப்பி தொழ,
அப்போது தான் மலரின் குறுக்கு புத்தி வேலை செய்தது.." சரி நான் இந்த விஷயத்தை டீச்சர் கிட்ட சொல்லக்கூடாதுனா நீ எனக்கு ஒரு உதவி செய்யணும் உதவி எல்லாம் கிடையாது நீங்க செஞ்சு தான் ஆகணும் "...என்று மலர் உத்தரவுடன் கூற ,
அவனோ, "என்னன்னு சொல்லு ??"...என்று கேட்டான் அப்போது அவள் விஷயத்தை கூறி," என்னோட மாமா கேட்டாங்கன்னு டிவோர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்துட்டேன் ஆனா எனக்கு என் மாமா பார்க்க அமெரிக்கா போகனும் நீயும் அமெரிக்காவில் தான் இருக்க என்னை நீ தான் என் மாமா கிட்ட கூட்டிட்டு போகணும் "..என்று கூற
அவளோ, " அதெல்லாம் வந்து அப்படி எல்லாம் உன் இஷ்டத்துக்கு செய்ய முடியாது "..என்று முதலில் மறுத்தான்..
அவளோ,"சரி நான் டீச்சர் கிட்ட சொல்றேன் இந்த வீடியோவை காட்டுறேன்..நீ தான் எடுத்தேன்னு சொல்றேன் அப்புறம் எப்படி உன் கல்யாணம் நடக்குதுன்னு பார்க்கிறேன் "..என்று கூற ,
அவனோ, " அது தான் நான் எடுக்கலையே ".. என்று கூற,
அவளோ, " உங்க போன்ல தான் எடுத்தாங்க நீங்க என்ன சொன்னாலும் டீச்சர் நம்ப மாட்டாங்க..என்னை என்ன ஏமாத்தலாம் நெனைக்கிறியா மவனே இப்போவே போய் சொல்லி கொடுத்திடுவேன்.. எனக்கு நீ ஹெல்ப் பண்ணினா நான் சொல்ல மாட்டேன் இல்லாட்டி சொல்லிடுவேன்" என்றவள் அந்த வீடியோவை அவனது எண்ணிலிருந்து ஏதோ எண்ணுக்கு அனுப்பி விட்டாள்.. "இப்போ ப்ரூவ் ஆச்சா..சூதானமா நடந்துக்கோ தம்பி".. என்று கூற,
அதைக் கேட்டதும் அதிர்ந்து நிற்க அதை கண்டவளோ, " உங்களுக்கு வேற ஆப்ஷனை இல்லை நான் சொன்னத செஞ்சுதான் ஆகணும்".. என்று கூறி அன்றிலிருந்து இதோ இன்று வரை அவனை ஆட்டி வைத்து இதோ அமெரிக்கா வரை வந்துவிட்டாள்..இயற்கையிலே பய உணர்வை கொண்ட தியாகுவும் இவள் ஆட்டத்துக்கு வளைந்து கொடுக்க துவங்கி விட்டான் அவனின் எதிர்கால நலன் கருதி ,
பனிமலரின் கையில் மாட்டி முழி பிதுங்கி நிற்பது நித்திலன் மட்டுமல்ல தியாகுவும் தான்..அவளும் இருவரையும் ஆட்டி வைத்து மகிழ்ச்சியாக இருக்கிறாள்...
தூவானம் தூறும்..
