Share:
Notifications
Clear all

தூவானம் 14

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

தூவானம் : 14

கதவு தட்டும் ஓசை கேட்க கதவு தட்டும் ஓசை வைத்து தியாகு தான் கதவைத் தட்டுகிறான் என புரிந்துகொள்ள, " யாரோ கதவை தட்டுறாங்க நித்திலன்".. என்று அவனிடம் கூற,

" கதவ தொற டி உன் காதலன் தான்"... என்று கூறிவிட்டு குப்புறக் கவிழ்ந்து படுத்துக் கொண்டான்.. நித்திலன் ஆனால் அவனால் இந்த எரிச்சலை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..அதிலும் அவள் வேற்றாள் போல அவனை பெயர் சொல்லி அழைப்பது முதல் தியாகுவிடம் கொஞ்சுவது வரை எல்லாமே அவனுக்கு கடுப்பை தான் கொடுத்து கொண்டிருந்தாள் மலர்...

அவன் குப்புறக் கவிழ்ந்து படுத்து இருப்பதை கண்டு மனதுக்குள்ளே சிரித்துக் கொண்டே, " இப்பவே கமிழ்ந்து படுத்திட்டா எப்படி மாமா??? கொஞ்சம் வெயிட் பண்ணு மாமா மூணு மாசமா என்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்ட நீ அதுக்கு எல்லாம் நீ அனுபவிக்க வேண்டாம் ..கொஞ்சம் அனுபவி மாமா"...என்று மனதுக்குள்ளே செல்லமாக தன் மாமனை திட்டிக்கொண்டே கதவை திறக்க அங்கே தியாகு உணவோடு காத்திருந்தான்..

"பிளவர் இந்தா புட் உனக்கு புடிச்ச பிரியாணி வாங்கிட்டு வந்திருக்கேன் ஸ்வீட்டி "... என்று சிரித்துக் கூற அவளோ நித்திலன் படுத்திருக்கும் அறையை எட்டி ஒரு முறை பார்த்துவிட்டு தியாகுவை பார்த்து முறைத்த மலரோ, " அஞ்சு ரூபாய்க்கு நடிக்க சொன்னா அஞ்சு ரூபாய்க்கு மட்டும் நடி புரியுதா என்ன ஓவரா பண்ணிட்டு இருக்க?? என் கையை என்ன என் மாமா முன்னாடி பிடிக்க வர கொழுப்பா வகுந்துடுவேன் உன்னை".. என்று அவள் கூற,

அவனோ இப்போ நடிப்பு இல்லையா ரியலா என்ற மோடில் மாறியவன் தன் முகத்தை மாற்றி , "ராட்சசி நான் எங்கே உன் கைய பிடிச்சேன் ..என்னை ஏன் இப்படி தொல்லை பண்ற ??ஆளும் மூஞ்சியும் பாரு போண்டா கோழி"... என்று கூற,

அவளோ, " ஏன் என் மூஞ்சிக்கு என்ன குறைச்சல்..இந்த மூஞ்சியை பார்த்து தான் என் மாமா என்னை கட்டினார்" என்று கூற,

ஆமாம் கட்டினாலும் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டான் அதுக்கு அவன் தண்ணி லாரியில் விழுந்து செத்து இருக்கலாம்".. என்று கூற

அவளோ அவனை மேலும் கீழும் பார்த்து, " உனக்கு கொழுப்பு தான்.. பார்த்தியில என் மாமாவை எப்படி நல்லா ஜம்முனு இருக்காருன்னு நீ இந்த மாசமா இருக்கிற பொம்பளை மாதிரி வீங்கி போயி இருக்க "..என்று கூற அவனோ, " ஆமாம் உன்னை எப்போ பார்த்தேனோ அப்போ இருந்து மன வேதனையில் வீங்கி போய் தான் இருக்கேன் ".. என்று நொந்து கூறினான் தியாகு..

அவன் கண்ணில் மரண பயம் இவளை பார்த்து தெரிய அவளோ, " அந்த பயம் இருக்கட்டும் மவனே "... என்று கூறியவள்,

"ஆமாம் பிரியாணி மட்டும் வாங்கிட்டு வந்து இருக்க கத்திரிக்காய் கொத்சு யாரு வாங்குவா?? அப்படியே நல்ல சால்னா அதையும் வாங்கிட்டு வந்து இருக்க வேண்டியது தானே".. என்று அவள் கூற

அவனோ நொந்து போய், " இங்க பாரு உன்ன ஆட்டையாம்பட்டிலிருந்து அமெரிக்கா கொண்டு வரதுக்கு எல்லாமே என்னோட காசு சொலையா 4 லட்சத்துக்கு மேல செலவு பண்ணி இருக்கேன் தெரியுமா..இதுல உனக்கு சால்னா கத்திரிக்காய் கொத்சு இல்லைன்னு புலம்புற இதெல்லாம் ரொம்ப ஓவர் தின்னே அவனை முடுச்சுடுவ போல ".. என்று தியாகு கூற,

இவளோ, " நாலு லட்சம் தான நீ பண்ணினதுக்கு உன்னை எல்லாம் நிக்க வெச்சு உப்புக்கண்டம் போட்டு இருக்கனும் என்னால நீ தப்பிச்சன்னு சொல்லு".. என்று கூற,

" அவனா நான் என்ன செஞ்சேன்னு சொல்லிட்டு இருக்க ..அது நான் பண்ணல அவனுங்க தான் பண்ணினாங்க ..எனக்கு வர கோபத்துக்கு உன்னை அப்படியே கழுத்து பிடிச்சு கொல்லனும் ராட்சசி எப்படித்தான் என் பிரண்ட் உன்னை எல்லாம் சமாளிக்க போறானோ தெரியல.. பேசாம முடிஞ்சா நீயே அவனுக்கு டிவோர்ஸ் கொடுத்துடு அது தான் நல்லது" என்று தியாகு கூற

அதை கேட்ட மலரோ அவனை முறைத்து, "யாருக்கு நல்லது ??"...என்று அவள் கேட்டாள்..

" ஹ்ம்ம் எனக்கும் நித்தலனுக்கும் தான் நல்லது உன்னை எல்லாம் எப்படி அவன் கல்யாணம் பண்ணினா??"... என்று அவன் சந்தேகமாக வினவ,

அவளோ, " தாலி கட்டித்தான் இது கூட தெரியாதா?? இது ஒரு கேள்வின்னு கேட்டுட்டு இருக்க நான் ஒன்னும் உன்னை மாதிரி மொக்க பீஸ் கிடையாது அப்புறம் காதலிக்கிறேன் அது பண்றேன் இது பண்றேன்னு சொல்லி வீட்டுப் பக்கம் வந்திடாத புரியுதா??".. என்று அவள் எச்சரிக்கை செய்ய,

" நான் ஏன் வரப் போறேன் நீயாச்சு உன் புருஷன் ஆச்சு எக்கேடோ கெட்டு போங்க நான் ட்ரான்ஸ்பர்க்கு எழுதி கொடுத்துட்டு எங்கேயாவது போறேன் அமெரிக்காவிலிருந்து ஆண்டி ஆனவன் நான் ஒருத்தானாகத்தான் இருப்பேன் ".. என்று புலம்பிக் கொண்டே சென்றான் அவன் செல்வதை பார்த்து பனிமலர் சிரித்தாள்..

மூன்று மாதங்களுக்கு முன்பு

மலர் தன் அத்தையிடம், " அத்தை செல்வியோட நான் பவானி டேம் பார்த்துட்டு வரேன் அத்தை.. அங்க இருக்கிற ஒரு கோவிலில் விசேஷம் எங்க டீச்சர் வர சொல்லி இருக்காங்க ".. என்று கூற ,

அவரோ, "எங்கிட்ட ஏன் டி கேட்கிற உன் அம்மா அப்பாகிட்ட கேட்டுட்டு போ".. என்று அவரோ சலித்துக் கொண்டு கூறினார் ..

அவளோ, "அவங்க கிட்ட எதுக்கு நான் கேக்கணும் அதான் கட்டி கொடுத்துட்டாங்கல ..ஒன்னு என் புருஷன் கிட்ட கேட்கணும் அவங்க இங்கே இல்லை..அடுத்தது உங்க கிட்ட தானே கேக்கணும் "..என்று அவள் கூற ,

அவரோ அவளது பேச்சில் மயங்கி அவளை உச்சி முகர்ந்து, " உன் கூட வாழாமல் போனானே பாவி பய ".. என்று மீண்டும் மீண்டும் அதே கேள்வியுடன் அவளிடம் புலம்ப ,

அவளோ , "அத்தை எனக்கு மாமாவை புடிச்சிருக்கு... மாமா தான் என் உசுரு ஆனால் அதே உணர்வு மாமாவுக்கும் வரணும்ல மாமாக்கு என்ன பிடிக்காமல் கல்யாணம் பண்ணி இருக்கு அதோட கோபத்தில தான் இப்படி எல்லாம் நடந்து இருக்கு.. அது ஒன்னும் தப்பான ஆள் எல்லாம் இல்ல ரொம்ப பாவம் அதை சரியா புரிஞ்சுகிட்டா நல்ல மனுஷன் தான் என் மாமன் அப்புறம் ஏன் மாமனை பாவி எல்லாம் சொல்லாதீங்க..அது சொக்க தங்கம் ".. என்று கூற

அதைக்கேட்ட அவரோ , "உன்ன போய் வேண்டாம்னு சொல்லிட்டானே டி..நீ தான் டி அவனுக்கு ஏத்தவ..இது மாதிரி தேடினாலும் ஒரு பொண்ணு அவனுக்கு கிடைக்குமா" என்று மருமகளின் குணமறிந்து அவர் கூற ,

" நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன் நீங்க என்னை இப்படி புரிஞ்சு வச்சிருக்கீங்கலே அதே மாதிரி உங்க மவன நீங்க புரிஞ்சு வச்சிருக்கீங்கலா?? அவரு கல்யாணத்துக்கு முன்னாடியே என்கிட்ட இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொன்னாரு நான் தான் அவர் மேல ஆசைப்பட்டு பிடிவாதமாக கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. ஏன் மாமா எனக்கு தான் இந்த உரிமை நான் யாருக்கு விட்டுக்கொடுக்க மாட்டேன்.. அப்படி நினைத்து தான் கட்டிகிட்டேன்.. அப்போ அவர் கோவப்படுறதுல நியாயம் இருக்கல அவர் திட்டினாலும் எனக்கு அவர் மேல கோவம் வராது... ஏன்னா என் மேல தப்பு அதனால நான் பொறுத்து போவேன்.. என் மாமா என்கிட்ட வரும் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கு ஆனா நீங்க ஏன் அத்த அந்த மனுஷனை புரிஞ்சுக்கவே இல்ல "...என்று கூற,

அவரோ , "என்னடி சொல்ற??".. என்று வினவ

"ஆமா அத்த நீங்க உங்க மகன சரியா புரிஞ்சுக்கல நல்லா யோசிச்சு பாருங்க அவருக்கு பிடிக்கலைனாலும் நீங்க சொன்னீங்கன்னு அவரு எல்லாமே செஞ்சிருக்காரு அதிலிருந்து தெரியலையா உங்க மகனோட குணத்தை பத்தி".. என்று கூற அதை கேட்ட சிவகாமியும் திகைத்து நிற்க ,

அதை கண்டு சிரித்த பனி மலரோ, "நீங்க இப்படியே யோசித்துட்டு இருங்க நான் பவானி டேம் போயிட்டு வரேன் "...என்று கூறியவள், அப்படியே அவள் வீட்டிலும் விஷயத்தை கூறிவிட்டு செல்வியுடன் புறப்பட்டுவிட்டாள்..

செல்வியுடன் வழிநெடுகிலும் கண்டதையெல்லாம் வாங்கி தின்று கொண்டே சென்றுகொண்டிருக்க செல்வியோ , "என்னடி உன் புருஷன் உன்னைய வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டாங்க உனக்கு வருத்தம் இல்லையா".. என்று கேட்க,

அவளோ, " என் மாமா தான் என்ன வேணாம்னு சொல்லிட்டு போயிருக்கு நான் என் மாமாவை வேணாம்னு சொல்லல"... என்று செல்விக்கு திருப்பி பதிலளித்தாள்.. கூடவே , "என் மாமா எங்க போனாலும் என் கிட்ட வந்து சேர்ந்திருங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு செல்வி அந்த தைரியத்தில் தான் நான் என் மாமா அனுப்பின விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தேன் ".. என்று கூறி கொண்டே பயணம் இருவரும் ஆனார்கள்..

சேலத்துக்கு அருகே உள்ள பவானி அணையின் அருகில் இருக்கும் அந்த ஊரில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் தான் விசேஷம்..

இவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் சங்கவியின் சொந்த ஊர் அது அவர் தான் இவர்கள் இருவரையும் விவேசத்துக்கு அழைத்தது..இவர்கள் மட்டுமின்றி படிப்பிக்கும் அனைத்து மாணவர்களையும் விசேஷத்திற்கு அழைத்திருந்தார் அதன்படியே இவர்கள் இருவரும் அங்கு செல்கின்றனர்..

சொந்தங்கள் பந்தங்கள் எல்லாரும் சங்கவியின் வீட்டில் குழுமி இருக்க சங்கவிக்கு நிச்சயம் செய்து தியாகுவும் தன் வருங்கால மனைவியை பார்க்கவே நண்பர்களுடன் கோவில் விழாவிற்கு வந்திருந்தான்..மற்றும் நிச்சயம் முடிந்ததாலும் அவன் வீட்டில் விஷயத்தை சொல்லாமல் அவளை காண கோவிலிலேயே அவளுக்காக காத்திருந்தான் தியாகு..

அவனும் அவனுடைய நண்பர்களும் ஊரை சுற்றிப் பார்த்துக் கொண்டே அந்த பவானி அணைக்கட்டில் நின்று பார்த்துக் கொண்டிருக்க கூட்டம் அலைமோதியது..

அந்த சமயம் கூட்டத்தில் சங்கவியும் சங்கவியின் மாணவர்களான மலரும் செல்வியும் வர தியாகுவின் நண்பர்கள் கிராமத்து பெண்களையே காணாதது போல சைட் அடித்துக் கொண்டிருந்தனர் அதில் தியாகுவும் உள்ளடக்கம் , "என்ன மச்சான் உன் பொண்டாட்டி ஊருக்கே வந்து பொண்ணுகளை சைட் அடிச்சு இருக்க" என்று நண்பர்கள் கூற

தியாகுவோ, " மச்சி எந்த வயசு ஆனாலும் சைட் அடிக்கணும் பொண்ணுங்கல..இல்லாட்டி நமக்கு வயசாகிடும்... நம்ம உயிர் இருக்கிற வரைக்கும் சைட் அடிச்சிட்டு இருக்கணும் மச்சான் அதுக்கு வயசு காலமெல்லாம் இல்ல பொண்டாட்டி ஊரா இருந்தா என்ன மாமியார் ஊரா இருந்தா என்ன ??எங்க போனாலும் சைட் அடிக்கனும் இத்தனை நாள் வெள்ளைகாரிங்கல பார்த்து பார்த்து அலுத்து போச்சு... இப்ப தான் நல்ல கலர் கலரா நம்ம ஊரு பொண்ணுங்கல பார்க்க எப்படி தகதகன்னு இருக்கு தெரியுமா??".. என்று தன் மனைவியை காண வந்தவன் பெண்களை பார்த்துக்கொண்டு கூற அதில் ஒரு சில பெண்கள் அணைக்கட்டிலிருந்து குளித்துக் கொண்டிருந்தனர்..

அதை கண்டதும் அந்த அணை நீர் போல அவனது மனமும் துள்ளி குதித்தது கூடவே அவனது நண்பர்களும் துள்ளி குதித்தனர்..

தூவானம் தூறும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top