தூவானம் 13
தூவானம் : 13
"என்ன தியாகு நீங்க வரேன்னு சொல்லி உங்க பிரண்டை அனுப்பி வச்சிருக்கீங்க நான் உங்களை எவ்வளவு எதிர்பார்த்தேன் தெரியுமா??"... என்று அவள் நித்திலனின் போனை பிடுங்கி தியாகுவிடம் கொஞ்சிப் பேச இங்கே மிளகாய் அரைக்காமலேயே நித்திலனுக்கு காந்தியது..
ஒருவேளை இவள் என்னுடைய மாமா மகள் என தியாகுவுக்கு தெரியாது போல எனக்கு இவளுக்கும் கல்யாணம் ஆனதும் அவனுக்கு தெரியாதே அவனிடம் இதை பற்றி பேச வேண்டும் என நினைத்து கொண்டான்..
ஆனால் எப்படி இவர்கள் இருவரும் இணைந்தார்கள் என்றெல்லாம் அவன் யோசிக்க இவள் எப்படி சட்டென்று மாறினாள் என்னை காதலிக்கிறேன் என்று கூறியவள் இப்போது தியாகுவை கொஞ்சி கொண்டிருக்கிறாளே அது தான் அவனுக்கு மிகப் பெரிய கேள்வியாக இருந்தது..அதுவும் என் முன்னால் கொஞ்சுகிறாளே என எரிச்சல் கொண்டான் நித்திலன்...
இப்பொழுது அவள் தியாகுவிடம் கொஞ்சிப் பேசுவதை காது கொடுத்து அவனால் கேட்க முடியவில்லை என்றாலும் ஆனால் அவனால் தன் காதில் புகை வருவதை அவனாலேயே கட்டுப்படுத்தவும் முடியவில்லையே..மேலும் அவளை தடுக்கவும் முடியாமல் ஏதோ ஒன்று தடை செய்கிறது என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான் நித்திலன்..
அவளோ முதலில் சத்தமாக பேசியவள் பின்பு குசுகுசுவென அவனுக்கு கேட்காத குரலில் பேச கடுப்பான நித்திலன் வெடுக்கென போனை வாங்கி அணைத்து விட்டான்...
பொறுத்தது போது பொங்கி எழு என்ற நிலையில் அவன் இருக்க அவளோ, " என்னாச்சு நித்திலன் எதுக்கு போன கட் பண்ணீங்க??"... என்று அவள் ஒன்றும் தெரியாதவள் போல பேச,
அவனோ , "எல்லாம் நேர்ல பாத்து பேசிக்கோ..இது என் போன் கண்டவங்க பேசறதுக்கு இல்லை".. என்று வெடுக்கென கூறியவன்,
"வா "...என்று கூறி அவளது பெட்டிகளை எல்லாம் வைத்து விட்டு அவளையும் ஏற சொல்லி வண்டியை எடுத்தான்..
அவனுக்கோ ஒரே குழப்பமாக இருந்தது சொந்த அத்தை மகள் அதிலும் மனைவி வேறு அவள் வேறு ஒரு ஆணுடன் பேசுவது இவ்வளவு புகைச்சலை தருமா என நினைத்தவன் அதைவிட இவளும் அவனும் திருமணம் செய்யப் போகிறார்களா??? அதையும் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை...
மேலும் தியாகு கடந்த ஒரு வாரமாக வீட்டை சுத்தம் செய்தது இவளுக்கு தானா அப்போ இவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக ஓரே அறையில் இருக்கப் போகிறார்களா?? என அவன் நினைக்க அந்த நினைவே அவனுக்கு வேப்பங்காயாக கசந்தது.... இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என தோன்றியது...
வழி முழுவதும் அவள் சாலையை வேடிக்கை பார்த்து வர, அவனும் அதிவிரைவாக வண்டியை செலுத்தியவன் நேராக ஒரு சில மணி நேரம் பிரயாணத்துக்கு பின் பிளாட்டுக்கு போய்விட்டான் ..
அந்த நேரம் பார்த்து தியாகுவின் வண்டியும் மிக சரியாக வந்தததை கண்டதும் நித்திலனின் காரில் இருந்து புள்ளி மான் போல காரை திறந்து கொண்டு ஓடினாள் மலர்..
இவனுக்கோ காரில் இருந்து இதை பார்க்க எரிச்சல் வந்தது, " அவ புருஷன் மாதிரி ஒடுறா அடியே நான் தான்டி உன் புருஷன் "...என்று கத்த வேண்டும் போல தோன்றியது..
தியாகுவும் அவளை கண்டதும் துள்ளி குதித்து, " ஹே பிளவர் சாரி நான் வரணும்னு நினைச்சுட்டு இருந்தேன் ஆனால் முக்கியமான மீட்டிங்ல மாட்டிக்கிட்டேன்".. என்று கூற,
அவளோ அவனை பார்த்து சிணுங்கி, " போங்க நான் உங்களை நம்பி இங்கே வந்தா மீட்டிங்ன்னு சொல்லிட்டீங்க.. என்ன நான் வந்ததும் உங்களுக்கு திமிர் அதிகம் ஆகிடிச்சா ".. என்று கூற,
அதற்குள் தியாகுவோ, " ஹே பிளவர் என்ன இப்படி சொல்லிட்ட நான் என்ன அப்படியா ??".. என்று அவன் கெஞ்ச
அவளோ, " நோ ப்ராப்ளம் ".. என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே காரில் இருந்து அனைத்தையும் கேட்டு கொண்டே இறங்கி நித்திலன் நிற்க,
மலரோ நித்திலனை கையை காட்டி தியாகுவிடம், "இவரு யாருன்னு தெரியுமா உங்களுக்கு ??"...என்று கூற,
நித்திலன் அமைதியாக நின்றான்..ஏனெனில் தன் நண்பனை பற்றி தெரிந்ததாலும் அவனுக்கு தனக்கும் மலருக்கும் உள்ள உறவு என்னவென்று தெரியாததாலும் தன் நண்பன் மீது உள்ள அதீத நம்பிக்கையின் பேரில் நித்திலன் நிற்க தியாகுவும் தன் நண்பனின் நம்பிக்கையை பொய்க்க வில்லை..
" யாரு என்னோட பிரெண்ட் நித்தி..என்னுடைய பெஸ்ட் பிரண்ட்.. எனக்காக உயிரை கூட கொடுப்பான் ..நான் சொன்னதும் உன்னை அழைச்சிட்டு வந்தான் பார்த்தீயா".. என்று தியாகு நித்திலனை புகழ்ந்து தள்ளி கூற,
அதை கேட்ட மலரோ , " ஹா ஹா ஆமாம் உங்க பெஸ்ட் பிரென்ட் தான் ஒத்துக்கறேன்..ஆனால் இவர் தான் என்னோட கசின் அதாவது என்னோட முன்னாள் கணவர் எனக்கும் இவருக்கும் தான் டிவோர்ஸ் ...சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமல் இரண்டு பேரும் டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணி இருக்கோம்".. என்று கூற,
அதைக்கேட்டு அதிர்ந்த தியாகுவோ, " என்ன மச்சி கல்யாணம் பண்ணி இருக்கியா சொல்லவே இல்ல.. "...என்று தியாகு கூறவும்,
நித்திலனும் தலையை குனிந்து கொண்டு, " உன்கிட்ட சொல்ல முடியல டா அப்போ இருந்த சூழ்நிலை அப்படி பட் ஸ்டில் நௌ அவ என் வைஃப் தான் ".. என்று பட்டென இப்போதும் அவள் என் மனைவி தான் என்று கூறிவிட,
அதைக் கேட்டு தன் நண்பன் தங்களது சூழலை புரிந்து கொள்வான் என நினைத்து அவன் கூற அதை கேட்ட தியாகுவோ, " ஓ பரவால்ல மச்சி..நல்லவேளை நீ இவ கிட்ட இருந்து விலகிட்ட இல்லாட்டி இந்த அழகியை நான் இழந்து இருப்பேன் ..எல்லாம் விதி மச்சி..அது தான் நாங்க லவ் பண்றோமே.. நாங்க இரண்டு பேரும் சேரது தானே சரி..கல்யாணம்னா ரெண்டு மனசும் ஒத்து போகனும் மச்சி "... என்று நித்திலன் மலரிடம் கூறிய அதே டயலாக்கை திருப்பி அவனுக்கே கூறினான் தியாகு..
அதை கேட்ட நித்திலனோ அரண்டு போனவன் என்ன இந்த பரதேசி இப்படி சொல்றான் மானம் கெட்டவனா இருக்கான் என மனதுக்குள் தன் நண்பனை திட்டி தீர்த்தான்...ஆனால் அது அறியாமல் இருவரும் காதல் ரசம் சொட்ட விழி மேல் விழி வைத்து கண்களால் காதலை கொட்டி கொண்டு இருந்தனர்..
நித்திலனுக்கு இவர்கள் இருவரின் செய்கைகளைக் கண்டு குழம்பியவன் யாரை அழைத்து கேட்பது என்று கூட தெரியாமல் முழி பிதுங்கி நின்று கொண்டிருந்தான்..அவனால் இந்த சூழலில் வீட்டில் கூட அழைத்து கேட்க முடியாதே..
அதற்குள் அவளோ, "என்ன தியாகு இங்கே தான் பேசிட்டு இருப்பீங்களா?? வாங்க வீட்டுக்கு போகலாம்"... என்று கூற,
"எஸ் பிளவர் குளிர் வேற நான் உன்னை பார்த்ததில் அத மறந்துட்டேன் பார் உள்ள வா உனக்காக நான் ஒன் வீக்கா கிளின் பண்ணி சுத்தம் பண்ணி இருக்கேன்... என் கூட தான் தங்கியிருந்த நித்திலன் அவனை கூட வேற ரூம்க்கு போக சொல்லிட்டேன் "...என்று கூற,
அதை கேட்க் அவளோ செல்லமாக சிணுங்கி, " நீங்க எதுக்கு அவரை ரூம் மாற சொல்லி இருப்பீங்கன்னு எனக்கு தெரியாதா நாட்டி பெல்லோ தியாகு நீங்க ".. என்று கூற ,
நித்திலன் மனதோ ஏடாகூடமாக சிந்திக்க துவங்கியது..அவனால் அப்படி சிந்திக்க கூட முடியவில்லை... இவர்களின் நெருக்கத்தை அவனால் கடுகளவும் சகித்துக் கொள்ள முடியவில்லை அதனால் , "ஸ்டாப் இட் மலர்"... என்று கோபத்துடன் கூற
அவளோ திரும்பி பார்த்து , "என்னாச்சு நித்திலன் "...என்று கூற
அதே நேரம் தியாகுவும் , "என்னாச்சு மச்சி".. என்று கூற நித்திலனோ தன் நண்பனை பார்த்து, " தியாகு நான் இவ தான் உன்னோட காதலின்னு என்று எனக்கு தெரியல நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றது தப்பெல்லாம் இல்ல... ஆனா வந்து எனக்கும் இவளுக்கும் இன்னும் டிவோர்ஸ் முடியல ஸ்டில் நௌ அவ என்னோட பொண்டாட்டி தான் அவ உன்னோட ரூம்ல இருக்கறது எனக்கு சரியா படலை ..அவ என் கூட இருக்கட்டும் ".. என்று கூற,
அதைக் கேட்ட தியாகுவோ, " என்ன மச்சி சொல்ற நீ எந்த காலத்துல பேசிட்டு இருக்க அமெரிக்கால இருக்கிற மாதிரி பேசு..அவ என்னோட காதலி அதை மறந்துடாத "...என்று கூற,
அதை கேட்ட நித்திலனும் , "என்ன தான் அமெரிக்கான்னு நீ சொன்னாலும் இனியும் நீ நம்ம கலாச்சாரத்தை மறந்து இருக்க மாட்டேன்னு நினைக்கிறேன் "...என்று கூற
அதைக்கேட்ட மலரோ, " ஹா ஹா கலாச்சாரத்தை பத்தி நீங்க பேசறீங்க ..ஹம்ம் யார் இந்த காலத்துல கலாச்சாரம் அது எல்லாம் பேசிட்டு இருக்காங்க??? நீங்க கூட தான் சொன்னீங்க என்னால மாமா பொண்ணான உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு இதுவும் நம் கலாச்சாரத்தில் ஒன்று தான் காலங்காலமாய் எல்லாரும் பண்ணிட்டு தான் இருக்காங்க நீங்க பண்ண முடியாது சொன்னீங்க இல்லையா??அப்போ மட்டும் உங்க கலாச்சாரத்தை எங்கே அடகு வெச்சு இருந்தீங்க?? தியாகு சொன்னதில் என்ன தப்பு ..நம்ம கேஸ் கோர்ட்டில் போயிட்டு இருக்கு ?? நாம எப்படி ஒரே வீட்ல இருக்கு தங்க முடியும் ??"...என்று அவள் தேள் கொடுக்கு போல அவனை வார்த்தையால் கொத்த,
அதை கேட்ட நித்திலனுக்கு சுறுசுறுவென்று கோபம் ஏற, தியாகுவோ, " ஆமாம் மச்சான் அவ சொல்றது உண்மை தான் "..என்று கூற ,
தியாகுவிடம் நித்திலனோ , "நீ நடந்த விஷயம் தெரியாம இதுல தலையிடாத அதான் டிவோர்ஸ் இன்னும் நடக்கலையே டிவோஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் என்னமோ பண்ணுங்க நான் கண்டுக்க மாட்டேன் ஆனால் இப்போ முடியவில்லை அவ என் கூட தான் இருப்பா..இருந்தே ஆகனும் "... என்று கூற ,
மலரோ , "உங்களுக்குத்தான் என்னை பிடிக்கலையே அப்புறம் எதுக்கு நீங்க என்ன கம்பெல் பண்றீங்க நான் என்ன செஞ்சா உங்களுக்கு என்ன???" என்று வினவும்,
நித்திலன் அடிக்குரலில் அவளருகே வந்து , "நீ என் கூடத்தான் இருக்க அவனுக்குத்தான் கலாச்சாரம் காலச்சக்கரம் எதுவுமே தெரியலைன்னா உனக்கும் தெரியலயா குடும்ப மானத்தை இப்படி வாங்க போறியா நீ??? நான் சொல்றதை சொல்லிட்டேன் அதுக்கு பிறகு உன் இஷ்டம் ".. என்று கோபத்துடன் கூற,
அவளும் அதே கோபத்துடன், " குடும்ப மானத்தை பத்தி நீங்க சொல்றீங்க?? கவலைப்படாதீங்க?? இனியும் 90 நாள்கள் தான் அதுக்குள்ள நம்ம கேஸ் கோர்ட்டில் வந்துரும்...டிவோர்ஸ் கிடைச்சிடும் அதுக்கப்புறம் நீங்க என்ன பேசப் போறீங்க நானும் பார்க்கிறேன்"... என்று அவனுக்கு சவால் விட்டவள் திரும்பி தியாகுவிடம், " டார்லிங் எவ்வளவு தூரத்தில் நாம பிரிஞ்சி இருந்தோம் இப்போ ஒரு சுவர் தானே பிரிஞ்சி இருக்க போறோம் ..ஒன்னும் பிரச்சனை இல்ல நம்ம எப்ப வேணா மீட் பண்ணிக்கலாம் எங்க வேணா போய்க்கலாம் அதனால நீங்க கவலைப்படாதீங்க நான் இவர் கூடவே ஸ்டே பண்ணிக்கிறேன் அதுவும் என்னோட கசினா சொந்தக்காரனா நினைச்சு தங்கறேன் "... என்று கூறியவள் கூடவே,
" என்னை மீறி எதுவும் நடக்காது"... என்று அவள் கூற அதைக் கேட்ட தியாகு,
" பிளவர் எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு பிளவர்..அதை விடு நான் அங்கே தங்கிடறேன் இப்போ என்ன செய்ய போறான்னு பார்க்கிறேன்" என்று கூறி சிரித்தவன் மேலும் , " அண்ட் இந்த டிரஸ் ரொம்ப அழகா இருக்கு"... என்று கூற,
அதை கேட்ட மலரோ, " இந்த டிரஸ் கூட நீங்க தான் வாங்கித் தந்தது நல்லா இருக்கா ??"...என்று தன்னையே ஒரு சுற்று சுற்றி காட்ட அதை கண்ட நித்திலனுக்கு இதைக் காணும் சக்தி எல்லாம் இல்லை ..
எரிச்சல் மடிந்த முகத்தோடு , "இம்சை எங்க இருந்தாலும் என்ன தொல்லை பண்ணிட்டே இருக்குது புது தலைவலியை வேற கொண்டு வந்திருக்கு...இவளுக்கு லவ் பண்ண வேற எவனும் கிடைக்கலை இந்த வெந்து போனவனை போய் காதலிச்சு இருக்கா".. என முனகிக்கொண்டே அவன் அவனது அறையில் சென்று விட்டு படுத்துக்கொண்டான் ..மனம் முழுவதும் மீண்டும் பாரம் கூடி கொண்டது...
அவளும் அவன் பின்னாலேயே அவளது உடமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தவள் வீட்டை சுற்றி பார்த்துவிட்டு அவனது அறைக்குள் நுழைய அவனோ தனது ஒரு கையால் முகத்தில் மூடியபடி படுத்திருந்தான்..
அவனை பார்த்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தவள் அவளது உடமைகளை எல்லாம் வைத்து விட்டு ஹாயாக அவன் அருகே படுக்க அவன் சட்டென்று பதறி அவன் எழ அவளோ , "என்ன பாக்கறீங்க??"..என்று அவள் கூற
அவனோ, " எழுந்து வெளியே போடி"... என்றான் கடுப்புடன்,
அவளோ, " எங்கே தியாகு கூடவா ??".. என்று கூற
"ஸ்டாப் அறிவு இருக்கா கொஞ்சமாவது.. "...என்று அவன் கேட்கவும்,
அவளோ , "நீங்க தான் வெளியே போக சொன்னிங்க..இங்கே இருக்கிறது ஒரு பெட்ரூம் என்னால இந்த குளிரில் கீழே படுக்க முடியாது உங்களுக்கு வேணும்னா நீங்க கீழ படுத்துக்கோங்க.. இல்லாட்டி அப்படி உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்துச்சுன்னா நான் தியாகு ரூமுக்கு போறேன் "... என்று கூறவும் தியாகு கதவை தட்டவும் சரியாக இருந்தது...
தூவானம் தூறும்...
