Share:
Notifications
Clear all

தூவானம் 12

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

தூவானம் : 12

மூன்று மாதங்களுக்கு பிறகு

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணம்..

காலை ஏழு முப்பது மணி ஆகியும் இன்னும் எழ மனமில்லாமல் படுத்துக் கொண்டிருந்தான் நித்திலன்... கடந்த மூன்று மாதங்களாகவே இப்படித்தான் எதிலும் நாட்டமும் இல்லை எதிலும் ஒரு இன்ட்ரஸ்ட் இல்லை..வாழ்க்கையை அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது...அவன் மனமோ நிலை இல்லாமல் தத்தளித்து கொண்டிருந்தது.. என்னவோ குடும்பத்தில் உள்ள அனைவரும் அவனை தொல்லை செய்வதாக அவன் நினைத்து கொண்டிருக்க, இப்போது எவரும் கண்டு கொள்ளாமல் இருப்பது அவனுக்கு வேதனையை தான் அள்ளி கொடுத்தது...

அவனது தாய் கோபப்படுவார் எனத் தெரிந்தும், அவர் உடல்நிலை சரியில்லை என தெரிந்தும் அவன் மனதிற்கு ஒப்பாமல் இருந்த ஒரு விஷயத்தை அவன் அவனது வாழ்க்கையில் இருந்து அகற்ற முயற்சிக்க ,

அது மேலும் அவனது தாயை வருத்தப்படுத்தியது என்றே கூறலாம் மூன்று மாதங்களாக அவர் அவனுடைய எந்த அழைப்பையும் அவர் ஏற்பதில்லை போன் அடித்தால் யாரும் எடுப்பதில்லை... அவனது அம்மா அவன் மீது மிகுந்த கோபத்தில் இருக்க இவனும் விடாமல் போன் அடித்துக்கொண்டே இருந்தான்..

ஒரு முறையாவது எடுக்க மாட்டாரா என அவன் முயல யாரும் எடுக்க வில்லை ஆனால் ஒரு முறை மட்டும் போன் எடுக்கப்பட்டது..அது வேறு யாருமில்லை மலர் தான் எடுத்தாள்..

அதாவது எனக்கும் விவாகரத்துக்கு சம்மதம் என அவள் கையொப்பமிட்ட பத்திரம் அவனுக்கு வந்து சேர அதை கண்டது முதல் அவனுக்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது... ஏன் என்று புரியவில்லை..அவளிடம் அன்று கேட்ட போது கூட அவள் போடாமல் இருந்தவள் இன்று கையெழுத்து போட்டு விட்டாலே இவ்வளவு தானா இவள் என் மீது வைத்துள்ள அன்பா என நெனைத்தவன் எல்லாமே வேஷம் என அவளை மனதளவில் ஒதுக்கவும் செய்தான்..

அதன் பிறகு இதோ இப்பொழுது தான் அவளுடைய குரலை நித்திலன் கேட்கிறான்.." சொல்லு மாமா "...என்று தேன் ஒழுக அவள் சம்பவமே நிகழாதது போன்று அவள் பேச,

அவனுக்கு தான் அவளுடன் பேச பிடிக்கவில்லை இருந்தாலும் , "அம்மா எங்கே ??"...என்று கேட்க,

"அத்தையா மாமா இங்க தான் இருக்காங்க தரேன் மாமா "...என்று சிவகாமியை அழைக்க சிவகாமியோ, " எனக்கு யார் கூடவும் பேச விருப்பமில்லை இனிமே என்ன கூப்பிட வேண்டாம்னு சொல்லு எனக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டும் தான் அது கயலு மட்டும் தான் என்னை தேடியும் யாரையும் வர வேண்டாம்னு சொல்லு ..அவங்க சந்தோஷம் தானே அவங்களுக்கு முக்கியம் அப்படியே இருக்கட்டும் "..என்று அவர் கூற ,

அவளோ, " அத்தை என்ன பேசறீங்க ரொம்ப பண்ணாதீங்க..ஒரு வார்த்தை பேசினா என்ன குறைஞ்சா போயிடுவீங்க ".. என்று மலர் கூற அவரோ மறுத்து கொண்டிருந்தார்..அது தெளிவாக அவனுடைய காதுகளை சென்றடைந்தது..

அவளோ அவன் லைனில் இருப்பதை உணர்ந்து, " மாமா அத்தை"... என்று கூறவும் அவனோ அதற்கு மேல் ஒரு நொடியும் தாமதியாமல் போனை வைத்து விட்டான்...

போனை வைத்ததும் அவனுக்கு மிகுந்த வருத்தமாக போய்விட்டது, " பெற்ற மகனையே அவங்களுக்கு வேணான்னு சொல்லிட்டாங்க என்னோட மனசு நீங்க புரிஞ்சுக்கவே இல்ல மா எல்லாருக்கும் அவங்க சொல்றது தான் நியாயம் அத கேக்கல அப்படினா அவங்க கெட்டவங்க அப்படித்தான அம்மா நீங்க சொல்றத நான் கேட்கல நீங்க சொல்றபடி நடக்கல அப்படின்னா நான் கெட்டவனா போயிடுவேன் இல்லையா பரவால்ல இருக்கட்டும் நான் கெட்டவனாவே இருந்துட்டு போறேன் "...என்று கூறியவன் அவனும் தாயை அழைக்காமல் விட்டான் மேலும் மூன்று மாதங்களாக எதிலும் நாட்டமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தான்...

அந்த நேரம் பார்த்து தான் அவனுக்கு வேலை மாற்றலாகி டெக்ஸாஸ் மாகாணத்திற்கு வந்தான் நித்திலன் அங்கே தான் அவனது நண்பன் தியாகு வேலை செய்து கொண்டிருக்க , நித்திலன் புதிதாக வந்தபோது தியாகுவின் அறையில் தான் நித்திலன் தங்கியிருந்தான்...அவனுடன் இருக்கும் போது பழைய கதைகள் பேசி கொண்டிருக்கும் போது கொஞ்சம் மன ஆறுதலாக அவனுக்கு இருந்தது..

ஆனால் இனி அப்படி தங்க முடியாது போலும் யாரோ அவனுடைய கசினோ தோழியோ இங்கே வருவதாக கூறியிருந்தான் தியாகு...

நண்பனைக் கண்டதும் தனக்கென ஒரு ஆறுதல் உள்ளதே என நித்திலன் நினைத்திருக்க அதற்கும் தடையாக ஒரு ஜீவன் வருகிறது என தெரிந்ததும் அவனுக்கு அந்த முகமறியா நபர் மீது கோபம் தான் வந்தது.. அதிலும் தியாகு செய்யும் அலப்பறையை தான் நித்திலனால் சகிக்க முடியாமல் போனது..

"டேய் மச்சான் நான் கட்டிக்கப்போற பொண்ணு வருதுடா நீ வேற ஃபிளாட் பாருடா மச்சான்"... என்று தியாகு நித்திலனிடம் வெட்கப்பட்டு கொண்டே கூற,

அதை கேட்ட அவனும், " டேய் மச்சி சொல்லவே இல்ல..உன் வீட்டை விட்டு அடிச்சு வேணா துரத்து மச்சான் அதுக்காக வெட்கம் மட்டும் படாத"... என்று கூற தியாகுவும்,

" அதெல்லாம் இப்பதான் மச்சான் முடிவாச்சு நீ வேற பிளாட் பாரு மச்சான்..இங்கே பக்கத்து பிளாட் காலி ஆகுது மச்சி அது கூட நீ எடுத்துக்கலாம்.. நான் வீட்ட எல்லாம் கொஞ்சம் சுத்தம் பண்ணனும் "...என்று அவன் கூற ,

அதைக்கேட்ட நித்திலனும் அதே பிளாட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து கொண்டான் ...ஆனால் தியாகுவும் விடாமல் வீட்டை சுத்தம் செய்து கொண்டே இருக்க அதை கண்டு நித்திலன் கண்டாகி, " டேய் அவுட்டிங் கூட போகாம இப்படி கிளீன் பண்ணிட்டு இருக்க.. உன் ஆளு மேல அவ்ளோ பயமா மச்சான்??"... என்று கேட்க ,

அவனோ , " மச்சி தப்பா பேசாத மச்சி இனிமேல் தான் என் காதல அவ கிட்ட சொல்ல போறேன் என்னோட தங்கச்சியோட ஃபிரண்டு மச்சான் அவ"... என்று கூறியவன் மேலும், " அவ இங்கே படிப்பதற்காக வரா மச்சி அவங்க அப்பா அம்மா அமெரிக்கா அனுப்ப ரொம்ப பயப்பட்டாங்க டா என் தங்கச்சி தான் என்னோட பேரை சொல்லி பயப்படாம அனுப்ப வச்சிருக்கா நல்லா பாத்துக்கணும் இல்ல ..என் தங்கச்சி என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவா..அப்புறம் எனக்கும் அவள ரொம்ப பிடிச்சிருக்கு மச்சி அவ ரொம்ப அழகு மச்சி "...என்று வழிந்து கொண்டு கூறி கொண்டே தியாகு சுத்தம் செய்ய ,

"சரி தான்..எப்படியோ மனுசுக்கு பிடிச்ச வாழ்க்கை வாழ்ந்தா சந்தோசம் தான்.. மச்சான் நீ கிளீன் பண்ணி கிளீன் பண்ணி வீட்டை ரொம்ப ஓட்டை ஆக்கிட போற பார்த்து கவனமாக இரு "... என்று கிண்டல் அடித்து விட்டு சென்றான் நித்திலன்..

புலி வருது புலி வருது என்ற கதையாக தியாகு கூறிய காதலியோ அல்லது அவனின் தங்கையின் தோழியோ அல்லது தியாகுவின் மணவாட்டியோ யாரோ அந்த பெண் வரும் நாளும் வந்தது..

அன்றைய தினம் காலை உறங்கிக்கொண்டிருந்த நித்திலனை விடாமல் போன் அழைத்துக் கொண்டிருந்தான் தியாகு ...

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நித்திலன், " எதுக்குடா விடாம கூப்பிட்டுட்டே இருக்க என்ன விஷயம் சொல்லு??"... என்று கேட்க,

" மச்சி எனக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு நீ கொஞ்சம் ஃப்ரீயா இருந்தா ஏர்போர்ட் வரை போக முடியுமா??அவ இன்னிக்கு தான் வரா அவ ஊருக்கு புதுசு ஒன்னும் தெரியாது பாவம் "...என்று கூற,

அவனோ, " ஏன் நான் எப்படிடா கூப்பிட போறது"... என்று கூற, " ப்ளீஸ் மச்சான் எனக்காக செய் மச்சான்"... என்று ஆயிரம் ப்ளீஸ்கள் சொல்ல இறுதியில் அவனும் ஏர்போர்ட்டிற்கு சென்றான்...ஏர்போர்ட் சென்ற பின் தொடர்ந்து நூறு போன் செய்து இருப்பான் தியாகு அவள் வந்து விட்டாளா என அறிய இறுதியில் நித்திலன் கடுப்பு ஆக பேச்சை குறைத்த தியாகுவிடம்,

அவளுடைய பெயர் என்ன என கேட்டதற்கு அவனும் , "பிளவர்".. என்று கூற அவனும் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் சரி என கூறி நின்று கொண்டிருந்தான்..

"அடையாளம் தெரியாமல் யாரை அழைத்து வருவது??"... என்று கேட்க தியாகுவோ, " உன்னோட போட்டோ அனுப்பிட்டேன் அவங்க டைரக்டா உன்னைத்தேடி வந்துடுவாங்க நீ பிரெண்ட்ல நின்னா போதும் "... என்று கூற

அதைக்கேட்ட அவனும் தியாகு கூறிய இடத்தில் காத்து நின்று கொண்டிருந்தான்... இந்தியாவிலிருந்து வந்த பிளைட் தரையிறங்கியதும் பயணிகள் ஒவ்வொருவராக வெளியே வர இவனும் மொபைலை பார்த்துக் கொண்டே வருபவர்களையும் பார்த்து கொண்டு நின்று கொண்டிருந்தான் அப்போது தூரத்தில் ஒரு சாம்பல் நிற குர்தாவும் அதற்கு மேட்சாக வெளிர் நிற பேண்டும் அணிந்துகொண்டு முடியை விரித்து விட்டுக்கொண்டு மாசு மருவில்லாத முகத்தில் மத்தியில் ஒரு பொட்டை வைத்துக்கொண்டு ஒருத்தி வந்தாள்..

அவளை கண்டதும் நித்திலனுக்கு வியர்க்க தொடங்கியது வருவது யாருமல்ல பனிமலரே தான்...ஆம் பனி மலர் சாடையில் தான் ஒரு பெண் இருந்தாள்.. அவள் தானா என மீண்டும் மீண்டும் பார்க்க அது அவளே தான் தான் ஆனால் அவளுள் நிறைய மாற்றங்கள் இருந்தது...

அவனை பார்த்துக் கொண்டே அவனை நோக்கி ட்ரோலியை தள்ளிக் கொண்டு வந்தவள் தியாகு சொன்னவாரு நித்திலன் அருகே வந்து, " ஹே நித்திலன் எப்படி இருக்கீங்க தியாகு வரேன்னு சொன்னார் உங்களை அனுப்பிட்டாரா ..வரட்டும் அவருக்கு இருக்கு.. ".. என்று கூற அவள் பேசிய பேச்சு இவனுக்கு தூக்கிவாரிப் போட்டது...

வார்த்தைக்கு வார்த்தை, " மாமா மாமா".. என்பவள், " நித்திலன்".. என்று கூறவும் அவனுக்கு பனிமலர் செருப்பால் அடித்தது போல இருந்தது...

கூடவே அவளது தோற்றம் அவனை உலுக்கி எடுத்தது என்றே கூறவேண்டும் கொழுக் மொழுக் தக்காளி ஆக இருந்தவள் இப்பொழுது அளவான சதை பிடிப்போடு கொஞ்சம் கூட அழகு மெருகேறி இருந்தாள்..

அவள் கண்களில் ஏதோ ஒரு சுட்டித்தனம் தெரிந்தாலும் அதில் ஒரு பக்குவம் தென்பட்டது அவளைக்கண்டதும் இவனுக்கு தான் பேச்சு முட்டியது இருவருக்கும் உள்ள உறவு என்றால் இனியும் விவாகரத்து சரிவர முடியவில்லை கோர்ட்டில் தான் இருக்க அதற்குள் இவள் இங்கே வந்து இருக்க இவனுக்கோ தலையை பிடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது..

"நீ எங்க இங்கே??"... என்று அதிர்ச்சியில் வினவ

"நான் தியாகுவோட சிஸ்டர் ஃப்ரெண்ட்"... என்று கூறினாள்.. அவளது பேச்சில் நிதானம் அதையும் நித்திலனின் மனம் குறித்து வைத்து கொண்டது..

"அவன் உன்னை லவ்வர் ன்னு சொன்னான்".. என்று அதிர்ந்து அவன் கேட்க,

அவளோ சிரித்து, " அப்படி சொன்னாரா அவருக்கு குறும்பு அதிகம் அவருக்கு என் மேல இன்ட்ரஸ்ட் அத எப்படி வெளியில வெளிக்காட்டுவதுன்னு தெரியல உன்னோட பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் என்னை என்னன்னு சொல்றதுன்னு கேட்டுட்டு இருந்தாரு நான்தான் லவ்வர்ன்னு சொல்லுங்கன்னு சொன்னேன் " என்று கூற, அதை கேட்ட அவனோ திகைக்க

அவளோ சிரிக்க இவனுக்கு இங்கே பட பட படவென அடித்துக் கொண்டது இதயம் வெளியே வந்து விடும் போல ஒரு படபடப்பு அதை வெளிக்காட்டி கொள்ளாமல் மறைக்க அரும்பாடுபட்டவனுக்கு இவளுக்கும் தியாகுவுக்கும் எப்படி மேட்ச் ஆனது என்றே கேள்வியே குடைந்து கொண்டிருக்க,

அவளோ, " என்ன யோசிக்கறீங்க நித்திலன்".. என்று வினவ,

அவனோ, " அம்மா எப்படி இருக்காங்க வீட்ல எல்லாரும்??".. என்று கேட்க,

அவளோ, " உங்க அம்மா அக்கா ஆல் ஆர் ஃபைன்"... என்று அவள் கூற,

இவன் தான் அவனுடைய முகத்தை மேலும் மேலும் துடைத்து கொண்டிருந்தான்.. என்ன நடக்கிறது என்று அவனுக்கு புரியவில்லை..அடுத்த பஸ் நிலையத்துக்கு தனியாக போக மாட்டாள் தனியாக அமெரிக்கா வரை வந்து இருக்கிறாளா?? என நினைத்து அவளிடம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்த முடியாமல் ஏதோ ஒன்று அவனை தடுக்க,

"இங்கே எதுக்கு வந்துருக்க??".. என்று வினவ ,

"அது நான் ஒரு கோர்ஸ் பண்ணலாம்னு இருக்கேன் அதுக்காக இங்க வந்திருக்கேன் தியாகு தான் சொன்னாரு இங்கேயே செட்டில் ஆயிடு அப்படினு உங்களுக்கும் ,எனக்கும் டிவோஸ் முடிஞ்சிடுச்சா செட்டிலாகறதா பிளான் அண்ட் நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்கோம்..இன்னும் சொல்லல இங்கே வந்து சொல்லலாம்னு இருக்கோம் "..என்று அவள் கூற,

இவனுக்குதான் மேலும் மேலும் தூக்கி வாரிப்போட்டது, " என்னது டிவோர்ஸ் முடிஞ்சா கல்யாணம் பண்ண போறியா??".. என்று சற்று அதிர்ச்சியாகவே கேட்க

"ஆமா நான் கல்யாணம் பண்றதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?? டிவோர்ஸ் பண்ணினா தானே பண்ண முடியும் இல்லாட்டி முடியாதே".. என்று அவள் கூற,

அவனோ, "எனக்கு என்ன பிரச்சினை ஒரு பிரச்சனை இல்லை நான் வேணாம்னு சொல்லி தானே டிவோர்ஸ் வாங்க முடிவு பண்ணினேன்".. என்று அப்பொழுதும் மீசையில் மண் ஒட்டாத போல அவன் கூற,

அவளோ, " அப்படியா ஓகே லெட்ஸ் கோ"... என்று கூற அவனோ அவள் பின்னால் நடந்து சென்றான்... உள்ளுக்குள்ளே தக தக தகவென எரிந்துகொண்டிருந்தது அவள் கூறிய செய்தியை அவனால் நம்ப முடியவில்லை..அவள் பேசிய பேச்சை காது கொடுத்து கேட்கவில்லை..தன் நண்பனுடன் இவளை இணைத்து பார்க்க முடியவில்லை...

குழம்பி போய் அவள் பின்னால் வந்து கொண்டிருந்தவனின் அலைபேசி அழைக்க அழைத்தது யாருமில்லை தியாகுவே தான்...

"என்ன மச்சி பிளவர் வந்துட்டாளா??".. என்று கேட்க,

அவனோ இவ தான் உன் பிளவரா டா என மனதுக்குள் நினைத்து ஹ்ம்ம் என்று முனக

"சரி மச்சி போனை அவளுக்கு கொடு".. என்று கூறவும் மலர் நித்திலனிடம் இருந்து போனை பிடுங்கவும் சரியாக இருந்தது...

தூவானம் தூறும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top