Share:
Notifications
Clear all

தூவானம் 11

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

தூவானம் : 11

முதலிலேயே இரவெல்லாம் என்ன செய்யலாம் என யோசனை செய்தவன் என்ன ஆனாலும் சரி இனி இவர்கள் பேச்சைக் கேட்கக் கூடாது கேட்டவரை போதும் என நினைத்தவனுக்கு இன்று முத்தரசன் பேசிய பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை என அவன் முகம் வெளிப்படையாக வெளிக்காட்டியது...

அவரோ அவ்வாறு கூற அதற்கு செந்தாமரையும், " ஆமா பிள்ளை பக்கத்தில் இருந்தால் தானே நமக்கு நல்லது.. "...என்று கூற ,

அவனோ , "யாரை கேட்டு என்னோட வாழ்க்கையை நீங்க முடிவு பண்றீங்க???"... என்று கேட்டான்... அதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து பார்க்க செந்தாமரையும் விடாமல், "யாரை கேக்கணும்?? வீட்டுக்கு பெரியவங்க தான் முடிவு செய்வாங்க"... என்று நொடித்து கூற,

"என்னை கேட்கணும்ங்க.. உங்க இஷ்டத்துக்கு எல்லாம் ஆட என்னால முடியாது நான் என்ன பண்ணனும் என்ன வேலைக்கு போகனும் போக கூடாதான்னு நீங்க முடிவு பண்ணக்கூடாது அதெல்லாம் உங்க பசங்களோட நிறுத்திக்கோங்க.. எல்லாத்துக்கும் ஒரு அளவு தான் எல்லை மீறி போயிட்டு இருக்கீங்க..இதோட நீங்க இருக்கிறது உங்களுக்கு மரியாதை".. என்று வெடுக்கென கூறிவிட்டான்..

அதை கேட்டு அனைவரும் அதிர சிவகாமியோ, " நித்திலா யார் கிட்ட பேசிட்டு இருக்கன்னு தெரியுமா??"... என்று கடிந்து கேட்க, அவனோ மிகப் பொறுமையாக, " நான் அத்தை மாமா கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் என்னோட வாழ்க்கையில என்ன நடக்கும்னு அதை இவங்க முடிவு பண்ண கூடாது..நான் தான் முடிவு செய்யணும்... நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை இந்த கடைக்கு போகாத அந்த கடைக்கு போக சொல்லி என்னை அடக்கி வைக்க எனக்கு வயசு 6 கிடையாது 26..அது இந்த வீட்டுல யாருக்கும் புரியல.. எனக்குன்னு சொந்த முடிவு எடுக்கக்கூட இங்கே உரிமை இல்லையா??"... என்று அவனும் சூடாகவே கூற,

சிவகாமியும் , "கொஞ்சம் பொறுமையா இரு பொறுமையா பேசு பெரியவங்க அந்த மரியாதை இருக்கட்டும்".. என்று அந்த நொடியே கண்டிக்க ,

"அப்படி மரியாதை வேணும்னா தேவையில்லாமால் என் விஷயத்தில் எல்லாம் தலையிடாமல் இருக்கணும்..அம்மா நீங்க கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க...நான் பேசிக்கிறேன்".. என்று தாய்க்கே அணை போட ,

பாண்டியம்மாவோ, " ராசா என்ன பேச்சு பேசுற அவ உன் மாமன்"... என்று அவரும் அவர் பங்குக்கு கேட்க,

அவனோ நல்ல பார்மில் இருப்பான் போல , "பாட்டி நான் உண்மையத்தான் சொல்றேன் யாரைக் கேட்டு இவர் இந்த முடிவு எடுத்தார் நான் இங்க இருக்கனுமா போகணுமான்னு இவரா முடிவு பண்ண வேண்டியது?? இது மட்டுமா செஞ்சார் எனக்கு "...என்று அவன் தொடங்கி ஏதோ சொல்ல வந்தவன் நிறுத்த அதற்குள் நிலைமை கை மீறிப் போனது என கணவனது முகத்தை வைத்து கணவன் தன்னைப் பற்றிய பேச்சை தான் எடுக்க போகிறான் என நினைத்து வேகமாக குறுக்கே ஓடி வந்த பனிமலர் , "மாமா போதும் மாமா நீங்க அந்த வேலைக்கு போங்க யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க நான் பாத்துக்கிறேன்"... என்று அவன் அருகே சென்று அவனது கையை பிடித்து கூறி அவனது வாயை அடைக்க அவள் பார்க்க,

அவனோ அவள் தொட்டதும் தீ சுட்டது போல விலகி, " நீ வாயை திறக்காத எல்லாம் உன்னோட பிளான் எனக்கு தெரியும் டி என்ன என் முன்னாடி நல்லவ மாதிரி நடிச்சிட்டு இருக்கியா??"... என்று எல்லோரும் முன்னிலையிலும் அவளை அவன் கடிய,

அதுவரை அவன் பேசியதை பொறுத்துக்கொண்ட முத்தரசனுக்கு தன் மகளை கடிவதை சுத்தமாக பிடிக்கவில்லை, " என்ன நித்திலா உன்னோட பேச்சு எல்லாம் ஒரு தினுசா இருக்கு எதுக்கு பனிமலரை திட்டுற ?? என் முன்னாடி என் மகளை நீ மிரட்டறயோ"... என்று முத்தரசன் வினவ,

இளங்கோ கயல்விழியை முறைத்தான் உடனே கயல்விழி, " தம்பி என்ன மட்டு மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க ??"...என்று அவள் பங்கிற்கு அவளும் சாட,

பனிமலரோ நிலைமை மோசமாகி விடும் என நினைத்தவளோ இவ்வளவு நாள் என்றால் இந்த பிரச்சனை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பாள்..ஆனால் இன்று அப்படி அவளால் இருக்க முடியவில்லை..மொத்த குடும்பமும் தன் கணவனுக்கு எதிராக இருப்பதை பார்த்தவளுக்கு அவனுக்கு துணையாக இருக்கவேண்டும் என தோன்றியது..

"என்ன மாமா சொன்னாருன்னு சொல்லி ஆளாளுக்கு மாமாவை பேசிட்டு இருக்கீங்க... மாமா வெளிநாட்டுல வேலை பாக்குறவங்க அவங்களால இங்கே வேலை பார்க்க முடியுமா அதென்ன எல்லாமே நீங்களே முடிவு பண்ணிட்டு இருக்கீங்க... மாமா சொன்னதுல அப்படி என்ன தப்பு இருக்கு.. மாமா பேசினது சரி தான் "..என்று அவள் மட்டும் அங்கே அவனுக்கு சப்போர்ட்டாக பேச ,

அதுவும் அவனது கண்ணுக்கு நடிப்பு என தோன்ற நித்திலன் அவனது கண்ட்ரோலை விட்டான்..

உள்ளே வைத்திருந்த அழுத்தம் எல்லாம் வெடிக்க கூடவே செந்தாமரையோ , " என்னங்க, இளங்கோ என்ன பாத்துட்டு இருக்கீங்க?? நம்ம கண்ணு முன்னாடியே திட்டுறான் நீங்க வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க... வெளிநாடு எல்லாம் போனா நம்ம பிள்ளையை கொன்னுடுவானோ என்னமோ"... என்று கூற

"அப்படி சந்தேகமா இருந்தா உங்க புள்ளைய நீங்களே வச்சுக்கோங்க உங்களுக்கே வேண்டான்னு சொல்லித்தான் என் தலையில் கட்டி வெச்சு இருக்கீங்க.. வேற எவனும் சிக்கலன்னு தானே இவளை என் தலையில் கட்டினீங்க அப்படி என் மேல ஏதாவது நம்பிக்கை குறைவா இருந்த உங்க பொண்ணை நீங்களே வச்சுக்கோங்க..எனக்கு இவ வேண்டாம்..இவளை கட்டி வெச்சுட்டோம்ன்னு சொல்லி என்னை உங்க வீட்டு அடிமையாக்கலாம்ன்னு நெனைக்காதீங்க ..அது மட்டும் இனி நடக்காது"... என்று ஒரு போடு போட,

அவன் பேசிய பேச்சை கேட்ட அனைவரும் திகைத்தனர் பனி மலர் உட்பட....சிவகாமியோ, "நித்திலா இனி நீ ஒரு வார்த்தை பேசினா மரியாதை கெட்டுவிடும் "...என்று கூற

இளங்கோவோ, "இதுக்குத்தான் ஒன்னுமில்லாத வெறும் பயலே பயலுக்கு தங்கத்தை கொடுத்தா அப்படித்தான் பேசுவான் நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் உட்கார வைத்தாலும் இப்படித்தான் நடக்கும் இப்ப புரியுதா அப்பா தங்கச்சி தங்கச்சின்னு சொன்னீங்களே உங்க தங்கச்சி மவன் என்ன வேலை செய்றான்னு பாத்தீங்களா??..ஒன்னுமில்லாத போதே இவனுக்கு இப்படினா இவனுக்கு எல்லாம் இருந்தா என்ன பேச்சு பேசுவான்".. என்று நேற்று பேசிய பேச்சுக்கு இன்று இளங்கோ பதிலடி கொடுக்க ,

பனிமலரோ செய்வதறியாது திகைத்து அவள் தன் கணவனின் கையை பிடித்து , "மாமா கொஞ்சம் அமைதியா இருங்க மாமா நானே எல்லாம் சரி பன்றேன் எதுவும் பேசாதீங்க மாமா "... என்று கெஞ்ச,

அவன் கையை உதறி இவர்கள் பேசிய பேச்சுக்கு எல்லாம் வெகுண்டெழுந்தவன் தன் கையை பிடித்து இருக்கும் அவளது கையை நொடி பொழுதில் இழுத்து , " என்ன டி நானும் பார்த்திட்டே இருக்கேன் ரொம்ப நடிச்சிட்டே இருக்க..இது எல்லாம் எனக்கு தேவையா டி சொல்லு ஆரம்பத்திலேயே உன்னை வேணாம்னு சொன்னேன்ல நீ கேட்டியா உன் வீட்டுல சொல்லுன்னு சொன்னேன்ல நீ கேட்டியா அப்போ எல்லாம் கேட்காமல் கல்யாணம் முடிஞ்சதும் நல்லவ மாதிரி என்கிட்ட நடிக்கிறியா??"..என ஆத்திரத்தில் அவளால் தானே நான் இப்படி எல்லோர் முன்னிலையிலும் அவமானப்பட்டு நிற்கிறேன் என அவளை ஓங்கி ஒரு அறை அறைந்தான்..அவனுள்ளே சுழன்று கொண்டிருந்த கோபத்தீக்கு அவளை வடிகால் ஆக்க,

அவளோ அவன் அடித்த அடியில் சுருண்டு கீழே விழ முத்தரசனும் செந்தாமரையும் ஓடி வந்து அவர்களுடைய மகளை தாங்கினர்..

தன் கண்முன்னே மகளை அடித்து விட்டான் என ஆத்திரம் அடைந்த முத்தரசன் மற்றும் இளங்கோவும் ஓடிவந்து அவனது சட்டையை பிடித்து இளங்கோ நித்திலனை அடிக்க கை ஓங்க அதற்குள் தலை சுற்றினாலும் அவளால் எழ முடியவில்லை என்றாலும் பனிமலர் எழுந்து, " என் புருஷன் மேல யாராவது கைய வச்சீங்க அவ்வளவு தான் ..மாமாக்கு என்னையா அடிக்க எல்லா உரிமையும் இருக்கு..."..என்று அவள் கூறவும் அதைக்கேட்ட அனைவரும் திகைத்து விழிக்க ,

ஆனால் சிவகாமியோ இங்கே நடந்த கூத்தை கண்டு வெகுண்டு , " நித்திலனை மாறி மாறி அறைந்தார் இதுக்கு தான் உன்னை நான் படிக்க வெச்சேனா இதுக்கு தான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டேனா?? அவங்க இல்லாட்டி நீ இப்படி நின்னு பேசிட்டு இருந்து இருப்பியா??..இனி என் முகத்திலேயே முழிக்காதே போ..இப்படி ஒரு மகன் இல்லைன்னு நான் நெனைச்சுக்கறேன் ".. என்று கூற,

அவனோ தாய் அடித்தது அவனுக்கு வலிக்கவில்லை என்றாலும் யாரும் அவனது உணர்வை புரிந்து கொள்ள வில்லையே என்ற உணர்வில் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அப்படியே ஒரு நோட்டம் பனிமலரை ஒரு பார்வை பார்த்தவன் ஒரு பிளாங் செக்கில் கையெழுத்திட்டு மேசை மீது வைத்தவன் , "நீங்க என் படிப்புக்கு இது நாள் வரைக்கும் பண்ண செலவுக்கு எல்லாத்துக்கும் சேர்ந்து இதுல எழுதி பணத்தை எடுத்துக்கோங்க.. இனி எனக்காக செஞ்சேன்னு தயவு செய்து சொல்லாதீங்க"... என்று பொதுவாக கூறிவிட்டு கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி விட்டான்..

அவன் இருந்த சூழ்நிலையில் அவனது தாயின் கோபத்தையோ அல்லது அவனது அக்காவின் வாழ்கையையோ அல்லது சுற்றில் இருந்த அனைவரின் கோபத்தையோ மனதில் வைக்குமளவுக்கு அவனது வலி அவனுக்கு அவகாசம் கொடுக்கவில்லை... அதை விட கோபத்தில் இருந்தவன் சட்டென்று பெட்டியில் தனது உடைகளை எடுத்து வைத்தவன் யாரிடமும் எதுவும் பதிலளிக்காமல் கிளம்பிவிட்டான்..அவனை அங்கே உள்ள யாரும் தடுக்கவும் இல்லை..மேலும் அவன் செல்லும் போது யாரும் அந்த வீட்டை விட்டு வெளியேயும் வர வில்லை.. அவனது தாய் கூட பனி மலருக்கு தான் சமாதானம் கூறி கொண்டிருந்தார்..

அவன் பேசிய பேச்சுக்கு செந்தாமரை வீதியே கேள் என கத்தி கூப்பாடு போட்டு கொண்டிருக்க பனி மலரோ கண்களாலேயே தன் அண்ணனையும், தந்தையும் அடக்க பாண்டி அம்மாவோ திருமணம் முடிந்த அடுத்த நாளே இது போன்ற ஒரு செயலை அவர் நெனைக்கவில்லை என அவரது முகமே அவருக்கு வெளிக்காட்டியது..

பனி மலரோ மாமாவின் அதீத வெறுப்பை கண்டு மனமுடைந்தாலும் இது எல்லாம் எதிர்பார்த்தது தானே என்பது போல இருந்தாள்.. அந்த நேரமும் அவளுக்கு சின்ன மகிழ்ச்சி அனைவரும் அவனை பேச அவர்கள் மீதுள்ள கோபத்தை அவன் தன்னிடம் தானே காட்டினான் என்று அவளுக்கு ஒரு சின்ன மகிழ்ச்சி..உரிமை உள்ள இடத்தில் தானே கோபம் வரும், " மனதுக்குள்ளோ, " மாமா என்னோட இலக்குக்கான முதல் படி மாமா " என கூறி கொண்டாள்... வீடே சூனியமாகி போக ஆளுக்கு ஒரு மூலையில் இருக்க பனி மலர் மட்டும் மிகவும் சந்தோசமாக எப்போதும் போல வாழ்க்கையை ஒட்டி கொண்டிருக்க அவளின் செய்கையை பார்த்து வெகுண்ட செந்தாமரையோ, " ஏன் நீ என்ன லூசாகிட்டியா??".. என்று கேட்க,

அவளோ, " ஆமாம் நான் என்னோட மாமா பைத்தியம் தான்..அதை தான் நான் நெனைச்சிட்டே இருப்பேன்.. அதுக்கு என்ன இப்போ "...என்று கூறியவள் அவனுடைய அறையை தனதாக்கி கொண்டாள்.. மேலும் அவளும் வருத்தப்படாமல் சிவகாமியிடமும், " மாமாக்கு என்னை பிடிக்கும் அத்தை உரிமை இருக்குறனால தான் அடிச்சாரு..புருஷன் பொண்டாட்டிகுள்ள ஆயிரம் இருக்கும் அதுக்குன்னு நீங்க புள்ள இல்லைன்னு சொல்லுவீங்களா ".. என்று கண்களை உருட்டி மிரட்டி சிவகாமி, கயல் மற்றும் பாண்டி அம்மாவை சிரிக்க வைத்தாள்... அப்படியே கல்லூரிக்கும் சென்று வந்தாள்...வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் பே என்று தான் அவளை பார்த்து கொண்டிருந்தனர்...

அமெரிக்காவிற்கு நித்திலன் சென்று இதோ ஒரு மாதம் ஆகிவிட்டது.. இன்று வரை அவனும் வீட்டில் அழைக்கவில்லை அவனையும் யாரும் அழைக்கவில்லை..

நூறு தடவைக்கு மேல் யோசித்திருப்பான் தான் செய்தது தவறா என ஆனால் எப்படி அவன் யோசித்தாலும் அவனுக்கு அவன் செய்தது சரியே என்று தான் தோன்றியது... என்ன தைரியம் இருந்தால் ஒன்னுக்கும் பெறாத ஒருத்தியை என் தலையில் கட்டி வைப்பார்கள் என்று நினைத்தவனுக்கு அவனுடைய தாய் அவனை அழைக்காததில் கோபம் கொண்டு மேலும் ஒரு முயற்சியாக இந்தியாவில் ஒரு வக்கீலை வைத்து அவன் விவாகரத்துப் பெற முயற்சிக்க துவங்கிவிட்டான்..

அதன் அச்சாரமாய் பனிமலர் வீட்டுக்கு ஒரு லெட்டர் வந்தது அதை வாங்கியதோ பனிமலரே தான்..மலரின் பெயரில் வந்திருக்க அதைப் பிரித்துப் பார்த்தவள் அதிர்ந்தாள்..

அதற்குள் வீட்டில் உள்ள அனைவரும் கூடி விட அவர்களுக்கும் விஷயமறிந்ததும் கொஞ்சம் அமைதியாக இருந்த வீடு மீண்டும் களைகட்டியது...இளங்கோ மற்றும் முத்தரசன் கொதித்து எழுந்து விட்டனர்...

"அவனை கேள்வி கேட்க யாருமில்லைன்னு நெனைச்சுட்டு இருக்கானா "..என முத்தரசு கேட்க,

"அவனை வெட்டி போட்டா தான் எனக்கு ஆத்திரம் அடங்கும்".. என இளங்கோ ஒரு பக்கம் கூற,

"அவன் நாசமா தான் போவான் அகராதி பிடிச்சவன்".. என செந்தாமரை ஒரு பக்கம் கூற சிவகாமி ,பாண்டி அம்மா மற்றும் கயல் ஒரு புறம் அழ ,

அழ வேண்டிய வருத்தப்பட வேண்டியவளோ, அந்த விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து இட்டு கொண்டிருந்தாள்..அதை கண்டு அனைவரும் அதிர அவளோ அனைவரும் பார்த்து பேஸ்ட் விளம்பரத்துக்கு வருவது போல பல்லை காட்டி சிரித்தவள் அனைவரையும் பார்த்து, " இது நான் என்னோட மாமா சம்பந்தப்பட்ட விஷயம் இதுல யாரும் தலையிட கூடாது "...என்று உறுதியாக கூறி விட்டு சென்றாள்....

தூவானம் தூறும்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top