Share:
Notifications
Clear all

தூவானம் 10

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  


தூவானம் : 10

தன் அருகே படுத்தவளை தலைக்கு அடியில் கையை கொடுத்து அவள் சரியாக தான் பேசினாளா என்பது போல அவன் முழித்து பார்த்து அவளிடம், " என்னடி சொன்ன??".. என்று கேட்க,

அவளோ அவனை போல கையை தலைக்கு அடியில் கொடுத்து முகத்தை திருப்பி , "கையெழுத்து நான் போடணும்னா என்கிட்ட நீ எப்படி நிக்க சொன்னியோ அது மாதிரி நீ நில்லு அப்புறம் நான் கையெழுத்து போடுறேன்னு நான் சொன்னேன் மாமா".. என்று தெள்ளத்தெளிவாக மிக சாதாரணமாக குரலை சற்றும் உயர்த்தாமல் அவன் கண்களை பார்த்து அவள் கூற,

அதை கேட்ட அவனோ சட்டென்று அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்தான்...அவனால் நம்பவே முடியவில்லை அவள் தானா தன்னிடம் இப்படி பேசியது என தான் பேசிய வார்த்தை தவறு தான் என அவனுக்கு உண்மை குத்தினாலும் அதே போல அவள் எப்படி என்னை பார்த்து இப்படி ஒரு வார்த்தையை பேசலாம் என கோபம் கொண்டவன் அவளது தலை முடியை கொத்தாக பிடித்து தன்னை நோக்கி இழுக்க, அவனுக்கு அடித்த போதை முழுவதும் இறங்கி இருந்தது..

" என்ன பேச்சு பேசுற டி ??"..என்று அவன் வினவ,

அவள் இழுத்தது வலித்தாலும் முகத்தை சிணுங்கி அவனிடம் எதிர்த்து நிற்காமல், " நீ பேசினது தான் மாமா நானும் திருப்பி பேசினேன்"... என்று அவளும் திருப்பி அவனுக்கு பதில் அளித்தாள்..

அவள் வினவியதிற்கு அவனிடம் பதில் இல்லை..சட்டென்று அவளது முடியில் இருந்து கையை எடுத்த அவனோ அவளை பார்த்து, " சின்னப்புள்ளையா நினைச்சிட்டு இருந்தா என்ன பேச்சு பேசற நீ உன்ன போய் நான் நம்பி என்னென்னமோ சொன்னேன் பாரு என்னை சொல்லணும் சும்மா இல்ல அந்த குடும்பத்து ரத்தம் உன் உடம்புலயும் ஓடுது தானே நீ இப்படி தான் பேசுவ "...என்று கூறியவன்,

"இப்ப சொல்லிட்டேன் டி நீ எனக்கு வேண்டாம் நீ கையெழுத்தை போடாட்டியும் பரவாயில்லை உன்கிட்ட இருந்து எப்படி விவாகரத்து வாங்கன்னும்னு எனக்கு தெரியும்" என்று கூறியவன் அவளை முறைத்து பார்த்து திரும்பி படுத்துக் கொள்ள,

அவளோ சற்றும் அதிர்ச்சியடையாமல்," நீ சொன்னது தான் நானும் சொல்றேன் மாமா..உனக்கு என்கிட்ட இருந்து விலகனும்ன்னு நீ சொல்ற எனக்கு உன் கூட வாழனும்ன்னு நான் சொல்றேன் அது தான் மாமா நமக்குள்ள வித்தியாசம் நீ உன்னோட முடிவில் உறுதியாய் இரு நான் என்னோட முடிவுல உறுதியா இருக்கேன் விதி நம்மல எங்க கொண்டு வந்து நிறுத்துதோ அங்க சந்திப்போம் "... என்று பெரிய மனுஷி போல பேச ,

அதை கேட்ட அவன் உள்ளே அதிசயம் தான் முதலில் வந்தது... கூடவே ஆத்திரமும் இவளுக்கு இந்த அளவுக்கு பேச முடியுமா என்று தான் அவன் நினைத்தான்... அவன் மேலும் அவளை மிக சாதாரணமாக எடை போட்டு விட்டோமோ என அவன் நினைக்க அவளோ அவனைத் தான் காதலோடு பார்த்துக் கொண்டிருந்தாள்...

கிட்டத்தட்ட அவள் மனதில் அவன் எப்பொழுது குடிப்பெயர்ந்தான் என அவளுக்கு தெரியவில்லை இருந்தும் அவனுடன் கைபிடித்து நடந்ததில்லை மணிக்கணக்காக கதை அளந்ததில்லை சினேகமாக இருவரும் ஒரு முறை கூட புன்னகை பூத்தது இல்லை... ஒரு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நின்று பேசியது கூட இல்லை இப்படி இருந்தும் அவனை அவளுக்கு பிடிக்கும் இதற்குப் பெயர் காதல் என அவள் வழிவகுக்க விரும்பவில்லை ..அவளுக்கு அவன் மீது உரிமை அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க அவளுக்கு மனமில்லை..

" மாமா உன்ன நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் நீ காதல், உணர்வுன்னு என்னமோ சொல்ற எனக்கு அதெல்லாம் இருக்கான்னு தெரியல ஆனா உன்னை விட்டு போக கூடாது என்று மட்டும் தெரியும் எப்போ என் கழுத்துல நீ தாலி கட்டுனீயோ அப்போ இருந்து நீ தான் என் புருஷன் எனக்கு படிப்பறிவு இல்லாமல் இருக்கலாம் உன்ன மாதிரி டிப் டாப்பா நடக்க தெரியாம இருக்கலாம் ஆனா புருஷனுக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியும் புருஷன்கிட்ட எப்படி நடந்துக்கணும் எனக்கு தெரியும் ஆனால் இதையெல்லாம் நான் உன்கிட்ட இப்போ அமைதியா காட்டுனா நீ என்ன ஏத்துக்க மாட்ட உன் கோபத்துக்கு என்னோட அதிரடி தான் சரியா இருக்கும் "...என்று அவள் அவனுடன் பேசுவதாக கருதி அவளுடைய மனதுடன் பேசிக் கொண்டவள் தன்னிடம் முதுகை காட்டி கோபத்துடன் திரும்பி படுத்து இருக்கும் அவனை பார்த்துக்கொண்டே படுத்தாள்..

அவனோ இதற்கு ஏதாவது முடிவு செய்தே ஆக வேண்டும் என நினைத்து அப்படியே அயர்வின் காரணமாக உறங்கியும் போனான் அவளோ உறக்கம் வராமல் தவித்தாள் என்றே கூறவேண்டும் தன்னருகே தன் மாமா படுத்திருக்கிறான் அவளுக்கு மூச்சு முட்டியது அவளுக்கு அந்த அறையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பது போல இருந்தது இதனால் வரை அவள் படுத்ததும் உறங்கிய படுக்கையை என்றாலும் என்றோ அவளது மாமன் தன்னருகே படுத்திருக்க அவளுக்கு என்னென்னவோ செய்தது அவனிடமிருந்து சீரான மூச்சுக்காற்று வருவது உறுதி செய்தார்கள் உறக்கம் வராமலேயே புரண்டு புரண்டு படுத்தாள் ...." ஐயோ மாமா என் பக்கத்தில் படுத்து இருக்கே இது கனவா நனவா".. என தன் மாமனை பற்றிய நினைவுகளுடன் படுத்து இருந்தாள்...அடுத்த நாளே அவளுடைய அதீத சந்தோஷம் அவளை வருத்தப்பட வைக்க போகிறது என அறியாமலே...

விடியல் வருவதற்கு முன்னே எழுந்தவள் மெல்ல தன் மாமனின் உறக்கம் கலையா வண்ணம் எழுந்தவள் மெல்ல ஜன்னல் வழியே தென்படும் நிலா வெளிச்சத்தில் தன் மாமனின் முகத்தை அருகில் சென்று பார்க்க சீரான மூச்சுக்காற்று வெளிப்பட்டது....அப்படியே அவனது முகத்துக்கு அருகே குனிந்தவள் அப்படியே அவளது கண்கள் அவன் முகத்தில் உள்ள மீசையில் நிலைக்க அதை தொட்டு பார்க்க அவளுக்கு ஆசை கிளர்த்து எழுந்தது..மெல்ல அவளது ஒரு விரலால் மீசையை இலேசாக தொட்டு பார்க்க அவளுக்கு என்னவோ ஏதோ ஒரு அதிசயத்தை பார்த்தது போன்ற உணர்வு எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை..

அதே போல அவளோ மென் குரலில், "மாமா நீ முழிச்சிட்டு மட்டும் இருந்தீனா நான் தொட்டதுக்கு உன்கிட்ட எத்தனை கொட்டு வாங்கி இருப்பேனோ தெரியல ஆனாலும் உன் மீசையை இப்படி தொடனும்னு எல்லாம் எனக்கு ஆசை மாமா..தூங்கும் போது பாரு அப்பாவி மாதிரி மூஞ்சியை வெச்சு இருக்க நீ எல்லார் கிட்டயும் நல்லா தானே பேசுற என்னை பார்த்தா மட்டும் ஏன் இப்படி எரிஞ்சு விழுற.. உன்னை என்ன செஞ்சு மாத்த போறேனோ தெரியலையே.." என வாய் விட்டே புலம்பியவள் எதிரே மேசையில் அவன் கொண்டு வந்த விவாகரத்து பேப்பர் ஊசல் ஆடி கொண்டிருக்க, " ஒரு பேப்பர்ல முடியற பந்தமா மாமா நம்மளோடது..போ மாமா".. என்று கூறி விட்டு அந்த பேப்பரை சுக்கு நூறாக கிழித்து எரிந்தாள் பனி மலர்..

பின் வேகமாக குளித்து தயாராகி ஒரு புடவையை சுற்றிக்கொண்டு வெளியே வந்தாள்.. அப்போது தான் கயல் வாசல் பெருக்கி கோலமிட தயாராகிக் கொண்டிருக்கும் போது தன் அண்ணி கயல்விழியை கண்டவள் எதார்த்தமாக, " அண்ணி தாங்க நீ நானே கோலம் போடுறேன்".. என்று சிரித்தமுகமாக மலர் கூற,

கயல்விழியோ அவளை எட்டாவது அதிசயமாக பார்த்தாள் இது நாள் வரை ஏழு மணி இல்லாமல் இல்லாத பெண் இப்போது விடியற்காலையிலேயே எழுந்திருக்க அதிசயமாக அவள் பார்க்க மறுபுறமோ செந்தாமரையும் பாண்டி அம்மாவும் அதிசயமாக பார்க்க அவளோ யாரையும் கண்டு கொள்ளாமல் வாசலையே அடைத்து பெரிய கோலமிட்டாள்... இவளுக்கு கோலமெல்லாம் போட தெரியுமா என்பது போல அவர்கள் பார்த்து வைக்க, அந்த நேரம் பார்த்து எழுந்த முத்தரசனிடம் இளங்கோ, " அப்பா நம்ம மலரு கண்ணுக்குள்ள வச்சு பார்த்துட்டோம் இனியும் அவ அப்படியே இருக்கணும்"... என்று பொடி வைத்துப் பேச, " என்னடா சொல்ற எதா இருந்தாலும் தெளிவா சொல்லு அவனுக்கு என்ன குறைச்சல் நேத்து தானே கல்யாணம் ஆகி இருக்கு "...என்று மகள் கோலம் போடும் அழகை பார்த்துக்கொண்டே அவர் கூற , "இல்ல அப்பா அவன் வேலை செய்யறது வெளிநாட்டில வேலை அப்போ நம்ம மலரும் அவன் கூட அங்கு போயிடுச்சுன்னா??? அது சரிவராது பேசாம இங்கேயே ஏதாவது வேலை பார்க்கச் சொல்லுங்க அப்படி இல்லேன்னா நம்ம தொழிலிலேயே வந்து பாத்துக்க சொல்லுங்க"... என்று கூற அதைக் கேட்ட முத்தரசு கோ யோசிக்கத் துவங்கினார் ...

அவருக்கும் தன் மகளை வெளியே விடவெல்லாம் மனதில்லை அதனால் தன் மகன் கூறியது மனதில் வைத்துக் கொண்டு சரி என்று கூற அவனும் நேற்று நித்திலன் பேசிய பேச்சில் அரண்டு தான் போயிருந்தான் என்றே கூற வேண்டும்..

அதிலும், " நீங்க ஏன் அக்காவை ஏதாவது செஞ்சா உங்க தங்கச்சி என் கையில"... என்ற வார்த்தை மேலும் மேலும் அவனை தாக்கிக் கொண்டே இருந்தது அதிலும் இளங்கோவின் மனதிலோ நான் ஒன்னும் அவன் அக்காவை கொடுமைப்படுத்திடலேயே என்னமோ அடித்து கொடுமைப்படுத்தி சாப்பாடு போடாமல் இருந்த மாதிரியில சொல்லிட்டு இருக்கான்"... என்பதை அவனும் யோசித்து இரவு முழுக்க தன் மனைவியிடம் இதே கேள்வி கேட்டு அவளது உறக்கத்தையும் கெடுத்தான் இளங்கோ...

தான் என்ன தவறு செய்கிறோம் என்று தெரியாமலேயே இளங்கோ இருக்க விஷயம் எல்லாம் தெரியாது நித்திலன் உறங்கிக் கொண்டிருந்தான்..

விடியல் அழகாக விடிய மெல்ல உறக்கம் கலைந்த நித்திலன் கண்களை மெல்ல திறக்க அங்கே அவனது மனைவி கையில் காபி கப்பை பிடித்தபடி நின்றுகொண்டிருந்தாள்...

அதைக் கண்டவன் குழம்பி சுற்று முற்றும் பார்க்க அப்பொழுது தான் இது கனவில்லை நினைவு என அவனுக்கு அறிவு வந்தது.." இந்தாங்க மாமா காபி குடிங்க".. என்று எதார்த்தமாக அவள் கூற ,அவனோ அவளை பார்த்து , "காலையிலே கடுப்பப் கிளப்பிட்டு மூடிட்டு போடி".. என்று அவளை திட்டி விட்டு , "ஆளும் மூஞ்சியும் பாரு வந்துட்டா காபியை தூக்கிட்டு "...என்று அவளை கரித்து கொட்டிக்கொண்டு அவன் வெளியே செல்ல, அவளோ நாய் குட்டி போல அவன் பின்னாலே சென்றாள்..

அங்கே பாண்டி அம்மாவோ, " காபி குடிச்சியா கண்ணு??".. என்று கேட்க அவனும் , "இல்ல பாட்டி வீட்டுக்கு போயிட்டு குடிக்கிறேன்"... என்று கூற, அவரோ வம்படியாக, " அட ஒரு வாய் காபி குடிக்க என்ன ஆயிடப் போகுது குடிச்சிட்டு போ உன் பொண்டாட்டி ஆசையா செஞ்சு இருக்கா "...என்று தனது பேத்திக்கு துணை போக,

அவளோ அவன் அருகில் வந்து, " மாட்டினியா குடி உனக்கு நான் தான் மாமா பேசாம என்னை ஏத்துக்கோ "... என்று மெல்லிய சிரிப்போடு கூற அவனோ அவளை முறைத்துக் கொண்டே அவளது காபி கப்பை வாங்குவது போல கீழே தவற விட்டேன் அவளோ அவனை பார்க்க நித்திலனோ கோணல் சிரிப்போடு வெளியேறி விட்டான்...

" இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு அதுக்கு முன்னாடியே டிக்கெட் கிடைக்குதான்னு பாக்கணும் பேசாம அமெரிக்கா போயிட வேண்டியது தான்".. என்று அவன் நினைக்க, அன்றைய தினம் காலை முதல் மதியம் வரை போனிலேயே அவனது நாட்கள் கழிந்தது..காலை உணவை கூட அவன் மறுத்தான்..ஓரிரு முறை பனி மலர், சிவகாமி என மாறி மாறி அழைக்க அவனோ அவர்களுக்கெல்லாம் ஒரு முறைப்பை பரிசளித்த படி நிற்க, இதற்கிடையே முத்தரசு அழைப்பதாக கயல்விழி கூற அவனும் வேண்டா வெறுப்பாக சென்றான்..

அங்கே முத்தரசன் நடு மாடத்தில் அமர்ந்திருக்க செந்தாமரையும் அவரது காதில் ஏதோ கூறிக்கொண்டிருந்தார்.."இளங்கோ சொல்ற மாதிரி வெளிநாட்டுக்கு எல்லாம் போக வேணாம்னு சொல்லுங்க நம்ம புள்ள நம்ம கண்ணுக்குள்ளேயே இருக்கட்டும் அப்பத்தான் புள்ள சந்தோஷமாக இருக்கா இல்லையான்னு பார்க்க முடியும் ஒத்த புள்ளைய வெச்சுட்டு அவள தூர தேசம் எல்லாம் அனுப்ப முடியாது ".. என்று கூறியவர் ,

மேலும், " பேசாம உங்க தங்கச்சியையும், அவங்க பையனையும் இங்கேயே தங்கிட சொல்லுங்க அப்பத்தான் நம்ம புள்ள கஷ்டப்படாம இருக்கும் நம்ம பெத்த புள்ள கஷ்டப்படுறதை பார்த்தா நமக்கு தாங்குமா ??"...என அக்மார்க் இந்த காலத்து அம்மா போல பேச அதைக்கேட்ட முத்தரசு தலையை ஆட்டிக் கொண்டிருந்தார் ..

அந்த நேரம் பார்த்து மிகச்சரியாக சிவகாமியும் நித்திலனும் வீட்டுக்குள் வர பாண்டி அம்மாவும் உரலில் பாக்கை பிடித்துக் கொண்டிருந்தார்..

இருவரையும் பார்த்து, "சிவகாமி நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன் பேசாம நம்ம நித்திலன் இங்கேயே ஏதாவது வேலை பார்க்கட்டும் எதுக்கு வெளிநாடு எல்லாம் போயிட்டு இங்கேயே நம்ம தொழிலையே பாத்துக்கட்டும் "...என்று கூற,

இந்த வார்த்தையை கேட்க சிவகாமிக்கு இங்கே ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று தோன்றியது ஏனெனில் காலையிலேயே கயல் வந்து ஒரு மூச்சு அழுது விட்டு இருந்தாள்...

நேற்று இரவு நித்திலன் இளங்கோவை பேசியதில் பயன் இளங்கோ அவளிடம் சாடியுள்ளான், " உன் தம்பி என்ன என் தங்கச்சி கழுத்துல தாலி கட்டினதும் திமிரு வந்திடுச்சோ எங்கிட்ட எதிர்த்து பேசுறான் என்ன நினைச்சுட்டு இருக்கான் ரொம்ப ஆடிட்டு இருக்கான் அவன் ஆட்டத்தை நான் எப்படி முடிக்கிறேன்னு பாரு உன்னை ஏதாவது பண்ணா என் தங்கச்சியை கொடுமை படுத்துவானாமே அப்போ நீ என்னடி என்னை பத்தி சொல்லி வச்சு இருக்க உன் தம்பிகிட்ட நான் என்ன உன்னை கொடுமை படுத்துறேனா ?? ஏன் மூணு நேரம் உனக்கு சோறு போடுறது இல்ல உடுக்க நல்லா துணி வாங்கிக் கொடுக்கறது இல்ல எதில டி குறை வச்சிருக்கேன்"... என்று அவன் சாட அவளோ, " நான் எதுவுமே சொல்லலைங்க" என்று கூறவும்,

"உன் தம்பி எப்படி டி என்னை கேப்பான்.. இதெல்லாம் குடும்பமா சேர்ந்து பிளான் பண்ணிட்டு இருக்கீங்களா??'.. என்ன எகிறி அவளை இரவெல்லாம் உறங்கவே விடவில்லை இளங்கோ.. அதைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தவள் காலை விடிந்தும் விடியாமலும் தன் தாயை பார்க்க ஓடினாள்... விஷயத்தை கூறியவள் ஒரு மூச்சு அழுக , "இந்த பையன் ஏன் இப்படி பண்றானே தெரியலையே"... என்று சிவகாமியும் அழுது புலம்பினார்...

அவரது மனமும் முத்தரசன் குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க மகனின் எண்ண உணர்வுகளை அவர் புரிந்து கொள்ளவில்லை அவருக்கு தன் மகன் செய்வதெல்லாம் தவறாக தான் பட்டது அநியாயமாகப் பட்டது அதேபோல தன் மகளின் வாழ்க்கையில் இவன் கேள்விக்குறி ஆகி விட்டான் என்று நினைத்தார்..

இதைப்பற்றி மகனிடம் பேச வேண்டும் என நினைக்க அதற்குள் மகனோ போனும் கையுமாகவே திரிந்து கொண்டிருப்பதால் அவனிடம் சரியாக பேச முடியாமல் போனது... அதற்குள் அவரது அண்ணன் அழைக்கவும் என்ன நடக்கப் போகிறதோ என பதைபதைத்து வந்தார் அவர் நினைத்தது போலவே தன் அண்ணன் நித்திலனை இங்கே இருக்குமாறு சொல்லவும் நித்திலன் முகம் மாறுவதை கண்ட சிவகாமி செய்வதறியாது திகைத்தார்...

தூவானம் தூறும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top