அத்தியாயம் 9
"என்ன இவன் இப்படி சொல்லிட்டு போறான் நீ சிலை மாதிரி நின்னுட்டு இருக்க???" என சரவணன் அவளிடம் கேட்க, அவளோ," வேற என்ன செய்ய சொல்ற??? என்னை மீறி அவன் என் கழுத்துல தாலி கட்டிடுவான்னான்னு நானும் பார்க்கிறேன்" என அவள் கூற
"எதுக்கு அவ்ளோ ரிஸ்க் எடுத்துட்டு பேசாம நானே ஒரு மஞ்சள் கயிறு வாங்கிட்டு வந்து உன்னோட கழுத்துல இப்பவே கட்டிட வா அவன்தான் இல்லையில்லை" என்று சரவணன் கூறினான்...
அதைக் கேட்டு அவளோ முறைக்க," நீ தானே சுபத்ரா சொன்ன என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அது எல்லாம் பொய்யா???" என்று கூற அது ஏதோ அவனை வெறுப்பேற்ற அவள் கூறிவிட்டாள் இவன் என்னடா என்றால் இப்பொழுதே கயிற்றை எடுத்து கட்டி விடுவேன் என்பது போல பேசிக் கொண்டிருக்க அவளுக்கு எரிச்சல் ஆகியது அதனால் ,"கொஞ்சம் வாயை மூடிட்டு இரு சரவணா எரிச்சல் படுத்தாம இரு.. அவனை வெறுப்பேத்த ஏதாவது சொன்னா நீ வேற ஏதாவது நினைப்பியா???" என கூற
"என்ன நீ இப்படி சொல்ற???" என அவன் திகைத்து கேட்டான்
"வேற எப்படி பேச சொல்ற ???" என அவள் கொந்தளித்து கேட்க
"அப்போ நம்ம கல்யாணம்???" என சரவணன் ஏக்கமாக கேட்க
"அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் போய் கஸ்டமர் வர்றாங்களான்னு கவனி... நீ என் கழுத்துல தாலி கட்டினால் கூட அவன் தாலி அறுத்து போட்டு என்னை கூட்டிட்டு போய்விடுவான் உனக்கு அவன பத்தி தெரியாது" என்று அவனை அனுப்பி வைப்பதில் சுபத்ரா குறியாக இருக்க அவனும் நடந்ததை எண்ணிப் பார்த்து தலையை ஒரு உலுக்கு உலுக்கு விட்டு இப்போ கல்யாணம் நடக்குமா நடக்காதா எனக்கு அது தெரிஞ்சு ஆகணும் நடத்தி காட்டாமல் நானும் விடமாட்டேன் என்று எண்ணிக் கொண்டே சரவணன் சென்றான்...
"டேய் நீ கொஞ்சம் ஓவரா தான் டா பேசுற அந்த பொண்ணு ரொம்ப பாவம்" என்று ராம் கூற அதைக்கேட்ட ஜெகதீஷ் சிரித்தான்..
"என்ன பேச்செல்லாம் பேசுற அவ அப்படி சிலை மாதிரி நின்னுட்டு இருக்கா அவளா இருக்கிறதனால இப்படி இருக்கா வேற யாராவது இருந்தா அவ்வளவுதான்" என்று அவன் கூறவும் ஜெகதீஷ் ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்த அவளை நினைத்துப் பார்த்தான் அவன் முகம் மலர்ந்தது...
தன் நண்பனை பார்த்து அவளை ,"இந்த அளவுக்கு நான் மாத்தி வெச்சி இருக்கேன் டா.. நான் என்ன பேசினாலும் அவ அப்படித்தான் நிப்பா" என்று நக்கலாகக் கூற
"யாரு நீ.." என்றான் ராம்
"ஆமாம் நானே தான் வேற யாரு என்கிட்ட தோத்து போய்ட கூடாதுன்னு சொல்லி எந்திரிச்சு நின்னு இருக்கா பார்த்தியா?? அவ எவ்வளவு அடிச்சாலும் தாங்குவா" என்க
"அது வேணா உண்மை தான்...ஆமாம் நீங்க எத்தனை வருஷம் காதலிச்சீங்க அப்படி என்னதான் உங்களுக்குள்ள நடந்தது???" என்றதும் அவனைப் பார்த்த ஜெகதீஷ் ,"காதலா அப்படியெல்லாம் ஒன்னும் நடக்கல" என்று அசால்டாக கூறினான்
"என்ன லவ் பண்ணலையா அப்புறம் எப்படி டா ரெண்டு புள்ள???" என்க
"லவ் பண்ணி தான் புள்ள கொடுக்கணும்னு அவசியம் இல்லடா" என்று நக்கலாக சிரித்தபடி கூற அதைக் கேட்டு அவனும் குழம்பி போய் நின்றான் ராம்....
"எனக்கு ஒண்ணுமே புரியல சுத்த மர்மமா இருக்கு அப்படி என்னதான்டா அந்த பொண்ணை நீ பண்ணின உன் மேல இவ்வளவு வெறுப்பா இருக்கு எப்படி நீ இப்ப கல்யாணம் பண்ண போற???" என கேட்க
"அதெல்லாம் பண்ணிக்கலாம் அவளை மடக்குறது எல்லாம் எனக்கு சர்வ சாதாரணமான விஷயம் நானா வேண்டான்னு சொல்லி ஒதுங்கி இருந்தேன் இப்போ அவ சீண்டி விட்டுட்டா இனி கல்யாணம் பண்ணாம விட மாட்டேன்" என்று அவன் கூறவும் ,"டேய் அந்த சரவணன் கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டு இருக்காங்களே" என்று அவன் கேட்கவும் அவனைப் பார்த்து முறைத்த ஜெகதீஷ் ,"ஏன்டா அந்த பாடி சோடாவை என் அளவுக்கு நீ திங்க் பண்ணி வச்சிருக்கியா???" என்றான் அதை கேட்ட ராம் சிரித்து ,"ஒருவேளை அவங்களுக்கு சரவணன் பிடிச்சிருந்தா??" என்க
"அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லடா அவளுக்கு என்னை தவிர வேறு யாரையும் பிடிக்காது" என்றான்... ராமுக்கு தலை வலித்தது இருவருக்கும் இருவரையும் பிடித்து இருக்கிறது ஆனால் இருவரும் இருவரை வேண்டாம் என ஒதுக்குகிறார்கள் என்ன நடக்கிறது என அவனுக்கு பிடிபடவில்லை...
அதனால் அந்தப் பிரச்சினையை விட்டுவிட்டு ,"டேய் ப்ரொடியூசர் தயாளன் உன்னை பார்க்கணும்னு சொன்னாரு எப்போ மீட்டிங் வச்சுக்கலாம் என்று கேட்டார்" என்று ராம் கூறவும் அப்பொழுதுதான் அதைப் பற்றியே யோசித்த அவன் ,"இப்ப தான் டா ஞாபகத்துக்கு வருது நாளைக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிடு அவரை போய் மீட் பண்ணிட்டு வந்துருவோம்.. இல்லாட்டி சத்யா சாரை அவர் கூப்பிட போறார்" என்று கூறியவன் நேராக வீட்டுக்கு சென்றான்...
அதே நேரம் மாலை நேரத்தில் குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தவள் முகம் வாடி இருக்க," ஏய் சஞ்சு ஜெகதீஷ் வந்தாரா???" என கேட்க ,"அது எப்படி பாட்டி உனக்கு தெரியும்???" என சஞ்சய் கேட்டான்...
"அதுதான் உங்க அம்மா மூஞ்சி வீங்கி போன பூரி மாதிரி இருக்கு அதுனால கேட்டேன்" என்க
"பாட்டி அவரு தான் எங்க அப்பாவா ஜெகதீஷ் சொன்னார் அப்படியா???" என கேட்க ராணியும் ,"ஆமாம் கண்ணா அவர்தான் உங்க ரெண்டு பேரோட அப்பா" என்று பாட்டி கூறவும் குழந்தைகளின் முகம் மலர்ந்தது..
" அம்மா கிட்ட கேட்டுகிட்டே இருக்கோம் அம்மா எந்த பதிலும் சொல்லாமல் இருக்காங்க"
அவளைப் பார்த்து முறைத்த ராணி ,"உங்க அம்மாவுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு அதனாலதான் அவ பதில் சொல்ல மாட்டேங்குற இப்போ நான் சொல்லிட்டேன்ல உங்களுக்கு ஹாப்பி தானே போய் ரெடியாகுங்க நாம கோவிலுக்கு போகலாம்.. இன்னைக்கு தான் ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல காரியம் நடந்திருக்கு" என கூற குழந்தைகளும் சந்தோஷத்தோடு துள்ளி குதித்து ஓடினர்...
அவள் அருகே வந்த ராணி ,"நான் தான் சொன்னேன்ல அவன் வருவான்னு" என கூற அவள் இருந்த கோபத்துக்கு தன் தாயை பார்த்து ,"அம்மா பேசாம போயிடுங்க ஏதாவது சொல்லிட போறேன்" என்று கூற,
அவரோ ,"நீயாச்சு அவனாச்சு என்னமோ பண்ணுங்க நாங்க கோவிலுக்கு போயிட்டு வரோம்" என்று கூறியவர் மனதுக்குள் சிறு சந்தோஷம் அவன் வந்ததிலிருந்து அவர் மனதில் தோன்றியிருக்க அதை தன் இறைவனிடம் பகிர்ந்து கொள்ள கோவிலுக்கு தன் பேரப்பிள்ளைகளோடு செல்ல தீர்மானித்தார் ராணி...
அவருக்கு எப்படி ஆவது தன் மகளும் அவனும் இணைந்து விட வேண்டும் அவ்வளவுதான்...அதன் படி கோவிலுக்கு அவர்கள் மூவரும் செல்ல அந்த சமயம் பார்த்து ரேவதி அதே கோவிலுக்கு வந்தார்..
அவருடைய ஒரே ஒரு வேண்டுதல் தன்னுடைய மூத்த மகன் தன் குடும்பத்தோடு இணைய வேண்டும் அவ்வளவு தான் அப்படி இருக்க எப்போதும் போல தனக்கு இருக்கும் ஒரே ஒரு வேண்டுதலோடு அவர் கோவிலுக்கு வந்து இருந்தார்...
அவர் அந்த அம்பாளை மனம் உருகி வேண்டி கொண்டிருக்க ராணியும் தன் பேரப்பிள்ளைகளை பார்த்து," ஹே சஞ்சய் அங்கே இங்கே ஓடாதீங்க கோவில்ல கூட்டமா இருக்கு பாட்டி கையை பிடிச்சிட்டு நில்லுங்க பாட்டின்னால பின்னாடி ஓடி வர முடியாது புரியுதா???" என்று குழந்தைகளிடம் கூறிக்கொண்டே அவரும் அம்பாளை சேவித்தார்...
அந்த சமயம் பார்த்து கோவில் பூசாரி பூஜை செய்ய ராணி கண்களை மூடி கொள்ள சஞ்சனா மெல்ல கூட்டத்தின் நெரிசலில் தன் பாட்டியின் புடவையை விட்டு விட்டாள்...
"பாட்டி, பாட்டி" என கத்த அவருக்கு அனைவரும் போடும் கரக்கொலியில் அவளுடைய சப்தம் கேட்காமல் போய்விட்டது...அவள் அழும் நிலைக்கு போக தன்னுடைய பாட்டி தானா என ஒவ்வொரு ஆட்களின் முகத்தை பார்த்து கொண்டு இருக்க அந்த சமயம் பார்த்து அழுது கொண்டிருந்த அந்த பிஞ்சு குழந்தையை கவனித்தார் ரேவதி..
ஏனோ தெரியவில்லை அவர் அறியாமல் அக்குழந்தையின் அருகே சென்ற ரேவதி ,"ஏம்மா அழற??" என கேட்க
"பாட்டி கூட வந்தேன் பாட்டியை காணோம் சஞ்சய் சஞ்சய்" என தன்னுடைய அண்ணனை அவள் அழைக்க ,"அழாதே மா நாம தேடலாம்" என கூற அதற்குள் ,"பாட்டி சஞ்சனா எங்கே???" என கேட்க ,"சஞ்சனா வா???" என்றவர் பதறி தேட அங்கே எங்கேயும் இல்லை...
"ஐயோ என்ன பண்ணுவேன் இந்த பிள்ளை எங்கே போனா??? உன்னோட அம்மாவுக்கு என்ன பதில் சொல்லுவேன் அம்மா தாயே என் குழந்தையை கண்டுபிடித்து கொடு" என அங்கேயே புலம்ப ,"பாட்டி இங்கு நின்னுட்டு சாமி கும்பிட்டு இருக்காம வாங்க அவளை தேடுவோம்" என்று சஞ்சய் தன் பாட்டியை அழைத்துக் கொண்டு சென்றான்..
"சஞ்சனா சஞ்சனா" என அவன் கத்த ரேவதி அவளின் கையை பிடித்தபடி கூட்டத்தில் இருந்து விலகி அவரும் தேடி கொண்டிருக்க ராணி பதட்டத்தில் தவித்து தேடி கொண்டிருந்தார்...
அந்த சமயம் பார்த்து சஞ்சய் கண்ணுக்கு ரேவதி தென்பட அவர் சஞ்சனாவை பிடித்து கொண்டு தேடி கொண்டிருப்பதை பார்த்த அவன் ,"அதோ பாட்டி அவ அங்க நிக்கிறா" என்று குடுகுடுவென ஓடினான்..
ரேவதி வேறு அழும் சஞ்சனாவை சமாதானம் செய்து கொண்டிருக்க அந்த சமயம் பார்த்து ஓடி வந்த சஞ்சய்," எங்க போயிட்ட உன்னை எங்கே எல்லாம் தேடுவது???" என கேட்க
தன் கையில் பிடித்திருக்கும் பெண்ணை விட சற்று அதிக உயரத்தில் இருக்கும் அந்த சிறு பையன் அவரை வெகுவாக கவர்ந்தான் சிறுவயதில் ஜெகதீஷை பார்ப்பது போல இருக்க," உன்னோட தங்கச்சியா" என கேட்கவும் ,"ஆமாம் நாங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ்" என்று சஞ்சய் கூறி சஞ்சனாவின் கையைப் பிடித்துக் கொள்ள அவரோ அவனின் மோவாயை இலேசாக வருடினார்..
அவனோ," தேங்க்ஸ் பாட்டி சஞ்சனாவை பார்த்துக்கிட்டத்துக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்று கூறி கொண்டிருக்கும் போதே மிகவும் மரியாதையாக பேசும் குழந்தைகளை பார்த்த ரேவதிக்கு கண்கள் நிறைந்து இருக்க,
"உங்களோட யார் வந்து இருக்காங்க??" என அவர் கேட்க
"எங்க பாட்டி" என கூறி பாட்டி வந்த திசையை பார்க்க அங்கு ராணியை கண்ட ரேவதி அதிர ராணியும் அதிரத்தான் செய்தார்...
இருவரும் இப்படி ஒரு சந்திப்பை எதிர்பார்க்கவில்லை இருவரின் முகத்திலும் அதிர்ச்சி ஏற்பட பாட்டி என்றால் சுபத்ராவுக்கு பிறந்த பிள்ளைகளா என எண்ணி,
"சுபத்ரா பசங்களா" என தலையை குனிந்தபடி கேட்டார் ரேவதி என்க
"ஆமாம்" என்று கூறிய ராணிக்கும் என்ன பேசுவது என தெரியவில்லை..
ரேவதிக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை என்றாலும்," சுபத்ராவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்ததுல ரொம்ப சந்தோஷம் நல்ல பொண்ணு அவ" என்க
"நல்ல வாழ்க்கை இன்னும் அவளுக்கு அமையல ரெண்டு குழந்தை இருக்கிறவங்களுக்கு எப்படி நல்ல வாழ்க்கை அமையும்???" என்று ராணி எடுத்து எடுப்பில் கூற அதைக் கேட்டு நிமிர்ந்த ரேவதி அதிர்ந்தார் ,"என்ன சொல்றீங்க அப்ப இந்த குழந்தைங்க "என்று அவர் கேட்கவும்
"உங்க பேரப்பிள்ளைகள் தான் உங்க மூத்த மகனோட பிள்ளைகள்" என்று அவர் கூற அதைக் கேட்ட ரேவதி அதிர்ந்தார்...
அவர் கூறியதை கேட்டு துக்கப்படுவதா, சந்தோஷப்படுவதா என்று எதுவுமே அவருக்கு புரியவில்லை மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாதா இவன் ஏன் இப்படி இருக்கிறான் என அவர் பலமுறை யோசித்ததுண்டு...
ஆனால் இப்படி ஒரு வழியில் குழந்தை ஆகி இருக்கிறதா என்று அவர் நினைக்கவும் அவருக்கு கொஞ்சம் அசிங்கமாகத் தான் இருந்தது தன்னுடைய வளர்ப்பு பொய்த்து போனதோ என்ற அசிங்கம் அப்படி இருக்க, அவரோ தலையை கவிழ்த்து நிற்க அதை பார்த்த ராணி ,"சரி விடுங்க கவலைப்பட்டு என்ன பிரயோஜனம் நான் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா அதை மறந்துட்டு வாழ்ந்துட்டு இருக்கேன் நீங்களும் அப்படியே இருங்க" என்று கூற அவரால் முடியவில்லை ரேவதி கண்ணில் கண்ணீர் வந்தது...
ராணி தான் சமாதானம் செய்ய துவங்க அதை கண்ட குழந்தைகள் ,"இவங்க யாரு உங்க பிரண்டா ஏன் உங்களை பார்த்ததிலிருந்து அழுதுட்டே இருக்காங்க???" என கேட்க," இவங்க உங்க அப்பாவோட அம்மா அதாவது பாட்டி" என்று கூறவும் ரேவதிக்கு மனதில் உள்ள பாரமெல்லாம் போனது போல இருந்தது.. "பாட்டியா" என்று கூறி ,"அப்போ எங்களுக்கு இரண்டு பாட்டி இருக்காங்களா???" என்று குழந்தைகள் கூற அதைக் கேட்டு தங்களுடைய கவலைகள் மறந்து சிரித்தார்கள் பெரியவர்கள்...
பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து பிரிந்து சென்றார்கள்...
