Share:
Notifications
Clear all

அத்தியாயம் 8

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

குழந்தைகளைக் கண்டதும் அவன் பட்டென்று உண்மையை போட்டு உடைத்து விட்டான் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை ஆனால் இவன் வந்த வேகத்தில் போட்டு உடைப்பான் என எதிர்பார்க்காத அவளோ ,"சஞ்சு, சஞ்சய் யார் வந்து உங்க அப்பா என்று சொன்னாலும் நீங்க இப்படித்தான் திகைத்துப் போய் நிற்பீர்களா??" என கேட்டாள்...

"அப்போ யார் வந்து சொல்லணும் நான்தான சொல்லணும் இவங்க அப்பா என்று செத்துப்போன உன்னோட அப்பாவா வந்து சொல்வார்???" என பட்டு என்று அவன் கேட்டு விட்டான்...

அதை கேட்டதும் கோபம் கொண்டவள்,"எங்க அப்பாவை பத்தி பேச உனக்கு எந்த ரைட்சும் கிடையாது" என்று அவள் கோபத்தோடு கூற ,"அதே மாதிரி நான் பெத்த பசங்களுக்கு நான் தான் அப்பான்னு சொல்றேன் அது இல்லைன்னு சொல்ல உனக்கு எந்த ரைட்சும் கிடையாது கொஞ்சம் மூடிட்டு இரு" என அவனும் சூடாக அவளுக்கு பதில் கூறினான்...

குழந்தைகளுக்கு எதுவும் புரியவில்லை இருவரையும் மாறி மாறி பார்த்தனர்... "சரவணா இவங்களை வெளியே போக சொல்லு" என்று சரவணனிடம் அவள் கூறவும்,

அவனும்,"சார் இங்க இருந்து கிளம்புங்க சார் தேவையில்லாமல் பிரச்சினை பண்ணிட்டு இருக்காதீங்க பிசினஸ் ரன் ஆயிட்டு இருக்கு சமயம்" என சரவணன் கூறினான்..

அவனை ஏற இறங்கப் பார்த்த ஜெகதீஷ் ,"யார் நீ???" என கேட்டான்

"நான் அவளோட ஃப்ரெண்ட் நான் அவ கூட தான் இந்த ஹோட்டல் ரன் பண்ணிட்டு இருக்கேன்... அவ அப்பா இறந்ததிலிருந்து அவள் கூட அவளுக்கு துணையாக இருக்கிறேன்" என்று கூறவும், அவனோ," கொஞ்ச நேரம் நீ இந்த விஷயத்தை தலையிடாம இருந்தா உனக்கு நல்லா இருக்கும்" என்று ஜெகதீஷ் மரியாதையாக தான் கூறினான்...

காலையில் வீரவசனம் சரவணன் பேசினான் தான் ஆனால் ஜெகதீஷின் பார்வையும் அவனுடைய பேச்சையும் பார்த்தவனுக்கு வாயே திறக்க முடியவில்லை....

"ஏய் அவன் தானே பேசக்கூடாது நான் பேசலாம் இல்ல என்னோட ஹோட்டல் இருந்து வெளியே போ" என கூற

அவனும் சாவதானமாக அவன் அமர்ந்திருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்து காலை தூக்கி அவளுடைய மேசை மீது வைத்தவன் கால்களை ஆட்டிக் கொண்டு ,"போக முடியாது டி" என்று நக்கலாக கூறினான்...

அவனது செய்கையில் கடுப்பு ஆனவள்,"நான் போலீசுக்கு போவேன்" என்க

"நீ எவன் கிட்ட வேணாலும் போ எனக்குத் தேவை என்னோட குழந்தைங்க புரியுதா" என அவன் கூற

அவள் கண்ணில் ஆத்திரம் சுடர் விட்டு எறிந்தது.. என்ன சொல்கிறான் திடீரென வந்துவிட்டு குழந்தை ஆட்டுக்குட்டி என்று கூறியதும் இவள் அப்படியே கொடுத்துவிட்டு செல்ல வேண்டுமா அப்போ இவள் அனுபவித்த வலிக்கு எல்லாம் என்ன பிராய்சித்தம்??? என எண்ணியவள் ,"தேவை இல்லாமல் இங்கே பேசிட்டு இருக்காத நல்லவன் மாதிரி குழந்தைங்க கிட்ட பேசினா நீ நல்லவன் ஆயிடுவியா????" என்க

அவனோ நக்கலாக பார்த்து ராமிடம் ,"டேய் ராம் மேடம் தான் உலகத்திலேயே ரொம்ப நல்லவங்க பொய்யே பேச தெரியாதவங்க" என்றான்...அதை கேட்டு அவள் முகம் இறுகியது...

"உனக்கு இப்போ என்ன வேணும்???" என்றாள்

"உன்கிட்ட எத்தன தடவ தான் சொல்றது எனக்கு என்னோட குழந்தைகள் வேணும்" என்றான் அவனும் சளைக்காமல்,

அதற்கு மேல் அவளுக்கு பொறுமை இல்லை," குழந்தை குழந்தைன்னு சொல்ற இந்த குழந்தைகளுக்கும் உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ??? சொல்லு உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்??? இவங்க என் வயித்துல தான் பிறந்தாங்க அப்படிங்கிறதுக்கு ஆதாரம் என்கிட்ட இருக்கு ஆனால் இவங்க உனக்கு தான் பிறந்தாங்க அப்படிங்கிறதுக்கான ஆதாரம் உன்கிட்ட இருக்கா???" என அவள் கேட்டாள்...

அவனோ அவள் பேசுவதைக் கேட்டு அவளையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருக்க அவளின் கடைசி ஆயுதமாக இனி இவன் தன் பக்கமே எட்டிப் பார்க்கக் கூடாது என்பதற்காக அவனை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே," சரவணன் இத்தனை நாள் நீ கேட்டு நான் இதற்கான பதிலை சொல்லல இதோ இப்ப சொல்றேன் நீ நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு எனக்கு சம்மதம்" என்றாள்...

அவனோ இது தான் சமயம் என்று ,"சரி சுபத்ரா நான் ரெடி பண்றேன்" என்க

அவளோ அவனை நக்கலாக பார்த்து கொண்டே இருந்தவன்," டேய் ராம் மேடமுக்கு நான் அபிஷியல் புருஷன் கிடையாதுல அத சொல்லி குத்தி காட்டுறாங்க உனக்கு விளங்குதா விளங்கலையா" என ராமை இழுத்தான்.. அவனும் ,"என்னை ஏன்டா இதுல இழுக்கிற??" என்பது போல அவனை பார்க்க, அவளோ அவர்கள் இருவரையும் முறைக்க,

சரவணன் தான் இடையிட்டு," சார் அவங்க சொன்னதை கேட்டீங்க இல்ல நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம் இனி எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துகிறோம் நீங்க கிளம்புங்க" என கூற ஜெகதீஷ் சரவணன் பார்த்து முறைத்தான்... இன்னும் இவன் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் இவனிடம் அடி வாங்க போவது உறுதி என்பதை அறிந்த ராம் இடையிட்டு ,"ப்ரோ அவங்க பேசி முடிக்கட்டும் நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க" என்க

"நான் ஏங்க அமைதியா இருக்கணும்??? சுபத்ராக்கு ஒன்னுண்ணா பார்த்திட்டு நான் சும்மா இருக்க மாட்டேன் நீங்க பெரிய ஆளாக இருக்கலாம் அது எல்லாம் என்கிட்ட நடக்காது" என அவன் கூற

"அப்போ உங்க தலையெழுத்தை மாத்த முடியாது" என்று ராம் வாய் விட்டே கூற

அவனை முறைத்து பார்த்து பார்த்த ஜெகதீஷ்," என்ன இவளை கல்யாணமா??? பண்ணிக்க போற???" என கேட்க

சரவணன் ,"ஆமாம்" என்க

"தாராளமா பண்ணிக்கோ" அவளை மேலும் கீழுமாக பார்த்து," பொண்ணு நல்ல பொண்ணு தான் ஆனால் அவளோட நீ நிக்கிறது உனக்கு நல்லது... என் பசங்க வரை நீ வரதை நான் ஒத்துக்க மாட்டேன்" என கூற, குழந்தைகள் என்ன பேசி கொள்கிறார்கள் என புரியாமல் திரு திருவென விழித்து கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்...

அவனின் பேச்சில் அவளுடைய பொறுமை காற்றில் பறந்தது...

"இது உன் குழந்தை தான் அப்படின்னு உனக்கு எப்படி தெரியும்??? அவ்ளோ நம்பிக்கையா இது உன் குழந்தைங்க தான்னு???? இவங்களை பெத்த நான் சொல்றேன் இல்லைன்னு" என்று தெரிக்கும் விழிகளில் அவள் அவனை பார்த்து கேட்டாள்...

விட்டால் அவனை கண்களாலேயே பொசுக்கி இருப்பாள் போல அந்த அளவுக்கு அவளுக்கு அவன் மீது கோபமும் இருந்தது அதே அளவு பகையும் இருந்தது.. இத்தனை வருடம் விட்டு போனவன் இப்போது வந்து குழந்தை, ஆட்டுகுட்டி என கூறினால் அதை கேட்டு கொண்டிருக்க அவள் ஒன்னும் அவன் முன்பு பார்த்த அவள் இல்லை இப்போது எவ்வளவோ மாறி இருக்கிறாள்...

அப்படி இருக்க அவனை பார்த்து கேட்கவும் அதே ஆத்திரத்தோடு அனல் தெறிக்க ,"ஒன்னு விட்டேன்னு வை " என்றவன் அவள் பேசிய பேச்சு அவனுக்கு அவ்வளவு ஆத்திரத்தை கொடுக்க அவன் கையை ஓங்கினான்...அடித்து விடுவானோ என எண்ணி அவள் ஒரு அடி நகர," எனக்கு இவங்க இரண்டு பேரும் என் குழந்தைங்க தான் அப்படின்னு நம்பிக்கை எனக்கு இருக்கு உனக்கு இல்லன்னா நான் இவங்களை கொண்டு போறேன் நீ இதோ இவன் கூட இரு அவனும் ரெடியா இருக்கான் உன்னை கட்டிக்க" என அருகே நிற்கும் அவனை கை காட்ட அதை பார்த்த அவளோ அதிர அதை கண்ட அவன் தன் நெற்றி பொட்டை நீவியபடி அவளை அதே நக்கல் பார்வையோடு பார்த்தான்...

அவன் வாயில் நல்ல சொற்கள் வந்து அவள் பார்த்ததே இல்லை இப்போதும் அவன் அப்படி தான் இருக்கிறான் என்பதை அவளுக்கு பறைசாற்றும் விதமாக அவளை மேலும் கீழுமாக பார்த்தவன் ," ஏன் டி ஒரே ஷாட்ல இரண்டு குழந்தையை உனக்கு கொடுத்து இருக்கேன் எனக்கு தெரியாதா இது யார் குழந்தைன்னு" என அவன் கேட்கவும் அவள் முகம் அன்றைய விசயங்களை நினைவு கூர்ந்து அவள் முகம் ரத்தமென சிவந்தது...

"ச்சீ உனக்கு வெட்கமாக இல்லை இப்படி பேச???" என்றாள் அவள் குழந்தைகள் முன்னிலையில் இவன் என்ன பேச்சு பேசுகிறான் என கடுப்போடு அவள் பேசினாள்...

அவனோ ,"நான் அன்னிக்கு வெட்கப்பட்டு இருந்தேன்னா நீ இப்படி என்கிட்ட பேசிட்டு இருக்க மாட்ட ஐ திங்க் நீ தான் அன்னிக்கு வெட்கப்பட்ட இல்லையா??" என அன்றைய நாளை நினைத்து அவன் நாராசமாக பேச துவங்கவும் இவனிடம் பேசி ஜெயிக்க முடியாது என்பது போல காதை பொத்தி கொள்ள அவனோ நக்கலாக அவளை பார்த்து சிரித்தான்...

"என்ன புது மாப்பிள்ளை சார் ஒரே ஷாட்டில் எல்லாம் நடந்து போச்சு அந்த அளவுக்கு அனுசரணையான பொண்ணு நீ தாராளமா கல்யாணம் பண்ணிக்கலாம்" என்க சரவணன் முகம் ஒரு மாதிரியாகி விட்டது...

அவளுக்கும் மேலும் அவமானம் ஆகி விட," நீ எல்லாம் மனுஷனா என்னை ஏன் இப்படி உயிரோட கொல்ற??? உன்னை என் வாழ்கையில் சந்தித்ததே தப்பு அப்படின்னு ஒவ்வொரு நாளும் என்னை யோசிக்க வைச்சிட்டு இருக்க" என அவள் கூற

அவனோ ,"அதை இப்போ யோசிச்சி ஒரு பிரயோஜனமும் இல்ல எல்லாம் முடிஞ்சு போச்சு அதனால" என்று கூறியவன் அழும் நிலையில் அவள் இருந்தாலும் அவன் முன்னே அவள் அழுகையை உள்ளடக்கி பிடித்து நிற்பதை பார்த்தவன் என்ன எண்ணினானோ ,"இதோ பாரு நான் உன்னோட வாழ்க்கைக்குள்ள மறுபடியும் வர விரும்பல நீயும் அப்படித்தான் இருக்கேன்னு எனக்கு நல்லா தெரியும் ஆனா கண்ட நாய் எல்லாம் என் குழந்தைகளுக்கு இன்ஷியல்லா இருக்க நான் ஒத்துக்க மாட்டேன்" என சரவணனை பார்த்து கூறியவன்,

அதே நக்கலோடு ,"மிஸ்டர் சரவணன் நான் உங்களை சொல்றேன்னு நீங்க நினைச்சுக்காதீங்க இவ ஏதாவது தேவையில்லாத வேலை பண்ணுவா அதுக்காக சொல்றேன் ஏன்னா பெத்தது நான் கடைசில இன்சியல் மட்டும் எவனாவது ஒருத்தன் இடையில வந்து நின்னுட்டானு வைங்க அவன் கதை முடிஞ்சுது அது வேற விஷயம் அவன் இவளோட நின்னுட்டா பிரச்சனை இல்ல அதுவே குழந்தைங்க வரைக்கும் வந்து ஏதாவது எச்சு பேசினான் வைங்க சும்மாவே என் கை சும்மா இருக்காது தேவையில்லாம அடி வாங்கி சாக வேண்டி இருக்கும் அதுக்காக முன்னெச்சரிக்கையா இவகிட்ட சொல்லி வைக்கிறேன்.. நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க நான் உங்களை தான் சொல்றேன்னு" என்று கூற அவனோ பேய் அறைந்தது போல நின்று கொண்டான்...

அவளோ அவனை திகைத்து பார்க்க அவனோ அவளை மிக நக்கலாக பார்த்தான்...

இதற்கு மேல் முடியாது என்று எண்ணி அவன் அருகே வந்தவள்," என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல என்னை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்திட்ட இன்னும் உன்னோட வெறி அடங்கலையா உனக்கும் எனக்கும் அப்படி என்னடா சம்பந்தம் நீ என் புருஷனா இல்ல நான் தான் உன் பொண்டாட்டியா வந்து உரிமை கொண்டாடிட்டு இருக்க இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ இவங்க என் பசங்க எனக்கு மட்டும்தான் சொந்தம் நீ இவங்களுக்குள்ள வர முயற்சி பண்ணாத நான் வர விடவும் மாட்டேன் நான் சரவணனை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் இவ்வளவு கொழுப்பு இருக்கிற உன்னை அசிங்கப்படுத்த வைக்கணும்னே சரவணன் இவங்களது அப்பான்னு சொல்ல வைக்கிறேன்" என்று அவள் ஆத்திரத்தோடு கூறினாள்...

அதை கண்டவன் மனம் சூடாக துவங்கியது ...அவனோ அவள் அருகே வந்து நின்று,"நீ செஞ்சுதான் பாருடி உன் உடம்பில் உயிர் அப்படிங்கறது இருந்தா செஞ்சு பாரு" என்றான்...

அதற்குள் சஞ்சய் காதுக்குள் சஞ்சனா இவர்களின பேச்சை கேட்டு ,"கல்யாணம் ஆகலையா??? இவங்க இரண்டு பேருக்கும் அம்மா சரவணன் அங்கிளை கல்யாணம் பண்ண போறாங்களா??? அப்புறம் எப்படி ஜெகதீஷ் நம்ம அப்பா ஆக முடியும்???" என்று கூற அது தெள்ளத் தெளிவாக பெரியவர்களின் காதில் விழுந்தது அவர்கள் அனைவருக்கும் ஒரு மாதிரியாகிவிட்டது அதிலும் அவளுக்கும், அவனுக்கும் மிகவும் வருத்தமாக தான் இருந்தது...

"கேட்டியா அவங்க சொல்றத கேட்டியா உன்னால தான் இப்படி பேசுறாங்க அவங்களுக்கு நீ பேசுற அசிங்கம் எல்லாம் தெரியாது நான் அப்படி சொல்லி வளர்க்கல அப்பான்னு ஒரு கேரக்டர் அவங்களுக்கு இல்லை என்றாலும் அந்த கேரக்டரை நான் அவங்க மனசுக்குள் அசிங்கப்படுத்தல.. ஆனால் நீயே வந்து பிஞ்சுங்க மனசுல நஞ்சை விதைச்சிட்டு இருக்க தயவு செய்து சொல்றேன்..

நீ தான் பொறுக்கி மாதிரி வளர்ந்து இருக்க உன் வாயிலிருந்து நல்ல வார்த்தையே வராது நாம பேசினா மத்தவங்க வருத்தப்படுவாங்களா இல்லையா எதுவுமே யோசிக்க மாட்ட ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது எனக்கு என் குழந்தைகள் நல்லா வளரனும்...

இந்த சமுதாயத்தில் நல்ல மனுஷங்களா இருக்கணும் அந்த மாதிரி ஆசை எல்லாம் இருக்கு என் வாழ்க்கை தான் எப்படியோ போயிடுச்சு அவங்க வாழ்க்கையும் போக விடமாட்டேன் உனக்கும் எனக்கும் எப்படி சம்பந்தமில்லையோ அதே மாதிரி இந்த குழந்தைகளுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது தயவு செஞ்சு எங்க வாழ்க்கை கொள்ள நுழையாத" என்று அவள் கூற,

அதை அழுத்தமாக கேட்ட அவனோ ,"பேசி முடிச்சிட்டியா???" என்றவன் அவளைப் பார்த்து ,"அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கு சொல்றேன் ஒரு கயிறு தான் உனக்கும் எனக்கும் உறவை இணைக்குதுன்னா அந்த கட்டி உன்னை உறவா மாத்திக்க நான் கண்டிப்பா முயற்சி பண்ணுவேன் அன்னைக்கு உனக்காக முயற்சி பண்றேன்னு சொன்னேன் இன்னைக்கி என் குழந்தைகளுக்காக முயற்சி பண்ணுவேன்...

நான் உனக்கு என்ன உறவு என்று உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் ஆனா உன்னோட வார்த்தைகள் லீகல் அப்படிங்கிற ஒரு வார்த்தைய ஆட் பண்ணி வச்சிருக்க பரவால்ல அந்த லீகலா நான் மூவ் பண்ணிக்கிறேன் இவன தான கட்டிக்க போறேன்னு சொன்ன..

ஹலோ மிஸ்டர் சரவணன் கண்டிப்பாக நடக்காது அதனால தேவையில்லாம இவளை ட்ரை பண்ண முயற்சி பண்ணாதீங்க... கூடிய சீக்கிரம் நான் இவளுக்கு தாலி கட்டிடுவேன்" என்று கூறியவன் குழந்தைகளை பார்த்து," டேய் பசங்களா நாங்க பேசுறதெல்லாம் கேட்டுட்டீங்களா உங்களுக்காக தான் டா பேசிட்டு இருக்கேன் யாருடா சொன்னா நான் உங்க அப்பா இல்லைன்னு ரெடியா இருங்க கூடிய சீக்கிரம் உங்களையும் உங்களுக்காக உங்க அம்மாவையும் கூட்டிட்டு போக நான் வருவேன் இல்ல உங்க அம்மாவை வர வைப்பேன்" என்று கூறி விட்டு தன் குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top