அத்தியாயம் 6
"என்ன நான் யாரோவா ???" என அவன் கேட்க அவளோ அவனை பார்த்து முறைத்தாள்...
"ஆமாம் நீ இப்போ கிளம்பல போலீஸ்க்கு கால் பண்ணுவேன் கண்டவங்க எல்லாம் இந்த வீட்டுக்குள்ள நுழைய இடம் கிடையாது அதுவும் உன்னை மாதிரி பொறுக்கிங்க" என்றாள் அவள்...
மீண்டும் பொறுக்கி என்ற வார்த்தையை அவள் உபயோகிக்க அவனோ அவன் அருகே நின்று கொண்டிருக்கும் குழந்தைகளை குனிந்து பார்த்தவன் குழந்தைகள் உயரத்துக்கு குனிந்து மெல்ல அவர்களை அவ்வளவு அருகே பார்க்க தாயின் செயலால் குழந்தைகள் பயந்து இருந்தாலும் அவன் குனிந்து மெல்ல சிரிக்கவும் குழந்தைகளும் இதழ் முறுவ அதை கண்ட அவன்," நான் உங்களை தான் பார்க்க வந்திருக்கேன் ஆனால் எனக்கு கொஞ்சம் உங்க அம்மா கிட்ட பேச வேண்டி இருக்கு கொஞ்ச நேரம் ரூம்ல போய் இருக்கீங்களா நான் கதவை சாத்தவா???" என கேட்டான் அவர்களோ தங்களுடைய அம்மாவை பார்க்க அவ்ளோ முறைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்...
அம்மாவின் கோபத்தை விட இதுவே மேல் என கருதி குழந்தைகளும் உள்ளே செல்ல ராணி தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல கீழேயே அமர்ந்து கொண்டார்...
ராம் கூட அப்படியே இருந்து கொண்டான்...அவனுக்கு மிகவும் தர்ம சங்கடமான நிலையில் தான் அவன் தவித்து வந்தான்... ஊரே போற்றும் ஒருவன் அவனோ இப்படி இருப்பதை ஒரு நண்பனாக ஏற்று கொள்ள முடியவில்லை என்றாலும் அவன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் யாரும் எதிலும் தலையிட முடியாதே????
குழந்தைகள் சென்று விட அவர்களின் அறை கதவை அடைத்தவன் அவளை பார்த்து அவளை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தான் அதில் அவளுடைய உடல் சிலிர்த்தது...
"என்ன சொன்ன??? இப்போ பேசு டி" என்க
அவளோ அவனை தீப்பார்வை பார்க்க அதைப்பற்றி அவனுக்கு கவலை இல்லை...
"உன்னை தான் இப்போ வாயை திற டி...என்னமோ பெரிய இவ மாதிரி ஓவரா குதிக்கிற??? என்னடி என்ன நினைச்சுட்டு இருக்க பசங்கள அழ வெச்சி இழுத்துட்டு வர இங்க வந்து என்னை பொறுக்கின்னு சொல்ற என்ன???" என்க
"உனக்கு எல்லாம் என்ன மரியாதை நான் நூறு தடவை சொல்லுவேன் நீ ஒரு பொறுக்கி அப்படின்னு இப்போ எதுக்கு நீ இங்கே வந்து என்னை தொல்லை பண்ணிட்டு இருக்க வெளியே போ" என அவள் கத்த
அவனோ குழந்தைகள் அறை கதவை ஒரு பார்வை பார்த்தவன் ஒரு அடி அவளை நோக்கி நெருங்கி வந்தான்..
அவன் ஒரு அடி நெருங்கவும் அவள் முகம் சிவந்தது...அவனுடைய கண்ணில் தெரிந்த கோபத்தில் லேசான பயமும் அவளுக்கு வந்தது அதை பார்த்த அவன் முகம் நக்கலாக சிரிக்க அவன் முன்னிலையில் அவள் முகம் சிவக்க அவளுக்கு அது அவமானமாக இருந்தது... இவ்வளவு நாள் கழித்து அவன் நெருங்கவும் அவளால் அவளுடைய சிவப்பை கட்டுப்படுத்த முடியவில்லை..
அதீத இயலாமையின் காரணத்தினால் அவளுடன் அவள் பேச்சை கேட்காமல் போன காரணத்தினால் உடனே கண்ணீர் ததும்பி இப்போது விழுந்து விடுவேன் என்பது போல இருக்க அவன் அருகே அதை காட்டி விடாதபடி ,"அம்மா உங்களுக்கு அறிவே இல்லையா யாரையெல்லாம் வீட்டுக்குள்ள விடனும்னு உங்களுக்கு தெரியாதா??? " என அவளுடைய அம்மாவை கூட்டு பிடிக்க சுபத்ரா கத்த
அவனும் இதற்கு மேல் இவளை விட்டு வைக்கக் கூடாது என்று கருதி அவளின் கையை பிடித்து அவளை தரதரவென அவளுடைய அறைக்கு இழுத்து வந்தான்...
"என்னை விடு விடு டா பொறுக்கி நாயே விடு" என்க
அவனுக்கோ அவளுடைய பேச்சில் கட்டுக்கடங்காத கோபம் அவன் உள்ளே சுழன்று கொண்டு இருந்தது...
அவளை அவளுடைய அறையில் தள்ளியவன் கதவை தாழிட்டான்.. அவனுடைய செய்கையால் அவளுடைய உடலில் ஒரு நொடி அதிர," கதவைத் திற அம்மா எங்க இருக்கீங்க கதவை திறக்க சொல்லுங்க" என அவள் கத்த... ஏதோ ஒரு தைரியத்தில் அவனை மேலே அனுப்பி விட்டார்...
எவ்வளவு காலம் தான் மகள் தனியாக இருப்பாள் கடவுள் அவர்களை இணைத்தாவது வைக்கட்டும் என அனுப்ப ஆனால் அவள் போடும் அலறலால் இங்கே இவருக்கு பயம் தொற்றிக் கொள்ள," அம்மா பயப்படாதீங்க ஒன்னும் ஆகாது இவ்வளவு நாள் அவனுக்கு குழந்தை இருக்கிறது தெரியாது இப்போ தெரிஞ்சுடுச்சுல்ல அவன் அவர்களை விட மாட்டான் அதுக்காகத்தான் ராத்திரின்னு கூட பார்க்காம இங்கே வந்து இருக்கான்.." என கூறினான் ராம்...
"தம்பி நான் இவங்க ரெண்டு பேரும் செஞ்சது சரின்னு சொல்ல வரல ரொம்ப தப்பு அதுக்காக என் பொண்ணும் சரி அவனும் சரி எவ்வளவு நாள் தான் இப்படியே இருப்பாங்க அதுக்காக மட்டும் தான் நான் உங்களை உள்ளே விட்டேன் இவங்களையெல்லாம் விட அந்தச் சின்ன குழந்தைகள் என்ன பாவம் பண்ணுச்சு அம்மாவும் இப்படி இருக்க அப்பாவும் இல்லாமல் ஆளுக்கொரு திசையில் பிரிஞ்சு இருக்கிற என்னால பார்த்துட்டு இருக்க முடியல குழந்தைகள் தினமும் அப்பா எங்கே அப்படின்னு எங்ககிட்ட கேட்கும் போது எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறது ரொம்ப கொடுமையான விஷயம் தம்பி" என்று ராணி கண்ணீரோடு கூற ராமுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவித்து வந்தவன் ,"அம்மா இனி எல்லாம் சரியாகிவிடும்" என்று கூறினான்...
"என்னமோ தம்பி ஏதாவது நல்ல காலம் கடவுள் விட்டானா நல்லது" என்று கூறினார்...
அங்கே அறைக்குள் கதவை திறக்க அவள் கத்திக் கொண்டிருக்க, அவள் அருகே வந்தவன் ,"என்ன டி சத்தம் பெரிசா இருக்கு ரொம்ப கத்தாத யாரும் வர மாட்டாங்க நானா உன்னை விட்டா தான் உண்டு" என தன்னுடைய பின் தலையை இலேசாக வருடியபடி அவன் நக்கலாக கூற அப்போ அம்மா தான் இவனை உள்ளே விட்டதா என அவள் முகம் வெளிற அதை கண்டவன் நக்கலாக தன் பாண்ட் பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்தவன் சிகரெட் கேஸில் சிகரெட்டை தட்டியவாரு," வெல் ஸ்டார்ட் பண்ணாலாமா" என கேட்டான்...
அவனுடைய கேள்வியும் தோரணையும் அவளுக்கு அன்றைய தினத்தை நினைவு படுத்த அவளுக்கு பயம் உண்டானது..
ஐந்து வருடமாக இவன் மீது உள்ள கோபத்தில் தன்னை அழுத்தமாகவும், கோபக்காரியாகவும் அவள் ஆகி இருந்தாள்... யாரும் தன்னை தீண்டி விடக் கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள் அதனாலேயே கோபத்தை பூசி நடந்து கொண்டிருந்தாள்... ஆனால் அவள் அவனுடைய அறையில் தனியாக இருக்கவும் அவள் உடல் குலுங்க அதை பார்த்த அவனோ அவன் பற்ற வைக்காத சிகரட்டை தூக்கி எறிந்து ,"ஹேய் ஓவரா ஆக்ட் எல்லாம் பண்ணாத நான் உன்னை ரேப் பண்ற மூடில் இல்லை எனக்கு என் குழந்தைகள் வேணும் அவ்வளவு தான்" என்றான்...
அவளோ எதற்காக இப்படி ஓடி ஒளிந்தாலோ அதுவே இப்போது அவள் கண் முன்னால் நிற்கவும் அவனிடம் தன்னுடைய பதட்டத்தை காட்டிக் கொள்ளாமல்," உன்னோட குழந்தைகளா அப்படி யாரும் இங்கே இல்லை" என்று கூற
அவள் அருகே நெருங்கி வந்து நின்றவன் ,"இதோ பார் ஓவரா ஸ்மார்ட்டா பேசறதா நெனச்சிட்டு இருக்காத நீ இருக்கிற இடமும் எல்லாம் தெரியாமல் இல்லை எனக்கு நீ வேண்டாம் அதுனால உன்னை தேடி வரல .. ஏண்டி அன்னைக்கு அந்த பிரச்சனையில வயித்துல குழந்தை இருக்குறது கூட மறச்சுட்ட அப்படித்தானே??? என்ன ஒரு நெஞ்சழுத்தம் உனக்கு" என கேட்டான்...
அவனுடைய கேள்வியில் அடிபட்ட பார்வை அவள் பார்த்தாள்..ஆம் அவள் செய்தாள் தான் அன்றைய நிலைமை அவளை அப்படி செய்ய வைத்தது...
இருந்தாலும் இவன் என்ன யோக்கியனா??? என எண்ணியவள் ," என்னை கேள்வி கேட்கிற உரிமை உனக்கு இல்லை" என்க
அவனோ," எனக்கு இல்லை ஆனால் என் பசங்களை என்னோடு அழைச்சிட்டு போகிற உரிமை எனக்கு இருக்கு தானே" என்க
"என்ன உன் குழந்தைகளா???" மீண்டும் மீண்டும் அவன் அதை சொல்ல அதை அவளால் தாங்கி கொள்ள முடியல அதனால்," இதை சொல்ல உனக்கு வெட்கமா இல்லை இத்தனை வருசம் கண்டுக்காம இருந்துட்டு இப்போ எதுக்கு வந்த??? இவங்க உன்னோட குழந்தைகள் இல்லை என்னோட பசங்க" என வெறி பிடித்தவள் போல கூற
"அப்புறம் எதுக்கு டி அவங்க பேருக்கு பின்னாடி ஜெ ன்னு என் பெயரை கொடுத்து இருக்க???" என கேட்க அவள் முகம் இருண்டது...
"என்ன இவ்வளவு நேரம் பொங்கிட்டு இருந்த இப்போ என்ன பேச்சையே காணோம்.. ஜே பார் ஜெகதீஷ் தான??? அதனால இதையே பேசிட்டு இருக்காம அவங்களை என் கூட அனுப்புற வழிய பாரு" என்று கூறினான்..
அவளுக்கு அவனைப் பார்க்க ஆத்திரமாக இருந்தது அவனுடைய சட்டை பிடித்து ,"உன்னால எப்படிடா பேச முடியுது? எப்படி பேச முடியுது மரியாதையா இங்கிருந்து கிளம்பிடு எனக்குன்னு இருக்கிறது என் பசங்க மட்டும்தான் நீ பார்த்த சுபத்ரா நான் இல்ல என்ன பேச வச்சு வேடிக்கை பார்க்காதே உன்னோட முகத்தை கூட பார்க்க கூடாதுன்னு நினைச்சுட்டு இருக்கேன் அவ்வளவு அசிங்கமானவன் நீ" என்று அவள் கூறினாள்..
அதை அவள் கூறும் பொழுது ஒரு நொடி அவனுடைய இதயம் நின்றது இருந்தாலும் ,"ஆமாம் நான் கேவலமானவன் தான் எல்லாம் தெரிஞ்சு தானே இருந்த எதையும் நான் மறக்கலையே கடைசியா தேடி வந்தேன் தானே என்னை விரட்டி அடிச்சது நீ என்னை வேண்டாம் என்று சொன்னது நீ தான் நான் கிடையாது... என்னை வேண்டாம் என்று சொன்ன யாரையும் எனக்கும் வேண்டாம் இப்பவும் உன்னை தேடி வந்து இருக்கேன் நினைக்காத என்னால குழந்தைகளை தூக்கிட்டு போக தெரியாம கிடையாது அந்த வருத்தத்தை உனக்கு கொடுக்கக் கூடாதுன்னு நினைச்சுட்டு இருக்கேன் அதனால சீக்கிரம் ஒரு முடிவு பண்ணு நாளைக்கு மறுபடியும் வருவேன்...
என் வாழ்க்கையில எல்லாத்தையும் இழந்துட்டேன் இவங்கள இழக்க நான் விரும்பல ஏண்டி தெரியாமத்தான் கேட்கிறேன் அது என்ன பேரு கூட எல்லாமே எஸ்(S) லயே வெச்சி இருக்க ஏன் ஜெ(j) ல ஸ்டார்ட் பண்ணா பெயர் எல்லாம் நல்லா இருக்காதா?? அவ்வளவு கொழுப்பு சுபத்ரா, சஞ்சனா, சஞ்சய் நான் மட்டும் ஜெகதீஷ் அப்படித்தானே" என நக்கலாக அவன் கேட்க
"நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீ என்ன பேசுற இவ்வளவும் பண்ணிட்டு உன்னால எப்படி என்கிட்ட வந்து இப்படி பேச முடியுது???" என அவள் கேட்டாள்...
"கூட படுத்துது நீதானே உன் கிட்ட பேசாம வேற யார் கிட்ட பேச சொல்ற??" என பச்சையாக கேட்க அவள் மறக்க வேண்டும் என நினைத்த விஷயத்தை அவன் ஞாபகப்படுத்த அவளோ காதை பொத்திக் கொள்ள அவளுடைய காதை மெல்ல தனது கைகளால் விலக்கி விட்டவன் ,"ரொம்ப ஓவரா சினிமா டயலாக்கா பேசி என்னை டார்ச்சர் பண்ணாத அதை கேட்கிற மூடுல நான் இல்ல நானே கதை எழுதிறவன் எனக்கே கதை எழுதாத ஒகே..
உன்ன விட அதிகமா நல்ல டயலாக் டெலிவரி நான் பண்ணுவேன் சரியா என்னமோ தப்பு எல்லாம் நான் மட்டும்தான் பண்ண மாதிரியும் நீங்க எல்லாம் யோக்கியன் மாதிரியும் ஏண்டி ஊருக்குள்ள அப்படித்தான் சொல்லி ஏமாற்றி வைத்திருக்கிற??? ஏமாத்துன நீ உன்னோட அம்மா கூட தானே இருக்க ஒன்னும் இல்லன்னாலும் உனக்கு ஒரு குடும்பம் இருக்குல்ல எனக்கு யார் இருக்கா சொல்லுடி யார் இருக்கா இதோ பார் ஆமாம் உன்னை பொறுத்தவரை தப்பு பண்ணினேன் இல்லை என்று சொல்லவில்லை அதுக்கு நான் மட்டும் தான் பண்ணினேன்னு என் மேல பழியை போடலாம்னு பார்த்த அவ்வளவுதான் நீயும் தான் அதுக்கு உடந்தை அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன் புரியுதா???
நான் ஒன்னும் உன்னை ரேப் பண்ணல இல்ல விருப்பப்பட்டு தானே என்கிட்ட வந்த அப்ப மூடிட்டு இரு என்ன ஓவரா குதிக்காத" என கொச்சையாக தான் பேசினான் ஜெகதீஷ்..
அவன் பேசியது அதிகம் என அவனுக்கு நன்றாக தெரியும் ஆனால் இவளுடைய வாயை அடக்க அவனுக்கு வேறு வழி தெரியவில்லை அதனால் தான் அப்படி பேசி விட்டான்..
இந்த ஐந்து வருடத்தில் அவன் எவ்வளவோ மாறி இருக்கிறான் ஆனால் இவளை பார்த்த முதல் தான் மீண்டும் பழைய ஜெகதீஷ் மீண்டு வருகிறான் அவளோ அதிர்ச்சி மாறாமல் நிற்க
அவனும் அவள் அருகே நெருங்கி நின்று கழுத்தை லேசாக வருடி அப்படியே கழுத்தை அழுத்தி பிடித்தவன் ,"குழந்தைகள் முன்னாடி பொறுக்கி, பொறுக்கின்னு பேசிட்டு இருந்த இந்த கழுத்தை லேசா அழுத்தினேன்னு வை அப்படியே உனக்கு டிக்கெட் எடுத்து கொடுத்துட்டு குழந்தைகளை கூட்டிட்டு போயிடுவேன் இப்ப கூட உன்கிட்ட பர்மிஷன் கேட்டு இருக்கேன் பார்த்தியா அதெல்லாம் எனக்கு இல்லைன்னு உனக்கு நல்லாவே தெரியும்" என அவளை தலைகீழாக மேலும் கீழுமாக பார்த்தான்...
அந்தப் பார்வையின் அர்த்தம் அவளுக்கு புரிபடவும் அவள் முகம் அவ்வளவு நெருக்கத்திலும் அவன் பேசிய பேச்சிலும் மேலும் சிவந்தது... அதை பார்த்தவனோ அதே நக்கல் புன்னகையோடு," பரவால்ல அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தியோ அப்படித்தான் இருக்க ஆனா" என்று கூறி அவளுடைய இதழை லேசாக வருடியவன் ,"வாய் தான் கொஞ்சம் கூடி இருக்கு என்று நினைக்கிறேன் பரவால்ல நான்தான் அஞ்சு வருஷம் கழிச்சு உன்னோட வாழ்க்கைக்குள்ள கம்பேக் கொடுத்துட்டேன்ல பாத்துக்கலாம் இன்னும் என்ன எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு சரி மாமா வரட்டா" என கேட்கவும் அவள் அதே அதிர்ச்சி மாறாமல் நிற்க அவனும் அவளுடைய இதழை மேலும் வருடிவிட்டு அவனாகவே அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான் ஜெகதீஷ்...
