Share:
Notifications
Clear all

அத்தியாயம் 5

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

சஞ்சனா ஜெ, சஞ்சய் ஜெ இந்த இரு வார்த்தைகளும் அவனது செவிக்குள்ளே ஓடிக்கொண்டு அவனை நிலையில்லாமல் தவிக்க வைத்துக் கொண்டிருந்தது..

அவளுக்கு திருமணம் ஆகி இருக்குமா இது அவளுடைய குழந்தைதான்னு பக்ஷத்தில் அவளுக்கு திருமணம் ஆகி விட்டதா என்ற எண்ணம் அவனுக்கு இருந்தாலும் அது அவனுக்கு கவலை இல்லை போலும் ஆனால் அக்குழந்தைகளை பார்க்கும் பொழுது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு வந்து ஜெகதீஷை தாக்கியது...

அதுவும் குழந்தைகளை தன் கண்ணில் கூட பட விடக்கூடாது என அவள் அவர்களை இழுத்து கொண்டு ஓடுவது போல அவனுக்கு தோன்றியது... ஒருவேளை இன்று மட்டும் அவன் இந்த இடத்திற்கு வராமல் போயிருந்தால் அவனுடைய வாழ்க்கையே கானல் நீர் ஆகி போயிருக்காதா??? ஏதோ ஒரு புத்துணர்வு அவனுடைய மனதுக்குள் எழுவது போல அவனுக்கு தோன்றியது...

அடுத்து நடந்த பரிசளிப்பு விழா எப்படி நடந்தது என்று கூட தெரியாது எல்லாம் முடிந்ததும் வந்திருக்கும் குழந்தைகளை ஏமாற்றாமல் ஏதோ அவன் அனைவருக்கும் பரிசுகளை வழங்கி விட்டான்..

ஆனால் மனம் முழுவதும் அவள் மட்டும் தான் நிறைந்து அவனை தொல்லை செய்து கொண்டிருந்தாள்.. அவளது முகத்தையும் அவன் பார்த்து இருந்தான் கிட்டத்தட்ட ஐந்து வருடமாக அவனது மனதை விட்டு நீங்காமல் அடம் பிடித்த முகம் ஆனால் அவன் மறக்க நினைக்கும் முகமாக அவனுள்ளே இருந்தாள்...

அவளைப் பற்றி தெரிந்து கொள்ளக் கூடாது என்று எண்ணித்தான் இந்த திரைப்படத்துறைக்கு அவன் நுழைந்தான் அப்படி இருக்க மீண்டும் அவளுடன் ஆன இந்த சந்திப்பு அவனுடைய வாழ்க்கையின் பக்கத்தை புரட்டிப் போட்ட நொடிகள் அவனது கண்ணுக்குள் வந்து போயின...

ராம் அவளுக்கு பின்னாலேயே சென்றான்... அவளுடைய வீட்டையும் அடைந்து விட்டான்... அதற்குள் யாரையோ அழைத்தான் அழைத்து விவரத்தையும் பெற்றுவிட்டான்... அதற்குள் விழாவும் முடிந்து இருக்க ராம் மறுபடியும் பள்ளிக்கு சென்று அவனை அங்கிருந்து அழைத்து சென்றான் அதுவரை பொறுமையை கடைப்பிடித்த ஜெகதீஷ் காருக்குள் ஏறியதும் சீறினான்...

"அது அவதான..." என மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொண்டான்...

"ஆமாம்... அவ தான்" என ராம் கூற

" அப்போ அந்த குழந்தைகள்???"என எதிர்பார்ப்போடு அவன் கேட்டான்

"உன்னோடது தான்" என்றான் பெரிய ஆர்ப்பாட்டமின்றி!!!

"என்னோடதா என்ன அவங்க என்னோட பசங்களா???"என அதிர்ச்சி மாறாமல் கேட்டான் ஜெகதீஷ்... அவன் மனதுக்குள் எழும் உணர்வை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை கூட இருப்பது உயிர் நண்பன் என்ற நிலையில் அவன் முன்னிலையில் அவனது உணர்வுகளை பிரதிபலிப்பதில் தவறு இல்லையே???

"ஆமாம் உன்னோட இரத்தம் தான் டா" என ராம் கூற,

"எப்படி டா" என ஜெகதீஷ் நம்ப முடியாமல் கேட்டான்...

"எப்படின்னு என்ன கேட்டா??? நீ அவளை என்ன பண்ணுனியோ???" என ராம் காரை ஓட்டி கொண்டு கூற

அவனோ தலையை நீவி விட்டு அந்த நாளை நினைவு கூர்ந்தவன் முகம் லேசாக மலர்ந்தது," ஆமாம் நான் தான் அப்போ அது என் குழந்தைகள் தானே" என்று ராமிடம் கேட்க

"அப்படித்தான் நினைக்கிறேன் முதல் முறையா வாழ்க்கையிலேயே அடுத்தவங்க கிட்ட அவன் குழந்தைகளை இது என் குழந்தைதானான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கிறது நீ ஒருத்தனை தான்டா இருப்ப" என்று ராம் கூறினான்...

அதைக் கேட்டு அவனும் லேசாக சிரித்தபடி ,"அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா அவ இப்ப என்ன பண்றா??" என்று கேட்டான்...

அதை பார்த்த ராம் தன் நண்பனின் முகம் ஆவேசமாக இருப்பதை பார்த்து ,"கல்யாணம் இன்னும் ஆகல.. அவ அப்பாவோட பிசினஸ் பாத்துட்டு இருக்கா" என்க

உடனே பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவன்," நேரா வண்டியாக அவ வீட்டுக்கு விடு" என்று கூறினான்...

"ஏண்டா எதுக்கு???" என அதிர்ச்சியோடு ராம் கேட்க

"எதுக்குன்னா எனக்கு என்னோட பசங்க வேணும் பெரிய மயிரு மாதிரி அங்க வந்து குழந்தைகள் இழுத்துட்டு போறா அவளுக்கு அவ்வளவு திமிர் இருந்தா நான் ஏன்டா விட்டு வச்சிருக்கணும் ஏதோ பொழைச்சு போகட்டும்னு சொல்லி விட்டுட்டு வந்தது தப்பா போச்சு அந்த வெண்ண மவள அவ இஷ்டத்துக்கு விட்டது ரொம்ப தப்பா போச்சு" என்று அவன் கடுப்போடு கூறினான் ஏனெனில் அவள் செய்த செயல் அவனை கோபப்படுத்தி இருந்தது..

அவன் தான் வந்தது முதல் அவ்விரு குழந்தைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறானே அப்படி இருக்க அவர்களும் ஆசையாக லைனில் இருப்பதையும் பார்த்தானே அவர்களின் ஆசையை நிறைவேற்றாமல் தன் மீதுள்ள வைராக்கியத்தை தீர்க்க அக்குழந்தைகளை பலியாடாக்கிய அவளை அவன் சும்மா விட தயாராக இல்லை...

"டேய் எல்லாம் முடிஞ்சு போச்சு நீ உனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து கிட்ட அவளோட வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கா கம்முனு அப்படியே விட்டுடு"

"முடியாதுடா" என்று கூறினான்

"அப்புறம் ஏன்டா அஞ்சு வருஷம் விட்டு வச்ச??? இப்போ என்ன வேணாலும் நடந்திருக்கலாம் அவங்க வேற ஒரு ரிலேஷன் ஷிப்ல கூட இருக்கலாம்" என்க

அந்த பதிலே அவனுக்கு வேப்பங்காயாக கசந்தது இருந்தாலும் கடுப்போடு,"அப்போ எனக்கு அவ வேண்டாம்னு தோணுச்சு இப்போ என் பசங்க வேணும்னு தோணுது எனக்கு பொறந்த குழந்தைங்க டா அப்படி எப்படிடா முடியும்??? இன்னைக்கு மட்டும் வராமல் இருந்திருந்தேன் அவ்வளவுதான் அவளை வேணா எவனையாச்சும் கல்யாணம் பண்ணிக்க சொல்லு எனக்கு என் குழந்தைங்க போதும்" என்று நக்கலாக சிகரெட்டை வாயில் வைத்து ஊதிக்கொண்டே கேட்டான்...

"டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா ரொம்ப அதிகமா பேசுற...டேய் ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி நான் சொல்லித்தாண்டா நீ அந்த குழந்தைகளுக்கு அப்பன்னு உனக்கே தெரியும் அதுக்குள்ள நீ குழந்தைகள் மேல உரிமை கொண்டாடுறியா???" என்று நக்கலாக ராம் கூற

"அதுதான் இப்போ அவங்க என் குழந்தைகள் தான்னு தெரிஞ்சிருச்சு இல்ல எவ்வளவு திமிரு இருந்தா என்கிட்ட கர்ப்பமா இருக்கேன்னு சொல்லாம இருப்பா அவ்வளவு கொழுப்பு" என்று அவன் கேட்கவும்

"நீ பண்ணின காரியம் மட்டும் யோக்கியமா என்ன???" என ராம் கேட்டான்….

அதைக் கேட்கவும் பதில் அவனிடம் இல்லை... "என்ன பதிலே காணோம்" என ராம் கேட்கவும்,

"டேய் ஆமாம் நான் கூட இருந்தேன் ஆனால் அவளும் தானே என் கூட இருந்தா அப்புறம் என்ன இதுல புதுசா நான் மட்டும் தப்பு பண்ண மாதிரி பேசிட்டு இருக்க எது எப்படியோ வேணும்னா அவளை வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லு எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல ஆனா அந்த குழந்தைகள் எனக்கு வேணும் அதுதான் அவன் அஞ்சு வருஷம் வைத்திருந்தால்ல அடுத்த அஞ்சு வருஷம் நான் வச்சுக்கிறேன்" என்று அவன் கூறவும்

"டேய் உன்னுடைய நிலைமையை இப்போ யோசிச்சு பாரு நீ ஏதாவது செஞ்ச பிரஸ் மீடியான்னு நாறி போயிடும்.. அதைவிட உனக்குனு ஒரு இமேஜ் இருக்கு நீ இப்படி பேசுறது மட்டும் எவனாவது தெரிஞ்சுச்சு அவ்வளவுதான்" என்க

"டேய் எவனுக்கு தெரிஞ்சாலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது!!!" என்றான் அதே திமிராக அதற்குள் அவள் வீடும் வந்து விட

தனது இரு சட்டை பட்டன்களை அவிழ்த்து விட்டவன் ,"டேய் கதவை தட்டு" என்க...

"டேய் ராத்திரி 12 மணி டா கதவை தட்டணுமா"

"நீ தட்டுறியா நான் தட்டனுமா எனக்கு என் பசங்கள பாத்தே ஆகணும் டா" என்றான் ஜெகதீஷ்... அவன் மனம் தவித்துக் கொண்டு இருந்தது குழந்தைகள் அழுதது அவனுடைய கண்ணில் இன்னும் நீங்காமல் நிறைந்து இருந்தது...

"டேய் நீ ஓவரா பண்ற டா ஒரு 15 நிமிஷத்துக்கு முன்னாடி விஷயம் தெரிஞ்சுட்டு நீ பண்ற ஆட்டம் ரொம்ப ஓவரா இருக்கு" என்க

"நீ மூடிட்டு தட்டு அவ திறக்கிறாளா இல்லையான்னு பாரு இல்லையென்றால் சுவர் ஏறி குதிக்கணும்" என்க

"இது வேறயா" என்றவன் ,"இவன் நாளைக்கு ஹெட் லைன்ல வராம விடமாட்டான் போல" என குழம்பிக் கொண்டே சுபத்ராவின் வீட்டின் கேட்டை தட்டினான்..

அங்கு யாரும் உறங்கவில்லை என்பதற்கு ஆதாரமாக விளக்குகள் மின்னிக் கொண்டு இருந்தன..

இரவு 12 மணிக்கு கதவை தட்டவும் லேசாக ஜன்னலை திரை சீலையை நீக்கி பார்த்த ராணி அங்கு ஒருவனையும் அவனுக்கு பின்னால் காருக்குள் ஜெகதீஷ் அமர்ந்து இருப்பதை பார்த்த அவர் எழுந்து அமைதியாக சென்றார்..

அவருக்கு நன்றாக தெரியும் அவன் வருவான் என்று அதனால் தன் மகள் வந்து விடுவாளோ என்ற பதட்டத்தில் ஒருமுறை அவள் இருக்கும் அறையையும் குழந்தைகள் அழுது கொண்டிருக்கும் அறையையும் பார்த்தவர் நேராக வாசல் கதவை திறந்து கேட்டை திறந்து விட்டார்..

ராமுக்கு தர்ம சங்கடமான நிலை இந்த நேரத்தில் இரு பெண்கள் மட்டும் இருக்கும் வீட்டின் முன்னால் நிற்கிறோமோ என்ற எண்ணம் அதனால் ,"இல்ல அவனுக்கு குழந்தைகளை பாக்கணும்னு சொன்னா பகல்னா எல்லாருக்கும் தெரியும் அதுதான்.. அவனுக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு" என்று அவன் கூற," சீக்கிரம் உள்ள வாங்க" என்று மட்டும் ராணி கூறி விட்டு ஏறெடுத்தும் ஜெகதீஷின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை.. பார்க்கவும் தோன்றவில்லை...

அவனும் அவளும் சேர்ந்து விட மாட்டார்களா என இந்த ஐந்து வருடத்தில் அவர் வேண்டாத தெய்வம் இல்லை என்றாலும் இந்த ஐந்து வருடங்களுக்கு முன் அவன் செய்த காரியத்தை அவரால் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் அவனை நேரில் கண்ட அவருக்கு பேச தோன்றவும் இல்லை அவனும் அவர் பேச வேண்டும் என எதிர்பார்க்கவும் இல்லை...

அதனால் வேகமாக வீட்டுக்குள் நுழைந்து கொள்ள ராணி கதவை அடைத்தார்...

"என் பசங்க எங்கே???" என அவன் கேட்டான்...

அவரும் எதுவும் பேசவில்லை என்ன என்னவோ பேச வேண்டும் என ஒரு காலத்தில் எண்ணியிருந்தார் ஆனால் இப்பொழுது எதுவுமே பேசத் தோன்றாமல் கையை மட்டும் மேலே தூக்கி குழந்தைகளின் அறையை காட்ட அந்த அறை நோக்கி அவன் சென்றான்...அவனும் அவன் செய்த எதற்கும் குற்ற உணர்வு இல்லை அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை குற்ற உணர்ச்சி இருந்தால் தானே மன்னிப்பு கேட்க வேண்டி இருக்கும் அவன் செய்தது தவறே இல்லை என அவன் உணரும் பட்சத்தில் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் அதனால் அதைப் பற்றி எல்லாம் அவன் யோசிக்கவே இல்லை அவன் மனம் முழுவதும் அவனுடைய குழந்தைகள் மட்டும் தான் இருந்தார்கள்...

தான் பெற்ற உதிரங்களை உரிமையோடு காணப்போகிறோம் என்றதும் அவனுக்குள்ளே லேசான பதற்றமும் சந்தோஷமும் தனக்கு என்று யாரும் இல்லை என்ற எண்ணம் அவனை விட்டு போனது போலவும் இருந்தது...

அப்படி இருக்க என்னமோ தெரியவில்லை முகத்தை எல்லாம் தன் கைகளால் அழுந்த துடைத்துக் கொண்டான்... தலையே வாராத அவனுடைய தலையை தன்னுடைய கைகளாலேயே வாரி கொண்டாள்... மெல்ல படி ஏறியவன் செவிக்கு குழந்தைகள் அழுது கொண்டிருக்கும் சத்தம் கேட்டது...

அது எதனால் என அவனுக்கு புரிந்தது... இதை செய்த அவளை நாலு வைத்தால் என்ன என்று கூட அவன் எண்ணினான்...அவனுக்கு ஆத்திரம் வந்தது.. அவளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியவன் வேகமாக மாடிப்படிகளில் ஏறியவன் ராணி கூறிய அறையின் கதவை திறந்தான்...

இரு குழந்தைகளும் படுக்கையில் படுத்து தலையணைக்குள் இருவரின் முகத்தை புதைத்துக் கொண்டு படுத்து இருந்தார்கள் அதை பார்க்கும் பொழுது அவனுக்கு நெஞ்சம் பிசைந்தது...

முதன்முறையாக வாழ்க்கையில் தவறு செய்து விட்டோமோ என்று எண்ணினான் இதற்கு முன்னால் எல்லாம் அவன் தவறு நிறைய செய்திருக்கிறான் அப்பொழுதெல்லாம் அதை தவறாக அவன் நினைத்தது இல்லை..

ஆனால் இப்பொழுது குழந்தைகளின் சிறு சிறு ஆசைகளையும் தேவைகளையும் கூட நிறைவேற்ற இயலாமல் அவர்களின் பிறப்பை கூட அறியாமல் ஒரு நிலைமையில் நிற்கிறோமே என்று நினைத்தவன் என்னவென்று பேசுவது என தெரியாமல் ஒரு நொடி தடுமாறி நின்றான்...

தடுமாற்றம் என்றால் என்ன என தெரியாத அவன் தடுமாறி நிற்க

"சஞ்சய், சஞ்சனா" என குழந்தைகளின் பெயரை அழைத்தான் முதன்முறையாக அவர்களுடைய வீட்டில் ஒரு ஆணின் குரல் கேட்கவும் அவர்கள் அழுத முகத்தோடு அவனை நிமிர்ந்து பார்க்க அவர்களை பார்த்து புன்னகைத்த அவனை கண்ட இரட்டையர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்...

அந்த நேரம் பார்த்து அவளுடைய அறை கதவை பட்டென்று திறந்தாள் சுபத்ரா... அழுது அழுது கண்கள் வீங்கி இருந்தது பிள்ளைகளின் கேள்விகளுக்கு அவளால் பதில் அளிக்க முடியவில்லை அவர்களின் வருத்தம் அவளுக்கு தெளிவாக புரிந்தது மேடை வரை சென்று பரிசை வாங்க இயலாமல் அவர்களை தர தர என இழுத்துக் கொண்டு வந்தது மட்டமான செயல்தான்...

எனக்கு ஏன் இந்த வாழ்க்கை என மீண்டும் மீண்டும் யோசித்து தனிமையை விரும்பி அறைக்குள் சென்று அழுது தீர்த்தவள் காதுகளில் அவனுடைய குரல் கேட்கவும் அவன் தானா என பார்க்க அவள் வந்தாள் எதிரே அவன் தான் தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று கொண்டு இருந்தான்..

அவனைக் கண்டதும் முதலில் அதிர்ச்சியும் கோபம் ஆத்திரமும் எல்லாம் கலந்து கட்டி நின்றது அவளுக்கு முன்னே அவளுடைய அழுகை எட்டிப் பார்க்க அவன் முன்னால் அழுது தான் தோற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவள் ,"யார் நீ வெளியே போ" என்று கூறினாள்.. கிட்டத்தட்ட கத்தினாள் என கூறலாம்...

அவனைக் கண்ட வெறி அவளை கத்த வைக்க அவளின் கத்தலை பார்த்து அவன் அசராமல் மார்பில் கையைக் கட்டி அவளை அழுத்தத்தோடு பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான் இதைவிட சத்தமாக அவனுக்கு பேச தெரியும் என்பது போல அவன் நின்று கொண்டிருந்தான் ஆனால் குழந்தைகள்தான் அம்மாவின் சத்தத்தை கண்டு பயந்து ஜெகதீஷ் அருகே ஒடுங்கி நின்றனர்... அதுவும் அவளுக்கு ஆத்திரமாக வந்தது...

குழந்தைகளோ ஜெகதீஷ் எதற்கு நம்ம வீட்டுக்கு வந்து இருக்காங்க என்று புரியாமல் குழம்பி லேசான சந்தோஷத்தோடும் அம்மாவின் சத்தத்தை கண்டு பயந்து அவன் அருகே வந்து நிற்க அவனையும் குழந்தைகளையும் பார்த்து அவளுக்கு மேலும் எரிச்சல்தான் வந்தது..

வீட்டுக்கு வந்தது முதல் அவளுக்கு அவனுடைய நினைவுகள் தான் என்றாலும் அவன் வருவான் என எதிர் பார்க்கவில்லை இதோ ஆறடி இரண்டு அங்குலத்தில் அவள் முன்னே நின்று கொண்டு இருக்கிறான்...

"சஞ்சு, சஞ்சனா அம்மா கிட்ட வாங்க ஸ்டேஞ்சர் கிட்ட போக கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல" என்க

"அம்மா இது ஜெகதீஷ்" என்று குழந்தைகள் கூறவும் ,"வாயை மூடிட்டு இங்க வா கண்ட கண்ட பொறுக்கி பக்கத்துல நிற்பீர்களா" என கேட்டாள்...

அவ்வளவு தான் அவனுடைய பொறுமை காற்றில் பறந்தது...மெல்ல தன் சட்டையின் கை மடிப்பை இலேசாக முட்டு வரை மடக்கி கொண்ட அவளை நக்கலாக பார்த்தான்... அவனுடைய பார்வை அவளை சில்லிட வைத்தது...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top