அத்தியாயம் 4
அதன்படி சஞ்சனா, சஞ்சய் இருவரும் படிக்கும் பள்ளியில் தான் அவன் சீப் கெஸ்ட் ஆக வந்திருந்தான்... மேடையில் அவன் அமர்ந்திருக்க மாணவர்கள் ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர்.. சிறிய குழந்தைகளுக்கு வந்திருப்பது யார் என தெரியவில்லை அவர்களுக்கெல்லாம் அவர்களுக்கு பரிசு கிடைக்கப் போகிறது என்ற சந்தோஷத்தில் அமர்ந்து இருந்தனர்...
அப்படி இந்த வருடம் சிறந்த படிப்பை வழங்கிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஜெகதீஷ் அவன் கையால் பரிசு பொருட்களை கொடுக்க உள்ளான்...
அவனுக்கோ அந்த குழந்தைகளை எல்லாம் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டிருப்பதையும் இவனை கண்ட பெரிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எல்லாம் ஆரவாரம் செய்வதையும் பார்த்து அமைதியாக அனைத்தையும் ரசித்தபடி இருந்தான்...
ஏற்கனவே ராமிடம் கூறி விட்டான் பரிசு கொடுத்ததும் இங்கிருந்து சென்று விட வேண்டும் அதற்கு மேல் இருக்க முடியாது என கூறினான்...
அப்படி இருக்க ராமும் சரி என்று கூறி அவனோடு வந்திருக்க அவன் மேடைக்கு கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்தான் மேடையின் மீது ஜெகதீஷ் அமர்ந்திருக்க விழா ஆரம்பமானது பள்ளி விழா என்பதால் கல்வியின் அருமை பெருமைகளை எல்லாம் வந்திருந்த ஒவ்வொருவரும் கூற அதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தனர் பிறகு குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா தொடங்கியது...
அந்த சமயம் பார்த்து ஜெகதீஷின் பார்வை கூட்டத்தில் அமர்ந்திருந்த குழந்தைகளின் மீது படிந்தது அதில் இரு குழந்தைகள் அவனை வெகுவாக கவர்ந்தன...
"ஐயோ லேட் ஆயிடுச்சு இந்த சமயம் ட்ராபிக்ல மாட்டிக்கிட்டேனே" என காரின் ஸ்டியரிங்கில் குத்திக் கொண்டே இருந்தாள் சுபத்ரா.. இன்று சஞ்சய் மற்றும் சஞ்சனா இருவரின் பள்ளியிலும் ஆண்டு விழா அதிலும் சஞ்சய் மற்றும் சஞ்சனாவுக்கு முதல் பரிசு கிடைத்திருக்க அதற்கான பரிசு வழங்கும் நாள் குழந்தைகள் கண்டிப்பாக இவளிடம் வரவேண்டும் என கூறியிருந்தார்கள் இவளும் கண்டிப்பாக வருவதாக வாக்கு கொடுத்திருந்தாள்...
அப்படி இருக்க எவ்வளவோ முயன்றும் அவளால் நேரத்துக்கு வர முடியாமல் போய்விட்டது... அவள் அவளுடைய அப்பாவின் பரம்பரை தொழிலான ஹோட்டல் தொழிலை எடுத்து நடத்தி வருகிறாள்.. வேலைக்கு ஆட்கள் எல்லாம் இருந்தாலும் கூட இருந்து அவள் தான் அந்த தொழிலை எடுத்து திறம்பட நடத்தி வருகிறாள்...
இன்று வேறு ஒரு புட் டெலிவரி இருக்க அதை அனுப்பி வைத்துவிட்டு இங்கே வருவதற்குள் சமயம் ஆகிவிட்டது அதிலும் சென்னையின் டிராபிக்கிலும் சிக்கிவிட குழந்தைகள் மனம் புண்படுமே என கருதி அவளுக்கு வருத்தமாக இருந்தது அவளுடைய அம்மாவை ஏற்கனவே போக சொல்லியிருந்தாள்...
ஆனால் அவரோ இன்று செக்கப் இருக்கிறது அது முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு இப்பொழுதுதான் மருத்துவமனையில் இருந்து கிளம்பி நேராக பள்ளிக்கு வந்து கொண்டிருக்கிறார்..
ஆக மொத்தம் பாட்டியும் இல்லை அவளும் இல்லை குழந்தைகள் அவ்வளவுதான் ஏங்கி போய்விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டு அவள் வரும்பொழுது அதே போல அவளது குழந்தைகளும் மேடையில் யாரோ பேசிக் கொண்டிருக்க சுற்றி அனைவரின் பெற்றோர்களும் இருக்க தங்களுடைய அம்மா வந்துவிட்டாளா என சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்...
அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் அவர்களுடைய மாணவர்கள் அருகிலேயே நின்று கொண்டே இருந்தாலும் குழந்தைகளுக்கு அவர்களுடைய அம்மாவை காணாமல் வருத்தமாக இருந்தது..
சஞ்சு தான் ,"சஞ்சய் அம்மா வர மாட்டாங்களா எல்லாருக்கும் அப்பாவும் அம்மாவும் பாட்டி தாத்தா அப்படின்னு எல்லாரும் வந்திருக்காங்க நமக்கு நம்ம ஃபேமிலில ஆக இருக்கிறது டு மெம்பர்ஸ் டு கேர்ள்ஸ் பாட்டி அண்ட் அம்மா அவங்க கூட வரல நான் ரொம்ப சேடா இருக்கேன் சஞ்சய்" என்று தன் உதட்டை பிதுக்கியவாறு சஞ்சனா சஞ்சயிடம் கூற,
"நானும் அவங்கள தான் தேடிட்டு இருந்தேன் பரவால்ல நீ பிரைஸ் வாங்கும் போது நான் கிளாப் பண்ணுகிறேன் நான் பிரைஸ் வாங்கும்போது நீ கிளப் பண்ணு" என்று சஞ்சய் சஞ்சனாவுக்கு சமாதானம் கூறிக்கொண்டு இருந்தான்..
அவர்கள் இருவரும் பேசிக் கொள்வது என்ன என மேடையில் அமர்ந்திருந்த ஜெகதீஷ் கண்களுக்கு அவர்கள் இருவரும் பேசிக் கொள்வது சரியாக விளங்கவில்லை என்றாலும் அந்த இரு குழந்தைகளும் அவனுடைய கண்ணை நிறைக்க சஞ்சனா கண்ணில் கண்ணீர் வரவும் உடனே சஞ்சய் துடைத்து விட்டு கொண்டிருந்தான்...அதை பார்த்த ஜெகதீஷ் தான் பெற்ற உதிரங்கள் தான் என தெரியாமலேயே அவர்களை ரசித்துக்கொண்டு இருந்தான்... பெண் குழந்தை எதற்காக அழுகிறாள் என அவனுக்கு தெரியாது ஆனால் அவள் அருகே அமர்ந்திருந்த ஆண் குழந்தை அவளுக்கு சமாதானம் செய்து தன் பிஞ்சு கைகளால் துடைப்பதை பார்த்தவனுக்கு மெல்லிய புன்னகை வந்து போனது...
ஏனோ அந்த குழந்தைகளை விட்டு அவனுடைய கண்கள் அகலவே மாட்டேன் என அடம்பிடித்தது...விளக்கின் ஒளியில் அக்குழந்தைகளின் முகம் தெளிவாக அவனுடைய மனதில் பதிந்து போனாலும் எங்கோ ஏதோ ஒரு நிமிஷத்தில் யார் யாரையோ ஞாபகத்திற்கு கொண்டு வருவது போல அக்குழந்தைகளின் முகம் இருப்பதாக அவன் உணர்ந்தான்...
என்ன இது படம் முடிஞ்சதிலிருந்து தேவையில்லாத என்னவெல்லாம் வருது இப்படி யோசிக்க கூடாது என அவனே தன் மனம் போகும் திசைக்கு கடிவாளம் இட்டான்...
பிறகு வேகவேகமாக மாணவர்களை வரிசைப்படுத்தி நிறுத்தினார்கள் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்காக பரிசு கொடுக்க வேண்டும் என்ற நிலையில் குழந்தைகள் எல்லாம் வரிசையாக நிற்க,"அம்மா பார்த்தியா இன்னும் வரல பாட்டி கூட வரல" என்று வரிசையில் நிற்கும் பொழுது கூட சஞ்சனா கூற," நான் உனக்கு கிளாப் பண்றேன்னு சொன்னேன்ல ஆம் யுவர் பிரதர் யூ ஆர் மை சிஸ்டர் வீ ஆர் ஃபேமிலி நோ டோண்ட் பி சேட்" என்று சஞ்சய் கூறினான்...
ஓகே என சஞ்சனா கூற முதலில் எல்கேஜி குழந்தைகளுக்கு எல்லாம் பரிசுகள் கொடுத்துக் கொண்டு இருந்தான் ஜெகதீஷ்...
அந்த நேரம் பார்த்து அடித்து பிடித்து பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து விட்டாள் சுபத்ரா...
அவளுடைய மனம் முழுவதும் அவளுடைய குழந்தைகள் தான் அவர்கள் வருத்தமாக இருப்பார்களோ அவர்கள் பரிசு வாங்குவதை பார்த்து விட வேண்டும் என்ற முனைப்பு மட்டும் தான் அவளுக்கு இருந்தது அதனால் காரை வேகமாக பார்க் செய்தவள் அரக்க பறக்க ஓடி வந்து கொண்டிருந்தாள்...
அந்த சமயம் பார்த்து எல் கே ஜி குழந்தைகள் எல்லாம் பரிசு வாங்கி யூ கே ஜி குழந்தைகள் பரிசு வாங்க லைனில் நின்று கொண்டிருக்க ,"அடுத்ததா யூகேஜி கிட்ஸ் ஆர் யூ ரெடி உங்களுக்கு பிரைஸ் கொடுக்க மிஸ்டர் ஜெகதீஷ் ரெடியா இருக்கார்" என்று உரக்க மேடையில் இருந்த ஒரு ஆசிரியர் கூற ஜெகதீஷ் என்ற பெயரை கேட்டதும் அவளுடைய கால்கள் அப்படியே நின்று விட்டது...
உலகமே சுழல்வது போல அவளுக்கு இருக்க அவள் கண்கள் மேடைக்கு செல்ல அங்கு ஜெகதீஷ் சிரித்த முகத்தோடு நின்று கொண்டிருந்தான் மேடைக்கு அருகே அவளுடைய பிள்ளைகள் நின்று கொண்டிருக்க அவள் இதயம் வேகமாக துடித்தது...
ஆத்திரம்,கோபம், அழுகை,பயம்,தவிப்பு என அனைத்து உணர்வுகளும் கலந்து அவளை தாக்கின.... இவனா இவன் எங்கே இங்கே என்பது போல அவள் யோசித்தாலும் அவளுடைய கண்கள் வேகமாக அவளுடைய குழந்தைகளை தேடின..
அவளுடைய குழந்தைகள் மேடைக்கு அருகே நின்று கொண்டிருப்பதை பார்த்த அவளுக்கு என்ன ஆனாலும் சரி குழந்தைகள் முகத்தை அவன் பார்க்கவே கூடாது என்று இருந்தது...
அவனை கண்டதும் ஒரு பைத்தியம் பிடித்தவள் போல இருந்தாள் சுபத்ரா.. தான் என்ன செய்கிறோம் என்பதையே மறந்தாள் மனதுக்குள் பதட்டம் உருவானது வேகமாக சென்றவள் மேடைக்கு அருகே சென்று பரிசு வாங்க செல்ல இருந்த குழந்தைகளின் கையை பிடிக்க அவர்களோ ,"அம்மா வந்துட்டீங்களா" என சஞ்சனா சந்தோஷமாக கூற அவர்களை கண்டதும் அழுது விடக்கூடாது என்று எண்ணி வைராக்கியமாக இருந்தவள் ,"ஆமாம் வாங்க போகலாம் "என மேடையை நிமிர்ந்தும் கூட அவள் பார்க்கவில்லை...
"அம்மா நாங்க ஒன்னும் பிரைஸ் வாங்கல" என்று சஞ்சய் கூற," பரவால்ல வாங்க வேண்டாம் டீச்சர் கிட்ட இருந்து நாளைக்கு வாங்கிக்கலாம்" என்று அவள் கூறவும் ,"அம்மா ஏன் இவ்வளவு அவசரம்??" என சஞ்சய் கேட்டான்...
ஏனெனில் குழந்தைகள் அல்லவா அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தி மேடையில் நின்று பரிசு வாங்குவதை அவன் வெகுவாக எதிர்பார்த்து காத்திருந்தான்...தாய் இப்படி கூறவும் அவனுடைய முகம் வாடிப்போனது...
"அம்மா ஏன்?? அம்மா எல்லாரும் கிளாப் எல்லாம் பண்ணுவாங்க" என சஞ்சனா அவளுக்குள்ளே பதட்டம் ஆகி எங்கே அவன் கண்களுக்கு அவள் அகப்பட்டு விடுவாளோ என்ற பயம் அதைவிட குழந்தைகளை அவன் பார்க்கக் கூடாது என்பதில் ஒரு வைராக்கியம் அவளுக்கு இருந்தது.. அவள் மறந்தும் மேடையை பார்க்கவில்லை பார்க்கும் தைரியமும் அவளுக்கு இல்லை...
வேண்டாம் என விட்டு சென்றவன் தன் குழந்தைகளை பார்க்க கூடாது என்ற ஆவேசம் அதனால் குழந்தைகள் அடம் பிடிக்க," நான் தான் சொல்றேன் இல்ல வாங்க போகலாம்" அதற்குள் டீச்சர் வந்துவிட, அதற்குள் ஒவ்வொரு செக்சனாக யுகேஜி குழந்தைகளும் மேடையில் ஏறி பரிசு வாங்க துவங்கி விட்டார்கள்...
"அடுத்ததாக சஞ்சனா ஜெ தென் சஞ்சய் ஜெ வாங்க"என அழைப்பும் வந்து விட அக்குழந்தைகளோ வராமல் அங்கே நின்று கொண்டிருக்க அனைவரின் பார்வையும் மேடைக்கு கீழே சென்றது...அந்த நொடி ஜெகதீஷ் கூட அங்கு தான் பார்த்தான்...
"என்ன ஆச்சு சுபத்ரா" என்று கேட்க ,"ஒரு எமர்ஜென்சி அதனால நாங்க இப்பவே கிளம்பறோம் ப்ரைஸ் நீங்க வாங்கி வச்சுடுங்க நாங்க பின்னாடி வந்து கலெக்ட் பண்ணிக்கிறோம்" என்று கூறிக்கொண்டு டீச்சரின் பதிலை எதிர்பார்க்காமல் வேக வேகமாக குழந்தைகளின் கையை பிடித்துக் கொண்டு அவள் செல்ல அங்கு அழகாக இரு குழந்தைகள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த அவன் வரிசையில் நிற்பதையும் ஜெகதீஷ் கவனித்து இருந்தான் பிறகு பரிசு கொடுப்பதில் அவன் பார்வை தவறி விட்டது... ஆனால் கீழே சலசலப்பு ஏற்பட இப்பொழுது தெளிவாக அவர்களை பார்த்து விட்டான் கூடவே அவளையும்!!!
"மேம் ஒரு ரெண்டு நிமிஷம் அந்த பிரைஸ் மட்டும் வாங்கிட்டு போகட்டும்.. கிட்ஸ் நேம் கூட அனௌன்ஸ் பண்ணிட்டாங்க" என்று டீச்சர் கூறவும் அவளோ கேட்காமல் பிள்ளைகளை இழுத்து செல்ல அங்கே சின்ன சலசலப்பு ஏற்பட்டது...
அதோடு அவனுடைய பார்வையும் அவள் மீது படிந்தது... அவளை கண்டதும் அவனது உடல் ஒரு நொடி விரைத்தது..அவள் மீது அவன் கண்கள் படிந்த உடனே தன் போனை எடுத்து மேடைக்கு கீழே திக்பிரமை பிடித்தவன் போல சுபத்ராவை கண்டு அதிர்ந்த நிலையில் அமர்ந்து இருந்த ராமை அழைத்தான் ..
இவன் அழைப்பான் என தெரிந்தே அவனும் ஃபோன் எடுக்க," அது அவ தானே" என அவன் கேட்டான்.. ,"ஆமாம்" என்க
"அப்போ அந்த குழந்தைகள் ???" அவன் குரலில் அதைக் கூறும்போது பதட்டம் வந்து போனது...
"தெரியல "
"விசாரி.." என்றான் அவனுள்ளே லேசான பதட்டம் 5 வருடம் அவளை சந்திக்கவில்லை இது அவளுடைய குழந்தைகள் தானோ என எண்ணியவன் மனம் அப்படியே அடிபட்டு போனது கூடவே அவள் திருமணம் செய்து விட்டாளா என எண்ணினான்!!!!
அந்த நினைப்பே அவனுக்கு கடுப்பை கொடுக்க அதற்குள் அவள் பின்னாலேயே சென்ற ராம் காதுக்கு தெளிவாக குழந்தைகள் விழுந்தது ..
அவனும் லைனில் தான் இருந்தான்.... அப்ப குழந்தைகள் பேசுவது ஜெகதீசுக்கு ராமின் தொலைபேசி மூலம் தெளிவாக கேட்டது..."அம்மா என்னாச்சு ப்ரைஸ் வாங்காமல் கூட்டிட்டு வந்துட்டீங்களே???" என சஞ்சய் கோபமாக கூற ,"சஞ்சய் சொன்னா கேக்க மாட்டியா அந்த கேடு கெட்டவன் கையில் எல்லாம் நீ பிரைஸ் வாங்க வேண்டாம் புரியுதா??"
" அம்மா ஏன் அவர் சீப் கெஸ்ட்" என சஞ்சனா கூற
"அவன் சீப் கெஸ்ட்டும் கிடையாது ஒன்னும் கிடையாது...உங்களுக்கு பிரைஸ் கொடுக்கிற அளவுக்கு அவன் பெரிய மனுஷன் எல்லாம் கிடையாது இந்த மாதிரி சீப்பான ஆளுகளை தான் உங்க ஸ்கூல் சீப் கெஸ்ட்டா கூப்பிடுவாங்க அப்படின்னா நான் பேசாமல் நான் வேற ஸ்கூலுக்கு உங்களை மாத்த போறேன்" என்று கூறிக் கொண்டே அவர்களை காருக்குள் தள்ளினாள்...
குழந்தைகளோ ,"அம்மா ப்ளீஸ்மா" என வருத்தப்பட்டு பேச அதை எல்லாம் அவளுக்கு பின்னால் அவள் கவனிக்காத இடத்தில் நின்று கொண்டு இருந்த ராமுக்கு தெளிவாக கேட்டது ராமுக்கு கேட்டது போல மேடையில் லைனில் இருந்த அவனுக்கும் கேட்க அவனுக்கும் ஒரு நொடி உலகமே அதிர்ந்தாலும் அவனுக்கு எல்லாம் உடனே தெரிந்தாக வேண்டும் அவன் கிழித்த பக்கங்களை அவனே ஒட்டி எடுத்து பார்க்க வேண்டும் என முடிவு செய்து விட்டான்.." டேய் அவங்க போயிட்டாங்க" என ராம் கூற "அவ பின்னாடியே போ எனக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சு ஆகணும் ராம் முக்கியமா அந்த குழந்தைகள் பத்தி எனக்குத் தெரியணும்" என்று கூறிக்கொண்டே போனை வைத்தான் ஜெகதீஷ்...
