அத்தியாயம் 30
"இப்போ என்னோட வைஃப் அதுக்கு முன்னாடி என்னோட லக்கி ஷார்ம்" என்றதும் அவளுடைய விழிகள் விரிந்தன... இது என்ன இப்படி சொல்கிறான் என அவனுடைய குடும்பத்தார் அனைவரும் அவனை அதிசயமாக பார்த்தனர்...
அவனோ அவளுடைய விழிகளை பார்த்து கொண்டே ,"என்னடா என்னோட லக்கி ஷார்ம் அப்படின்னு சொல்றேன்னு பார்க்குறீங்களா உண்மையா தான் சொல்றேன்.. அப்பா பெயரைக் கெடுத்து அப்பாவை கோபப்படுத்தி எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் நான் என்ன பண்ண போறேன்னு தெரியாம சுத்திட்டு இருக்கும்போது நான் பார்த்து ஆசைப்பட்ட பொண்ணு தான் என்னோட பொண்டாட்டி அவ என்னோட வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சதுக்கு அப்புறம் தான் நான் ஏதாவது பண்ணனும்னு ஆசைப்பட்டேன் அவளுக்காக இல்ல அவ வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு டைரக்ட் பண்ணனும்னு தோணுச்சு அதுவரைக்கும் என்ன பண்ணனும்னு தெரியாம சுத்திட்டு இருந்தா ஒரு ஆள் தான் நான் அதனால சொல்றேன் அவ என்னுடைய அதிர்ஷ்ட தேவதை..
என்னமோ தெரியல என்னோட ஒய்ஃப் முகத்தை பார்த்தா போதும் நான் மெல்ட் ஆயிடுவேன்...அது அவங்களுக்கும் தெரியும்...இல்லையா சுபி" என்க அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது... இவன் என்ன இந்த அளவுக்கு இறங்கிவிட்டான் என அவள் யோசித்தாள் அதுவும் ஒரு கேமரா வேறு அவளது முகத்தையே குளோசப் வேறு வைத்துக் கொண்டிருக்க அவளால் சத்தியமாக முடியவில்லை...
இவன் என்ன இப்படி போட்டு தாக்கி கொண்டு இருக்கிறான் என அவள் பார்க்க அவனோ கூலாக மடை திறந்த வெள்ளம் போல பேசி கொண்டிருந்தான்...
" அவளுக்கு நிறைய கஷ்டத்தை கொடுத்து இருக்கேன் நிறைய அவமானத்தை கொடுத்து இருக்கேன் கொஞ்சமா சிரிப்பை கொடுத்து இருக்கேன்னு நினைக்கிறேன் என்னை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் என்ன பண்றேன்னு கூட தெரியாம என்னோட கையை பிடிக்க தயாராக இருந்த பொண்ணு அவ கையை எப்படி நான் விடுவேன் சொல்லுங்க இறுக்கமா பிடிச்சுகிட்டேன் சினிமால மட்டும் தான் பக்கம் பக்கமா ரொமான்ஸ் சீன் எழுதுவேன் போல வாழ்க்கையில் இதுவரைக்கும் என் பொண்டாட்டி கிட்ட காதலையே சொன்னது இல்ல சொன்னா நம்ப மாட்டீங்க" என அதை கேட்ட அவளுக்கு அவனுடைய காதல் புரிந்தது.. பல தருணங்களில் வாயில் வரும் வார்த்தைகளில் அவ்வளவு வீரியம் இருக்கும்... அதே நேரத்தில் அந்த வார்த்தைகள் நல்ல விதமாக அமைந்தால் அது நம்மை போட்டு படுத்தி எடுத்து விடும் நம் மனதை விட்டு என்றும் மாறாது... நம் மனதுக்குள் பொக்கிஷமாக அது இருக்கும்!!!
அதற்குள் தொகுப்பாளரோ ,"சார் இந்த மேடையை யூஸ் பண்ணிக்குங்க நீங்க எப்படி ப்ரபோஸ் பண்ண போறீங்கன்னு நாங்களும் பார்க்கிறோம்" என்று கூற அவனும் சிரித்தபடி," உங்களோட ஆசை அதுதானா பண்ணிடுவோம் என்ன சுபி ரெடியா" என அவன் மேடையிலேயே கேட்டான்...
"சுபி இதனால் வரைக்கும் நான் உன்கிட்ட சொன்னதே இல்ல.. நீ என்கிட்ட நிறைய எதிர்பார்க்கிற அந்த எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் சரியான ஆள் நான் என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் நம்ம ரெண்டு பேருமே டோட்டல் டிஃபரண்ட் ஆன ஆளுங்க!!! நீ ரொம்ப எக்ஸ்பிரஸ் ஆன ஆள் நான் எக்ஸ்பிரஸ் பண்ண மாட்டேன் ஆனால் இன்றைக்கு உனக்காக என் மனசை உன்கிட்ட வெளிப்படுத்துறேன் ஐ லவ் யூ " என்று அவன் கூறவும் அவள் அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள்.. அவள் முகத்தில் சந்தோஷம் பீறிட்டது.. அவளுக்கு வார்த்தைகள் தடைபட்டன..
அவள் இதை மட்டும் தான் அவனிடம் எதிர்பார்த்தாள் இவ்வளவு நாளும் எதற்காக சண்டை போட்டாலோ பல பல காரணங்கள் அவள் கூறினாலும் அவன் மனதில் அவள் ஆழமாக இருக்கிறாளா என்பது தான் அவளுடைய கேள்வியாக இருந்தது...
அந்த கேள்விக்கு உண்டான விடை கிடைக்கும் பொழுது அவள் அடைந்த சந்தோஷத்திற்கு எல்லையே இல்லாமல் போனது... இப்போதே ஓடி சென்று தன் கணவனை அணைத்து கொள்ள வேண்டும் என்று அவளுடைய கைகள் துடித்தது ஆனால் சபை நாகரீகம் கருதி அடக்கிக் கொண்டால் அவனுக்கு அப்படி ஒன்றும் இல்லை போலும் இயல்பாக அவன் அடுத்தடுத்த வேலைகளில் செயல்பட துவங்கி விட்டான்...
சினிமாவும் ரிலீஸ் ஆகி விட்டது...இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் இவனால் காதல் சினிமாவும் எடுக்க முடியுமா என்பது அளவுக்கு அவன் எடுத்து இருந்தான் என பேசி கொண்டார்கள்...
மீண்டும் ஒரு வெற்றி சத்ய தேவ் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தான்...அவனுக்கு சத்ய தேவ் அவனுடைய அன்பு பரிசாக ஒரு விலை உயர்ந்த காரை பரிசளித்து இருந்தான்...
அந்த காரில் அவளை அழைத்து கொண்டு நீண்ட பயணம் செய்து கொண்டிருந்தான்...
அவளோ ,"எங்கே போறோம்" என்க
"ஒரு லாங் ட்ரைவ்" என்றான் அவன்...
அவளுக்கு உடனே அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்து போனது...
அவளோ ,"அன்னைக்கு மாதிரி போறோமா" என்று கேட்க
"உனக்கு அப்படி போகணுமா??" என்றான் அவன்..
"போனா நல்லா இருக்கும்னு தோணுது" என சிரித்தபடி அவள் கூற
"அப்போ போவோம்" என சிரித்தபடி காரை பறக்கவிட்டான்..
நீண்ட தூரம் அவன் காரில் பயணம் செய்து விட்டான் எங்கே போகிறோம் என அவளும் கேட்கவில்லை வெகு தூரம் போன பின் அவளுடைய போன் அலறியது..
அவர்களுடைய குழந்தைகள் தான் அழைத்து இருந்தார்கள் அவளோ போனை எடுத்து ஸ்பீக்கரில் போட்டாள்...
"அம்மா , அப்பா எங்கே இருக்கீங்க" என சஞ்சய் கேட்க அவளோ தலையில் அடித்துக் கொண்டு ,"நான் ஸ்கூல் விடுறதுக்குள்ள வந்துருவேன் என்று சொல்லி இருந்தேன் இப்ப பாருங்க ஸ்கூல் விட்டு இருப்பாங்க" என்று அவள் மெல்லிய குரலில் கூற அவனும்," கண்ணா சஞ்சய் அம்மாவும், அப்பாவும் கொஞ்சம் ஒரு வேலை விஷயமா போயிட்டு இருக்கோம் நைட்டுக்குள்ள வந்துடுவோம்" என்று அவன் கூற
அதற்கு ஒரு போனை வாங்கிய சஞ்சு ,"அப்பா நீங்க எங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு விட்டு போறீங்கப்பா" என கூற இதையெல்லாம் இந்த பக்கம் கேட்டுக் கொண்டிருந்த ராணி ரேவதி மற்றும் ஜெயமோகன் சிரித்தனர்...
ராணி அங்கே தனியாக இருக்கக் கூடாது என்று கூறி இவர்களுடனே தான் அவர் இருக்கிறார்...
அவனும் போனில்,"மை டார்லிங் உங்களை விட்டுட்டு அப்பா எங்கேயாவது போவேனா இப்ப சொல்லுங்க உங்களுக்கு தம்பி பாப்பா வேணுமா தங்கச்சி பாப்பா வேணுமா???" என்க பெரியவர்களோ வாயைப் பிளந்தனர்..
"தம்பி பாப்பா தங்கச்சி பாப்பா உடனே கிடைக்குமா அப்பா" என சஞ்சு சீரியஸாக கேட்க ,
"உடனே கிடைக்காது இப்போ இருந்து ட்ரை பண்ணா பத்து மாசத்துல கிடைச்சாலும் கிடைக்கும்" என்று அவன் சீரியஸாக பதில் கூற அதைக் கேட்டு அவள் தலையில் அடித்து ,"குழந்தைங்க கிட்ட பேசுற பேச்சா இது" என்று கூற
"ஆமாம் அவங்களுக்கும் தெரியனும் இல்ல அவங்க கிட்ட கேட்க வேண்டிய கேள்வி தான்" என்று அவன் கூற ,"அப்பா அப்போ எங்களை மாதிரியே ட்வின்ஸ் வருவாங்களா" என்று சஞ்சய் கேட்க
"கேக்குறாங்க இல்ல இப்ப பதில் சொல்லு" என்பது போல அவள் அவனைப் பார்க்க அவனோ," அப்பா ட்ரை பண்றேன் உன்னோட அம்மா கோ ஆப்ரேட் பண்ணா" என்று கூறி சமாளித்து போனை வைத்து விட்டான்...
வெகு தூரம் சென்றதும் காரை ஒரு கேட்டுக்குள் சென்று ஒரு மரத்தின் அருகே நிறுத்தி இருந்தான் ஜெகதீஷ்... அவளோ அந்த இடத்தை பார்த்து ,"இது.. இது..." என்றவள் ,இங்கே தானே அன்னிக்கு" என்க
"ஆமாம் அதே இடம் தான் இப்போ இது இப்போ நம்ம இடம் நான் விலை கொடுத்து வாங்கிட்டேன் என்னோட முதல் படத்துக்கு கிடைச்ச காசுல இதை தான் முதல்ல வாங்கினேன்" என்றதும் அவளுக்கு அவனுடைய காதலின் எல்லை புரிய ,
அவனோ அவளை பார்த்து கூலாக ,"இந்த இடத்தை ஒரு மாற்றமும் பண்ணாமல் வைச்சுக்கிட்டேன் அந்த இடத்தோட எழில் அப்படியே இருக்கணும்னு விட்டுட்டேன் இனி நீ யோசிச்சிட்டு சொல்லு என்ன பண்ணலாம்னு" என்றவன்," வானத்தை பார்த்து இன்னிக்கு மழை மிஸ்ஸிங் போல வானம் மேக மூட்டத்தோடு இருக்கிறதை பார்த்து தான் உன்னை அழைச்சிட்டு வந்தேன்" அவளை பார்த்தவன் அவள் அவனையே பார்த்து கொண்டிருந்தவன் அவளின் இடையை பிடிச்சு இழுக்கவும் மழை வந்தது...
அதை கண்டு அவன் சிரித்து,"உன்னை தொட்டா தான் மழை வரும் போல" என்றவன் ,"காரை விட்டு கீழே இறங்கு" என்க
அவளோ ,"வேண்டாம்" என்க
"ஹே வாடி இன்னைக்காவது குளி" என்றவன் அவளை இழுத்து கொண்டு மழையில் போய் நின்றான்...ஆளை அடித்து போடும் மழை எந்த இடத்தில் இருவரின் வாழ்க்கையும் இருவரை இணைத்ததோ அந்த இடத்தில் இருவரும் இணைந்த படி நின்று கொண்டிருக்க அவனோ அவளை இறுக்கமாக அணைத்து அவளுடைய காதில் ,"இப்போ சொல்லு நீ சந்தோஷமா இருக்கியா??? உன்னை நான் சந்தோஷமா வைச்சு இருக்கேனா??? " என கேட்க அவளோ கண்ணீரோடு ஆம் என தலையாட்ட
அவனோ அவளை மேலும் இறுக அணைத்து அவளின் துடிக்கும் இதழ்களில் தன் இதழ்களை பதிய வைத்தவன் மழையில் குளிருக்கு இதமாக முத்தங்களை பரிமாறி கொண்டு," நான் கொஞ்சம் இன் பர்ஃபெக்ட்டாவன் தான் என்னால உன்னோட மனசுல என்ன இருக்குதுன்னு கெஸ் பண்ண முடியாது நீ எதிர்பார்க்கிற மாதிரி பர்பெக்ட்டா இருக்க முடியாது ஆனாலும் எனக்கு நீ வேணும் டி ..நான் கோபப்படுவேன், சண்டை போடுவேன் கட்டி பிடிச்சு பல மணி நேரம் இப்படி நிப்பேன் எல்லாத்துக்கும் நீ எனக்கு கண்டிப்பா வேணும்" என்றான்
அவளுக்கு இது போதும் அவள் ஒன்றும் அவனிடம் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவள் எதிர்பார்த்த ஒன்றை அவன் வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறான்.. இது போதுமே!!!
"எனக்கும் நீ மட்டும் போதும் நீ எப்படி இருந்தாலும் எனக்கு நீ போதும்" என அவள் கூற அவனுடைய கைகள் அவளின் உடை தாண்டி இடை பிடிக்க அவளோடு அணைக்க மழை புகாத இடங்களிலும் கூட அவனின் கைகள் அத்து மீற அவளோ அவனை முழுதாக அவளுக்கு கொடுக்க அவனும் தாராளமாக எடுத்து கொண்டவன் அவளை தன் கைகளில் ஏந்தியவன் நேராக கார் கதவை திறந்து நனைந்து கோழி குஞ்சு போல அவனின் கைகளில் சுருண்டு இருந்தவளை காருக்குள் படுக்க வைத்தவன் அவளின் உடைகளை அப்புறப்படுத்தி அவனுடைய சட்டையை தூர எறிந்தவன் அவள் மீது சரிந்தான்..
அவளின் கரங்கள் அவனை அணைத்து கொள்ள அவனும் அவளின் தேகத்தை தன் உடலால் சூடாக்கி அவளின் உணர்வுகளை குளிர்விக்க துவங்கியவன் அவனும் குளிர துவங்க அங்கு மோகங்கள் இருவரையும் ஆக்கிரமிக்க துவங்க இருவரின் எல்லைகளும் அத்து மீற துவங்கியது...
இருவரின் உணர்வுகளும் கரை சேர்ந்த பின்," கார் தான் நமக்கு கம்பெர்ட் போல இல்லையா" என அவன் மென் சிரிப்போடு அவளிடம் கேட்டான்..
அவளோ ஆமாம் என்பது போல மெல்ல புன்னகைக்க அவன் அவளோடு கலக்க தயாராக துவங்கினான்.. அந்தி மழை நேரத்தில் அவளோடு அவளின் அவன்!!!!!
இருவரும் மகிழ்ச்சி கடலில் மூழ்க இதுபோல எப்போதும் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியோடு தங்களுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசியை அவர்களுக்கு வழங்கி அவர்களோடு நா
மும் விடை பெறுவோம் நன்றி வணக்கம்!!!
சுபம்
