அத்தியாயம் 3
" என்ன ரேவதி இன்னைக்கு விசேஷம் ???" என கேட்டு கொண்டு தன் மனைவி கொடுத்த பொங்கலை வாயில் போட்டார் ஜெயமோகன்...
"அது ஒன்னும் இல்லைங்க சும்மா கோவிலுக்கு போனேன்" என தயங்கி தயங்கி பொய்யை கூற ரேவதி முயன்று கொண்டிருக்கும் வேளையில் தயாராகி அவனது அறைக்குள் இருந்து வெளியே வந்த ராகவ் அந்த காட்சியை பார்த்ததும் ,"அது ஒன்னும் இல்ல அப்பா மூத்த மகன் எடுத்த சினிமா ஹிட் ஆகணும் இல்ல அதுக்காக பொங்கல் வச்சிருப்பாங்க இல்லமா அப்படித்தானே" என நாவில் விஷத்தோடு அந்த விஷத்தை வார்த்தைகளில் கக்கினான் ராகவ்...
வாயில் போட்டதை அப்படியே அதே தட்டில் துப்பிய ஜெயமோகன் தன் மனைவியை பார்த்து முறைத்து," நீ கொடுத்தது பொங்கல் இல்லை நான் செத்ததுக்கு அப்புறம் போடுவாங்களே அந்த சாப்பாடு" என அவர் கூற
அதைக் கேட்ட ரேவதி துடித்து ,"என்னங்க என்ன வார்த்தை பேசறீங்க காலங்காத்தால" என்று கூற ,"நீயும் தான் ரேவதி காலையிலேயே தேவையில்லாமல் என்னை கோபப்படுத்தி பார்க்கிற" என ஜெயமோகன் கூறினார்...
ராகவ் தன் அப்பா அருகே அமர்ந்து ,"அப்பா நாம என்னதான் அம்மா மேல பாசம் காட்டினாலும் ஒரு படி மேல அம்மாவுக்கு அவனைத்தான் பிடிக்கும்" என்று கூற ஜெயமோகன் ரேவதியை பார்த்து முறைக்க ரேவதியின் கண்கள் கலங்கியது...
"கட்டின புருஷனுக்கும் உண்மையா இருக்குறதும் இல்ல பெத்த பிள்ளைக்கும் உண்மையா இருப்பதில்லை கேடுகெட்ட ஒருத்தனுக்கு உண்மையா இருக்கியோ அவனோட நலனில் அக்கறையா இருக்கியோ நம்மளை அசிங்கப்படுத்திவிட்டு போனவன் உனக்கு பெருசா போய்ட்டான் இல்ல அவன் எக்கேடு கெட்டுப் போனான் என்ன???" என கேட்க
தலையை குனிந்தபடியே ,"அவன் என்ன இருந்தாலும் நம்ம..." என ஆரம்பிக்க," எனக்கு ஒரே ஒரு பையன் தான் இருக்கான் அது ராகவ் மட்டும் தான்... நான் செத்தா அவன் தான் எனக்கு கொள்ளி போடுவான்" என கூறி அப்படியே உணவு மேடையில் இருந்து எழுந்து சென்றார்...
ராகவ் தன் அம்மாவை பார்த்து ,"இப்போ உனக்கு சந்தோஷமா அப்பா சாப்பிடாமல் போறார் அதுக்கு காரணம் நீதான்" என்று கூற அவருக்கு அழுகையாக வந்தது... அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை அன்று கட்டிய கணவனுக்காக கணவனின் வார்த்தைக்காக தன்னை விட்டு செல்லும் தன் மூத்த மகனை கண்டு கொள்ளாமல் நின்று கொண்டிருந்தார் ...
எப்போதாவது அவன் திருந்தி வாழ்ந்து விட மாட்டானா என அவர் ஏங்கிய காலம் உண்டு அதற்காக அவர் வைக்காத வேண்டுதல்கள் இல்லை ஆனால் இன்று உலகம் போற்றும் நாயகனாக அவன் இருப்பதை பார்த்து பெருமைப்பட முடியவில்லை அவனுக்காக வழிபடவும் முடியவில்லை அவனை ஒரு முறையாவது பார்க்கவும் முடியவில்லை... அவனை டிவியில் அவன் கொடுத்த பேட்டியில் பார்த்தால் தான் உண்டு... என ஒரு தாயாக அவருடைய மனம் ஏங்கிக் கொண்டிருந்தது..
"என்னை வார்த்தையால் கொல்லாத ராகவ் அவன் செஞ்சது தப்புதான் அதுக்காக இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்க சொல்ற???" என கேட்டார்..
"அப்போ அவன் கூட பேசணும்னு உனக்கு தோணுதா அப்ப நானும் அப்பாவும் முக்கியம் இல்ல அவன் செஞ்சது எல்லாத்தையும் நீ மறந்துட்ட அப்படித்தானே??" என்று அவன் கேட்கவும் அதற்கு பதில் கூற முடியாமல் தவித்த அவரை பார்த்து அவன் கேட்க
"ஆமாம் அவன் தப்பு பண்ணி இருக்கான் நான் இல்லைன்னு சொல்லல"
"அப்புறம் ஏன் மா தப்பே செய்யாத என்னை வெறுக்கிறீங்க தப்பு செய்யற அவனே மட்டும் பாசம் காட்டுறீங்க" என ராகவ் கேட்டான்..
"அதுதான் அம்மா உனக்கு புரியாது நீ நெனச்சிட்டு இருக்க நான் உன் மேல பாசம் வைக்கல அப்படின்னு ஆனால் எனக்கு நீயும் ஒன்னு தான் அவனும் ஒன்னு தான் அது உனக்கு புரியல... நீ அவன் மேல இருக்கிற கோபத்தை என்கிட்ட காட்டிட்டு இருக்க ஒரு அம்மா மகன் தப்பே செஞ்சிட்டு வந்தாலும் அவனை மன்னித்து ஏத்துக்கிறது தான் ஒரு அம்மாவோட மனசு உன்ன மாதிரியே இல்ல உன்னோட அப்பா மாதிரி என்னால அவனை ஒதுக்கி தள்ள முடியாது ராகவ்" என்று அவர் கூறினார்...
"ஓ அப்படி சொல்றீங்களா அப்போ அவன் வந்தா நீங்க ஏத்துப்பீங்க இவ்வளவு நாள் உங்களை கண்டுக்காம போன மகனுக்காக இவ்வளவு நாள் உங்களை கவனித்துக் கொள்ற நான் முட்டாள் அப்படித்தானே???" என்றவன் ,"அவனால என்னென்ன கெட்ட பேரு நமக்கு வந்ததுன்னு நீங்க மறந்துட்டீங்க அப்படித்தானே உங்ககிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கலை" என்று கூறியவன் அன்று உணவை உண்ணாமலேயே சென்றான்...அதுவும் அவருக்கு வலித்தது..
தன் மூத்த மகனான ஜெகதீஷிடம் மானசீகமாக," ஏன்டா ஏன் இப்படி எல்லாம் செஞ்ச உன்னால பாரு நம்ம குடும்பம் எப்படி இருக்குன்னு நீ பாட்டுக்கு போயிட்ட ஆனால் உன்னை நினைத்தும் நம்ம குடும்பத்தை நினைத்தும் தவிச்சிட்டு இருக்கிறது நான் தாண்டா உனக்கெல்லாம் அது புரியல இல்ல" என்று ஒரு தாயாக அவர் தவித்தார்...
அதே நேரம் பல இன்டர்வியூகள் கொடுத்துக் கொண்டிருந்த அவன் போதும் டா என்பது போல அவனை மீடியாக்கள் வைத்து செய்து கொண்டிருந்தார்கள்...
அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ,"டேய் இதுக்கு தான்டா நான் வெளியவே வர்றதில்லை நீதானே ஒரு இன்டர்வியூன்னு சொன்னேன் கிட்டத்தட்ட ஒரு வாரத்துல 200 இண்டெர்வியூ கொடுத்து இருக்கேன்" என்று தன் நண்பன் ராமிடம் கூற, ராமோ சிரித்து ,"இதுக்கே இப்படி சொல்லிட்ட இன்னும் நிறைய இருக்கே " என்று கூற
"போதும் இதோட நிறுத்திக்க இனி ஏதாவது கமீட் பண்ணி வச்ச மவனே நீ முடிஞ்ச" என்று சிகரெட் ஒன்றை பற்றவைத்து உள்ளே இழுத்தபடி அவன் கூறினான்...
அதற்குள் அவனுடைய போன் ரிங்காக அழைத்தது சத்யதேவ் தான் வேகமாக சிகரட்டை அணைத்தவன் போனை எடுத்து காதில் வைத்தான்..
"ஹலோ சார் சொல்லுங்க"
" ஜெகதீஷ் அடுத்து என்ன கதை பண்ண போற???"
"சார் அது ஒரு ஒரு ஃபேமிலி திரில்லர் பண்ணலாம்னு இருக்கேன் சார் உங்ககிட்ட தான் ஏற்கனவே நான் இதை பத்தி பேசி இருக்கேன் நீ அந்த கதை தான் சார்" என்று அவன் கூறவும்," சரி நீ மிஸ்டர் தயாளன் சாரை போய் பாருங்க அவர் உன் கூட இணைந்து ஒரு படம் பண்ணனும்னு ஆசைப்படுகிறார் என்கிட்ட சொன்னாரு அப்படியே எனக்கும் ஏதாவது சான்ஸ் கொடுத்தா உன்னோட படத்துல நடிச்சிட்டு போயிடுவேன்" என்று சத்ய தேவ் கூற
"சார் என்ன சார் இப்படி சொல்றீங்க நான் தான் உங்ககிட்ட ஆல்ரெடி இந்த கதையை பத்தி டிஸ்கஸ் பண்ணி இருக்கேன்னு நம்ம பண்ணலாம் அப்படின்னு பேசி வச்சிருக்கேனே.. நீங்களும் ஓகே சொல்லிட்டீங்களே சார்" என்று அவன் கூற,
அதைக் கேட்டு பலமாக சிரித்த சத்யதேவ் ,"அதுதான் எனக்கு தெரியும்... இந்த படத்தோட வைப் முடிஞ்சதும் படத்தை ஆரம்பிக்கலாம் நீ ஸ்கிரிப்ட் எழுதி முடித்ததும் சொல்லு.. நான் ஒரு குட்டி பிரேக் எடுத்துட்டு வரேன் அப்ராட் போறேன்... நான் ப்ரொடியூசர் கிரீன் சிக்னல் காட்டி இருக்காரு அப்படின்னு இன்பார்ம் பண்ணத்தான் உனக்கு கால் பண்ணேன் அவர்கிட்ட பேசிட்டு அவரை நேர்ல போய் பாரு" என்று அவன் கூறினான்..
"ஓகே சார் நான் போய் பார்க்கிறேன்" என கூறி விட்டு போனை வைத்ததும் ,"அடுத்த படம் நம்ம போன படம் யாரெல்லாம் வைத்து எடுத்தோமோ அந்த செட்டு இருக்கட்டும் ப்ரொடியூசர் மட்டும் வேற மிஸ்டர் தயாளன் அவரை சத்ய தேவ் சார் பார்க்க சொல்லி இருக்கார்" என்று தன் நெற்றியை நீவியபடி கூறவும் அதைக் கேட்ட ராம் மிகவும் மகிழ்ந்து," செம டா" என்க
"சரி ஸ்கிரிப்ட் எழுதணும் அதுக்கான வேலைகளை எல்லாம் ஏற்பாடு பண்ண ஒரு 10 டேஸ் பிரேக் எடுத்துட்டு நாம அந்த வேலைகளில் என்கேஜ் ஆயிடலாம் எனக்கும் இப்படி சும்மா இருக்கிறது பிடிக்கல என்னமோ தேவையில்லாத எல்லாம் யோசிக்க சொல்லுது" என்று அவன் அவனுடைய மனதை மட்டும் மூளையையும் பிசியாக வைத்திருக்க போராடுகிறான்...
எதைப் பற்றியும் அவன் யோசிக்க கூடாது என எண்ணிக் கொண்டிருக்க அதை தெளிவாக புரிந்து கொண்ட ராம்," இன்னும் ஒரு வாரம் சில பங்ஷன்ஸ் இருக்கு அதெல்லாம் முடிச்சுட்டு நம்ம இந்த வேலையில் இறங்கிடலாம்" என்று கூறினான்...
சரி என்று கூறியவன் மனம் நிலை இல்லாமல் தவித்தது...ஏனோ தெரியவில்லை அவன் மறக்க நினைக்கும் பக்கங்கள் அவனை மீண்டும் அவனின் மூளைக்குள் வந்து தொல்லைப்படுதியது...
"டேய் ராம் பேசாம ஏதாவது ஹில் பக்கம் போ???" என்று அவன் கேட்க," என்ன விளையாடுறியா???" என்றான் ராம்..
"ஏன்டா படம் முடிஞ்சு நம்ம ரெஃப்ரெஷ் ஆக எங்கேயாவது போறது தானே" என அவன் கேட்க
"அதெல்லாம் அப்போ இப்ப நீ காலை எடுத்து வெளியே வச்சாலே ஊரு உன்ன சுத்தி தான் நிக்குது எங்கேயும் போக முடியாது அதை விட நீ ஒரு ஸ்கூல்ல சீப் கெஸ்ட் ஹ வர ஒத்துக்கிட்டு இருக்க அதை மறந்துட்டியா???"
"ஐயோ ஆமாம் அதை எப்படி மறந்தேன்" என்று ஜெகதீஷ் கூற," இன்னைக்கு சாயந்தரம் தான் பங்க்ஷன் ரெடி ஆகுற வேலையை பாரு" என்று ராம் கூறிவிட்டு சென்றான்..
அவனோ தன் கையில் இருக்கும் சிகரெட்டை மீண்டும் பற்ற வைத்தான் அதை பார்க்கும் போது எல்லாம் அவளின் இதழ் தான் நியாபகம் வந்து போகும்...
அது அவனது மனதை வெகுவாக தொல்லை செய்யும் அவனால் எதையும் மாற்ற முடியாமல் இல்லை ஆனால் ஒரு பிடிவாதம் மாற்றக்கூடாது என ஒதுங்கி இருக்கிறான்...
