அத்தியாயம் 29
அவள் கேட்டதில் அவன் சற்றும் அசரவில்லை அவள் கோபத்தை எல்லாம் அவன் பார்க்காத தான் அதுவெல்லாம் அவனுக்கு பெரிய விஷயமே இல்லை அவளை எப்படி சமாதானம் செய்ய வேண்டும் என அவனுக்கு மிக நன்றாக தெரியும்...
"என் காதலி என்னை எப்போவும் விட மாட்டா ஐந்து வருஷம்மா என்னை விட்டு போகல...இனியும் போக மாட்டா " என அவன் கூறி அவளின் கழுத்தில் தன் இதழ்களை பதிக்க அவனை அவள் விலக்க வில்லை... அவளுக்கு அந்த நொடி அவனுடைய அருகாமை தேவைப்பட்டதோ என்னவோ அவள் எதுவுமே சொல்லவில்லை...
அவனுடைய தொடுகையில் அவளுடைய தேகம் உருகி கரைந்தாலும் அவனுடைய வார்த்தை உண்மை தானா என தெரியாமல் ,"என்னை விடு என்னை மாதிரி ஒரு பைத்தியக்காரி யாருமே இருக்க மாட்டாங்க நீ என்னை காதலிக்கிறாயா இல்லையா உனக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையா அப்படின்னு எதுவுமே தெரியாம உன்னை நம்பி என்னை இழந்து என் மானம் போய் நமக்கு இரு குழந்தைகள் வந்து அதுக்கப்புறம் நான் அசிங்கப்பட்டு யாருக்கும் தெரியாம ஒரு தாலியை வாங்கி என்னுடைய சுயமரியாதை இழந்துட்டு இதோ உன்னோட வீட்டுல இருக்கேன்" என்று அவள் கூற
அதைக் கேட்ட அவனும்," இவ்வளவு எல்லாம் பேசுவியா டி நீ???" என்று ஆச்சரியப்பட்டு போனான்
அதைக் கேட்ட அவள்," என்னை பேச வைக்கிறது நீதான் உன் மேல போய் ஆசைப்பட்டேன் பார் என்னை சொல்லணும்" என்று விசும்பி கூற ,"இப்ப கூட பாரு இதுக்காகத்தான் என்கிட்ட வந்து இருக்க உனக்கு இதுதானே வேணும் மத்தபடி நான் வேணாம்ல" என அவனோடு அந்த நெருக்கத்தில் அவள் இருப்பதை அவள் சுட்டி காட்டி கூற
அவனோ அவள் மேலும் நன்றாக சரிந்து ,"உனக்கு அப்படி தோணுதா" என்றான்...அவள் அருகே வந்ததுமே அவன் புத்துணர்ச்சியாக இருந்தான்...
"ஆமாம் அப்படித்தான் தோணுது... நீ என்னை காதலிக்கவே இல்லை காதல் அப்படிங்கிற ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து வந்ததே இல்லை நீ உன்னோட தம்பியை பழி வாங்கத்தான் என்னை இப்படி செஞ்ச அது இல்லை என்று உன்னால சொல்ல முடியுமா???" என அவள் கேட்டாள்...
"கண்டிப்பா சொல்ல முடியும் நான் தொடும் போது உனக்கு அப்படி ஃபீல் கிடைச்சு இருந்தா சொல்லு நான் ஒத்துக்கிறேன் ஒவ்வொரு தடவையும் நீ மட்டும் தான் வேணும்னு என் மனசு சொல்லுதடி" என்றான்..
அவன் வார்த்தைகளில் வீழ்ந்தாலும் அவளால் நம்ப முடியவில்லை... ஏனெனில் அவன் ஆவேசமாகவோ இல்லை கோபத்தோடு பேசவில்லை மிகவும் கூலாக அவள் உடலில் அவனது விரல்களால் கோலம் போட்டுக் கொண்டே பேச அவளால் அதை நம்ப முடியவில்லை" கதை எல்லாம் நல்லா இருக்கு!!! அந்த அதிதி மாதிரி எத்தனை பொண்ணுங்க உன் கூட பழகி இருக்காங்க சொல்லு வந்துட்டான் பேச" என கேட்டாள்..
"அதெல்லாம் நிறைய பேர் பழகி இருக்காங்க ஆனால் நான் பழகின ஒரே பொண்ணு நீ தான் ஆனால் இத்தனை நாள் நீ என்னை காதலிக்கிறேனு தான் நான் நினைச்சுட்டு இருக்கேன் ஆனா நான் காதலிக்கிறேன்னா அப்படிங்கிற கேள்வியோடு தான் நீ சுத்திட்டு இருக்கேன்னு எனக்கு தெரியாம போயிடுச்சு அதை புரிஞ்சுக்க இவ்வளவு நாள் ஆகி இருக்கு
லூசு மாதிரி அதிதி, மத்த பொண்ணுங்க அது இதுன்னு பேசிட்டு இருக்காத நான் பேசும்போது காதை கழட்டி வேற பக்கம் வச்சிட்டு வேற ஏதாவது யோசிச்சிட்டு இருக்காத என் முகத்தை மட்டும் பாரு நான் என்ன பேசுறேன்னு கேளு என்னால ரொம்ப அழகா கோர்வையாக எல்லாம் என்னால பேச முடியாது ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி பேசுறேன் கேளு" என்றவன்,
" மத்தவங்க என் கூட எதுக்கு பழகுறாங்க அதை பத்தி எல்லாம் எனக்கு தெரியாது.. ஆனால் நான் ஆசைப்பட்ட ஒரே பொண்ணு நீ மட்டும் தான் உன்னை அடையணும்னு நினைச்சேன் அடைந்துவிட்டேன் நீ எப்படி எனக்கு இம்ப்ரஸ் ஆனன்னுல்லாம் எனக்கு தெரியாது பார்த்ததும் ஒரு ஸ்பார்க் ஆச்சு எனக்கு பிடிச்சிடுச்சு என்னை ஏன்னு கேள்வி கேட்காமல் உனக்கும் என்னை பிடித்து இருந்தது அது எனக்கு நல்லா தெரியும் நான் அதை பீல் பண்ணினேன்
நாம ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தோம் அது நமக்கு பிடித்திருந்தது.. நமக்கு ரெண்டு பேரும் குழந்தைகள் வந்தாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம் ஆனால் உனக்கு நான் காதலிக்கிறேன்னா அவ்வளவுதானே சந்தேகம்!! உன்னோட கேள்வி இதுதான் அப்படின்னு என்கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தா அதை எப்பவோ தெளிவுபடுத்தி இருப்பேனே" என்றவன்,
அவளைப் பார்த்து இந்த மூஞ்சியை பக்கத்துல எப்பவும் நான் மட்டும் தான் பாக்கணும் வேற எவனும் பார்க்க கூடாது அந்த அளவுக்கு உன்னை பிடிக்கும் டி.. ஏன் டி நான் தொடும் போதும் நீ என்கிட்ட வந்தால் என்னைக்காவது நான் உன்னை தூரத்தில் வைத்து பேசியிருக்கேனா என் பக்கத்திலேயே நீ இருக்கணும்னு தான் நான் நினைச்சு இருக்கேன் அப்ப எல்லாம் உனக்கு பீல் ஆகலையா வாயில சொன்னாதான் காதலா டி??? வாயில தான் சொல்லணும் அப்படின்னா ஆமாம் நான் உன்னை காதலிக்கிறேன் இரண்டு குழந்தைகள் பிறந்தது ஸ்கூலுக்கு போனதுக்கு பின்னாடி ப்ரொபோஸ் பண்ற ஒரே ஒரு ஆள் நானா தான் இருப்பேன்" என அவன் கேட்டான் அதை கேட்டவள் அதிர," என்ன முழிக்கிற?? இப்போ நீ கேட்டதுக்கு ஆனா பதிலை சொல்லிட்டேன் உன்னோட கோபம் எல்லாம் போச்சா??" என்றவன் ,"என்னை ரொம்ப பேச வைக்கிற டி" என்றான்...
அவனது பதிலில் அவள் முகம் தெளிந்தாலும் அமைதியாக இருக்க அதை பார்த்தவன் அவள் கழுத்தில் இருந்து அவளுடைய செவிக்கு சென்றவன் ,"என்ன கோபம் போய்டுச்சா???" என்க
"இல்லை போகல" என்க அவனோ அவளுடைய முகத்தை பார்த்தவன் ,அதான் காதலிக்கிறேன்னு சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன???" என்க
"நீ என்னோட பீலிங்ஸ் புரிஞ்சுக்கவே மாட்டியா" என்று கூறினாள்...
"இன்னும் என்னடி புரிய இருக்கு அதுதான் லவ் பண்றேன்னு சொல்லிட்டேன்ல உன்னை லவ் பண்ணி தான் புடிச்சு போய் தான் எல்லாம் பண்ணினேன் அப்படின்னு சொல்லிட்டேன்ல மறுபடியும் ஏன் டி ஆரம்பிக்கிற???" என அவளின் விரல்களை மென்மையாக வருடியபடி கூற,
அவளோ அவனின் செய்கையை பார்த்து,"நாலு செவுத்துக்குள்ள இருட்டுல வந்து இப்படி நீ சொன்னா நான் நம்ப தயாராக இல்லை எத்தனை பேர் என்னை அசிங்கமா பேசி இருப்பாங்க" என அவள் கூறினாள்...
அதை கேட்டவன்," அதுக்கு என்னை என்ன டி பண்ண சொல்ற இதை எல்லாம் யோசிச்சா வாழ முடியாது கண்டவன் என்ன யோசிச்சானு யோசிச்சா வாழ முடியாது" என்றான்...அவள் முகத்தில் திருப்தி இல்லை...
அதை பார்த்தவன் ,"இனி என்ன பண்ணனும்னு சொல்லு ???" என அவன் கேட்டான்...
"எனக்கு தெரியல உன்னை பிடிச்சு இருக்கு என்னால உன்னை விட முடியல உன் மேல் ரொம்ப காதல் இருக்கு நான் உன்கிட்ட அதை எதிர்பார்க்கிறேன் ஆனால் அது எனக்கு இப்ப வர கிடைக்கல பல சமயம் குழந்தைகளுக்காக மட்டும் தான் நான் வாழ்ற மாதிரி எனக்கு பீல் ஆகுது...இப்போ கூட பாரு நான் புலம்பிட்டு இருக்கேன் ஆனால் நீ கூலா இருக்க" என்று அவள் கூற அதை கேட்ட அவனோ அவள் அருகே விலகி படுத்து கொண்டு," இரண்டு நாள் கழிச்சு நீ பிஸியா" என கேட்டான்...
"ஏன் கேட்கிற??? நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீ என்ன கேள்வி கேட்கிற இதுதான் உன்கிட்ட எனக்கு பிடிக்காத விஷயம்" என்க
"ஹே சொல்லு டி என்கிட்ட பல விஷயம் பிடிக்காதுனாலும் என்னை உனக்கு பிடிக்கும் தானே அதுனால மூடிட்டு சொல்லு வந்ததுல இருந்து இதையே தான் சொல்ற!!!. நீ எவ்ளோ வேணாலும் புலம்பு அதைக் கேட்க நான் தயாரா இருக்கேன் நான் வந்ததுல இருந்து என்னோட கை சும்மா இல்ல உன்னோட உடலில் எல்லா பக்கமும் வலம் வந்துடுச்சு ஆனா நீ என்னை விலக்குல இதிலிருந்து தெரியலையா டி நம்ம ரெண்டு பேரும் இடையே இருக்கிற அஃபெக்ஷன்" என்க
அவளோ அவனை பார்த்தவள் விழிகள் உண்மை தான் அவன் கூறுவது உண்மை தான் என்பது போல எண்ணி கொண்டே," பெரிசா வொர்க் ஒன்னும் இருக்காதுன்னு நினைக்கிறேன்" என்க
" அந்த சரவணன் கிட்ட ஹோட்டலை பார்க்க சொல்லிட்டு ரெடியா இரு ஒரு பங்க்ஷன் போகணும் வீட்ல இருக்கிற எல்லாரையும் ரெடியா இருக்க சொல்லு" என்றான்.. என்ன பங்க்ஷன் என்று கூட அவள் கேட்கவில்லை ஆனால் அவன் பேசிப் பேசி அவன் பேச்சில் அவளை விழ வைக்கிறான் என்று மட்டும் அவளுக்கு புரிகிறது...
அவளோ மீண்டும் வருத்தமாக இருக்க அவனோ அவளின் இரு கைகளை கோர்த்தப்படி அவள் மேல் சரிந்து ,"என்கிட்ட நீ நிறைய எதிர்பார்க்கிற டி ஆனால் நான் அது மாதிரி இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும்..உனக்கும் நல்லா தெரியும்...அதோட ஏமாற்றம் தான் நான் என்ன சொன்னாலும் உன்னால நம்ப முடியாத அளவுக்கு கொண்டு பொழுது..
உனக்கு எப்படி நம்பிக்கை கொண்டு வர வைக்கிறதுன்னு எனக்கு தெரியாது என் உயிர் போற வரை எனக்கு நீ வேண்டும் டி என்னால உருகி உருகி சினிமால வர மாதிரி டயலாக் எல்லாம் பேச முடியாது டி சொன்னா புரிஞ்சுக்க அது எல்லாம் சினிமாவுக்கு தான் பொருத்தமா இருக்கும் வாழ்க்கையில அது பொருத்தமா இருக்காது.. நான் கண்டபடி கோபமா பேசவும் சந்தோஷம் வந்தா கட்டி பிடிச்சு மணிக்கணக்கில் நிக்கவும் நீ வேணும் டி" என அவளின் கண்களை பார்த்து கூறியவன், இதுக்கு மேல உனக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல" என அவளின் கண்களை பார்த்து கூறினான்...
அதை கேட்டவளுக்கு இனியும் அவனை நோகடிக்க விரும்பவில்லை...இவ்வளவு நெருக்கத்தில் அவன் பொய்யே கூறியிருந்தாலும் அவள் நம்பியிருப்பாள்.. அவன் உண்மையை கூறவும் அவளால் நம்பாமல் இருக்க முடியவில்லை அவளின் கைகள் மெல்ல அவனை அணைத்தன...
இது போதாதா அவனுக்கு அவனுடைய கைகள் தான் ஆரம்பத்திலிருந்து அத்துமீற துவங்கி இருந்தனவே.. அவனும் அவளது முகத்தைப் பார்த்து ,"இப்பவாவது சிரிச்சிட்டு இருடி.. உன்னை நிறைய அழ வச்சிருக்கேன் அப்ப எல்லாம் வலிக்கல இப்ப என்னமோ வலிக்குது" என்று கூறினான்...
பிறகு அவன் கைகள் அவள் தலையில் போட்டிருந்த கொண்டையில் குத்தி இருந்த கிளிப்பை அவிழ்த்தவன் அவளின் கூந்தலை தன் கைகளால் அளந்த அவனின் விரலின் ஜாலங்களில் மயங்கியவள் அவளை மேலும் கிளுகிளுப்பூட்டும் வித்தையில் இறங்கினான்..பிறகு அங்கு நடந்ததை அந்த இருவர் மட்டுமே அறிவர்...அந்த தனிமை இருவருக்கும் அந்த இடத்தில் வேண்டும் என இருவருக்கும் தோன்றியது..
மிக பெரிய அரங்கத்தில் ஜெகதீஷ் எடுத்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து கொண்டிருந்தது...முதல் வரிசையில் பல இருக்கைகள் போடப்பட்டு இருந்தது..அதில் அவனுடைய குடும்பத்தார் அனைவரும் ஒரு வரிசையில் அமர்ந்து இருந்தனர்..
முதன் முறையாக ஜெகதீஷின் குடும்பத்தை திரை உலகிற்கும் அவனை நேசிக்கும் உள்ளங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறான்.. அவர்களுக்கும் இந்த ஆர்ப்பாட்டமும் கரகொலியும் புதிது அவனை எண்ணி பெருமையாக அமர்ந்திருந்தனர் அவளுக்கு கூறவே வேண்டாம் அவன் அங்கே எங்கே திரும்பி நின்று கையசைத்துக் கொண்டிருக்க அதை பார்த்ததும் மிகப் பெருமையாக இருந்தது.. அதிதி தான் இவளை கண்ட அதிர்ச்சியில் முழித்து கொண்டிருந்தாள்...
ஆம் அவன் அரங்கிற்குள் வரும் பொழுதே அவளின் கைகளையும் குழந்தைகளின் கைகளை பிடித்தபடி வரும் போதே அனைவரும் அதிர்ச்சி நிலையில் தான் பார்த்தனர் அதிதி முகத்தில் ஈயாடவில்லை என்று கூறலாம்...
"இவங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்பா" என அதிர்ச்சியோடு அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க சத்யதேவ் மட்டும் அவன் வரும் போது அவனை அணைத்து கொண்டு,"டேய் திருடா சொல்லவே இல்ல பார்த்தியா" என்று கேட்க அவனோ சிரித்தபடி ,"அதனால தான் சார் இங்க கூட்டிட்டு வந்தேன்" என்று கூற அவனோ தன்னுடைய வாழ்த்தை இருவருக்கும் கூறி தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்...
விழா ஆரம்பமானது அனைவரும் ஜெகதீஷின் அருமை பெருமைகளையும் சத்ய தேவின் அருமை பெருமைகளையும் கூறி கொண்டிருக்க, அதை பற்றி எல்லாம் அனைவரும் பேசி, சத்ய தேவ் பேசி முடித்து விட்டு அதிதி மற்றும் அந்த சினிமாவில் நடித்த முக்கியமாக நபர்களை எல்லாம் மேடையில் பேச அழைத்தார்கள்...
இறுதியில் ஜெகதிஷை அழைக்க அவன் மேடையில் ஏறியதும் ஆரவாரம் பெருகியது அனைவரையும் பார்த்து கையசைத்தான்...
அதைப் பார்த்த அவனுடைய குடும்பத்தார் அனைவரும் பெருமிதமாக ஜெகதீஷை பார்த்துக்கொண்டு இருக்க ஜெயமோகன் மற்றும் ரேவதிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது... ஜெயமோகன் கூறியிருந்த அறிவுரைப்படி அவன் நடந்திருந்தால் கூட இந்த அளவுக்கு வந்திருப்பானோ என தெரியாது ஆனால் அவனுடைய சொந்த முயற்சியில் அவனுடைய ஆசைப்படி அவன் மேலே வந்தது அவருக்கு பெருமை தான் என்றாலும் இந்த அளவுக்கு ஊரே மெச்சும் அளவுக்கு அவருடைய மகன் வளர்ந்து நிற்பதை கண்டு ஒரு தந்தையாய் அவரால் பெருமை கொள்ளாமல் இருக்க முடியவில்லை..
அவனும் சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை எல்லாம் கூறி முடித்த பின் ,"எப்போதும் போல இந்த படத்துக்கும் உங்க ஆதரவை கண்டிப்பாக நீங்கள் கொடுப்பீங்க அப்படிங்கற நம்பிக்கையோடு நான் விடைபெறுகிறேன்" என்று கூற
அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரோ," சார் நீங்க இப்படி கிளம்பிட்டா எப்படி எவ்வளவு நாள் உங்க குடும்பத்தை பற்றி எதுவும் எங்களுக்கு சொல்லாம இருந்தீங்க நாங்களா கேட்டா கூட நோ பர்சனல் கொஸ்டின் அப்படின்னு சொல்லிட்டீங்க ஆனா இப்போ உங்களுடைய மொத்த குடும்பமும் இந்த அழகான தருணத்தை உங்க கூட பகிர்ந்துக்க வந்திருக்காங்க இவங்களையா எங்க கிட்ட இருந்து மறைச்சீங்க" என்று அந்த தொகுப்பாளர் கேட்க
அவனோ மேடையிலேயே வெட்கப்பட்டு சிரிக்க அதை பார்த்த அனைவரும் சிரித்தனர்...
"உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்த தானே கூட்டிட்டு வந்து இருக்கேன் இனி இந்த கேள்வி என்னிடம் கேட்க மாட்டீங்க தானே??" என்று கூறி அவன் சிரித்தான்..
அதைக் கேட்ட தொகுப்பாளர் ,"இப்படி போனா எப்படி உங்க குடும்பத்தை பத்தி சொல்லுங்க" என கூற
அவனோ," என்ன சொல்றது அதுதான் வளைச்சு வளைச்சு அவங்களை போட்டோ எடுத்துட்டு இருக்கீங்களே எனக்கு ஒரு அம்மா, ஒரு அப்பா, ஒரு தம்பி, ஒரு பொண்டாட்டி, ஒரு மாமியார், குழந்தைகள் மட்டும் ரெண்டு பேர் இருக்காங்க இவ்வளவுதாங்க என் குடும்பம்" என்று கூற அவனுடைய குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் சிரிக்க துவங்கினர்...
அதற்குள் தொகுப்பாளர் காதில் யாரோ வந்து எதையோ கூறிவிட அதைக் கேட்டு ,"அவரோ சார் இப்படி சொன்னா எப்படி உங்க வைஃப் தான் ப்ரொடக்ஷன் ஃபுட் சப்ளை பண்ணினாங்க அப்படின்னு இப்பதான் எனக்கு நியூஸ் வந்துச்சு" என்க
"ஆமாம் அவங்க தான் ப்ரொடக்ஷன் ஃபுட் எல்லாம் பார்த்துக்கிட்டாங்க ஆனா அதுக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சொன்னா நம்ப மாட்டீங்க இது அவங்க ஹார்ட்ஒர்க் கிடைச்ச ஒரு அங்கீகாரம் தான்.. அவங்க ஹோட்டல் பிசினஸ் பண்ணிட்டு இருக்காங்க சூப்பரா ரன் பண்ணிட்டு இருக்காங்க அப்புறம் என் தம்பி அப்பாவோட பிசினஸ் எங்களுக்கு சிட்டில ரெடிமேட் ஷாப் இருக்கு என் குடும்பத்தில் எல்லாருமே பிசினஸ் தான் நான் மட்டும் தான் இப்படி ட்ராக் மாறிட்டேன்.. நெக்ஸ்ட் அவங்க என்ன பண்றாங்க நீங்க கேப்பிங்க அதுக்காகத்தான் இப்பவே பதில் சொல்லிட்டேன் அதனால அந்த கொஸ்டின மட்டும் ஸ்கிப் பண்ணிடுங்க" என்க
"ஆஹா சார் என்னோட வேலைக்கு உலை வச்சுருவீங்க போல இருக்கு...அப்படி நீங்க மாறியதால் தானே எங்களுக்கு இப்படி ஒரு சூப்பர் டைரக்டர் கிடைச்சிருக்காங்க" என்று கூற
அதைக்கேட்ட அவனும் சிரிக்க அவன் பார்வையில் அவனது குடும்பம் தென்பட்டது அனைவருக்கும் கண்ணிலும் பெருமிதம் தென்பட ,"இன்னைக்கு உங்கள நாங்க விடுறதா இல்ல நீங்க சொல்லுங்க நீங்க எப்படிப்பட்ட ஒரு மகன், எப்படிப்பட்ட ஒரு சகோதரன் எப்படிப்பட்ட ஒரு புருஷன் எப்படிப்பட்ட ஒரு அப்பா நீங்க இத சொல்லியே ஆகணும் சொல்லாம உங்களை விடப் போறதா இல்ல???" என்க
"நான் என்ன அப்பா பேச்சைக் கேட்காத அப்பா வார்த்தையை மீறின ஒரு மகன் தான் ஆனா இப்போ எங்க அப்பா என்னை பார்த்து சிரிச்சிட்டு இருக்கார்" என்க கரகோஷம் ஒலித்தது...
"அடுத்ததா எங்க அம்மா நான் என்ன சொன்னாலும் நம்புவாங்க நான் மட்டும் இல்ல என் குடும்பத்தில் யார் என்ன சொன்னாலும் நம்புவாங்க அப்படிப்பட்ட ஒரு ஆள் என்னோட தம்பி அதிகமா அவன் கூட சண்டை போட்டு இருக்கேன் ஆனால் அவனை யாருக்கும் விட்டுக் கொடுத்ததில்லை..
அப்புறம் என்னோட பசங்க அவங்களுக்கு எப்பவும் போல தான் எல்லா பெத்தவங்களுக்கும் முதல் ஹீரோ அவங்க அப்பா தானே எனக்கு அப்படித்தான் உங்களுக்கும் அப்படித்தான் நினைக்கிறேன் அந்த மாதிரி தானே!!
நான் உங்களுக்கு எல்லாம் டைரக்டரா இருந்தாலும் என் பசங்களுக்கு மட்டும் நான் ஹீரோ" என்று சிரித்தபடி கூற குழந்தைகள் இருவரும் கையை தட்டிக் கொண்டிருந்தனர்..
"சரி இப்போ கடைசியாக உங்க வைஃபை பத்தி சொல்லுங்க எஸ் டெல் மீ அபௌட் மிஸ்ஸஸ் ஜெகதீஷ்" என்றதும் அவள் கண்ணில் ஆச்சரியம் வந்தது இவன் என்ன என்னைப் பற்றி சொல்லப் போகிறான் என அவளுக்கும் தெரிய ஒரு ஆவல் வந்தது..
