Share:
Notifications
Clear all

அத்தியாயம் 28

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

எல்லாம் முடிந்து விட்டது ...அவன் திருமணம் ஆனவன் என அறிந்தது முதல் அவன் பக்கம் கூட அவள் வரவில்லை...கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்து விட்டது... இனி படத்தின் இதர வேலைகள் தான் உண்டு என்ற நிலையில் அவன் ராமிடம் நான் கொஞ்சம் வீட்டுக்கு போய்ட்டு வரேன் என்று கூறி இருந்தான்...

அதை கேட்ட அவனோ,"இப்போ ஆச்சும் புத்தி வந்துதே" என கூற அவனோ ஒரு பார்வை பார்த்தான் பதில் ஏதும் கூறவில்லை...

அவனுக்கு அவனுடைய குழந்தைகள் மற்றும் அவனிடம் கோபமாக இருக்கும் அவனுடைய மனைவியிடம் பேச வேண்டும் என்று இருந்தது...

முதலில் அவனுடைய வீட்டுக்கு தான் சென்றான்...அங்கு அவனுடைய அப்பாவின் தோளில் சஞ்சயை தொங்கிய படி விளையாடி கொண்டிருந்தான்...அதை பார்த்து கொண்டே அவன் உள்ளே நுழைய அவனை கண்டதும் குழந்தையை இறக்கி விட்ட அவர் நிற்க ,"தாத்தா தூக்குங்க" என்க

அவரோ ஜெகதீஷை பார்க்க அங்கு அவனை பார்த்ததும் சஞ்சய் ஓடி வந்து,"ஐ அப்பா வந்தாச்சு" என கூறியவன் அவனை நோக்கி பாய்ந்து குதிக்க தன்னை நோக்கி வந்த குழந்தையை தூக்கிய ஜெகதீஷ் தன் மகனின் கன்னங்களில் இதழ்களை பதித்த் படி வீட்டுக்குள் நுழைந்தான்..

ஜெயமோகன் அவனை வா என்றும் அழைக்கவில்லை போ என்றும் விரட்டவும் இல்லை.. அமைதியாக மெல்ல வீட்டுக்குள் செல்ல அவனும் அவர் பின்னாலேயே வந்தான்.. அவனும் எதுவும் பேசவில்லை என்ன பேசுவது என தெரியவில்லை..

அவர் ஏதாவது கோபமாக பேசியிருந்தால் திருப்பி பதில் அளித்து இருப்பானோ என்னவோ ஆனால் அவர் அமைதியாக இருக்கவும் அவனால் பேச்சு கொடுக்க முடியவில்லை..

"பாட்டி நான் தான் இந்த வெள்ளை கலர் பூவை பறிச்சேன் அந்தப் பூ எனக்குத்தான் சாமிக்கு நான் தர மாட்டேன்" என்று கூறிக் கொண்டே தோட்டத்திலிருந்து சஞ்சனா வர ரேவதி அவள் கூறுவதை எல்லாம் கேட்டு கொண்டு சிரித்தபடி வந்த ரேவதி அங்கு தன்னுடைய மூத்த மகனை கண்டதும் அதிர்ந்து தன் கணவரை பார்க்க அவரோ அவருடைய அறைக்குள் நுழைந்து கொள்ள அவனோ ,"அப்பா ஒரு நிமிஷம்" என்றான்... அவனுக்கு இன்றே அனைத்து விசயங்களையும் முடித்து விட வேண்டும் என்று இருந்தது...தனியாக இருப்பதை தவிர்க்க அவன் எண்ணினான்...

அவரோ திரும்பி பார்த்தார் பழைய கோபம் எதுவும் அவர் முகத்தில் தென்படவில்லை...ராகவ் ஏதாவது கூறி இருக்க கூடும் என அனுமானித்தான்...ஏனெனில் அவனை சந்தித்து அந்த பிரச்சனையை எல்லாம் முடித்து விட்டு கிட்டதட்ட 75 நாட்கள் முடிந்து இருந்தன...அனைவரையும் அவன் நேரில் பார்த்து 75 நாட்கள் ஆகி விட்டன இதற்கு இடையே அவன் யாரையும் நேரில் சந்திக்கவில்லை அதற்கான வாய்ப்பு அவனுக்கு அமையவில்லை என்றாலும் அவர் முகத்தில் தெரியும் சாந்தம் புதிது...

இதை அவன் அவனுடைய சிறு வயதில் பார்த்து இருக்கிறான் இப்போது தான் மீண்டும் அதே முகத்துடன் தன் தந்தையை பார்க்கிறான்...அதற்குள் ராகவ் மாடியில் இருந்து வரும் போதே," சஞ்சய் , சஞ்சு இங்கே வாங்க சித்தப்பா சொன்ன மாதிரி கிஃப்ட் வாங்கிட்டு வந்துட்டேன் நேத்து நான் வரதுக்குள்ள உங்களை யார் தூங்க சொன்னது???" என மாடியில் இருந்து கீழே இறங்கி வரும் போதே அவன் கூறி கொண்டு வர குழந்தைகள் இரண்டும் ஜெகதீஷிடம் இருந்து நேராக தாவி தங்களுடைய சித்தப்பாவிடம் ஓடினர்...

"என்ன கிஃப்ட் சித்து" என கத்தி கேட்டு கொண்டே ஓட அவனோ இருவரையும் தூக்கியவன் முதுகில் மறைத்து வைத்து இருந்து கலர் பொதியை எடுத்து கொடுக்க குழந்தைகள் முகத்தில் அவ்வளவு சிரிப்பு நிறைய இருவரும் தங்கள் சித்தப்பாவின் முகத்தில் முத்தமிட்டு," சித்து யார் வந்து இருக்காங்க பாருங்க" என்க

அப்போதுதான் தன் அண்ணனை கவனித்த ராகவ் ,"ஜெகா வா எப்ப வந்த படம் எல்லாம் முடிஞ்சுதா" என இயல்பாக நலம்

விசாரித்தான்...

அவனும்," ஷூட்டிங் முடிஞ்சது இனி பேக் வொர்க்கெல்லாம் இருக்கு" என்று கூறியவனுக்கு தெளிவாக புரிந்தது.. தந்தையிடம் இவன் எல்லாம் கூறி விட்டான் என்று குழந்தைகளிடம் இனிமையாக அவன் பழகுவதை பார்த்த அவனுக்கு உள்ளுக்குள் சந்தோஷம் வந்தது.. அனைவருமே குழந்தைகளிடம் அன்பாக பழகுகிறார்கள் அதைப் பார்த்து அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி தான் வந்தது அவனுடைய அம்மா ஓடிவந்து அவனை அணைத்துக் கொள்ள அவனும் அணைத்து கொண்டான்..

"இப்பதான் எங்களை வந்து பார்க்க உனக்கு சமயம் கிடைச்சுதா???" என்று கேட்க

"அதுதான் வந்துட்டேன் இல்ல நீங்க வரக்கூடாதுன்னு சொல்லியும் நான் வந்துட்டேன் இல்ல அப்புறம் என்ன அம்மா???" என்று சிரித்தபடி அவன் கூற,

" இந்த திமிர் மட்டும் உனக்கு குறையவே குறையாது டா" என்று ரேவதி சிரித்தபடி தன் மகனின் தோளில் சாய்ந்து கொண்டார் தந்தை மட்டும் அமைதியாகவே இருந்தார்...ஆனால் இமை மூடாமல் மகனை பார்த்து கொண்டிருந்தார்..எந்த தந்தைக்கும் தங்களுடைய பிள்ளைகளை பிடிக்காமல் போகாது இல்லையா தவறு செய்தால் கண்டிப்பாக உள்ளுக்குள் இருக்கும் பாசம் என்றும் விட்டுப் போகாது இல்லையா????

அவன் தான் அவர் அருகே போய் ,"அப்பா" என்க

அவர் ,"சொல்லுப்பா" என்றார்.. வெகு நாட்களுக்குப் பிறகு அவரின் அமைதியான பேச்சு அவனை உலுக்கியது..அந்த வார்த்தைகளில் விழுந்தவன் இதுவரையாரிடமும் அடிபணிந்தது இல்லை..

ஆனால் தன்னுடைய தந்தையின் அமைதியான வார்த்தைகளில் அவனால் அடிபணியாமல் இருக்க முடியவில்லை.. அவனுக்கும் தனியாக இருந்து பெரிதாக எதையும் அவன் சாதித்து விடவில்லை இந்த ஐந்து வருட காலமும் அவன் இதை யோசிக்காமல் இல்லை தான் எல்லாம் இப்பொழுது தான் கூடி வந்திருக்கிறது அவ்வளவே!!

"இப்போ நான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கேனா?? நீங்க சந்தோஷமாக இருக்கீங்களா நான் இதை கேட்கக் கூடாது தான் நீங்க அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து உங்க வார்த்தைகளை நான் கேட்டதில்லை எதிர்த்து தான் நிக்கிறேன் இப்போ ஏதோ பண்ணி இருக்கேன்னு நினைக்கிறேன் அந்த தைரியத்துல தான் உங்க முன்னாடி வந்து நிற்கிறேன் இப்ப சொல்லுங்க நான் நீங்க எதிர்பார்த்த மாதிரி மாறி இருக்கேனா???" என்று அவன் கேட்டான்... அவனது முகத்தில் அவர் பத்து வயது ஜெகதீஷை தான் பார்த்தார்..

பத்து வயதில் ஜெகதீஷ் இப்படித்தான் ஏதாவது ஒரு பாடத்தில் ஜெயித்து அதில் கிடைத்த பரிசை வாங்கிக் கொண்டு வரும்போது தன் அப்பாவிடம் அப்பா நான் பரிசு வாங்கினதுல உங்களுக்கு சந்தோஷமா என்று கேட்பான்..

அந்த நாள் ஞாபகம் அவருக்கு வந்துவிட அவருடைய குரல் கமறியது...ராகவ் தான் கொஞ்சம் கொஞ்சமாக தன் தந்தையிடம் நடந்த அனைத்து விசயங்களையும் கூறி இருக்க அதை கேட்டது முதல் அவருக்கு இவனை பார்க்க வேண்டும் என்று இருந்தது...அது இன்று தான் நடந்து இருக்கிறது!!!

"எந்த பெத்தவங்களும் பசங்க நாசமா போயிடனும்னு நினைக்க மாட்டாங்க வழி தவறி போய்டுவாங்களோ என்று பதட்டம் தான் அவங்க மனசுக்குள்ள எப்பவுமே இருக்கும் அதுக்காக வார்த்தைகளை முன்ன பின்ன விட்டுடுவாங்க நம்ம பசங்க நல்லா இருக்கணும் அவங்க கெட்டுப் போயிடக் கூடாது அப்படிங்கிற எண்ணம் மட்டும்தான் அவங்க மனசுக்குள்ள இருக்கும் அதுக்காக அவங்களும் டென்ஷன் ஆகி குழந்தைகளையும் டென்ஷன் ஆகிடுவாங்க இதுதான் பல வீட்ல நடக்கிறது அதுதான் நம்ம வீட்லயும் நடந்து இருக்கு அப்படித்தான் நான் இதை பார்க்கிறேன்..

நீ அப்படி போயிடுவியோ நினைச்சேன் ஆனால் இப்போ உன்னை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் ரொம்ப பெருமையாகவும் நினைக்கிறேன் ராகவ் எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லிட்டான் இப்போ அப்பா உன்னை நினைச்சு ரொம்ப பெருமைப்படுகிறேன்" என்று குரல் தழுதழுத்து அவர் கூற அதைக் கேட்டு அவனுக்கும் என்னவோ போல இருந்தது அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் தந்தையை அணைத்து கொண்டான்.. எதுவுமே பேசி கொள்ளவில்லை அவரின் உடல் குலுங்குவதை அவரை அவன் அணைக்கும் போது அவன் உணர்ந்தான்...அவனின் கண்களும் இலேசாக பனித்தன அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து கொண்டான்...

ரேவதிக்கு இந்த காட்சியை காண கண்கொள்ளா காட்சியாக இருக்க ராகவ் இயல்பாக சிரித்தபடி நின்று கொண்டிருந்தான்.. அவனுக்கு இப்போது பொறாமையோ இல்லை தன் அண்ணனை விட பெரிதாக வேண்டுமோ என்ற எண்ணம் இல்லை தான் இருக்கும் தொழிலில் முன்னேற வேண்டும் அது மட்டும் தான் அவனுக்கு இப்பொழுது எண்ணமாக இருக்கிறது...

அப்படி இருக்க சிறுவயதில் என்னென்னவோ நடந்திருந்தாலும் அது எதுவும் இப்பொழுது அவனுடைய மனதில் இல்லை தனக்கு ஆபத்து என்றதும் தன் மானத்தை காப்பாற்றிய தன் அண்ணன் மட்டும்தான் அவன் முன்னால் இருந்தான்...

அப்படி இருக்க இப்பொழுது அவன் செய்திருக்கும் உதவி கூட பெரிய உதவி தான் அவன் சொன்னது போல அந்த டிசைனர் பெண்ணை சந்தித்தான் இப்பொழுது அவனுடைய தொழிலில் விருத்தி ஆகிக்கொண்டு இருக்கிறது...

"என் கண்ணே பட்டுடும் போல இருக்கு இப்பதான் நான் கும்பிடற சாமிக்கு எல்லாம் கண்ணு திறந்து இருக்கு போல இருக்கு" என ரேவதி கண்களை துடைத்துக் கொண்டு கூற

ஜெகதீஷ் ,"அப்போ இத்தனை நாள் கண்ணை மூடிட்டா இருந்தார்???" என்க

"ஆமாம் இப்போ தான் சாமி கண்ணாடி போட்டுட்டு நம்மளை பார்த்திருப்பாங்க போல இருக்கு அப்படித்தான அம்மா" என்று ராகவ் கூற

"போங்கடா எப்ப பார்த்தாலும் என்னையவே கிண்டல் பண்ணுங்க நீங்க என்னமோ சொல்லிக்கோங்க எனக்கு இதெல்லாம் அதிசயம் தான் இப்படி எல்லாம் மாறிடாதானு நான் கும்பிடாத சாமி இல்லை தெரியுமா??" என்று அவர் கூற அதைக் கேட்ட அவர்கள் சிரித்தனர்...

பிறகு அவனுக்கு அவனுடைய மனைவியை பார்க்க வேண்டும் என்று இருந்தது குழந்தைகளிடம்," அம்மா எங்கே" என்று கேட்க," அம்மாவா ரூம்ல இருக்காங்க எப்ப பாரு அழுதுகிட்டே இருக்காங்க கேட்டா எதுவும் சொல்ல மாட்டேங்கிறாங்க" என்று கூற ,"சரி நீங்க இங்கேயே இருங்க நான் அம்மாவை பார்த்துட்டு வந்துடறேன் " என்று கூறினான் ஜெகதீஷ்..

"அப்பா நாங்களும் வரட்டுமா" என்று கேட்க அவனும் தன் குடும்பத்தார் அனைவரையும் பார்த்துக் கொண்டு ,"இப்போ நீங்க வர வேண்டாம் நான் மட்டும் போறேன் நான் கூப்பிடும் போது வந்தா போதும்" என்று கூற பெரியவர்களோ அவனைப் பார்த்து ,"அந்த பொண்ணு பாவம் அவ சதா உன்னுடைய நினைப்பில் தான் இருக்கா" என்று கூற

"தெரியும் மா அதுக்காகத்தானே வந்திருக்கேன் அவளுக்கு சிலதெல்லாம் புரிய வைக்க வேண்டி இருக்கு நான் புரிய வச்சுட்டு அவளை அழைத்துக்கொண்டு வருகிறேன் அதுவரைக்கும் பசங்களை மேலே விடாதீங்க" என்று குறிப்பு கொடுத்துவிட்டு அவன் மேலே சென்றான்...

அவனுடைய அறையில் தான் அவள் இருப்பதாக குழந்தைகள் கூறி இருந்தனர்...

கதவை திறந்தான்...அங்கு அவள் குளிக்காமல் ஒரு கொண்டையும் பனியனும் மற்றும் டிராக் பாண்ட் மட்டும் போட்டு அவள் படுத்து இருந்தாள்...

கண்களை மூடி படுத்து இருந்தாள்...கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது...அதை பார்த்தவன் முகம் மெல்லிய புன்னகையை உதிர்த்து மெல்ல அவள் அருகே சென்று அவள் அருகே படுத்து அவளை அணைத்து கொள்ள அவளோ விடுக்கென்று கண்களை திறந்து பார்க்கும் போது அங்கு அவன்..

அவனை கண்டதும் அவள் முகத்தில் பல வித உணர்வுகள் அவளின் கண்ணீரில் அவனுக்கு மட்டும் புரிவது போல அவள் அவளின் உணர்வுகளை பிரதிபலிக்க அவனோ அவளை தன் ஒரு கையால் அவளை அணைத்த படி மறு கையால் அவளின் கண்ணை துடைத்தவன் அவளை பார்த்து," என்ன எப்போ பார் அழுதிட்டே இருக்கியாம்?? கம்ப்ளைன்ட் எல்லாம் உன் மேல வருது" என நக்கலாக கேட்க

அவளோ ,"என்னை விடு எதுக்கு இங்கே வந்த வெளியே போ என்னை விடு டா" என கத்தினாள்...

"ஏன் டி இது என் ரூம் என்னோட பெட் இது என்னோட தாலி கட்டின பொண்டாட்டியை கட்டி பிடிச்சிட்டு இருக்கேன் என்ன தைரியம் இருந்தா நீ என்னை வெளியே போக சொல்லுவ வெளியே எல்லாம் போக முடியாது டி" என்க

"என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா??" என அவள் வெகுண்டு கேட்டாள்...

"சத்தியமா மாட்டேன்.. உன்னோட உயிர் போற வரைக்கும் நீ என்னை சகித்து தான் ஆகணும் எப்போ என் கண்ணுல பட்டியோ அப்பவே உனக்கு இருக்கிற நிம்மதி போயிடுச்சு" என அவன் கூறி அவளின் கழுத்தின் வளைவில் புதைந்து கொள்ள

"இத்தனை நாள் இங்கே வராமல் இப்போ மட்டும் ஏன் வந்த??? உன் காதலி உன்னை விட்டுட்டாளா???" என கேட்டாள்...அவள் முகத்தில் அவ்வளவு கோபம் இவனை நம்பி தன் வாழ்க்கையை துளைத்து விட்டோமா என எண்ணினாள்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top