Share:
Notifications
Clear all

அத்தியாயம் 27

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

வெளியே வந்த அவளோ மாஸ்க் அணிந்து தன் காரில் ஏறிய அவனிடம் காருக்கு வெளியே கார் கதவின் ஜன்னலின் அருகே நின்றபடி,"அப்போ உனக்குள்ள பாசமெல்லாம் இருக்கு" என்று கூற அவனும் அவளைப் பார்த்து சிரித்து ,"புரிஞ்சா சரி ஏதோ கொஞ்சம் இருக்குன்னு நான் நினைக்கிறேன்" என அவன் கூற

அதை கேட்ட அவளோ," நான் உன்னை புரிஞ்சுக்கிற மாதிரி நீ என்னை புரிஞ்சுக்கலையே அதுதானே என்னோட பிரச்சினை" என்று கூற

அதைக் கேட்டு அவனும் ,"உன்னை என்ன புரிஞ்சுக்கலைன்னு சொல்லு புரிஞ்சிக்க முயற்சி பண்றேன்?? அப்படி நீ என்ன என்னை புரிஞ்சுகிட்ட???" என கேட்டான்..

அவளோ ,"இதையும் நான்தான் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிற பார்த்தியா??? " என கோபமாக கேட்டவளுக்கு நேற்று நடந்த விசயம் ஞாபகத்துக்கு வந்து போனது...

அவளின் கண்ணை பார்த்து அவனோ ,"எனக்கு புரியற மாதிரி நீ சொல்லலன்னு அர்த்தம்" என்க அவளோ கடுப்பாகி ,"உனக்கு புரியவே வேண்டாம் உன் கிட்ட போய் பேசிட்டு இருக்கேன் பாரு இனி நான் உன்கிட்ட பேசவே மாட்டேன்... அப்புறம் உன்னை கட்டிக்க அந்த அதிதி காத்துக்கிட்டு இருக்கா அவ என்கிட்ட கேட்டா நீ என்ன ஜெகதீஷ்க்கு அட்ஜஸ்ட்மென்ட் பண்றயா அப்படின்னு நீதான் உன்னோட செய்கை தான் என்னை அசிங்கப்படுத்துது " என கோபமாக கூற

அதை கேட்ட அவனோ கூலாக ," ஆமாம் லைஃப் லாங் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுவேன்னு சொல்ல வேண்டியது தானே" என்க அவளோ மேலும் கடுப்பாகி," உன்னை மாதிரி நான் இல்லை என்னை எவ்ளோ கேவலமா நெனைச்சு இருக்க நீ??? நான் என்ன அவளை போலயா?? உன் புத்தி ஏன் இப்படி இருக்கு நீ எனக்கு தாலி கட்டி இருக்க?? அது மறந்து போச்சா உனக்கு??? அதெப்படி பொண்ணுங்க அப்படின்னா கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கிறது தானே உன்னோட வழக்கம் அவகிட்டேயும் அப்படி தான் நடந்திருக்கியா என்ன அவ அவ்வளவு திமிரா என்கிட்ட பேசுறா??" என அவள் கூற,

அவனோ அவள் பேசிய பேச்சில் இலேசாக கடுப்பு ஆனவன்,"அவளை கிஸ் பண்ணி இருந்தாலும் பண்ணி இருப்பேன் இன்னும் பண்ணுவேன் ..ஆமாம் தினமும் ஒரு பொண்ணு இல்லனா என்னால தூங்க முடியாது மரமண்டை நான் என்ன பேசுறேன்னு கேட்கவே மாட்டியா நான் பேசுனதெல்லாம் ரீவைண்ட் பண்ணி பாரு உனக்கு அப்ப புரியும் சரியான இம்சை உன்கிட்ட போய் பேசுறேன் பாரு எவளாவது ஒருத்தி ஏதாவது சொன்னான்னா என் மேல தான் கோபப்படுவியா??? போகணும்னா இந்த அஞ்சு வருஷத்துல எப்ப வேணா போய் இருக்கலாம்.. அஞ்சு வருஷம் கழிச்சு வந்து உன் கழுத்துல தாலி கட்டி இப்படி பேசிட்டு நின்னுட்டு இருக்க மாட்டேன்... இப்ப வரைக்கும் தோணல இனி அப்படி தோன வெச்சிடாத" என்க அதை கேட்டவளோ கோபமாக அவனை எரித்து விடுவது போல பார்த்தவள் அவனோ அவள் பேசிய பேச்சில் எழுந்த கோபத்தில் செட்டுக்கு சென்றான்...

அதற்குள் இவனும் இல்லை இவளும் செட்டில் இல்லை என்பதை கண்ட அதிதி கடுப்பாகி விட்டாள்.. மனதுக்குள் சுபத்ரா பேசிய வார்த்தைகளை வலம் வந்து கொண்டிருந்தன அவளின் உறுதியான பேச்சு அதிதியை அதிர வைத்தன...

இப்போது செட்டில் இவர்கள் இருவரும் இல்லாததை கண்டு அவளுக்கு சந்தேகம் வலுத்தது அவளிடம் தோற்கக் கூடாது என ஏனோ அதிதி எண்ணினாள்..

சுபத்ராவை விட தானொன்றும் குறைந்து போய்விடவில்லை என்பது அவளுடைய எண்ணமாக இருந்தது.. அந்த நேரத்தில் சற்றே அகங்காரம் அவளுக்கு வெளிப்பட்டது... அதனால் கூலாக இந்த சினிமா துவங்கும் போது போடப்பட்ட பூஜையில் அவளும் ஜெகதீஷும் எடுத்துக்கொண்ட செல்பியையும் இந்த சினிமா படபடப்பில் அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட செல்பியையும் அழகாக நெட்டில் வலம் விட்டாள் அதிதி..அது மிக விரைவில் ஒரு வியாதி போல எல்லா பக்கமும் பரவியது..

இன்றைய ஊடகங்கள் இந்த சிறு படத்தை வைத்துக்கொண்டு அவர்களே கட்டுக்கதை எழுதி தள்ளி விட்டனர்.. அதுவும் எப்படி என்றால் ராகவை பார்த்துக்கொண்டு நேராக ஜெகதீஷ் செட்டுக்கு வருவதற்குள் ஜெகதீஷ் மற்றும் அதிதி இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் இந்த திரைப்படம் முடிந்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று செய்தி வரும் அளவுக்கு விஷயம் பரவி விட்டது...

அதை செட்டுக்குள் வந்ததும் ராம் மூலம் சமூக வலைதளங்களில் பரவி வரும் விஷயத்தை அறிந்த ஜெகதீஷ் எந்த அதிர்ச்சியும் வெளிப்படுத்தாமல் இது எப்பொழுதும் வரும் செய்திதானே என்பது போல கூலாக விட்டு விட்டான் அவனுடைய முகத்தில் ஏதாவது தென்படும் என எதிர்பார்த்த அதிதிக்கே கொஞ்சம் அவனுடைய செய்கை அதிசயமாகத் தான் இருந்தது அவன் எப்பொழுதும் போல அவனுடைய வேலைகளில் ஈடுபட்டான்...

ஆனால் இதைக் கண்ட சுபத்ராவுக்கு அவ்வளவு எளிமையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை கடும் கோபத்தில் இருந்தாள்... முதலிலேயே மன உளைச்சலில் இருந்த அவளுக்கு இந்த புகைப்படமும் அதில் வரும் செய்தியும் எளிமையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை...

உடனே அவன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள அது எட்டாக்கனியாக அமைந்தது அவன் போனை எடுக்கவில்லை மாறாக அவனுக்கு மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பினாள்

"இதுதான் உன்னோட முடிவா?? அப்போ நீ என்னை டிவோஸ் பண்ண போறியா?? அவளை கல்யாணம் பண்ணிக்க போறியா என்கிட்ட சொல்லவே இல்ல நீ அவளை காதலிக்கிறேன்னு என் கிட்ட சொல்ல உன்னால முடியல ஆனால் மத்தவங்க கிட்ட நீ சொல்ல தயாராகிட்ட போல ஆமாம் நாம் என்ன காதலிக்கவ்வா செய்தோம் நீ என்கூட லஸ்ட்க்காக இருந்த நான் இதை சொன்னால் நீயும் அதுக்காக தான் என் கூட இருந்தேன்னு சொல்ல போற அப்படித்தானே இந்த தடவை எதுவாக இருந்தாலும் தெளிவாக சொல்லிடு உன்னை நான் எப்படியும் நம்ப போறது இல்ல இப்போ வரைக்கும் நம்பாமல் தான் இருக்கேன் நான் வேண்டாம்னாலும் என்கிட்டே சொல்லிடு நான் அதையும் ஏற்றுக்கொள்ள தயாராகத்தான் இருக்கேன் அப்பதான் நீ எப்படி வந்தாலும் உன்னை ஏத்துக்க தயாராக இருக்காளே" என்று வாய்க்கு வந்தது போல அவள் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்து இருந்தாள்..அவளுக்கு மனமே சரியில்லை..அவளின் தாயை காண வேண்டும் என்பது போல இருந்தது..

நேராக ராணியை காண சென்றாள்...அவரோ மகளின் முகத்தை பார்த்து ,"என்னாச்சு" என கேட்க அவளோ ,"இன்னும் என்ன ஆகணும் இப்போ எடுத்துட்டு இருக்க படம் முடிஞ்சா உன்னோட மருமகனும் அந்த நடிகை அதிதியும் கல்யாணம் பண்ணிக்க போறாங்களாம்" என்று கூற அதைக் கேட்ட ராணி ,"அவன் உன்கிட்ட சொன்னானா??" என்று கேட்க

"கூடிய சீக்கிரத்துல அவன் சொல்லுவான் நீயும் கேளு இதுக்குத்தான் நான் வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன் நீதான் டிராமா பண்ணிட்டு அவனை கட்டிக்க வச்ச இப்ப பாரு எங்க கொண்டு வந்து விட்டு இருக்கான்னு" என்று கூற அதைக் கேட்ட அவரோ ,"சரி அவன் சொல்லும்போது நான் கேட்டுக்குறேன்" என்று கூறிவிட்டார்..

"எனக்கு மனசு சரியில்ல கொஞ்ச நேரம் உன்னோட மடியில் படுக்கணும்" என்று அவள் கூற அவரும் தன் மகளை மடியில் படுக்க வைக்க அவளோ தன் தாயின் மடியில் படுத்தவளுக்கு அழுகை முட்டியது...ராணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை...

அவள் தவறுதலாகத்தான் புரிந்து இருக்கிறா என தெரியும் இதைப்பற்றி அவனிடம் பேச வேண்டும் எனவும் குறித்துக் கொண்டார்.. அழுது அழுது அவள் உறங்கவும் நேராக ஜெகதீஷை அழைத்தார் ராணி..

அந்த நேரம் அவன் அவளுடைய மெசேஜை படித்துக் கொண்டுதான் இருந்தான் இவர் அழைக்கவும் ,"என்ன உங்க மக டிராமா பண்ணினாளா ??? "என கேட்டான்...

"ஆமாம் இங்கே தான் இருக்கா என்னப்பா இதெல்லாம்" என அவர் கேட்க ,"அவ என்ன லூசா நான் தெரியாம தான் கேட்கிறேன்?? நான் இருக்கிற ஃபீல்டுல இதெல்லாம் சர்வ சாதாரணம் இது கூட அவளுக்கு தெரியாதா இது கூட புரிஞ்சுக்க முடியாத முட்டாளா அவ" என அவன் கேட்கவும்

அதற்கு அவரோ ,"அவ உன்ன ரொம்ப நேசிக்கிறா அது உனக்கு புரியுதா இல்லையா"

"எனக்கு புரியுது அது அவளுக்கும் புரியனும் இல்ல எனக்கும் அவளை பிடிக்கும் பிடிக்காமல் இல்லை அது அவளுக்கு தான் புரிய மாட்டேங்குது" என்று அவன் கூறினான்..

"அவ எதிர்பார்க்கிறது நீ அவளை காதலிக்கிறயா அவ மேல ஆசை வச்சிருக்கியா உண்மையான அன்பு இருக்கா இதெல்லாம் அவளுக்கு தெரியணும் அதுக்காகத்தான் அவ இப்படி இருக்கான்னு எனக்கு தோணுது" என்று அவர் கூற

"அம்மா அதெல்லாம் இல்லாமலா அவ கூட நான் பழகி இருப்பேன் எனக்கு அவளை பிடிக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. அவதான் என்னுடைய எல்லாமே அவ மேல விருப்பம் இல்லாமலா நான் இந்த அஞ்சு வருஷமும் இப்படி சுத்திட்டு இருக்கேன் எனக்கு எப்பவும் அவ தான் வேணும் அவ மட்டும் தான் வேணும்" என்க அவருக்கு அவன் தன் மகளை எவ்வளவு விரும்புகிறான் என புரிந்தது அதுவே அவருக்கு சந்தோஷமாக இருந்தது...

இருந்தாலும் இருவருக்கும் ஒரு தாயாக ராணி ஜெகதீஷிடம்,"சில பேருக்கு காதலை சொன்னாத்தான் பிடிக்கும்" என்று ராணி கூற அந்த இடத்தில் அவனுக்கு விளங்கியது அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று உடனே அவனும்," சரி நீங்க அமைதியா இருங்க இனி நான் அவளை பார்த்துக்கிறேன் அவளுக்கு என்ன வேணும்னு எனக்கு புரிஞ்சிடுச்சு.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க அதுவரைக்கும் அவ இப்படியே தேவதாசியா அவ வளத்துற நாய் கூட சுத்திகிட்டு இருக்கட்டும் என்று அவன் கூறினான்..

அதன் பிறகு அவள் அந்த செட்டுக்கு போகவே இல்லை.. அவனும் அவளை வற்புறுத்தவில்லை இதற்கு இடையே அவன் அவளை அழைக்கவும் இல்லை அவளிடையே பேசவும் இல்லை அதுவும் அவளுக்கு தொல்லையாக இருந்தது.. என்னை மறந்து விட்டான் என எண்ணினாள்..அவளுக்கு வேதனையாக இருந்தது...

இந்த பக்கம் அதிதி அவனோடு வழிந்து கொண்டு சுற்றிக்கொண்டு இருந்தாள் ஜெகதீஷ் எதையும் கண்டுகொள்ளாமல் படத்தை முடிக்கும் முனைப்பில் இருந்தான்...

இதற்கிடையே அவளுடைய பிறந்த நாளும் வர ஜெகதீஷ் அதற்கு செல்லவும் இல்லை அவளை கொண்டாட விடவும் இல்லை... அவளின் பிறந்தநாளில் கூட வேலை வைத்து விட்டான்... ஆம் வேலை என நாயகர்களையும் நாயகிகளையும் பெண்டு நிமிர்த்தி விட்டான்...

இந்த படத்தை முடித்துவிட்டு தான் அவன் தன் குடும்பத்தோடு இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்.. குடும்ப பிரச்சினை இப்போது இதில் கலக்க விட்டால் அவனால் திருப்தியாக படத்தை எடுத்து முடிக்க முடியாது என கருதி அமைதியாக படத்தை முடிக்கும் உழைப்பில் இருந்தான் அதேபோல அந்த படத்தை 90 நாட்களுக்குள் எடுக்க இருந்த படத்தை 75 நாட்களுக்குள் முடித்து விட்டான்..

இனி இதர வேலைகள் தான் அவனுக்கு இருந்தது படத்தை சிறப்பாக அவன் நினைத்தது போல எந்த பாதிப்பும் இன்றி எடுத்து முடித்து விட்டான்... இன்னும் அரை நாள் ஷூட்டிங் தான் இருக்கிறது அதுவும் ஒரு ஷாட் தான் எடுக்க வேண்டும் ...

பொறுத்து பார்த்த அதிதி படப்பிடிப்பு முடிந்ததும் ஜெகதீஷிடம்," ஜெகதீஷ் நான் இதுவரை யார்கிட்டேயும் என் மனசை வெளிப்படுத்தினது கிடையாது ஆனால் உங்களை பார்த்து சொல்லாமல் இருக்க முடியல இப்போ அல்மோஸ்ட் எல்லா சோசியல் மீடியாலையும் நம்மள பத்தி தான் பேச்சு போயிட்டு இருக்கு நாம ஏன் பியூச்சர்ல ஒன்னா டிராவல் பண்ண கூடாது" என்க

"அதுக்கு என் பொண்டாட்டி என்னோட இரண்டு பசங்க ஒத்துக்கணுமே" என அவன் பட்டென்று கூறி அவளோ அதை கேட்டு அதிர்ந்தாள்...

"என்ன உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா???"

"ஆமாம் ஒரே ஒரு மனைவி இரண்டு பசங்க இருக்காங்க" என அவன் கூற

அதை கேட்ட அவளோ," இவ்வளவு நாள் நீங்க இத சொன்னதே இல்ல யாருக்குமே உங்களுக்கு கல்யாணமான விஷயம் தெரியாதே அவங்களை எங்கேயுமே நாங்க பார்த்ததில்லையே" என்று கேள்வி மேல் கேள்வி அவள் அடுக்க

"அவனோ இதுவரைக்கும் சொல்லணும்னு தோணுது இல்ல இப்போ சொல்றேன்" என்றவன் சிரித்தபடி அங்கிருந்து சென்று விட்டான் அதிதிக்கு அப்படியே இடி விழுந்தது போல இருந்தது அவளுடைய அம்மா வந்து," என்னாச்சு பேபிமா" என்று கேட்க," அம்மா அவனுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகள் இருக்காம்" என்று கூற

"நோ நோ உன்னோட மார்க்கெட் போயிடும் இவனெல்லாம் வேண்டாம் இன்னும் பத்து வருஷத்துக்கு நீ படம் நடிக்கணும் அந்த அளவுக்கு அழகு உன்கிட்ட இருக்கு" என்று அவளுடைய அம்மா கூற அதைக் கேட்ட அவளும் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்பது போல சென்று விட்டாள்..

இவ்வளவுதான் இவளுடைய காதல் கத்திரிக்காய் எல்லாம்!! இவள் எல்லாம் தேடுவது கூட சுற்ற ஒரு ஆள் அவளுடைய தேவைகளை அவளுடைய ஆசைகளை எல்லாம் நிறைவேற்ற ஒரு ஆள் அது ஜெகதீஷாக இருக்க வேண்டும் என நினைத்தாள் ஜெகதீஷ் குடும்பஸ்தன் என்று தெரிந்ததும் அவளுக்கு அவன் வேண்டாதவன் ஆகி போனான்...

அவளிடம் விஷயத்தை கூறியவன் தன் திரைப்படத்தின் கடைசி நாள் அன்று தன் மாமியார் ராணி உடன் தனது இரு குழந்தைகளையும் அழைத்து செட்டுக்கு வர சொன்னான்..

அவரும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வர குழந்தைகளை கண்டவன் அவர்களை வாரி எடுத்து முத்தம் வைத்து அனைவருக்கும் குழந்தைகளை அறிமுகப்படுத்தி வைக்க எந்த சோசியல் மீடியாவில் இரு மாதங்களுக்கு முன்னால் அதிதி மற்றும் ஜெகதீஷை இணைத்து வைத்து பேசினரோ அவர்கள் அனைவரும் வாயை பிளந்து கொண்டு ஜெகதீசின் குழந்தைகளையும் ஜெகதீஷின் படத்தையும் பகிர்ந்து வந்தனர்... அனைவருக்கும் இவன் திருமணம் ஆனவன் என்ற செய்தியை அதிர்ச்சியாக இருக்க யார் அந்த பெண் என அவளைத்தான் வலை போட்டு தேடிக் கொண்டிருந்தனர்... ஆனால் அவனுடைய மனைவி யார் என்பது மட்டும் அனைவருக்கும் தெரியாமல் இருந்தது...

ஆனால் அவளோ எதுவும் வேண்டாம் என ஒதுங்கி இருந்தாள்... இராணியோ எப்போதும் போல மகளை கண்டு கொள்ளாமல் இருந்தார்.. ரேவதியும் அழைத்து விஷயத்தை கூறியிருக்க அவரும் அவள் ஏன் மௌனமாக இருக்கிறாள் என கேட்காமல் அமைதியாக இருந்து கொண்டார்...

அவளும் தன் போனில் அவனும் குழந்தைகளும் இருக்கும் படம் சோசியல் மீடியாவில் வலம் வருவதை பார்த்தாள்...பார்த்தவளுக்கு எரிச்சல் தான் வந்தது தன்னை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களுடன் போஸ் கொடுக்கிறான் அப்போ நான் தான் வேண்டாதவளா என எண்ணினாள் சுபத்ரா...அவன் மீது அளவு கடந்த கோபத்தில் இருந்தாள் அவனின் அவள்!!!!



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top