Share:
Notifications
Clear all

அத்தியாயம் 26

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

"என்ன பேபி ஷூட்டிங் தான் முடிஞ்சதே இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க வா ரூமுக்கு போகலாம்" என அதிதியின் அம்மா கேட்க ,

"மம்மி ஒரு நிமிஷம் நான் வரேன்" என்றவள் சுபத்ராவின் பின்னால் சென்று ,"ஹலோ சுபத்ரா வெயிட் பண்ணுங்க" என்று கூற சுபத்ரா திரும்பி பார்க்க ஆடி அசைந்து வந்த அதிதி எடுத்த எடுப்பிலேயே,"என்ன இப்போ நீங்க எல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா??? " என்று நக்கலாக கேட்டாள்....

இல்ல புரியல என்று சுபத்ரா கூற," இல்ல முன்னாடியெல்லாம் இந்த பீல்டுல நடிகை இங்கதான் நெக்ஸ்ட் சான்ஸ் கிடைக்கிறதுக்காக அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுவாங்க ஆனா இப்போ எல்லாம் ஃபுட் சப்ளை பண்றவங்க எல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் பண்றாங்களா என்ன??? டைரக்டர் கேரவனுக்கு அடிக்கடி நீங்க மட்டும் ஜூஸ் கொண்டு போறீங்களே அதனால கேட்டேன்" என அவள் கேட்கவும், அதைக் கேட்டதும் அவளுக்கு எங்கிருந்துதான் ஆத்திரம் வந்ததோ தெரியவில்லை..

சுபத்ரா கோபமாக அவளைப் பார்த்து ,"வந்தோமா நடிச்சோமா போனோமான்னு இரு.. தேவையில்லாம பேசி என்கிட்ட உன்னோட மரியாதையை எடுத்துக்காத அட்ஜஸ்ட்மென்ட் பண்றவங்களுக்கு தான் யார் யார் கூட பேசினாலும் அதே மாதிரி தோணும் நீங்க அப்படித்தான் பண்ணி மேல வந்தீங்களா அதனால தான் உங்களுக்கு இப்படி தோணுதா??? வந்துட்டா யார் யார் கூட போறாங்கன்னு வேடிக்கை பார்க்க"என்று சுபத்ரா கேட்கவும் சுர்ரென்று அதிதிக்கு கோபம் வந்தது..

அவளுடைய ரேஞ்ச் என்ன தகுதி என்ன இவளெல்லாம் இவளிடம் பேசுகிறாளா என கோபத்தோடு," எண்ணி யார்கிட்ட என்ன வார்த்தை பேசிட்டு இருக்கன்னு தெரியுமா???" என கேட்க

"என்கிட்ட மரியாதை கொடுத்தா மரியாதை கிடைக்கும்.. இப்படி மட்டுமே பேசினால் மட்டமான பதில்தான் கிடைக்கும்!!! அப்புறம் இந்த டைரக்டர் பின்னாடி சுத்துற வேலைய விட்டுடுங்க" என்று சுபத்ரா பட்டென்று கூறிவிட்டாள்...

அதைக் கேட்டதும் அவள் முகம் அரண்டு போக இருந்தாலும் தன்னுடைய கெத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று கருதி ,"நான் யார் பின்னாடி போனாலும் உனக்கு என்ன ஜெகதீஷ் பின்னாடி நான் அப்படித்தான் போவேன் அதை சொல்ல உனக்கு ரைட்ஸ் இருக்கு" என்று அவள் கூற அதைக் கேட்ட சுபத்ரா நக்கலாக சிரித்து ,"நீ போய்தான் பாரு அப்புறம் தெரியும்.." என்று கூறிவிட்டு அவ்விடம் நகர்ந்தாள்...

"ஹேய் அப்படி அவனை கரெக்ட் பண்ணி நான் கல்யாணம் பண்ணிட்டா என்ன சொல்ற???" என்று வேண்டுமென்று தன் நிலையிலிருந்து இறங்கி அதிதி கேட்டாள்... ஏனெனில் போயும் போயும் ஒரு ஃபுட் சப்ளை செய்யும் இவளிடம் தோற்கக் கூடாது என்ற எண்ணம் அதிதிக்கு வெகுவாக இருந்தது..

அதனால் அவள் கேட்க ,"அது உன் வாழ்க்கையில் நடக்காது முடிஞ்சா ட்ரை பண்ணி பாரு ஆல் தி பெஸ்ட்" என்று நக்கலாக கூறிவிட்டு சுபத்ரா சென்றாள்.. அவளது குரலில் அவ்வளவு உறுதி தென்பட்டது...அந்த உறுதி அதிதியை அசைத்து பார்த்தது என்றே கூறலாம்...

அவள் நேராக வீட்டுக்கு தான் சென்றாள்... என்னதான் அவனை சமாதானம் செய்து விட்டு வந்தாலும் குழந்தைகள் அழும் அவளுக்கு மனமே இல்லை அவளுக்கும் ராகவ் எப்படி நடந்து கொண்டதில் வருத்தம் தான் என்னை இருந்தாலும் குழந்தைகளை அடித்திருக்கக் கூடாது என்ற கோபம் அவளுக்குள் இருந்தது அதனால் குழந்தைகளை பார்த்துவிட்டு வரலாம் என சென்றாள்..

நள்ளிரவு ஆகி இருந்தது...அவள் கிளம்பும் போதே ரேவதிக்கு அழைத்து கூறி இருக்க அவள் இவள் வரவும் கதவை திறந்து கொடுத்து ,"பசங்க அவர் கூட தூங்குறாங்க" என்று கூற அவளோ," சரிங்க அத்தை அவங்க அழுததும் மனசு கேட்கல அதனாலதான் வந்தேன்" என்று கூற

அவரோ பதட்டதோடு,"அவன்கிட்ட சொல்லுமா இந்த விஷயத்தை பெருசு பண்ண வேண்டாம் இப்பதான் மாமா கொஞ்சம் மாறி இருக்காரு திரும்ப ஏதாவது பிரச்சனை ஆகிவிடும் நானே எல்லாம் சரியாகும் அப்படிங்கிற நம்பிக்கைல இருக்கேன் எல்லாமே தப்பு தான் ஒத்துக்கிறேன் குழந்தைகளை அடித்து இருக்க கூடாது... அவன் எப்போ அந்த கல்யாணம் எல்லாம் நினைச்சோ அப்ப இருந்து இப்படித்தான் சட்டு சட்டுனு கோபம் வருது நானும் அவனுக்கு ஏதாவது ஒரு நல்லது நடக்கும் என்று காத்துட்டு இருக்கேன்...சின்ன பசங்க உடனே மறந்துடுவாங்க இப்போ கூட மாமா கதை சொன்னதும் அதை மறந்துட்டாங்க பெரியவங்களும் அதை மனசில் வைச்சுக்க வேண்டாமே??" என்க

"சரிங்க அத்தை நான் பெருசா எடுத்துக்கல நீங்க கவலைப்படாதீங்க" என அவள் அவரை சமாதானம் செய்தாள்...

"அவன்கிட்டயும் சொல்லுமா.." என அவர் கூற,

"சொல்றேன் அத்தை" என்று கூறியவள் அவனுடைய அறையில் சென்று படுத்து கொண்டாள்.. அங்கு சென்றதுமே அவளுக்கு அவனின் ஞாபகம் வந்து அவளுடைய மனதை ஆக்கிரமித்து கொண்டது..

அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என அவளுக்கு தெரியும் ஆனால் அதை அவனாக கூற வேண்டும் என எதிர்பார்க்கிறாள் அதுதான் அவளுடைய ஆத்திரமும் பிறகு அவள் ஒன்றும் பழசை மறக்காமல் இல்லை அவன் கூறுவது போல அதிலிருந்து வெளியே வர அவளால் முடியவில்லை...

காதலால் தன்னை தீண்டி இருந்தால் அவளுக்கு இவ்வளவு வலித்திருக்காதோ என்னவோ ஆனால் அவன் தம்பியை பழிவாங்க தன்னை உபயோகித்து கொண்டவன் தானே என்று நினைக்கும் போதே அவளுக்கு ஆத்திரம் தான் வந்தது...

ஆளுயர்ந்த அவனுடைய புகைப்படத்தை பார்த்தவள் அதில் கம்பீரமாக சிரித்துக் கொண்டிருக்கும் அவனது முகம் அவளை வெகுவாக ஈர்த்தது... தாடி மீசை நீண்ட முடி இது இல்லை என்றால் அந்த படத்தில் இருப்பது போலவே இருப்பான் எப்படித்தான் இவனை பிடித்ததோ என நூறாவது முறையாக கேட்டுக் கொண்டவள் அவன் அருகே வந்தால் மட்டும் அனைத்துமே மறந்து போய்விடுகிறது என்ன கூற வந்தோம் ஏது கூற வந்தோம் எதுவுமே நினைவில் வர மறுக்கிறது அதற்கு காரணம் என்ன என அவளுக்கு புரியவில்லை

இறுதியாக அவளோ ,"என்னை தூங்க கூட நீ விட மாட்டியா" என்று வாய் வழியாகவே கூறியவள் கண்களை இறுக மூடி கொண்டாள்...குழந்தைகள் வேறு இல்லாதது அவளுக்கு உறக்கம் வர மறுத்தது...எப்படியோ ஏதேதோ யோசித்து அவள் உறங்கி போனாள்...

மறு நாள் காலை அழகாக விடிய செட்டில் தேவையானது எல்லாம் போன் மூலமே தயார் செய்தவள் குழந்தைகளுடன் இருந்து அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு செட்டுக்கு செல்லலாம் என அவள் நினைத்து இருந்தாள்..

அதே போல குழந்தைகள் எழவும் தங்களுடைய அம்மாவை கண்டதும் நேற்று நடந்த விசயங்கள் எல்லாம் மறந்து போக," பாட்டி அது செஞ்சு கொடுத்தாங்க தாத்தா கதை சொன்னாங்க" என நல்ல விஷயங்கள் மட்டும் தான் குழந்தைகளுக்கு நினைவில் இருந்தது...

அதுவே அவளுக்கு நிம்மதியாக இருக்க குழந்தைகளை எல்லாம் தயார் செய்து விட்டு அவர்களை பள்ளிக்கு அனுப்பிய பின் பெரியவர்களிடம் விடை பெற்று கொண்டு அவள் படப்பிடிப்பு செட்டுக்கு சென்றாள்...

அங்கு போனால் அனைவரும் அமைதியாக இருக்க ராம் தான் ஏதோ ஒரு சீனை இயக்கிக் கொண்டு இருந்தான்.. அவன் அங்கு காணாமல் போக அங்கு அவளுக்கு பதிலாக நின்று கொண்டிருந்த சரவணன் அருகே சென்றவள்," ஜெகதீஷ் எங்க??? ஏன் ராம் ஷூட் பண்றார்??" என்று கேட்க அவனோ அவளைப் பார்த்து முறைத்து கொண்டே,

சரவணன் அவளிடம் ,"உன் புருசன் ஏதோ முக்கியமான விஷயமா வெளியே போய் இருக்கான்" என்று கூற ,"அதுக்கு ஏன் நீ முறைக்கிற???" என்றாள் சுபத்ரா...

"அப்புறம் என்னால என்ன பண்ண முடியும் முறைக்க தான முடியும் வேற ஏதாவது செய்யவா முடியும்???" என்று அலுத்து கொண்டு ,"சரி நான் கிளம்புறேன் ஹோட்டலுக்கு போகணும்" என்க

அவளோ ஏதோ சரி இல்லையே என்று கருதி ஜெகதீஷ் எண்ணுக்கு அழைக்க அவனோ ஃபோனை எடுத்து ,"ஹலோ" என்க

"என்னாச்சு ஏன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரல ஏதாவது உடம்புக்கு முடியலையா???" என்று அவள் கேட்டாள்..

அவளுடைய அக்கறையை உணர மனமின்றி," அக்கறை ரொம்பத்தான் எனக்கு ஒன்னும் இல்லை ஒருத்தனை உடம்பு சரி இல்லாமல் பண்ணனும் அதுக்காக போய்ட்டு இருக்கேன்" என்க

அவளோ அதிர்ந்து ,"யாரை???" என்க

"என் கூட பிறந்தவனை" என கூற அதை கேட்டு அதிர்ந்த அவளோ ,"ஏய் அங்க எல்லாம் போகாத அவன் ஏதோ டென்ஷன்ல பண்ணிட்டான் அதுக்காக அவன் கிட்ட சண்டைக்கு எல்லாம் போகாத குழந்தைகளை அந்த விஷயத்தை மறந்துட்டு ஜாலியா ஸ்கூலுக்கு போயிட்டாங்க அதை சொல்லத்தான் போன் பண்ணினேன்... அத்தை ரொம்ப டென்ஷன்ல இருக்காங்க தயவு செஞ்சு பிரச்சனை பண்ணிடாத" என்று அவள் கூற

"அவங்க மறக்கலாம் நான் மறக்கல.. என்னோட அம்மாவுக்கு டென்ஷன் ஆகுறது ஒன்னும் புதிய விஷயம் எல்லாம் இல்லை" என்று ஜெகதீஷ் கூறினான்..

அதைக் கேட்டு அவளோ தலையில் அடித்துக் கொண்டு," இங்கே இவ்வளவு பேர் உனக்காக காத்துட்டு இருக்காங்க நீ சண்டைக்கு போறியா தயவு செஞ்சு வா விளையாடிட்டு இருக்காத இது சின்ன பிரச்சினையை பெருசு பண்ணிட்டு இருக்காத" என்க

"நீ அட்வைஸ் பண்ணாம மூடிட்டு போன வை டி நான் என்ன பண்ணனும் நான் பார்த்துக்கிறேன்...வந்துட்டா பெரிய இவ மாதிரி " என்றவன் போனை கட் செய்து விட அவளோ இவன் என்ன செய்ய போறானோ என கருதி ,"சரவணா நீயே இன்னிக்கு மேனேஜ் பண்ணிக்கோ நான் ஒரு முக்கியமான வேலையா வெளியே போறேன்" என்று கூற அவனும் சரி என்று தலையாட்டினான்...

அவளோ காரை எடுத்து கொண்டு நேராக இவர்களின் துணி கடைக்கு சென்று கொண்டு இருக்கும் போதே இவனுக்கு மட்டும் கோபம் எங்கிருந்து தான் வருதோ என்னை சுத்தல்ல விடுறதே இவன் வேலையா போச்சு என புலம்பி கொண்டே அவள் செல்ல

அங்கு ஜெகதீஷ் அவர்களின் கடையை அடைந்து விட்டான்...வெகு நாட்களுக்கு பிறகு அவன் அங்கு வருகிறான்...யாரும் தன்னை கவனித்து விடாதபடி ஒரு மாஸ்க் அணிந்து கொண்டு நேராக முதலாளி அறைக்குள் நுழைந்து கொண்டான்..

அங்கு அவன் நுழைந்த நேரம் ராகவ்வுக்கு கடன் கொடுத்து இருந்த ஆட்களில் ஒருவன் அவனுடைய சட்டையை தான் பிடித்து இருந்தான்...

"உங்க கிட்ட எத்தனை தடவை சார் சொல்றது எப்போ எங்க பணத்தை திருப்பி தருவீங்க???" என்று கேட்கவும் அவன் நுழையவும் சரியாக இருக்க அவனை கண்டதும் அதிர்ந்தான் ராகவ்...

ஏற்கனவே இவர்கள் சட்டையை பிடிக்கவும் அவமானத்தில் சுழன்று இருந்தவன் தீடிரென்று யாரோ வரவும் யார் என பார்க்க அவனோ கடும் கோபத்தில் தன்னுடைய மாஸ்க்கை கழட்டி கொண்டே வர அதை பார்த்த ராகவ் அதிர்ந்தான்...

அவமானத்தில் சுழன்றான்...இங்கே இவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.. யார் முன்னால் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று எண்ணினானோ அவன் முன்னால் கூனிக்குறுகி நிற்கிறான்.. அவன் முகம் அதிர்ச்சியில் இருக்கிறது என அவனுடைய முகமே ஜெகதீசுக்கு தெரியப்படுத்த அதைவிட தன் தம்பியின் சட்டையை பிடித்து இருப்பவர்கள் யார் இங்கு என்ன நடக்கிறது என தெரியாமல் குழம்பி போய் உள்ளே நுழைந்தான்..

இவனை கண்டதும் நீங்க டைரக்டர் ஜெகதீஷ் தானே என்று சட்டையை பிடித்தவனின் அருகே நின்று கொண்டிருந்த ஒருவன் கேட்க ஆமாம் என்று கூறவும் அவன் தன்னுடைய தம்பி ராகவை பார்த்துக்கொண்டே," எதுக்காக அவனுடைய சட்டையை பிடிச்சு இருக்கீங்க" என்று கேட்டான்

"சார் குடுத்த காசை திருப்பித் தராமல் இருந்தா எங்களை என்ன பண்ண சொல்றீங்க???" என்று கேட்கவும் ,"சட்டையிலிருந்து மரியாதையா கையை எடுங்க?? காசு கொடுக்கலைன்னா சட்ட மேல கை வைப்பீங்களா என்ன தைரியம் இருக்கணும் என்னோட தம்பி மேல கைய வைக்க" என்றான் ஜெகதீஷ்.. அதை கேட்டதும் ராகவ் தான் அதிர்ந்தான்..

அவன் கூறவும் சட்டையிலிருந்து கையை எடுத்த அவரோ," இப்பவே என்னோட பணத்தை கொடுக்க சொல்லுங்க நான் போறேன்" என்று அவன் கூறினான்...

அதை கேட்ட ஜெகதீஷ் ,"எவ்வளவு பணம் வேணும்???" என்று கேட்க அந்த நொடி ராகவ் அமைதியாக தான் இருந்தான்...அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது... அவர் கொடுத்த பணத்தின் அமௌன்டை சொல்ல நேராக ராமை அழைத்த அவனும் விஷயத்தை கூற அடுத்த பத்தாவது நிமிடத்தில் பணம் இவர் சொன்ன கைமாறபட்டது...

ராகவ் குனிந்த தலையில் நின்று கொண்டிருந்தான்...வந்தவர்களும் சென்று விட இப்போது ராகவ் மற்றும் ஜெகதீஷ் மற்றும் தான் அங்கு இருந்தனர்...

அவன் மீது கடும் கோபத்தில் தான் அவனை பார்க்க வந்தான் ஆனால் அவனது சட்டையை மற்றொருவன் கொடுத்திருக்கும் போது அந்த இடத்தில் ஒரு அண்ணனாக அவன் செய்ய வேண்டிய கடமை செய்தான்...பிறகு அவர்கள் சென்றதும்," என்னடா இதெல்லாம்" என கேட்டான்... அவன் எதற்காக வந்தானோ அதை மறந்து விட்டான்...

அவன் கேட்பது ராகவுக்கு கொஞ்சம் அவமானமாக தான் இருந்தது... இருந்தாலும் தன்மானத்தை காப்பாற்றி தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியவனாகிற்றே...

அதனால் ,"என்னை என்ன பண்ண சொல்ற தொழில் எப்படி பண்ணனும்னு தெரியாம முதலிலேயே மாட்டிட்டேன் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை.. நல்ல நேரத்தில் நீ வந்த என்னோட மானத்தை விட நம் அப்பா சேர்த்து வைத்த பெயரை நாசம் பண்ண போறேன் நினைச்சுட்டு இருந்தேன் ஆனா அதிலிருந்து என்னை காப்பாத்திட்ட" என்று கூற

அதை கேட்ட அவனோ ,"உன் மேல செம கோபத்தில் வந்தேன் ஆனா இங்க இருக்குற நிலைமை பார்த்ததும் அமைதி ஆயிட்டேன்.." என்க

அவன் என்ன சொல்கிறான் என புரிந்து,"எனக்கு இருந்த டென்ஷன்ல" என்று கூற

"அதை பத்தி பேசாத பேசினா நான் ஏதாவது சொல்லிட போறேன்" என்றவன் ,"அதுதான் உன்னோட அப்பா உனக்கு துணையை நிப்பாரு இவ்வளவு கடனானது பாத்துட்டு சும்மாவா இருக்காரு" என்று அவன் கேட்டான்..

"அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியாது அன்னைக்கு நடந்த சம்பவத்துக்கு அப்புறம் நானே தொழிலை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி அப்பாவை இதிலிருந்து விலக சொல்லிட்டேன் அதுக்கப்புறம் தான் இப்படி எல்லாம் கடன் ஆயிடுச்சு அப்பா கிட்ட சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாமல் தவிச்சிட்டு இருந்தேன்" என்று தன் மனதை ராகவ் முதன்முறையாக துறந்தான்...

அதைக் கேட்டு அவன் எதுவும் சொல்லவில்லை அவன் முகமே கூறியது ஜெகதீஷ் கடனை அடைத்தது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் அவனிடம் தோற்றுவிட்டது போல ராகவ் நினைத்தான்...

அதை அவனுடைய பார்வையிலும் அவனுடைய குணத்தை வைத்து புரிந்து கொண்ட ஜெகதீஷ் அந்த இடத்தில் அவனுடைய அண்ணனாகத்தான் இருக்க அவனால் முடிந்தது பகை எதுவும் முன்னோக்கி எடுத்து கொண்டு வர அவனுக்கு ஏனோ தோன்றவில்லை...

அதனால் அவனைப் பார்த்து ,"இப்போ தொழில்ல நெளிவு சுளுவை எல்லாம் கத்துக்கிட்டயா விருப்பமாத்தான் இந்த தொழிலை செய்யறியா??? இல்ல அப்பா கிட்ட இப்பவும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று செஞ்சிட்டு இருக்கியா" என்று அவன் கேட்க

"அஞ்சு வருஷம் இதிலேயே இருந்திருக்கேன் இதுல இப்போ நெளிவு சுளிவு எல்லாம் தெரியுது மேல வரணும்னு ஆசை இருக்கு ஆனா கடன் இருந்ததுனால என்னால மேல வர முடியல" என்று கூறினான்... அதுவே ஜெகதீசுக்கு ஏனோ போதுமானதாக இருந்தது அவன் விருப்பப்பட்டு தான் இந்த தொழிலை செய்கிறான் என புரிந்து கொண்டான்...

"அப்போ இதுலையே இருக்க உனக்கு விருப்பம் தானே அப்பாவுக்காகவோ இல்லை என்னை தோற்கடிக்கனும்னோ இல்ல இந்த கடை உனக்கு வேணும் அப்படின்னு நினைச்சு இதிலே இருக்கணும்னு ஆசைப்படுறியா???" என கேட்டான்..

அந்தக் கேள்வியில் சிறு அதிர்வு அவன் முகத்தில் தெரிந்தாலும்," இந்த கடையை விட்டு வெளியே போனாலும் இதே தொழில் தான் நான் செய்வேன்" என கூற அவனுடைய உறுதி அவனுக்கு பிடித்திருந்தது..

அதனால் மேற்கொண்டு யார் யாரையோ அழைத்த ஜெகதீஷ் பிறகு ,"நான் இப்போ எடுத்துட்டு இருக்க சூட்டிங்க்கு ஃபேஷன் டிசைனருக்கு உன்னால உதவ முடியுமா???" என கேட்டான்..

இது மிக பெரிய வாய்ப்பு அல்லவா அதை எப்படி வேண்டாம் என கூறுவான்...என எண்ணி முடியும் என்று கூறினான்...அவன் அதை கூறவும் ராகவ் முகம் மலர்ந்தது..

" சரி அவங்க வந்து உன்னை பார்ப்பாங்க அவங்களோட நீ டிஸ்கஸ் பண்ணிக்கோ!!!...அவங்களுக்கு தேவையான மெட்டீரியல் ரேட் எல்லாம் நீ பேசிக்கோ.. உனக்கு தெரிஞ்ச சப்ளையர் கிட்ட இருந்து நீ டிரஸ் மெட்டீரியல் வாங்கி அவங்களுக்கு கைமாத்த வேண்டி இருக்கும்" என்றவன் அவனைப் பார்க்க ராகவ் வெட்கி தலை குனிந்த படி இருந்தான்...

அதை கண்ட ஜெகதீஷ் ,"இப்பவும் சொல்றேன் நான் அண்ணன் தான் நீ தம்பி தான் அதை யாராலும் மாற்ற முடியாது உன் மேல செம கோபத்துல தான் வந்தேன் ஆனா இங்க நடக்குறதை பார்த்து என்னோட கோபம் எல்லாம் எங்க போச்சுன்னு தெரியல.. நான் வந்ததும் நல்லததா தான் போச்சு" என கூற

தான் செய்த தவறையெல்லாம் மறந்து தனக்காக இப்படி ஒரு உதவியை செய்திருக்கும் தன் அண்ணனை எண்ணி அவனுடைய நல்ல உள்ளத்தை எண்ணி ராகவுக்கு கொஞ்சம் அசிங்கமாகத் தான் இருந்தது.. அவனிடம் பேசக்கூட வாய் பெரிதாக வரவில்லை அவனை பார்த்தாலே சண்டை போட வேண்டும் அவன் தனக்கு கீழே தான் என்பது போல ஜெகதீஷிடம் பேச வேண்டும் என்று தான் ராகவுக்கு தோன்றும் ஆனால் இந்த முறை அப்படி தோன்றவில்லை...

"ரொம்ப நன்றி ஜெகா" என்க அதை கேட்ட அவனோ ,"உன்னோட நன்றி எல்லாம் நீயே வச்சுக்கோ நான் கொடுத்த காசை கடனா தான் கொடுத்து இருக்கேன் எனக்கு வட்டி எல்லாம் வேண்டாம் அசல் மட்டும் உன்னால எப்ப முடியுமோ அப்ப கொடுத்திடு நானா உனக்கு உதவி செஞ்சேன்னு உனக்கு தோண வேண்டாம் கடன் தான் கொடுத்து இருக்கேன் புரியுதா" என்று தன் தம்பியின் குணமறிந்தும் அவன் தற்போது இருக்கும் நிலை அறிந்தும் ஜெகதீஷ் கூற அதை கேட்ட ராகவ் சரி என்று சந்தோஷமாக தலையாட்டினான்...கண்டிப்பாக அந்த பணத்தை அவன் கொடுக்கவும் செய்வான்...

"சரி நான் வரேன் சூட்டிங் டைம் ஆச்சு நான் கிளம்பனும் அப்புறம் பசங்க மேல எல்லாம் கை வச்சிட்டு இருக்காத என்ன" என எச்சரிக்கை செய்ய ராகவ் சிரித்தபடி சரி என தலையாட்டினான்..

"சரி நான் கிளம்புறேன்" என்று கூறி மேற்கொண்டு எதுவும் பேசாமல் ஜெகதீஷ் கிளம்ப தயாராக அந்த சமயம்," ஜெகா ஒரு நிமிஷம்" என்று கூறிய ராகவ் வேகமாக வந்து தன் அண்ணனை அனைத்து கொண்டு ,"எல்லாத்துக்கும் நன்றி எல்லாத்துக்கும் சாரி சின்ன வயசுல இருந்து பல கோபம் உன் மேல இருந்துச்சு அதையெல்லாம் முதிர்ச்சி இல்லாத கோபம்னு எனக்கு தெரியும் இருந்தாலும் விட்டுக் கொடுக்க மனசு இல்ல இப்போ சொல்றேன் நீ எனக்கு அண்ணனா இந்த உதவியை செஞ்சிருக்க இதை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன்.. தயவு செஞ்சு இங்க நடந்தது அப்பா கிட்ட மட்டும் சொல்லிடாத அவர் தாங்க மாட்டார்" என்க

அவனோ திருப்பி தன் தம்பியை அணைத்து ,"ரொம்ப சென்டிமென்ட் எல்லாம் பேசாத அதெல்லாம் உனக்கும் செட்டாகாது கேட்கிற எனக்கும் செட் ஆகாது.. நான் அவர்கிட்ட எல்லாம் சொல்ல மாட்டேன் அவர்கிட்ட மனுஷன் பேசுவானா??" என்று கூறிக் கொண்டிருந்தான் அதைக் கேட்டு ராகவ் சிரிக்க ஜெகதீஷும் அவனுடைய தோளில் கையை போட்டு சிரித்தான்...

இங்கு என்ன நடக்கப் போகிறதோ என பதைபதைப்போடு சுபத்ரா கடைக்கு படபடப்போடு வர அங்கு அவள் கண்ட காட்சி அவளை மேலும் அதிர வைத்தது..

ஆம் இந்நேரம் சண்டை நடந்திருக்கும் அண்ணனும் தம்பியும் ரோட்டில் கட்டிப்பிடித்து உருண்டு இருப்பார்கள் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டிக்கொண்டு வந்த அவளுக்கு இவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டு கட்டிப்பிடித்து நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சி தான் வந்தது..

அவளைக் கண்ட இருவரும் வெட்கத்தோடு மெல்லிய புன்னகை உதிர்க்க அவளோ அதிர்ச்சி மாறாமல் வாயை பிளந்து கொண்டு நின்று கொண்டிருந்தாள்...

"இங்கு என்ன நடக்குது" என அவள் தன் கண்களை துடைத்துக் கொண்டு கேட்க

ஜெகதீஷ் ,"பார்த்தா தெரியல என்னோட தம்பி கூட நிக்கிறேன்" என்க

ராகவ் தன் பங்குக்கு," என்ன இப்படி முழிக்கிற" என சிரிக்க அவளோ அதை பார்த்து அதிர்ந்து," இப்படி ஷாக் கொடுத்தா அதிராம என்ன செய்ய முடியும்???" என்க

ராகவ் நடந்த விசயத்தை சுருக்கமா கூற அதை கேட்ட அவளோ மகிழ்ச்சியோடு ,"எட்டாவது அதிசயம் தா நடந்து இருக்கு" என்க

ராகவ் அவளிடமும் அன்று அவன் தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க அவளும் ஜெகதீஷை பார்த்துக்கொண்டே," என்னையும் மன்னித்துவிடு ராகவ் உண்மையிலுமே நான் உனக்கு துரோகம் தான் செஞ்சிருக்கேன் பச்சை துரோகம் அதை இல்லைன்னு சொல்ல முடியாது" என்று கூனிக்குறுகி கூற

அதைக் கேட்ட ராகவ் ,"இன்னுமா அதை நினைச்சுட்டு இருக்க எதுவா இருந்தாலும் எனக்கு கிடைக்கணும்னா கண்டிப்பா கிடைத்திருக்கும் நீ எனக்கு கிடைக்க வேண்டிய பொருள் கிடையாது என்னோட அண்ணனுக்கு தான் கிடைக்கணும்னு இருக்கு பரவால்ல நான் அதை எல்லாம் மறந்துட்டேன்" என்று கூற ஜெகதீஷ் வாயை திறக்கவில்லை அவன் தானே அவள் வேண்டும் என்று நினைத்தவன் எப்போதும் போல அவன் அமைதியாக இருந்து கொண்டான் பிறகு கொஞ்ச நேரம் அங்கு இருந்து கொண்டு இருவரும் கிளம்பினர்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top