அத்தியாயம் 25
கேரவனுக்குள் வேகமாக நுழைந்த அவளை பார்த்து,"எதுக்காக என்கிட்ட பேசணும்னு சொன்ன " என்று அவன் சிகரெட்டை எடுத்து பற்ற வைக்கும் போது அவள் அன்று நடந்த ஞாபகம் மனதில் வர இவன் சிகரெட் எடுத்தாலே ஏதாவது செய்வான் என்று எண்ணியவள் வேகமாக அவன் கையில் இருந்து சிகரெட் கேசை வாங்கி அவள் கையில் வைத்துக் கொண்டவள் ,"இந்த ஜூசை குடிங்க எப்ப பாரு சிகரெட்" என்று கூறினாள் அவள் முகம் செந்தனலாய் சிவந்து இருந்தது அவளால் நடந்த காட்சியை மறக்க முடியவில்லை...
ஆனால் அவனோ எதையும் கண்டு கொள்ளாது," என் மேல இருக்கிற அக்கறைல சொல்றியா இல்ல உன் மேல இருக்கிற அக்கறைல நீ சொல்றியா???" என்று அவன் கேட்டான் அதைக் கேட்டதும் அவள் முகம் சிவக்க அவனும் அவள் அருகே நெருங்கி வந்து அவள் இடையை பிடிக்க போக இந்த கை தானே சற்று முன் அவளை தொட்டது என கருதி," என்னை தொட்ட அவ்ளோ தான் நான் செம்ம கோபத்தில் இருக்கேன்..எந்த உரிமையில் என்னை தொடுற???" என்க
அவனோ சரி விட்டு பிடிப்போம் என கருதி அங்கு இருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்து ,"அப்போ உன் மேல இருக்கிற அக்கறை அப்படி தானே???" என்றான்...
அவளோ அமைதியாக இருக்க,"சரி சொல்லு" என்க
" நீ பேசாமல் இரத்த வாடை வர மாதிரி படம் எடுப்பிலேயே அந்த மாதிரியே எடுத்து இருந்திருக்கலாம்" என அவள் முணுமுணுக்க அது அவனுக்கு தெளிவாக விழுந்தாலும் ,"என்ன சொன்ன புரியல" என அவன் கேட்டான்...
அவளுக்கு எப்படி சொல்வது தெரியவில்லை இருந்தாலும் ,"நீ அவ பார்ட்டிக்கு போக கூடாது" என அவள் கூறினாள்..
"எந்த பார்ட்டி" என அவன் கேட்க
"தெரியாத மாதிரி கேட்காதீங்க அந்த அதிதியோட பர்த்டே பார்ட்டிக்கு போகக்கூடாது "என்று அவள் அவனுடைய முகம் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு கூறினாள்...
அவனோ அவளை பார்த்தபடி,"ஏன் போக கூடாது" என்க
என்னவென்று சொல்வது அவள் உன்னை மடக்க பார்க்கிறாள் என கூறினாள் அவ்வளவுதான் இவளுக்கு அவன் மீது இன்னும் ஆசை இருக்கிறது என அவன் கூறி விடுவானோ என்று எண்ணத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல்," போகக்கூடாது இது எல்லாமா சொல்லிட்டு இருப்பாங்க" என கேட்டாள்..
"ஆமாம் சொல்லி தான் ஆகணும் அதிதி பிறந்த நாள் அன்னைக்கு எனக்கும் எந்த முக்கியமான வேலையும் இல்லை எல்லாருக்கும் ரெஸ்ட் தான் சோ பார்ட்டிக்கு போறது இல்ல தப்பு ஒன்னும் இல்லையே" என கூற
"என்ன ரெஸ்ட் இருந்தாலும் நீ போகக் கூடாது??? அப்படி என்ன உனக்கு அவ முக்கியமா போய்ட்டா எனக்கு நீ நல்ல புருஷனா இருக்க வேண்டாம் ஆனால் பசங்களுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம் தானே" என்று அவள் வெடித்து கூறினாள்...அவள் கூற வருவது அவனுக்கு புரியாமல் இல்லை ஆனால் தேவை இல்லாமல் சந்தேகம் கொள்கிறாள் என எண்ணினான்..அவள் பேசினால் திருப்பி பேசாமல் இருந்தால் அவன் ஜெகதீஷ் இல்லையே!!!
அவன் அவளையே பார்த்துக் கொண்டு," எந்த உரிமையில் என்னை போகக்கூடாது என்று நீ சொல்ற???" என அவன் கேட்டான்..
அதைக் கேட்டதும் அவளுடைய முகம் அப்படியே திணறியது...
என்ன இப்படி ஒரு வார்த்தையை கேட்டு விட்டான் என எண்ணினாலும் அவனும் அவளை விடாமல் ,"நீ தான் சொன்ன என்னை உன்னோட புருஷனா ஏத்துக்க முடியாது வெளியில யார்கிட்டயும் நீ என்னோட பொண்டாட்டின்னு சொல்லக்கூடாது அப்படின்னு நீ சொன்ன அப்படி சொன்னா என்னை அசிங்கப்படுத்துவ என்று சொன்ன இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்னு தெரியும் உனக்கே நல்லா…..
இருந்தும் நான் அமைதியா இருக்கேன் ஆனா நீ என் மேல எந்த உரிமையில் நான் இதை செய்யக்கூடாது அதை செய்யக்கூடாது என்று சொல்ற சொல்லு??? உனக்கு என் மேல ஆசை இல்லை அப்போ நான் எப்படி போனால் என்ன??? அப்புறம் நான் நல்லா அப்பாவா இருக்கணுமா இருக்கக் கூடாதா அப்படின்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்" என தெளிவாகவும் அதே நேரம் அவன் அழுத்தமாக கேட்கவும் அவளுக்கு மூச்சு முட்டியது...
இது தான் அவளுடைய பிரச்சனை அவன் அழுத்தமாக ஒரு கேள்வி கேட்டால் போதும் அவளால் பதில் சொல்ல முடியாது.. அவளோ அவன் கேட்ட கேள்வியில் அப்படியே சிலை போல நின்றவள் என்ன செய்வது என தெரியாமல்," அப்போ நீ போவேன்னு சொல்றியா???" என கோபமாக கேட்டாள்...அவன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க திராணி இருக்காமல் அவளுடைய கேள்வியிலேயே குறியாக இருந்தாள்...
அவனோ நக்கலாக சிரித்தபடி ,"நான் போவதும் போகாததும் ஒரு பக்கம் இருக்கட்டும் கண்டிப்பா போவேன் ஆனால் நீ ஏன் அதை கேட்கிற" என்க
அவளுக்கு அழுகை முட்டியது...அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை...அவளால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை அவனிடம் அவள் மனதை வெளிப்படுத்தவும் அவளுக்கு மிக பெரிய பிரச்னையாக இருந்தது..
"அப்போ நான் கேட்க கூடாதுன்னு சொல்றியா"
"நான் அப்படி சொல்லல" என கூற
"உன்னோட பேச்சு அப்படித்தான் சொல்லுது நீ ஏன் கேக்குற அப்படினா நீ தானே தாலி கட்டின!! அப்போ நான் கேட்காம வேற யாரு கேப்பா" என அவள் வெகுண்டு கூற,
அதை கேட்ட அவனோ மெல்ல புன்னகையோடு ,"அப்போ நீ என் பொண்டாட்டி நான் உன்னை என்ன வேணாலும் பண்ணலாம் அப்படின்னு சொல்ற அப்படி தானே???" என அவன் கேட்க
அவளுக்கு அவன் என்ன கேட்கிறான் என அவளுக்கு புரிந்தது அவள் முகம் சிவக்க அவனோ எழுந்து நின்று ,"இப்போ நான் முழு உரிமையோட உன் கிட்ட வரலாம் அப்படி தானே??" என்றான்...
அவன் எங்கே சுத்தி இங்கே வருகிறான் என அவளுக்கு புரிய அவள் உள்ளே பதட்டம் தொற்றியது...
அவனோ நக்கலாக,"ஏண்டி இதெல்லாம் கேட்காத ஒருத்தன் என்னையவே நீ கேட்க வைக்கிற "என்றவன் இருக்கையில் இருந்து எழுந்து அவள் அருகே வர அவளோ பின்னால் சென்றாள்..
"ரொம்ப பின்னாடி போகாத மொத்தமே நான்கு அடி தான் இருக்கு" என்று கூறியவன் அவள் அருகே வருவதற்குள்ளே அவள் பதட்டம் ஆகி,"உன்கிட்ட போய் பேச வந்தேன் பார் என்னை சொல்லணும் கிட்ட வராத யாராவது வந்துட போறாங்க கிட்ட வந்த கேரவன் கதவை நான் திறந்து விடுவேன்" என்க
"யார் வந்தா எனக்கு என்ன லைசன்ஸ் ஓட டச் பண்றேன் யார் வந்து கேட்க போறா?? நீ என் பொண்டாட்டி டி.. உனக்கு வேணா வார்த்தைகள் இல்ல நான் சொல்றது கசக்கலாம் ஆனா உள்ளுக்குள்ள கொஞ்சம் கிளுகிளுப்பாத்தா உனக்கும் இருக்கும்" என்க அதை கேட்ட அவளின் உடல் எல்லாம் சிவந்தது...அவன் கூறுவது உண்மை தான் அவன் மனைவி என்றதும் அவள் உள்ளே சின்ன சந்தோஷம் எட்டிப் பார்த்தது உண்மைதான் ஆனால் அதை வெளிக்காட்டி அவன் முன்னால் அசிங்கப்பட அவள் தயாராக இல்லை...
"உனக்கு வெக்கமே இல்லையா???"
"இதையே நீ எத்தனை தடவை தான் கேட்ப?? இந்த விஷயத்தில் எல்லாம் வெட்கம் பார்த்தா இரண்டு குழந்தைகளுக்கு அப்பன் ஆகி இருக்க முடியுமா???" என கேட்க அவளோ அவன் கிட்ட வந்து ஏதாவது செய்து விடுவானோ என்ற எண்ணத்திலேயே இருந்தாள் ...அவள் எதற்காக வந்தாள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாள் இவன் அருகே வந்தாலே தவிப்பது இவள் முறையாகி போகும் அதுதான் இப்போதும் நடந்தது...
"பசங்க எப்படி தாத்தா பாட்டி கூட செட் ஆகிட்டாங்களா கால் பண்ணியா??? என்னோட அப்பா என்ன பண்றாரு பசங்க கிட்ட பேசுறாரா??" என்று கேட்டுக் கொண்டே அவள் அருகே அவன் நெருங்கி அவள் இடையே பிடித்து விட்டான்..
"கால் பண்ணினேன் ஸ்கூல்ல இருந்து வந்து இருந்தாங்க இந்நேரம் தூங்கி இருக்கணும்... அவரெல்லாம் பேசுறாரு அவர்தான் இன்னைக்கு ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய் இருக்காரு" என்க
அதைக் கேட்டதும் அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது..."ஆடு பகை குட்டி உறவா??? இதுவும் நல்லாத்தான் இருக்கு!!! இன்னும் இரண்டு நாள் கழிச்சு கொஞ்சம் வேலையை முடிச்சிட்டு அவங்களை பார்க்கணும்" என அவள் அருகே இருந்து கொண்டு அவன் கூற அதை கேட்ட அவளோ குழந்தைகள் மீதாவது உண்மையான அக்கறை இருக்கிறது நான் தான் அவனுக்கு வேண்டாதவள் என்று எண்ணி கொண்டாள்..
அப்படி இருக்க அவனோ அவள் இடையை பிடித்து இலேசாக அழுத்தம் கொடுத்தவன் அப்படியே மெல்ல அவளின் கழுத்து நோக்கி குனிய," நான் என்ன பேச வந்தேன் நீ என்ன பண்ணிட்டு இருக்க?? " என அவள் கேட்க
அவனோ ,"நீ சொல்ல வந்ததை சொல்லு நான் என் வேலையை பார்க்கிறேன் டி இவ்வளவு நேரம் உன்னை பேசவிட்டு வேடிக்கை பார்த்ததே அதிகம்னு நினைச்சுட்டு இருக்கேன்" என கூறி அவன் கூற அவளோ மனதுக்குள் உனக்கு இதுக்கு மட்டும் தான் நானா என அவள் நெனைத்ததை வாயில் வழியாகவே கேட்க அவனோ பட்டென்று அவளிடம் இருந்து விலகி பின்னந்தலையில் லேசாக தன் முடியை கோதிவிட்டவன் சலித்துக் கொண்டு," உனக்கு என்ன தாண்டி வேண்டும் அப்படி என்ன தான் டி என்கிட்ட எதிர் பார்க்கிற???" என்றான்..
அவனுக்கு இலேசாக கோபம் வர துவங்கியது... அவளோ அந்த கேள்வியில் கண்ணீர் வடித்தாள்..
அதை கண்டவன்,"இல்ல தெரியாம தான் கேட்கிறேன் நீயும் நானும் விருப்பப்பட்டு தான் அன்றைக்கு இருந்தோம் தப்புன்னு பார்த்தா ரெண்டு பேரும் செஞ்சதும் தப்பு நான் இப்ப வரைக்கும் நான் அதை தப்புன்னு ஒத்துக்கல ஒத்துக்கவும் மாட்டேன் இப்பவும் அன்னைக்கு நான் என்ன சொன்னேன் அதை தான் சொல்றேன் உனக்கும் எனக்கும் பிடித்திருந்தது ஒண்ணா இருந்தோம் ..
என் கூட வரியா அப்படின்னு பல தடவை கேட்டேன் நீ இல்லைன்னு சொல்லிட்ட நானும் பிஸி ஆகிவிட்டேன் உன்ன டிஸ்டர்ப் பண்ணல திடீர்னு ரெண்டு குழந்தை கூட இருக்க என்கிட்ட நடந்த விஷயத்தை நீ மறச்சிட்ட நான் இதை எதிர்பார்க்கல மறுபடியும் குழந்தைகளுக்காக கல்யாணமும் பண்ணிக்கிட்டோம் தட் மீன் நீ சொன்ன மாதிரி இந்த தாலி உன்னையும் என்னையும் இணைச்சு இருக்கு சட்டப்படி நீயும் நானும் புருஷனும் பொண்டாட்டியும் தான் இப்போ யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க
இப்போ அன்னைக்கு எல்லாரும் சொன்ன மாதிரி நான் உதவாக்கரை இல்ல ஒரு வேலைன்னு எனக்கு இருக்கு நாலு காசு சம்பாதிக்கிறேன் உன்னை கல்யாணமும் பண்ணிட்டேன் ரெண்டு குழந்தைகளுக்கு அப்பாவா இருக்கேன் இனியும் என்னிடம் என்ன எதிர்பார்க்கிற எனக்கு புரியல" என அவன் கேட்டான்..
அதை கேட்டதும் அவளுக்கு அழுகை முட்டியது... அவனுக்கோ புரியவில்லை அவள் என்ன அவனிடம் எதிர்பார்க்கிறாள் என அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை..
"நான் உன்கிட்ட நெருங்கி நெருங்கி வரும் போது நீ விலகி விலகி போற அது எனக்கு பிரச்சனை கிடையாது..நான் உன்கிட்ட வந்துக்கிறேன் நான் இந்த மாதிரி நீளமா பேசிட்டு இருக்கிற ஆள் கிடையாது இப்பவும் சொல்றேன் எனக்கு நீதான் உனக்கு நான் தான் எனக்கு நீ வேணும்னு தோணுச்சா உன்கிட்ட கண்டிப்பா வருவேன் அதை உன்னால கூட தடுக்க முடியாது என்று உனக்கே தெரியும் அதனால சும்மா பழசையே நினைச்சிட்டு இருக்காம கொஞ்சம் வெளியில வர வழியை பாரு அண்ட் சொல்ல மறந்துட்டேன் நான் எல்லோரும் சொல்ற மாதிரி கெட்டவன் தான் ஆனால் நான் முதன் முதலாக தொட்ட பொண்ணும் கடைசியாக தொட போற பொண்ணு நீ மட்டும் தான்" என்றவன் அவளின் அதிரும் கண்களை பார்த்து கொண்டே அவளை விட்டு விலகினான்..
அவன் கண்ணில் ஏனோ அவள் மீது கோபம் நிறைந்து இருந்தது... ஏனோ அவள் அருகே நிற்க அவன் விருப்பப்படவில்லை அவன் இப்படித்தான் என தெரியும் தெரிந்தும் அவளாக அவளுக்கு என்ன வேண்டும் என கூறாமல் அவனாக எப்படி புரிந்து கொள்வது அவனுக்கு அதுதான் கோபமே!!!
அந்த கோபத்தை பார்த்த அவளுக்கு வருத்தம் வர அவன் கூறுவது அனைத்தும் உண்மை போல அவளை சுட அவனின் கடைசி வார்த்தைகள் அவளை மேலும் வலிக்க வைக்க அதற்குள் அவளின் ஃபோன் அலறியது...
வீட்டில் இருந்து தான் உடனடியாக போனை அவள் அவனை பார்த்து கொண்டே எடுக்க குழந்தைகள் தான் ,"அம்மா சீக்கிரம் வாங்க எனக்கு அப்பா கிட்ட போகணும் நான் இனி இங்க இருக்க மாட்டேன் அப்பா எங்க??" என்று சஞ்சய் அழ தொடங்கினான் அவனுடைய சத்தத்தை கேட்கவும் போனை ஸ்பீக்கரில் போட்ட அவள் ,"என்ன ஆச்சு சஞ்சய் எதுக்காக அழற??" என்க
"அம்மா சித்தப்பா எங்களை அடிச்சுட்டாங்க எங்க ரெண்டு பேரையும் ரொம்ப திட்டிட்டாங்க எங்களுக்கு ரொம்ப அழுகை அழுகையா வருது நாங்க இனி இங்கே இருக்க மாட்டோம்" என கூறி அழ
அவளோ இப்போது என்ன சொல்வது எதற்காக அடித்தான் என தெரியாமல் எப்படி குழந்தைகளை கையாள்வது என திணறி அவள்," நீங்க ஏதாவது குறும்பு பண்ணீங்களா" என கேட்க
"நாங்க பால் தான் விளையாடும் சித்தப்பா மேல தெரியாம பால் பட்டுடுச்சு அதுக்கு எங்களை அடிச்சிட்டு வீட்டை விட்டு வெளியே போங்க உங்க அப்பாவை வந்து கூட்டிட்டு போங்க சொல்லுன்னு சொன்னாங்க இனி அந்த வீட்ல இருந்தா அடி விழும்னு சொன்னாங்க" என்று கூற அதைக் கேட்டு அவனின் முகம் கோபத்தில் சிவந்தது...
தன் மேல் இருக்கும் கோபத்தை குழந்தைகள் மீது காட்டி விட்டானா என எண்ணி ரௌத்திரம் ஆனான்...
அதனால் அவள் கையில் இருக்கும் போனை வாங்கி,"கண்ணா சஞ்சய் கொஞ்ச நேரத்துல அப்பா கார் அனுப்புறேன் நீங்க ராணி பாட்டி வீட்ல போயி இருங்க" என்று கூறும் போது ரேவதி படக்கென்று போனை வாங்கி ,"ஜெகதீஷ் அவன் அடிச்சது உண்மைதான் நாங்க தான் இருக்கோம்ல்ல நாங்க பார்த்துக்கிறோம்..." என்று குழந்தைகளை அழைத்துச் சென்று விடுவானோ என்ற பதட்டத்தில் அவர் கூறினார் அருகே தான் ஜெயமோகன் நின்று கொண்டிருந்தார் அவர் எதுவும் பேசவில்லை...
"என்னம்மா என் மேல இருக்குற கோபத்தை குழந்தைகள் மேல காட்டுறானா???" என்றான் கோபமாக அவனால் அதை மட்டும் ஏற்று கொள்ள முடியவில்லை...
"ஜெகதீஷ் அவன் ஏதோ டென்ஷன்ல அப்படி பண்ணிட்டான்" என ரேவதி கூற
"அதுக்கு குழந்தைங்க தான் கிடைச்சாங்களா...எனக்கும் கோபம் வரும் மா உங்க மகன் கிட்ட சொல்லுங்க தூக்கி போட்டு மிதிக்க வரேன்னு" என்றான்..
"தயவு செஞ்சு இதை பெருசு பண்ணாத" என தன் அருகே ஜெயமோகன் இருக்கவும் இப்பொழுதுதான் அவர் லேசாக மனது மாறி இருக்கிறார் அதை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கருதி அவர் கூற அவன் கேட்பதாக இல்லை..
"இப்போ அவளோட அம்மா வருவாங்க அவங்க கூட அனுப்பி வச்சிடுங்க உங்களால பார்க்க முடியலேன்னா அவங்க பார்த்துப்பாங்க யார் இல்லை என்றாலும் குழந்தைகளோட அம்மா, அப்பா என்று நாங்க ரெண்டு பேரும் இருக்கோம் நாங்க பாத்துக்குறோம்..ஏதோ நான் தான் இல்லை பசங்களாவது உங்களை மிஸ் பண்ண வேணாம் அப்படின்னு அனுப்பி வைச்சா அவன் என்ன பேச்சு பேசி இருக்கான்" என்று அவன் கூற
"ஜெகதீஷ் இத்தனை நாள் நாங்க பார்க்கலையா தயவு செஞ்சு நீ அமைதியா இரு" என்று கூற அவளோ போனை வாங்கி ,"அத்தை குழந்தைகள் அங்கேயே இருக்கட்டும் சஞ்சனா, சஞ்சய் பாட்டி தாத்தா கூட இருங்க அம்மா காலைல வந்துடுறேன்" என்று கூறினாள் அவள்...
அதை கேட்ட அவரோ ,"சரி மா" என்க அதற்குள் போனை கட் பண்ணிய அவள் அவனிடம் குழந்தைகளை ,"திடீர்னு அங்கே இருந்த கூட்டிட்டு போனா அவங்களுக்கு கஷ்டமா இருக்காதா??" என்று கேட்க
"அதுக்கு அவன் என்னோட பசங்கள அடிப்பான் என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க சொல்றியா அவன் என் மேல இருக்குற கோபத்தை குழந்தைகள் மேல காட்டுவான் அதை பார்த்துட்டு என்ன சும்மா இருக்க சொல்ற என்ன தைரியம் இருந்தால் அவன் குழந்தைகள் மேல கைய வைத்திருப்பான்??" என அவன் குதிக்க,
"குழந்தைகள் ஏதாவது குறும்பு பண்ணி இருப்பாங்க இதை எல்லாம் பெருசு பண்ணிட்டு இருக்க??" என்று அவள் கேட்க அவனோ அவளை பார்த்து முறைக்க
அவள் அவனிடம் ,"உன்னோட பசங்களுக்கு ஏதாவது ஒன்னுனா மட்டும் உனக்கு இப்படி துடிக்குது இல்ல இதே மாதிரி மத்தவங்க பீலிங்ஸ்யும் யோசிச்சு பாரு அப்போ அவங்க மனசும் புரியும் நீ செய்யற தவறும் உனக்கு புரியும் இப்படி யோசிக்காமல் பேசமாட்ட" என்று கூறி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்... அதை கேட்ட அவனோ தனக்குள் இருக்கும் அதே கோபத்தோடு நான் இப்படித்தான் என்னால என்னை மாத்திக்க முடியாது டி" என்க அதை கேட்டு கொண்டே அவள் வெளியே வந்தவள் முகம் சிவந்து இருந்தது..
அவள் கேரவனில் இருந்து வெகு நேரம் கழித்து இறங்குவதை அதிதி பார்க்க அவளுக்கு ஏதோ சந்தேகமாக இருந்தது... ஏதோ சரி இல்லை என அவள் மனம் சொன்னது...
